கொம்பில்லா காதல்...

அனைவருக்கும் வணக்கம்... கொம்பில்லா குறள்களாக →① மனிதத்திற்கு7 குறள்களையும், →② தலைமைக்கு5 குறள்களையும் அறிந்தோம்... மேலும் தொடர்கிறது :


கொம்பில்லா குறள்கள் - காமத்துப்பால்

12.களவியல் 114.நாணுத்துறவுரைத்தல்: 1140. யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு
13.கற்பியல்: 116.பிரிவாற்றாமை: 1158. இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு
13.கற்பியல்: 120.தனிப்படர்மிகுதி: 1192. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி
13.கற்பியல்: 129.புணர்ச்சிவிதும்பல்: 1281. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு
13.கற்பியல்: 131.புலவி: 1306. துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று
13.கற்பியல்: 133.ஊடலுவகை: 1326. உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது
'காதல்' என்னும் இடத்தில் 'கணக்கு' என்றும் கூட வாசிக்கலாம்...! மனதுடன் ஓர் உரையாடலாக :
குறள்களின் குரல் :

1140. காதல் படுத்தும் பாட்டை அறியாதவர்கள், என்னைப் பைத்தியக்காரனைப் பார்ப்பது போல் பார்த்து, நான் பட்ட துயரத்தை அவர்கள் படாததால், அறிவில்லாத அவர்கள் என் கண் பார்க்கச் சிரிக்கிறார்கள்...!
1158. ஒன்றே போல் ஒத்த உணர்வுடையவர்கள் இல்லாத ஊர் உலகத்தில் வாழ்வது இனிமை இல்லை தான்... ஆனால் அதை விடக் காதலைப் பிரிந்து இருப்பது கொடுமையென்று உணர்வுடைய மனிதர்கள் உணர்ந்து உள்ளார்களே...!

1192. அதெல்லாம் சரி; மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ...? இல்லையேல் காதலர் ஒருவர்க்கு ஒருவர் செய்யும் அன்பு, உலகோர்க்கு மழை கிடைத்ததுபோல் உயர்வானது வேறேதும் உண்டோ...?
1281. இயற்கையாகவே காதலை நினைக்கும்போதும் களிப்பு உண்டாகும்; காணும்போதோ மகிழ்ச்சியும் உண்டாகும்... ஆனால் இவையெல்லாம் கள் உண்போர்க்கு இல்லையே...!

1306. ஓஒ...! இல்லற வாழ்வில் சிறுசிறு சண்டை உண்டா(க்)கி இனிமையூட்டுவதை போல, முதிர்ந்த பூசலும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால் காதலின்பம், கனியும் பழுக்காத காயும் போல் தானே...?
1326. முன் உண்ட உணவு செரித்ததை ஆராய்ந்த பிறகு தக்க அளவு உண்பவர்களின் உடம்பிற்கு மருந்து என ஒன்று அவசியமில்லை... இந்த புரிதலான செரித்தல் எந்தளவு இன்பமோ, அதேபோல் காதல் இன்பத்திற்கு ஊடுதலே சிறப்பு...!

ஒரு தகவல் : →தமிழ்-அறிஞர்கள்-அறிவோம்←, →TNPSC பொதுத் தமிழ்←, மற்றும் பல இணையத்தளங்களில், "கொம்பு எழுத்துக்கள் இல்லாமல் 17 குறள்கள்" என்ற எண்ணிக்கை உள்ளன... கோயில் நகைகள் எடைக்குறைப்பு போல...?

அவ்வாறே என்றால் நாம் தவற்றைத் திருத்திக் கொள்வோம்... மனித வாழ்வு முழுவதும் தெறித்து வீழ வேண்டிய, மனித மனதில் முளைக்கும் கொம்பை நீக்கும் மருந்தான, ஒரு கொம்பில்லா குறள் எங்கே...? மனிதம்: + தலைமை: + இங்கு குறள்கள்... மொத்தம் குறள்கள்... ஐயன் வகுத்த கணக்கின்படி இன்னொரு குறள் இருக்க வேண்டும்...! அறத்திற்கு வித்தாகும் அறிவுத்தமிழில், அன்பிற்கு உரமேற்றும் அழகுத்தமிழில், இனிமையை விருந்தாக்கும் இன்பத்தமிழில், வாய்விட்டுப் படித்தால் ஒருவகை ஒலிநயம் உருவாகும் இசைத்தமிழில் உள்ள, கொம்பில்லா குறள் எது...? எங்கே...?
அதனால் தொடரும்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. கோயில் நகைகள் எடை குறைப்பு போல...

  ஹா.. ஹா.. ரசித்தேன் ஜி உவமையை... தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. காதல் என்ற தலைப்பில் இருந்ததும் ஒடி வந்தேன்... அடுத்து காமத்துபால் என்றதும் ருசிக்கலாம் என்றால் அதில் சொல்லியது ஏதும் உடனே புரியவில்லை... நல்லவேளை அதற்கு அப்புறம் விளக்கமாக சொல்லியிருந்தீர்கள்

  காதல்- கணக்கு
  அதனால்தான் அந்த காலத்தில் ஒரு பெண்ணை பார்த்தால் நண்பர்கள் சொல்லுவார்கள் பாருடா இவன் அந்த பெண்ணை கணக்கு பண்ணுகிறான் என்று அப்ப அது எனக்கு புரியல ஆனால் இப்பத்தா புரியது

  பதிலளிநீக்கு
 3. ஆமாம் தல நீங்கள் திருக்குறளை காதலிப்பது போல வேற எந்த பெண்ணையாவது காதலித்தது உண்டா? அது பற்றி பதிவு ஏதும் போடலாமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா... அன்பே வா படத்தில் நாகேஷ் அவர்கள் MGR அவர்களிடம், தானாகச் சிரித்துவிட்டு சந்தேகமாக ஒரு கேள்வியை முடிப்பது ஞாபகம் வந்தது...! காதல் இல்லாமலா...? சில அதிகாரங்களின் குறளுக்கேற்ற பாடல் பிறப்பதே அதனால் தானே...! ஆனால், பிரிவாற்றாமை அதிகாரத்திலிருந்து பாடல்களைத் தேர்ந்தெடுக்க பெண்ணாகவே மாற வேண்டும்...!

