🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



ஊரென்ன சொல்லும்...?

முந்தைய பதிவுகளில் நாணுத்துறவுரைத்தல் அதிகாரத்தில் பெண்ணின் பெருமையை அறிந்தோம்... 'மடலேறுவேன்' என்று சொன்ன பலரிடம் கூறிய காதலனின் நிலை என்னவாயிற்று...? அடுத்துள்ள அதிகாரத்தைத் தொடர்வோம்... அதற்கு முன் ஒரு பாடலை கேட்போமா...?


ஊர் மக்கள் : ஊரு விட்டு ஊரு வந்து, காதல் கீதல் பண்ணாதீங்க...! பேரு கேட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்னாகுங்க...? விட்டுடு தம்பி - இது வேணாம் தம்பி - இத்தன பேரு வீடு உங்கள நம்பி...!2 நாயகன் : ஆணா பொறந்தா எல்லாரும் பொண்ண, அன்பாக எண்ண வேணும்... வீணா திரிஞ்சா ஆனந்தம் இல்லே, வேறென்ன சொல்ல வேணும்...? வாழ்க்கைய ரசிக்கணுன்னா, வஞ்சி கோடி வாசனை பட வேணும்... வாலிபம் இனிக்கணுன்னா, பொண்ண கொஞ்சம் ஆசையில் தொட வேணும்... கன்னிய தேடுங்க கற்பனை வரும் (ஆமா ஆமா), கண்டதும் ஆயிரம் காவியம் வரும் (ஆமா ஆமா)2 காதல் இல்லாம பூமி இங்கேது...?

மேலுள்ள பாடல் வரிகளை மட்டும் கேட்க → சொடுக்குக ►

© கரகாட்டக்காரன் கங்கை அமரன் இளையராஜா கங்கை அமரன் @ 1989 ⟫

ஊர் மக்கள் அலர்றாங்க... நாயகனோ அதை கண்டுக்காம, காதலியைக் கண்டதும் கற்பனையில் ஆயிரம் காவியம் வருமென்று, அறிவுறுத்தல் செய்றாரு...! எனக்கு...? இதோ :-

அதிகாரம் 115 ♥♥♥ அலரறிவுறுத்தல் ♥♥♥ (1141-1143)

அலர் என்றால் என்ன...? என்பதை அறிய முன்னோட்டம் என்கிற பதிவை வாசிக்காதவர்கள் → சொடுக்கிச் சென்று வாசித்து விட்டு வந்தால், அலறும் மனதில் அலர் ஏற்பட வாய்ப்பு கிடையாது... நன்றி... அலரறிவுறுத்தலை அழகான முறையில் சொல்லும் வள்ளுவரின் புதுமையை ரசிப்போம்... வாங்க...


அதற்கு முன், உங்களுக்கு ஒரு சின்ன ஊகித்தல் தேர்வு...! குறள் விளக்கத்தை வாசித்த பின், பொத்தானைச் சொடுக்கி, கற்பனையில் தன் காதலியுடன் சேர்ந்து, காதலன் பாடுவதை அறிவதற்கு முன், கொடுத்துள்ள | குறிப்புகளை | வைத்து, திரைப்படப்பாடலைக் கண்டுபிடித்து மனதில் பாடுபவர்களுக்குப் பாராட்டுக்கள்... இருந்தாலும் கேட்பொலி ► பொத்தானைச் சொடுக்கி, பாடலை கேட்டு ரசித்து விட்டால், குறளும் குறள் விளக்கமும் மீண்டும் ஒருமுறை வாசிக்க, இனிமை கூடும்...!

ஊருக்குள்ளே பல பேர் எங்கள் காதலைப் பற்றி வம்புப் பேச்சு பேசுகிறார்கள்... அவளைப் பெறாத எனது உயிர் நிலைத்து இருக்க அதுதான் காரணமே என்பதை, அவர்கள் எங்கே அறியப் போகிறார்கள்...? இருக்கட்டும்... என்னே நான் செய்த பாக்கியம்...!

அறியாது | தெரியாது | புரியாது | ஏங்குவது →

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால் 1141


உன்னுடனே நான் இருக்கும், என்னுடனே நீ இருக்கும்2 உன்னை இன்றி வாழ்க்கை ஏது ? ஊருக்கும் தெரியாது... யாருக்கும் புரியாது... உன்னை எண்ணி... (ம்) கனவு கண்டு... (ம்ம்) உள்ளம் ஏங்குவது...© மாடப்புறா அ.மருதகாசி K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன், சூலமங்கலம் இராஜலட்சுமி @ 1962 ⟫


அவ்வாறு உயிர் நிற்றலை அறியாத இந்த ஊர், மலர் போன்ற வசீகரிக்கும் கண்களை உடையவளான என்னவளின், அருமை பெருமைகளை அறியாமல் மிகவும் எளியவளாகக் கருதி, இல்லாததும் பொல்லாததும் கூறி என்னை வருத்தப்பட வைத்தாலும், ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது...

உன்னை | பூவென்பேன்..! | என்னை | என்னென்பேன்..? →

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர் 1142


உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்2 | நம்மை நாம் அறிவோம் பொன்னென்பேன் சிறு பூவென்பேன்2 காணும் கண்னென்பேன் வேறு என்னென்பேன்...? | என்னென்பேன் கலை ஏடென்பேன்2 கண்கள் நான் என்றால் பார்வை நீயென்பேன்...© போலீஸ்காரன் மகள் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி P.B.ஸ்ரீனிவாஸ் @ 1962 ⟫


அந்த நன்மையைப் பற்றி சுருக்கமாகச் சொன்னால், ஊர் மக்கள் எங்களைப்பற்றி இணைத்துப் பழிதூற்றிப் பேசப்பேச, நாங்கள் இருவரும் பிரிக்க முடியாதபடி இணைந்தது போன்ற மனநிலை உண்டாக்கி விடுவது தான் சிறப்பு....!

