🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



ஊருக்குத் தெரிந்தால் உண்மைகள் புரிந்துவிடும்...

வணக்கம் நண்பர்களே... முதலில் ஒரு பாட்டு கேட்போமா...?


நீரு நெலம் நாலு பக்கம் - நான் திரும்பிப் பார்த்தாலும், அந்தப் பக்கம் இந்தப் பக்கம் - அத்தனையும் நீயாகும்... நெஞ்சுக்குள்ள நீங்காம - நீதான் வாழுற... நாடியில சூடேத்தி - நீதான் வாட்டுற... ஆலையிட்ட செங்கரும்பா - ஆட்டுகிற எம் மனச, யார விட்டு தூது சொல்லி - நானறிவேன் உம் மனச... உள்ளமும் புண்ணாச்சு, காரணம் கண்ணாச்சு... காத்திருந்து காத்திருந்து - காலங்கள் போனதடி... பூத்திருந்து பூத்திருந்து - பூவிழி நோகுதடி... நேத்து வர சேர்த்து வச்ச - ஆசைகள் வேகுதடி... நீயிருந்து நான் அணைச்சா - நிம்மதி ஆகுமடி...

மேலுள்ள பாடல் வரிகளை மட்டும் கேட்க → சொடுக்குக ►

© வைதேகி காத்திருந்தாள் வாலி இளையராஜா 🎤 P.ஜெயச்சந்திரன் @ 1984 ⟫

இங்கே நம் காதலன் தூது சொல்ல யாரையும் தேடவில்லை... சோக கீதமும் பாடவில்லை... காரணம் என்ன...? ஏற்கனவே மடலேறுவேன் என்று ஊராருக்குச் சொல்லி விட்டான்... அதோடு இப்போது ஊரில் அலர் பரவி விட்டது... காதல் நிறைவேற அலர் ஒன்றே போதும், என்று நினைப்பதை மேலும் இந்தப்பதிவில் அறிவோம்... அலர் என்றால் என்ன...? என்பதை அறிய முன்னோட்டம் என்கிற பதிவை வாசிக்காதவர்கள் சொடுக்கி சென்று வாசிக்கலாம்...



அதிகாரம் 115 ♥♥♥ அலரறிவுறுத்தல் ♥♥♥ (1144-1145)

 குறட்பா  பொத்தானைச் சொடுக்கி வாசிக்க → குறள்+பா...!
கற்பனையில் தன் காதலியுடன் சேர்ந்து காதலன் பாடுவதை,
► பொத்தானைச் சொடுக்கிப் பரவசமடைய இனிமை பா...! நன்றி ப்பா...

எங்கள் காதல் கனவாக மாற வாய்ப்பே இல்லை... காரணம் ஊராரின் பேச்சு... அவை மட்டும் இல்லையென்றால், எனது காதல் வளம் இழந்து வாடிப்போய் விடும்...! புன்செய் நிலமாக இருந்த எங்களின் காதலை நன்செய் நிலமாக மாற்றுவதும் அவர்களின் பேச்சு தான்...

செல்லாது | நில்லாது | சுகமென்று | மனமென்று →

கௌவையால் கவ்வியது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து 1144


யார் என்ன சொன்னாலும் செல்லாது - அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது... | தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி - நம் காணும் உலகென்று ஒன்று... | வெகுதூரம் நீ சென்று நின்றாலும், உன் விழி மட்டும் தனியாக வந்தாலும் | வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று, பெறுகின்ற சுகமென்று ஒன்று... | தூங்காத கண்ணென்று ஒன்று, துடிக்கின்ற சுகமென்று ஒன்று, தாங்காத மனமென்று ஒன்று, தந்தாயே நீ என்னைக் கண்டு...© குங்குமம் கண்ணதாசன் K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன், P.சுசீலா @ 1963 ⟫



கள் குடித்து மகிழும் போதெல்லாம், கள் இனிதாவது போல் நினைத்து, வாடிப் போய் விடுவார்கள்... வாடிப் போகாமல், அந்த இனிமையை மட்டும் விரும்புவதாக, எனது காதல் ஊருக்குள் பேசப்படும் போதெல்லாம் மனத்திற்கு இனிதாய் இனிக்கிறது...

முடிந்தால் ? | விடிந்தால் ? | தெரிந்தால் ? | புரிந்துவிடும் ! →

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது 1145


ஆசையென்ற ஊஞ்சலிலே ஆட வைத்தாயே – அருகில் நின்று உருகி உருகி பாட வைத்தாயே... | அஞ்சி அஞ்சி வந்தவளை அள்ளி கொண்டாயே2 நெஞ்சமெனும் பஞ்சணையில் பள்ளி கொண்டாயே... | இரவு முடிந்துவிடும் | முடிந்தால்...? பொழுது விடிந்துவிடும் | விடிந்தால்...? ஊருக்கு தெரிந்துவிடும் | தெரிந்தால்...? உண்மைகள் புரிந்துவிடும்...!© அன்புக் கரங்கள் வாலி R.சுதர்சனம் 🎤 P..B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா @ 1965 ⟫



காதலனின் முந்தைய பகுதியை ரசிக்காதவர்கள் செல்லலாம்... இந்த அதிகாரத்தில், மனைவியுடன் கூடியிருக்கும் இன்பத்தையே பெரிதாக எண்ணும் காதலனின் அலர் குறித்த சிந்தனை இந்தப் பதிவோடு முடிந்தது... காதலன் பேசுவதும் முடிந்ததே விட்டது எனலாம்...! சரி, மீதம் உள்ள ஐந்து குறள்களில், சமுதாயத்தில் மனைவி என்னும் தகுதியும், மதிப்பும் கிடைக்க வேண்டும் என்று என்னும், தலைவியின் மனதை அடுத்த பகிர்வில் அறிவோம்...

