🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



காதலர்களுக்குத் தெரிந்த ஒரே ஒரு பாட்டு...!

வணக்கம் நண்பர்களே... முதலில் ஒரு பாட்டு கேட்போமா...?


வான் மழை இன்றி வாடிடும் பயிர்போல் நான் உன்னைப் பிரிந்தே வாடுகிறேன்... சூழ்நிலையாலே கூண்டினில் வாடும் பைங்கிளி போலிங்கு வாழுகிறேன்... வெளியில் விடாமல் வீட்டினுள் வைத்து கெடுமதியால் என்னைப் பூட்டினரே... வளர் காதல் ஜோதி உனையன்றிப் பாரில் ஒளியுமே எதென் வாழ்விலே... // பொண்ணு கையில் இருக்கு, ஆம்பளைங்க பொழப்பு, கண்ணை கொஞ்சம் திறந்து, காட்டு வழி எனக்கு...! | ஆம்பளைக்கு வீரம், மேடையிலே தானே...? அத்தனையும் மாறும், பொண்ணுகிட்ட தானே...? | என்ன பண்ண நானு, நானும் ஒரு ஆணு...! கன்னி இளம் மானு, உன்னை எண்ணி நானு...! | ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி, அட என்னென்னெம்மோ சொல்லுறாங்க... அது நெசமா...? இல்ல பொய்யா...? அதை நீ தான் சொல்ல வேணும் ராசா...

மேலுள்ள பாடல் வரிகளை மட்டும் கேட்க → சொடுக்குக ►


© பொன்முடி அ.மருதகாசி G.ராமநாதன் G.ராமநாதன், T.V.ரத்தினம் @ 1949 ⟫
// ⟪ © நினைவுச்சின்னம் கங்கை அமரன் இளையராஜா மலேசியா வாசுதேவன், K.S.சித்ரா @ 1989 ⟫

சொல்ல நினைத்ததைப் பாட்டிலே வந்தபின், விளக்கம் தேவையில்லை என்றாலும், இங்குக் காதலனை தன் மனதில் பூட்டி வைத்துவிட்டபடியால், வீட்டுக்காவல் பற்றிக் காதலி கவலைப்படவில்லை... காரணம் தங்களின் காதலைப் பற்றி ஊரில் என்னென்னெம்மோ பேசும் அலர் குறித்து, மகிழ்ச்சி தான் அடைகிறாள்... அது எவ்வாறு என்று வாசிப்போம் + கேட்போம்...! இந்த அதிகாரத்திலிருந்து தான் தலைவி அறிமுகமே... அதன்பின் எதுவரை என்பதை, இந்த அதிகாரம் முடியும்போது அறிவோம்... கவனித்து ரசிக்க வேண்டியது என்னவென்றால், அலர் குறித்து ஐயன் சொல்லும் உவமைகள் தான்...!



அதிகாரம் 115 ♥♥♥ அலரறிவுறுத்தல் ♥♥♥ (1146-1148)

 குறட்பா  பொத்தானைச் சொடுக்கி வாசிக்க → குறள்+பா...!
கற்பனையில் தன் காதலனுடன் சேர்ந்து காதலி பாடுவதை,
► பொத்தானைச் சொடுக்கிப் பரவசமடைய இனிமை பா...! நன்றி ப்பா...

என்னவரைக் கண்டு பேசியதே ஒரு நாள் தான்... ஆனால் தீயை விட வேகமாகப் பரவும் ஊரார் பேசும் வதந்தியோ, நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் சொல்லப்படும் கற்பனை செய்தி போல, ஊர் முழுக்கப் பரவிவிட்டதே...!

விடியாதே | தூங்குவோம் | முடிக்காதே | பார்ப்போம் →

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று 1146


இரவே இரவே விடியாதே, இன்பத்தின் கதையை முடிக்காதே... சேவல் குரலே கூவாதே2... சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே... | சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே... | மடி மீது தலை வைத்து | விடியும் வரை தூங்குவோம்... | மறு நாள் எழுந்து பார்ப்போம்...© அன்னை இல்லம் கண்ணதாசன் K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன், P.சுசீலா @ 1963 ⟫


காட்டுத்தீயாகப் பரவித் தடைபோடத் தடைபோட, எங்களுக்குள் அன்பு அதிகரிப்பதோடு, இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாகவும், தாயின் தடைச்சொல் நீராகவும் இருந்துகொண்டு, எங்கள் காதல் பயிர் நன்றாகச் செழித்து வளர்கின்றது...!

