தமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...?

|| வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம்... அந்த நாலும் தெரிஞ்சி நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்... || எனும் கவிஞர் வாலி அவர்களின் வரிகளோடு தொடர்கிறேன்...


பெண்ணென்று பாராமல் எல்லோரும் என்மீது பழி சொல்வார்... (2) உள்ளன்பு கொண்டேன் அவர் மீது நானே - ஊராரும் அறிவாரோ...? (2) என் வாழ்வை அழிப்பாரோ...? பொன்னான வாழ்வு மண்ணாகி போனா துயரம் நிலைதானா...? உலகம் இதுதானா...?

மேலுள்ள பாடல் வரிகளை மட்டும் கேட்க → சொடுக்குக ►


© டவுன் பஸ் கா.மு.ஷெரீப் K.V.மகாதேவன் M.S. ராஜேஸ்வரி @ 1955 ⟫

கொரோனா என்ற கோரத்தீயின் முன்னே வைக்கோல் போர் போல அழிந்து போகாமல் இருக்க, அனைவரும் சில நாட்களுக்கு வெளியே செல்லாமல் வீட்டிற்குள் இருந்து, பொன்னான வாழ்வும் மண்ணாகிப் போகாமல் அனைவரின் வாழ்வையும் காப்போம்... நன்றி...
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

சரி, இங்கு காதலியும் அவ்வாறே வீட்டிற்குள் இருந்தாலும் பயப்படவில்லை...! காரணம், ஊரெங்கும் அலர் பரவ பரவ, பொன்னான வாழ்வு தான் அமையும் என்று, காதலன் மீதும், அலர் மீதும் உள்ளன்பு கொண்ட காதலி உறுதியாகச் சொல்வதை, மேலும் அறிவோமா...?அதிகாரம் 115 ♥♥♥ அலரறிவுறுத்தல் ♥♥♥ (1149-1150)

 குறட்பா  பொத்தானைச் சொடுக்கி வாசிக்க → குறள்+பா...!
கற்பனையில் தன் காதலனுடன் சேர்ந்து காதலி பாடுவதை,
► பொத்தானைச் சொடுக்கி கேட்கலாம்

என்னை விட்டுப் பிரியும் போது, 'எதற்கும் பயப்படாதே, என்றும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்' என்று கூறி, வீண்வம்பு பேசியவர்களை வெட்கப்படும்படி செய்து விட்டார்... இனி ஊரார் தூற்றும் எந்த விமர்சனத்திற்கும் நான் வெட்கப்படத் தேவையில்லை...!

வம்பு | வாஞ்சை | இழுக்குது | தவிக்குது →

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை 1149


வம்பு புரிந்தவர் இடத்தினிலே - வாஞ்சை பிறந்தது கணத்தினிலே... மனசை வாயாடிப் பெண்பாவை இழுக்குது - மயங்கி ஆணுள்ளம் திண்டாடித் தவிக்குது... மகுடி முன்னே நாகம்போலே - வசியமாகி அன்பினால் இன்பமாய் ஆடுதே... நினைக்கும் போதே ஆஹா...! இனிக்குதே என் மனமே...!© இல்லறமே நல்லறம் அ. மருத காசி K.G.மூர்த்தி A.M.ராஜா, ஜிக்கி @ 1958 ⟫


நான் விரும்பியவரைப் பற்றித்தான் இந்த ஊர் பேசுகிறது... இனி கவலைப்படவே தேவையில்லை... இனி என்னவரும் விரும்பியபடி என்னைத் திருமணம் செய்வார்... ஊர்ப்பேச்சே எங்களுக்கு நன்மை செய்து விட்டது...!

சொல்லலாமா ? | கொள்ளலாமா ? | செல்லலாமா ? | அள்ளலாமா ? →

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர் 1150


சந்திரனைத் தேடிச் சென்று குடியிருப்போமா...? தமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...? | அந்தி பட்டு வானத்திலே வலம் வருவோமா...? அங்கொரு ராஜாங்கம் அமைத்திருப்போமா...? | கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா...? – நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா...? செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா...? சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா...?© பறக்கும் பாவை கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன், P.சுசீலா @ 1966 ⟫


காதற்சிறப்புரைத்தல் அதிகாரத்தில் தலைவியின் கூற்றாக 5 குறள்கள் எவ்வாறு அமைந்தனவோ, அதே போல் இந்த அலரறிவுறுத்தல் அதிகாரமும் அவ்வாறே அமைந்து முடிவடைகிறது... காதல் உணர்ச்சிகளை ரசனையாக அழகுறச் சொல்லும் 7 அதிகாரங்களில், தலைவன் கூற்றாக 60 குறள்களும், தலைவி கூற்றாக 10 குறள்களும் கொண்ட களவியலும் முடிவடைகிறது... அலர் அறிவுறுத்ததால், இருமனங்களை இணைக்கும் திருமணமும் இனிதே நடந்தேறுகிறது... அதை ஊகித்துப் புரிந்துகொள்ள, 18 அதிகாரங்களைக் கொண்ட கற்பியல் ஆரம்பிக்கிறது...