நண்பர்களே... தங்களின் அலர் என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்


  1. வணக்கம் ஜி
    வழக்கம் போலவே அழகிய பாடல் வரிகளை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. பாடல்கள் மிக அருமை.
    திருக்குறள் கேட்டு படித்து, பாடல்களை கேட்டேன்.
    சிறப்பான பதிவு.
    தொகுத்த பாடல்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  3. நடுவிலிருந்து ஆரம்பிக்கும் பாடல் வரிகளின் முதல் வரிகளை படிக்காமல் அது என்ன பாடல் என்று கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்ப்பது என் பொழுதுபோக்கு.  இம்முறை வெற்றிதான்.

    பதிவு சிறப்பு - வழக்கம்போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருவரும் ஒரே மாதிரி யோசிக்கின்றோம் ராம். அருமை தனபாலன்.

      நீக்கு
  4. பாடல்களை தொகுத்த விதம் அருமைண்ணா. வைதேகி காத்திருந்தாள் பாட்டு என்னோட ஆல்டைம் ஃபேவரிட்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    எப்போதும் போல் புதுமை புகுத்திய இப்பதிவும் வெகு சிறப்பாக உள்ளது. பொருத்தமான அனைத்து குறட்பாக்களும், அதற்கு பொருத்தமாக திரை இசைப்பாடல்களும் கேட்டு மகிழ்ந்தேன்.பதிவை படித்து கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்..

    பதிலளிநீக்கு
  6. குறள்கள் எனக்குப் புதிது.
    பாடல்கள் என்னுடன் வளர்ந்து இதயத்தில் நிறைந்தது.
    மிக மிக நன்றி அன்பு தனபாலன்.

    பாடலைத் தெரிவு செய்வதில் மன்னர் நீங்கள். பாடலைக் கண்டு பிடிக்கும் சுகம்
    மிக இனிது.
    மனம் நிறை நன்றிகள். குறளமுதம் என்று இதைத்தான்
    சொல்லணும்.

    பதிலளிநீக்கு
  7. நானும் முந்தைய பதிவுகளை படிக்கிறேன் நண்பரே.

    பதிலளிநீக்கு
  8. தங்கள் பதிவு அருமை. புதிய வடிவமைப்பு சிறப்பாக இருக்கிறது. நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டீர்களோ?

    பதிலளிநீக்கு
  9. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது ஊருக்குத் தெரிந்தால் உண்மைகள் புரிந்துவிடும்… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
  10. வள்ளுவனையும் வாலியையும் அருமையாக இணைத்துள்ளீர்கள் வழக்கம் போல். வாழ்க .

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    அண்ணா
    அற்புதமான பாடல்களுடன் அற்புதமான கருத்தையும் சொல்லிய விதம் மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  12. சிறப்பு. பாடல்களும் குறளும் கேட்டு ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. ஒரே ஒரு பதிவு திரைப்பாடல்கள்சில வாழ்க்கையை குறிப்பதாக எழுதினேன் மிகவும் சிரமப்பட்டு ஆனா;ல் நீங்கள் குறள் திரைப்பாடல்கள் என்று கலந்து கட்டி தொடர்ந்து எழுதுகிறீர் கள் சபாஷ் பிடியுங்கள்பூங்கொத்து

    பதிலளிநீக்கு
  14. வள்ளுவரையும் வாலியையும் இணைத்த விதம் வழக்கம் போல் அருமை

    பதிலளிநீக்கு
  15. எப்பவும் போல் அருமை அண்ணா.
    வாசித்து விடுவேன். கருத்து இடுவதில் என் கணிப்பொறி இன்னும் பிரச்சினைதான் செய்கிறது.
    அலுவலகத்தில் கருத்திட்டால்தான்...
    கருத்து மட்டுமே இடுவதில்லை ஆனால் வாசித்து விடுவேன்.
    இனி கருத்திட முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. என்ன சொல்லி பாராட்ட! வழக்கம்போல் குறளுக்குப் பொருத்தமான மிகவும் இரசித்த திரைப்படப் பாடலை தேர்ந்தெடுத்து வழங்கிவிட்டீர்கள். வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  17. சிறந்த பாடல்களுடன் சிந்திக்க வைக்கும் பதிவிது
    அருமையான கண்ணோட்டம்

    பதிலளிநீக்கு
  18. குறளுக்கு பொருத்தமான பாடல்களை அழகாக இணைத்திருக்கும் உங்கள் திறமைக்கு வணக்கம். புது பாடல்கள் கேட்பதில்லையா? அல்லது அவை கவரவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியெல்லாம் இல்லை... பிடித்த புதுப்பாடல்களை பாடிக் கொண்டிருப்பதும் உண்டு... அதில் சில பாடல்கள் தான் மனதில் பதிந்து விடுகிறது... ஆனால், இங்கு குறளுக்கேற்ப பாடல் தேர்வு செய்வதில், பழைய பாடல்களில் எதை தேர்வு செய்வது என்கிற குழப்பம் அதிகம்... பழைய பாடல்களின் இனிமையை, பதிவு செய்து ஆவணப்படுத்தி வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தால், அதற்கே முன்னுரிமை... இதற்கு ஓரளவு பொருத்தமான 80s 90s பாடல்களையும் கணினியில் சேமித்து வைத்துள்ளேன்...

      நீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.