தாய் | தந்தை | உறவு | உருவம் →

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய் 1147


தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு | பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு... பாய் விரித்துப் படுக்கும் போதும் ஒரே ஒரு பாட்டு2... | பாதியிலே விழிக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு... | உறவு பார்த்து வருவதில்லை, உருவம் கண்டு பிறப்பதில்லை - நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு... | நம் இருவருக்கும் தெரிந்தது தான் காதலென்னும் பாட்டு...© தாய் சொல்லைத் தட்டாதே கண்ணதாசன் K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன், P.சுசீலா @ 1961 ⟫


எங்கள் காதல் பயிரை, ஊரில் ஆளாளுக்கு பலவகையில் கிசுகிசுத்து அழித்து விடுவோம் என்று நினைக்கிறார்கள்... அது முடியாதது... ஏனென்றால், எரிகிற தீயை நெய்யை ஊற்றி அணைப்போம் என்பது போல் தான் அது உள்ளது...!

தெய்வமே | பாரிலே | மாறுமா ? | போகுமா ? →

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல் 1148


என் ஆவியே கண்ணே உன் போலவே - மண் மீதிலே வேறு பெண்ணேதம்மா... | இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே, என் ஆசை கண்ணா நீ என் தெய்வமே... | அழியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய்... | பண்போடு நாமே இன்பம் காணுவோம் - நாளுமே பாரிலே... | ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா...? | உண்மைக் காதல் மாறிப் போகுமா...? | ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா...?© மக்களைப்பெற்ற மகராசி அ.மருதகாசி K.V.மகாதேவன் P.B.ஸ்ரீனிவாஸ், சரோஜினி @ 1957 ⟫


காதலனின் அலர் குறித்த எண்ணங்களை வாசிக்காதவர்களுக்கு இணைப்புகள் ↓↓
(1) ஊரென்ன சொல்லும்...?
(2) ஊருக்குத் தெரிந்தால் உண்மைகள் புரிந்துவிடும்…
அலர் அடுத்த பதிவில் முடியும்...

நண்பர்களே... தங்களின் அலர் என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்



  1. வணக்கம் ஜி
    அ.மருதகாசியின் பொன்முடி படப்பாடல் முதன்முறையாக கேட்கிறேன்.

    மற்ற எல்லா பாடல்களும் பொருத்தமாக அமைத்து இருக்கின்றீர்கள்
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. ரசித்தபடி சொல்கிறீர்கள். ரசிக்கும்படி சொல்கிறீர்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  3. ஊருக்குள்ள உன்ன பத்தி... பாட்டு நினைவுச்சின்னம் படப்பாட்டு. பிரபு, ராதிகா,முரளி, சித்ரா நடிச்சது.. அந்த படப்பாட்டுதான் இந்த வாரம் போடலாம்ன்னு இருந்தேன். நீங்க முந்திக்கிட்டீங்க!
    பாடல்களை இன்னும் கேக்கலை. கேட்டுட்டு மீண்டும் வரேன்

    பதிலளிநீக்கு



  4. நீங்கள் காதல் குறித்து எழுதி இருப்பதால் பெண்கள் குறித்து எழுதத் தோன்றியது. தொடக்கம் முதலே என்னைச்சுற்றிலும் கூட்டுக்குடும்பம் என்பதால் ஏராளமான பெண்கள் இருந்த காரணத்தால் பெண்கள் குறித்து ஈர்ப்பு உருவாகவில்லை. தொடக்கம் முதலே கண்டிப்பு என்ற நிலையில் வளர்ந்த காரணமாகவும் இருக்கலாம். தட்டெழுத்துப் பயிலகத்தில் வந்த அத்தனை அக்காக்களும் என்னை விரும்புவார்கள். கல்லூரியில் அனைவரும் காதலித்தனர். நான் அவர்களிடம் இருந்த புத்திசாலித்தனத்தைப் பார்த்தேன். திருப்பூரில் பெண்கள் என்பது விலையில்லாப் பொருள். ஆனால் என் கேபினுக்குள் ஆஞ்சநேயர் படம் வைத்திருப்பேன். சரியான முனி என்று தான் பெயர் எடுத்துள்ளேன். திருமணத்திற்குப் பிறகு குழந்தைகள் வந்த பிறகு தான் காதல் என்ற வார்த்தையின் அர்த்தமே புரிந்தது. அதனால் தான் என்னவோ மகள்கள் எல்லாவற்றையும் என்னிடம் வந்து கொட்டுகின்றார்கள். சபாநாயகர் வெறுத்துப் போய் சிரிக்கின்றார். பாடல்களில் கூடக் குத்துப் பாட்டுக்களையும், வித்தியாசமான இசைக்கோர்வைகள் உள்ள பாடல்களும் தான் ஈர்க்கின்றது. ஒரு முறை சபாநாயகர் மகள்கள் காதலித்து வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். இன்று சாப்பிடும் போது அவர்களிடம் கேட்டுப் பார். அதன் பிறகு நான் அவர்களை வளர்த்த விதம் புரியும் என்றேன். அன்று ஒரு நாள் இரவு கேட்டார். ஏம்பா மூவரில் யார் காதல் திருமணத்தை விரும்புகிறீர்கள் என்றார். காதலைப் புரிந்த ஆண்கள் இங்கே யாருமில்லை. யாரைக் காதலிப்பது என்றார். இது தான் நான் பார்த்த வளர்ந்த கற்றுக் கொண்ட கற்றுக் கொடுத்த காதல் சுய புராணம் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  5. நான் என் பதிவுகளுக்கு விளம்பரம் செய்வதில்லை. நண்பர்கள் வாய்ப்பிருந்தால் என் ஆயிரமாவது பதிவை பார்வையிட அன்போடு அழைக்கின்றேன். நன்றி.