திருமணம் முடிந்து, குடும்ப நலனுக்காகக் கணவன் பிரிய நேரிடுகிறது... பிரிவால் மனைவிக்கு ஏற்படும் பலவிதமான எண்ணவோட்டங்களே 15 அதிகாரங்கள்... அதன்பின் மூன்றில், இருவரின் பொதுவான எண்ணங்களுடன், திருக்குறள் மங்கலமாக நிறைவு பெறும்... இந்த 15 அதிகாரங்களிலுள்ள குறள்களை வாசித்து வரும்போது, மனதில் எழுந்த பல பாடல்களில் ஒன்று :- முதல் வசந்தம் படத்திற்காக, கவிஞர் முத்துலிங்கம் எழுதிய பாடல் வரிகளுடன் எனது பதிலும் :-

ஆறு அது ஆழமில்ல, அது சேரும் கடலும் ஆழமில்ல, ஆழம் எது ஐயா...? - அந்த பொம்பள மனசு தான்யா... அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு...? அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ...

திருவள்ளுவர்


வாசகர்களே இதைக் குறித்தும் தங்களின் அலர் என்ன...? பிரிவாற்றாமை குறளின் குரல் பதிவுகளில் பிரியாமல் சந்திப்போம்... தலைவியின் முந்தைய பகுதியை ரசிக்காதவர்கள் → இங்கு சொடுக்கவும்

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள் 1. வணக்கம் ஜி
  வழக்கம் போலவே அருமையான பாடல் வரிகளோடு அற்புதமான தொழில்நுற்பத்தோடு அசத்தலான பதிவு

  எல்லாம் கேட்ட பாடல்களே என்றாலும் அவைகள் தோன்றிய வருடங்கள் கண்டு பிரமிக்க வைத்தது

  வாழ்த்துகளோடு நன்றி ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி... இதுவரை எழுதியுள்ள 500-யை தாண்டும் திரைப்படங்களின் வருடங்களைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கும்... கிட்டத்தட்ட முக்கால்வாசி திரைப்படங்கள் வெளியானபோது, அடியேன் பிறக்கவில்லை...!

   நீக்கு
  2. பசலை நோய் குறித்து ஒன்றுமே எழுதவில்லையே.

   நீக்கு
  3. கண்விதுப்பழிதல் முடித்து விட்டு தொடர வேண்டும்...

   நீக்கு
 2. வழக்கம்போலவே அருமை.  இல்லறமே நலலரம் பாடல் கேட்ட ஞாபகம் இல்லை.  பொன்னான வாழ்வு மண்ணாகிப் போனால் பாடலில் ஒரு ஆண்குரலும் ஒலிக்குமே...  திருச்சி லோகநாதன்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அவரே தான்...! இந்த பாடலின் mp3 கிடைத்தும், அது ஒலி சரியில்லை... முந்தைய பதிவில் சொன்னது போல், காணொளி மூலம் மாற்றிய mp3 பாடல்...

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  இன்றைய பதிவும் வழக்கம் போல் அருமை. குறளும், அதை சார்ந்த எண்ணங்களால் நிறைந்த திரைப்பட பாடல் தேர்வும் ஒன்றுக்கொன்று நிகராக அருமையாக உள்ளது. ரசித்தேன்.

  அந்த அழகான பெண் ஓவியம் கண்களை விட்டு அகல மறுக்கிறது. வரைந்தவர் மாயாவா? உங்கள் பதிலும் அருமை. இன்று எல்லாமே அற்புதமாக பொருந்தி வந்துள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. வழமை போல அற்புதமான பாடல் வரிகளோடு குறளமுதம்.

  பருகத் தந்தமைக்கு நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 5. முதல் பாடல் இந்த காலநிலைக்கு ஏற்ற பாடல், ஓவியம் சிறப்பு.
  பகிர்ந்த பாடல்கள் எல்லாம் மிகவும் பிடித்த பாடல்கள்.
  அடிக்கடி விரும்பி கேட்கும் பாடல்கள். "இல்லறமே நல்லறம்" படம் பழைய படமாக தொலைக்காட்சியில் பார்த்த படம்.

  எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்று படிப்பினை தரும் படம். நானே சின்னக்குழந்தை இந்த படம் வந்த போது.

  நீங்கள் பகிரும் பழைய பாடல்கள் எல்லாம் மிக அருமை.

  பாடலை கேட்டு திருக்குறளைப் படித்தேன்.
  உங்கள் தொழில் நுட்பத்திற்கு வாழ்த்துக்கள்.

  இந்த முறை திருவள்ளுவர் மிளிர்கிறார்.