போதுமா..? | வேண்டுமா..? | கொஞ்சட்டுமே..! | மிஞ்சட்டுமே..! →

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து 1143


என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா...? | உன் கைகளில் வரவும் வேண்டுமா...? | இந்தக் கைகளில் வந்தால் போதுமா...? | நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா...? | ஊரென்ன சொல்லும்...? - சொல்லட்டுமே...! உறவென்ன பேசும்...? - பேசட்டுமே2 | | © ஆசை முகம் வாலி S.M.சுப்பையா நாயுடு T.M.சௌந்தரராஜன், P.சுசீலா @ 1965 ⟫


அலர் தொடரும்... நண்பர்களே தங்களின் அலர் என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. பகிர்ந்த குறட்பாக்கள், அதற்கு பொருத்தமான சினிமா பாடல்கள் எல்லாம் கேட்டேன் படித்தேன்.

    பதிவு அருமை. பாடலை ரசித்து குறளை மீண்டும் படித்தேன் இனிமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பாடல்களைக் கேட்டிருந்தாலும் இதனைப் படித்த பின் கேட்டால் நுட்பம் கூடுதலாக தெரிகிறது. அருமை

    பதிலளிநீக்கு
  3. என்ன மாயம் செய்தீர்கள்? சர்வதேச தளம் போல எளிதாக தரவிறக்கம் ஆகின்றது. மற்றபடி நான் காதலிக்கச் சென்றால் கூட 100 அடி ஓடி ஒளிவது, காணாமல் போவது தான் என் வாழ்க்கையில் நடந்துள்ளது, எனவே எங்க பாட்டான் சொன்னது எனக்கு வெளியே பொருந்தாது. நமக்கு இங்கே நான்கு பெண்கள் இருக்கின்றார்கள். திட்டு வாங்கி தின்று கொண்டே இவர்களைத்தான் காதலிக்க முடியும். காதலிக்கின்றேன்.

    பதிலளிநீக்கு

  4. வழக்கம்போல் குறளும், குரலும் அசத்தல் ஜி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. அற்புதம் இலக்கியத்தேனும் தொழிற்நுட்பப் பாலும் இரண்டறக் கலந்த அதி அற்புதப் பதிவு..தொடர வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
  6. பிரிக்க முடியாதது போன்ற மனநிலை....மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. இந்த முறை ஒரு படமும் அழகாக, பொருத்தமாக...

    பொருத்தமான குறள்களுடன் அழகாய்ப் பொருந்துகின்றன பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  8. குறளோடு பாடலும் இணைத்து மிக அருமையான பதிவா புரியறமாதிரி விளக்கி இருக்கீங்க சகோ .

    பதிலளிநீக்கு
  9. உங்களையும் குறளையும் திரைப்பாடல்களையும் பிரிக்க முடியாதோ

    பதிலளிநீக்கு
  10. குறளும் திரைப்பாடல்களும் இல்லாத தனபாலன் பதிவு உண்டா

    பதிலளிநீக்கு
  11. எப்படித்தான் கண்டுபிடிக்கிறீங்களோ.. குறளுக்குப் பொருத்தமான பாடல்களை.. வியப்பாக இருக்கு.. அருமை.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    பதிவு எப்போதும் போல் அருமை. தங்கள் மூலம், தாங்கள் தேர்ந்தெடுத்த திருக்குறளின் மூலமாக சென்று இனிமையான கருத்துள்ள பாடல்களையும் கேட்டு ரசிக்கும் போது., நீங்கள் பொருத்தமாக சொல்வது எல்லாம் மிகத் தெளிவாய் விளங்குகிறது.

    ஒரு நல்ல ஆசானிடம் திருக்குறளுக்கு தெளிவாக பொருள் கற்கும் மனநிலை ஒவ்வொரு பதிவிலும் எனக்கும் ஏற்படுகிறது.

    தொடருங்கள்.நாங்களும் தொடர்ந்து உங்கள் அழகான விளக்க உரைகளை கேட்க காத்திருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. வழமை போல சிறப்பான பாணியில் பதிவு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  14. மிக மிகப் பொருத்தமான பாடல்களைக் குறள்களுக்குத் தேர்ந்தெடுப்பது
    அபூர்வமான தேடுதல். குறளிலும் ,திரை இசையிலும் உங்களை மிஞ்ச முடியாது.
    அருமை மிக அருமை. நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  15. ஒரு பதிவு போட ரொம்ப யோசிப்பீங்களோ தனபாலன்....

    பதிலளிநீக்கு
  16. //அலரெழ ஆருயிர் நிற்கும்// குறளின் பொருளை திரைப்பாடலுடன் ஒப்பிட்டது அருமை - அரிய ஆராய்ச்சிக் கட்டுரைக்கான பதிவு !

    பதிலளிநீக்கு
  17. குறள்களுக்கு பொருத்தமான திரைப்படப் பாடலை தேர்ந்தெடுத்து புரிந்துகொள்ள உதவியதற்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு

  18. பாடல், குறள் இணைந்த
    இலக்கியப் பதிவு
    சிறப்பு

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.