    http://deviyar-illam.blogspot.com/2020/03/1000-JothiG-Blog-Achievement.html

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவும் குறளும், பாட்டுமாய் அருமை. குறள்களை படித்து அதற்கேற்ற பாடல்களையும் கேட்டு ரசித்தேன். முதல் இரண்டு பாடல்களில் முதலாவது பாடலை இது வரை கேட்டதேயில்லை. அதன் வரிகள் பழைய பாணி எழுத்துக்களில் உவமானங்கள் ஒன்றுக்கொன்று பொருத்தமாக இருக்கிறது. எழுதிய திரு. மருதகாசி அவர்களின் நடையின் சிறப்பு. நன்றாக உள்ளது. இரண்டாவது பாடல் ஒரிரு முறை கேட்டுள்ளேன்.

    மற்ற பாடல்களும் தேர்வு செய்த விதம் தங்கள் பாணியில் அற்புதமாக உள்ளது. தூய்மையான காதலின் சிறப்பாக இந்த பதிவை எடுத்துக் கொள்ளலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. நிலவை பாம்பு பிடித்தது போல் பாட்டுக்கு ஏற்ப ஓவியம்.
    அருமை. வரைந்த நணபருக்கு வாழ்த்துக்கள்.

    தலைப்பை படித்தவுடன் என் மனதில் வந்த பாட்டு "பாட்டு ஒரு பாட்டு"என்பது தான்.
    பழைய பாடல் பகிர்வும் அருமை.

    நம்பியார் பாடும் இரண்டு நல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி.
    பாட்டு ஒரு பாட்டு, ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா பாடலும் அவர் பாடிய பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  8. பொன்முடி சினிமா தொலைக்காட்சியில் பார்த்தேன்.
    நாயகன், நாயகி இருவரும் நன்றாக நடித்து இருப்பார்கள்.
    திருக்குறளும் கேட்டேன், பாடலும் கேட்டேன் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  9. சில வருடங்களாக பக்தி இலக்கியங்களைப் படித்துப் பகிர்ந்து வருகிறேன். உங்களது இத்தொடரைப் படிக்கும்போது சங்க இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வம் அதிகமாகிறது. ரசித்து எழுதுகின்றீர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. இலக்கியத்துடன் இணைந்த இசை...    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  11. இம்முறை அனைத்துக் குறள்களுக்கும் பழைய பாடல்களே பொருந்தியிருக்கின்றன .. அருமை.

    பதிலளிநீக்கு
  12. நினைவுச்சின்னம் பாட்டு வரலையே சகோ ?மற்ற பாடல்களும் குரலும் குறளும் மிக இனிமை .மிக பிடிச்சது ஒன்று சேர்ந்த அன்பு பாடலும் ,ஒரே ஒரு பாட்டு பாடலும் .தொகுப்பு அருமை 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்முடி பாடல் வருகிறது தானே...? அப்படி என்றால் அதை தொடர்ந்து நினைவுச்சின்னம் பாடலும் வந்தே தீரும்... (40 வருடம்) பாடல்கள் இரண்டையும் இணைத்தே தான் பதிவேற்றி உள்ளேன்... எதற்கும் ஒருமுறை பதிவை (Refresh) புதுப்பிக்கவும்...

      நீக்கு
  13. மருதகாசியின் இந்தப் பாடலினை முதன் முறையாக இப்பொழுதுதான் கேட்கிறேன் ஐயா
    அருமையான பதிவு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  14. சிறப்பான முறையில் பதிவுகள் வழங்கும் உங்களுக்கு, பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  15. தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

    எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.