   நீக்கு
 4. காதல் படுத்தும் பாட்டை நான் அறிந்திருக்கவில்லை. பெறவும் இல்லை...காதலின்றி நானும் இந்த மண்ணில் குப்பையாக வாழ்ந்துவிட்டேன்... ஐயன்...என்னைப் பற்றி..எம்மை போன்றவர்களைப்பற்றி எழுதியிருக்கிறாரா..என்பது தெரியவில்லை...
  படிக்கும் காலத்தில் படிக்கவில்லை... காதல் வயதில் காதல் கொள்ளவில்லை... குறளறிஞர் தாங்கள்தான் அப்படியான குறளை தெரியப்படுத்தவேண்டும்....

  பதிலளிநீக்கு
 5. இன்னொரு குறள் எங்கே?  எங்கே?  அடுத்த வாரம் பார்க்கலாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரைவு பதிவு வரவில் கணக்கருக்கு வணக்கம்...! ஹா... ஹா... ஒவ்வொரு தடவையும் எங்கள் Blog-கிற்கு ஒரு பதிவு அனுப்ப வேண்டும் என்று நினைப்பேன்... ஆனால் எழுதி வைத்தவையும், அதற்கேற்ப பாடல்களும், அங்குக் கருத்துரை இட்ட கருத்துரைகளைச் சேமித்த வைத்தவற்றையும் எடுத்துப் பார்க்கும் போது, "சரி, ஸ்ரீராம் சார் கோபித்துக் கொள்ள மாட்டார்; பிறகு யோசித்து இவற்றையெல்லாம் சுருக்கி குறைத்து எழுதி அனுப்புவோம்...!" என்னும் நினைப்பே வரும்... நன்றி...

   நீக்கு
 6. இல்லற வாழ்வில் சிறுசிறு சண்டை(க்)கி இனிமையூட்டுவதுப்போல்....
  ///
  காமெடி பண்ணாதீங்கண்ணா. சிறு சண்டை பெருசாகாம இருந்தால் போதாதா?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது தான் "முதிர்ந்த பூசலும் சிறு பிணக்கும்" ன்னு சொல்லிட்டோமில்லே...! பாட்டியம்மா...! பாட்டி ஆன மூல மாப்பிள்ளையை மறக்கக் கூடாது ஆமா சொல்லிவிட்டேன்...!

   நீக்கு
 7. காதல் இல்லாமல் வாழ்க்கையா அதுவும் பாடல்க்காதல் தனித்துவம் டிடி!குறளில் கொம்பு இல்லாத எடைகுறைப்பு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 8. தங்களின் ஒவ்வொரு பதிவும் வியப்பினை ஏற்படுத்துகிறது ஐயா

  பதிலளிநீக்கு
 9. அருமையான பதிவு .
  அனைத்தும் அருமை.
  உங்கள் குறள் ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  கொம்பில்லா குறள் அடுத்த வாரம் படிக்க ஆவல்.

  பதிலளிநீக்கு
 10. டிடி முதலில் டக்கென்று புரியவில்லை....அதுவும் அந்தக் கட்டத்தில் சொல்லியிருப்பது. ...சரி கொம்பில்லா குறள் என்னன்னு அடுத்த வாரம் பார்க்க வேண்டும்....

  அப்புறம் காதல் பற்றிச் சொல்லியிருப்பது புரிந்தது...பின்னே அது புரியாம இருக்குமா என்ன!!!!!!

  இல்லற வாழ்வில் சிறு சிறு பூசலும் சரி முதிர்ந்த பூசலும் சிறு பிணக்கும் சரி வாழ்வில் நிகழ்வதுதான்.....ஆனால் கொஞ்சம் டோஸ் கூடினாலும் ரிஸ்க்தான் என்று தோன்றும். அதுவும் முதிர்ந்த பூசலும் கூட.

  கீதா

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  அருமையான பதிவு. தங்கள் குறள் ஆராய்ச்சி பிரமிப்பூட்டுகிறது. கொம்பில்லா குறள்கள் ஆச்சரியமூட்டுகிறது. அவற்றின் விளக்கங்கள் படிக்க இனிமையாக உள்ளது.. ஊடலுடன் கூடல் வாழ்வின் சுவைதானே.. இப்படி தெள்ளத்தெளிவாக ஆராய்ந்து விளக்கமளிக்கும் உங்களுக்கு பாராட்டுகள். அடுத்தப்பதிவையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. முதிர்ந்த பூசலும் சிறு பிணக்கும் அவசியம் தேவை... உணர்ந்து எழுதியதைப் போலத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 13. அருமை .... குறளை பற்றிய உங்களின் குரல், மற்றும் பா(வை)ப்பற்றிய உங்களின் பார்வை அருமை...

  பதிலளிநீக்கு
 14. ஆஹா கொம்புள்ளது கொம்பில்லாதது... மிருகத்தில் மட்டுமே உண்டென இருந்தேன்:)... குறளிலுமோ... மிக அருமையான பதிவு...

  பதிலளிநீக்கு
 15. குறள் விளக்கத்தில் நீங்கள் கொம்பர் தான். அருமை

  பதிலளிநீக்கு
 16. உங்கள் , குடும்பத்தினர் மற்றும் உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.