என்னது காதலா...? ஹாஹாஹா ஹிஹிஹி ஹேஹேஹே

வணக்கம் நண்பர்களே... முதலில் ஒரு பாட்டு கேட்போமா...?


காதல் கொண்டாலே ஆடவர்கள் பாவம் - புத்தி சொல்லாமல் கொள்ளாமல் போகும்... அவரைக் கண்டாலே ஊர் முழுதும் பேசும் - தோற்றம் கால் வாசி பைத்தியம் போல் ஆகும் (2) அந்தப் பைத்தியத்தைத் தீர்ப்பதற்கு மருந்து - பெண்கள் பார்வையிலே ஊறி வரும் விருந்து (2) இந்த வைத்தியர்கள் பக்கத்திலே இருந்து - கண்ணை வைத்து விட்டால் நோய் போகும் பறந்து...!© பாத காணிக்கை கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா, J.P.சந்திரபாபு, L.R.ஈஸ்வரி @ 1962 ⟫

மேலுள்ள பாடல் வரிகளை மட்டும் கேட்க → சொடுக்குக ►

ஆஹா... காதல் என்பது எது வரை...? ஓ... பாடல் முடிந்து விட்டதா...? லயித்து விட்டேன்...! என்னது ஹாஹா... என்று சிரித்தேனா...? இல்லை இல்லை... பாருங்கள், எழுதியதை கூட அடித்து விட்டேன்...! காரணம், நாம் வாசிக்கப் போகும் குறள்...! (1140) இருந்தாலும் 'காதல் எது வரை...?' என்பதற்கு, இன்னொரு பாட்டாலே பதில் சொல்லி விடுகிறேன்...! முழுமை பெற்ற காதல் எல்லாம், முதுமை வரை ஓடி வரும்...! கவியரசரும் அனுபவித்து சரியாகத்தான் சொல்லியுள்ளார் :- மருந்து-விருந்து-பறந்து... சரி வாங்க இங்கு காதலனின் நோய் பறந்து போக என்ன நடக்கிறது...? :

முந்தைய பதிவை வாசிக்காதவர்களுக்கான இணைப்புகள்
(1) நான் என் செய்வேன்...?
(2) பெண்ணின் பெருமையே பெருமை...

அதிகாரம் 114 ♥♥♥ நாணுத்துறவுரைத்தல் ♥♥♥ (1138-1140)

நான் நிறைகுணம் கொண்டவன், மிகவும் இரக்க உள்ளம் கொண்டவன் என்பது கூட தெரியாமல், எனது காதல் இந்த ஊர் மக்கள் முன் வெளிப்பட்டு, வெட்கி, என்னென்ன அவமானம் அடைய போகிறேனோ...

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும் 1138


சிறிய காயம் பெரிய துன்பம்... ஆறும் முன்னே அடுத்த காயம் - உடலில் என்றால் மருந்து போதும் (2) கண்களின் தண்டனை காட்சி வழி, காட்சியின் தண்டனை காதல் வழி (2) காதலின் தண்டனை கடவுள் வழி... ஹாஹாஹா.க்... காதலின் தண்டனை கடவுள் வழி - கடவுளை தண்டிக்க என்ன வழி...?

© வசந்த மாளிகை கண்ணதாசன் K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1972 ⟫

எனது துயரத்தை தீர்க்க ஏன் யாரும் முன்வரவில்லை...? இதனால், எல்லோரும் அறிவில்லாதவர்கள் என்று உணர்ந்த என் காதல், மயங்கிப் போய் ஊரெங்கும் சுழன்று சுழன்று திரிகிறதோ...?

அறிகிலார் எல்லாரும் என்றே என்காமம்
மறுகின் மறுகும் மருண்டு 1139


ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும்... உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும்... ஒன்னாக கலந்த உறவுதான்... எந்நாளும் இன்பம் வரவுதான்... இது காதல் என்கிற கனவு, தினம் காண என்னுர மனசு, இத சேர துடிக்கும் வயசுதான்... வாழ்க்கையே கொஞ்சக் காலம்தான்...! இந்த வாழ்க்கையிலே, காதல் என்பது பொது உடமை... கஷ்டம் மட்டும்தானே தனி உடமை... அப்பனும் ஆத்தாளும் சேராம போன - நீயும்தான் பொறக்கமுடியுமா...? இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா...? (2)

© பாலைவன ரோஜாக்கள் கங்கை அமரன் இளையராஜா இளையராஜா @ 1986 ⟫

நான் மடலேறப் போகும் செய்தியைக் கேட்டு, "என்னது காதலா ? ஹாஹாஹா... ஹிஹிஹி... ஹேஹேஹே..." என்று நான் பார்க்கும் போது, என்னைப் பார்த்துச் சிரிக்கும் அறிவில்லாதவர்கள், நான் அனுபவித்த காதல் நோயை அனுபவிக்காத துர்பாக்கியசாலிகள்...

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வற்று 1140


இன்று நேற்று வந்ததெல்லாம், நாளை மாறலாம்... நீரில் தோன்றும் நிழல்களைபோலே, நிலையில்லாமல் போகலாம்... நான் பார்த்து ஒன்றாக காணலாம், நீ பார்த்து வேறாக மாறலாம்... தெரிவது ஒன்று, புரிவது ஒன்று, - யார் சிரித்தால் என்ன...? இங்கு யார் அழுதால் என்ன...? தெரிவது என்றும் தெரிய வரும், மறைவது என்றும் மறைந்து விடும் - யார் சிரித்தால் என்ன...? (2) இங்கு யார் அழுதால் என்ன...?