  பதிலளிநீக்கு
 6. கவிஞர் முத்துலிங்கம் பாட்டுக்கு உங்கள் விடையை அற்புதமாய்த் தெரிவித்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 7. இந்த தடவை காதல் அதிகாரமா. சூப்பர். கடைசி பாடல் மட்டும் கேட்டிருக்கிறேன். அருமை.

  பதிலளிநீக்கு
 8. சிறந்த வடிவமைப்பு. துபாயிலிருந்து பறந்து வந்து மதுரையில் தப்பித்து சிவகங்கையில் சந்திப்பது காதலா/அவரா

  பதிலளிநீக்கு
 9. தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

  தற்போது, தங்களது தமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா…? பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

  எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

  இந்த நிலையில், அடுத்த கட்டமாக தமிழுக்காக ஒரு அகராதியையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த அகராதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். அகராதி---->>> சொல்

  பதிலளிநீக்கு
 10. டிடி செம டெக் யூஸ் பண்ணியிருக்கீங்க பதிவுல. குறள் தனியா வரும்படியும், ஆடியோ தனியாகவும். ஆடியோவில் குறள் சொல்லுவது உங்கள் மகளா டிடி? குறள் முதல் லைன் வந்து அப்படியே நின்று விடுகிறது. ரொம்ப நேரம் கழித்துதான் அடுத்து வருகிறது.

  குறள் குரலையும் அதற்கான பாடலையும் இணைத்து அழகான வடிவமைப்பை முழுவதும் சரியகக் கேட்க இயலவில்லை. இதில் பல பாடல்கள் கேட்டதில்லை. ஆடியோவும் நெட் சரியில்லாததால் முழுவதும் கேட்க இயலவில்லை. ரொம்ப நேரம் ஆகிறது அல்லது வந்தாலும் விட்டு விட்டு பாதியில் நின்று விடுகிறது. மீண்டும் வந்து கேட்க வேண்டும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறளை சொல்வது இரு வேறு தளத்தின் இருந்து பிரித்து, பாடலுடன் இணைத்தேன்... எத்தனை வினாடிகள் என்பதை Audio Player (Ex:- 0.00/0.046)காட்டும்... இணையம் சரியானவுடன் கேட்டுப் பாருங்கள்... உங்களுக்கும் விருப்பமான குறள்களின் பதிவு 07/02/2020 முதல் என்பது முக்கியமான தகவல்... நேரம் கிடைக்கும் போது வாசித்தால் + கேட்டால் மகிழ்வேன்...

   அனைத்து குறளின் குரல் பதிவுகளிலும் (250 குறள்களுக்கு சற்று குறைவு) இதே போல் மாற்றி விட்டேன் என்பது கூடுதல் தகவல்... நன்றி...

   நீக்கு
 11. பாடல் தேர்வு அருமை...
  கூடவே , கொரோனா விழிப்புணர்வும் உங்க பொறுப்புணர்வை காட்டுது

  பதிலளிநீக்கு
 12. அப்பப்பா. ....எவ்வாறெல்லாம் சிந்திக்கின்றீர்கள். உங்களை வெல்ல உங்களால் மட்டுமே முடியும் என நினைக்கிறேன். (பணிக்காலத்தில் நான் இவ்வாறு சொல்வதுண்டு : பணியில் எனக்கு நிகராகப் போட்டியிட்டு வெற்றி பெற என்னால் மட்டுமே முடியும். முடிந்தால் போட்டிக்கு வருகின்றீர்களா? என்பேன். மொழிபெயர்ப்புப் பணிகளை மேற்கொள்ளும்போதும் இவ்வாறு சொல்வேன். பணியின்மீதான என் ஈடுபாட்டையே நான் அவ்வாறு உணர்ந்தேன். சற்று அதிகமாகத் தோன்றினாலும் இந்த எண்ணம் என் திறமையை மேம்படுத்திக்கொள்ள உதவியது என்பதே உண்மை) மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. பாடல்களுக்கேற்ப கொடுத்திருக்கும் விளக்கமும் மிக அழகு... காதலன் காதலிக்கும் கொரனா வந்தால் 14 நாட்கள் சந்திக்க முடியாமல் போய் விடும் ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 14. romba naal kaziththi ththu ingku varukireen.
  samaiyal attakaasam
  jaleela
  https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
  en youtube channel

  பதிலளிநீக்கு
 15. இதுபோன்று பொருத்தமான திரைப்படப் பாடலை குறளோடு இணைத்துப் பதிவிட உங்களால்தான் முடியும். அனைத்தும் அருமை பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 16. சிறப்பான கருப்பொருள்
  தங்கள் நடையிலே நன்றாக அலசி உள்ளீர்கள்
  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.

 


சுய விவரம் | தொடர்பு படிவம் | பிரபலமான 10 பதிவுகள் | குறளின் குரல் மற்றும் வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள் | அனைத்திற்குமான இணைப்பு :-

வணக்கம்

பக்கக்காட்சிகள் 18/10/2011 முதல் :வாருங்கள் நண்பர்களாவோம் :


சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து தொடர :