அறிதலா...? உணர்தலா...?

அனைவருக்கும் வணக்கம்... கடந்த மூன்று பதிவுகளாகத் திருக்குறளின் அதிகாரங்கள் பகுப்பு முறையையும், அதில் சில அதிகாரங்களின் பெயர் மாறுபாட்டினை உரையாசிரியர்கள் எடுத்துக் கொண்டதையும் அறிந்தோம்... அதில் ஒன்று : பொருட்பால் அமைச்சியலில் 71- ம் அதிகாரமும், காமத்துப்பால் களவியலில் 110- ம் அதிகாரமும், ஒரே பெயர் - குறிப்பறிதல் - சரி தானா...?