© இதயத்தில் நீ வாலி M.S.விஸ்வநாதன் P.B.ஸ்ரீனிவாஸ் @ 1963 ⟫மேலும் ரசிக்க, மேலிருந்து ஒவ்வொரு இதயத்தையும் சொடுக்கி வாசிக்கவும்... கேட்டும் ரசிக்கலாம்... நன்றி...

அடுத்து அலரறிவுறுத்தல் பகிர்வுகளில் சந்திப்போம்...
வாசகர்களே... தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. ஆண்களுக்கு அப்போது சொல்லப் பட்டிருக்கும் காதல் இலக்கணம் இக்காலத்துக்கும் பொருந்துமா என்பது கேள்விக்குறி!

  பதிலளிநீக்கு
 2. வசந்த மாளிகை பாடலை உங்கள் பதிவின் மூலம் கேட்டு மகிழ்வுற்றேன். பதிவு அருமை

  பதிலளிநீக்கு

 3. அருமையான பாடல் வரிகள் ஜி தொழில்நுற்பம் ஸூப்பர்

  பதிலளிநீக்கு
 4. அருமையான சினிமா பாடல்கள். திருக்குறள் கேட்டு, பாடல்வரிகளையும் கேட்டேன்.

  உங்கள் தொழில்நுட்பத்திற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான கருத்துவரிகள். அதற்கேற்பத் தேர்ந்தெடுத்த பாடல்கள்.
  எல்லாம் அந்த நாளைய நினைவுகள்.
  மிக மிக அருமையான பொன் வரிகள்.
  ஒவ்வொரு பாடலும் ,கருத்தும் வாழ்வில் ஒரு
  தடவையாவது எல்லோருக்கும் வந்திருக்கும்.

  மிக மிக அனுபவித்துக் கேட்டேன் அன்பு தனபாலன்.
  உங்கள் தொழில் நுட்பத் திறமை அசர வைக்கிறது.

  உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள எத்தனையோ இருக்கிறது.
  என்னாளும் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 6. அனைத்துப் பாடல்களும் அருமை, காதல் தோல்விக்கான பாடல்கள்தான் அதிகம் சினிமாவில் குவிந்து கிடக்கிறது. ஆனாலும் இங்கு ஆண் மட்டும்தான் ஏமாற்றப்பட்டுவிட்டார், தோல்வியுற்றார் எனும் வகையிலேயே சொல்லியிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. பெண்ணை ஏமாற்றும் ஆண்கள் பற்றி இன்னும் சினிமாவில் பாடல் வரவில்லை என நினைக்கிறேன்ன்..

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  சகோதரரே.

  நான் இட்ட கருத்து என்னவாயிற்று தெரியவில்லையே?

  பதிலளிநீக்கு
 8. ஏதேது எங்களை எல்லாம் சிக்கலில் மாட்டிவிடுவீர்கள் போலுள்ளதே.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  தங்கள் வலை நுணுக்கங்கள் மாறியதில் சற்று தடுமாறி விட்டேன் போலும்...
  தொடர்ந்து மூன்றாவது பதிவாக இந்த பதிவும் அருமையாக உள்ளது.

  "காதல் என்பது எது வரை.. "
  என்ற கேள்வி பாடலுக்கு பதிலாக தாங்கள் தேர்ந்தெடுத்த "முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமை வரை ஓடி வரும்." என்ற பாடல் வரிகள் வெகு பொருத்தம். கவியரசர் மட்டுமில்லை.. நீங்களும் நன்கு அனுமானித்து எழுதி எங்களுக்கும் அழகாய் புரிய வைத்து விடுகிறீர்கள்.

  பதிவுக்கு பொருத்தமான திருக்குறள்களும், அதற்கு பொருத்தமாக திரைப் படபாடல்கள் தேர்வும் இந்த பதிவையும் சிறக்க வைத்திருக்கிறது. குறளை வாசித்து பொருளுணர்ந்து பாடல்களையும் கேட்டு ரசித்தேன். ஒவ்வொரு தடவையும் மாறுதல்களினால் மாற்றமுறும் தங்கள் தொழில் நுட்ப பதிவுகளை பார்த்து வியந்து கொண்டே தங்கள் திறமையை பாராட்டுகிறேன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. சொல்லியோ கேட்டோ தெரிவதல்லகாதல் அனுபவிக்க வேணும்

  பதிலளிநீக்கு
 11. எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்-தொடர்புடைய குறள்களை அறிந்தோம்

  பதிலளிநீக்கு
 12. ஆதலினால் காதல் செய்வீர்!

  குறள்களையும் பாடல்களையும் இணைத்து இப்படி பதிவு எழுத உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை!

  நல்ல பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 13. திருக்குறளைப் பரப்பத் திரைப்பாடல்களை என்னமாய்ப் பயன்படுத்துகிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 14. ஆராய்ச்சி கட்டுரைக்கான கருத்துகள் - ஆழமான சிந்தனை மற்றும் கூரிய அறிவுத்திறனை காட்டுகிறது டிடி !

  பதிலளிநீக்கு
 15. முயலாத போதும்
  இயல்பாய் வருவது
  காதல்

  சிறப்பு
  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.

 பக்கக்காட்சிகள் 18/10/2011 முதல் :

வாருங்கள் நண்பர்களாவோம் :


சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து தொடர :


சுய விவரம் | தொடர்பு படிவம் | பிரபலமான 10 பதிவுகள் | குறளின் குரல் மற்றும் வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள் | அனைத்திற்குமான இணைப்பு :-

வணக்கம்