🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



தமிழ்ச்சரம் திரட்டியும், வலைப்பூ ஆய்வும்...

வணக்கம் நண்பர்களே... இன்றைய அலரால் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டிய சூழ்நிலை... அலரறிவுறுத்தலின் கடைசி பதிவைத் தள்ளி விட்டு, எப்போதோ பகிர வேண்டிய இந்தப்பதிவை இரு நாட்களாக எழுதினேன்... அன்றைய அலர் திருமணத்தில் முடிந்தது... இன்றைய அலர் 'திரு.மனங்களை' முடித்து விடும் என்று அலறுவது உண்மை தான்... இன்றைய நிலையில் அலர் அல்ல, அம்பலே கூடாது...! (புரிதலுக்கு நன்றி; சமீபத்திய பகிர்வுகளைத் தொடர்பவர்களுக்கு...!)


இந்தப் பதிவு புதுப்பிக்கப்பட்ட நாள் : 05.06.2020

உலகம் முழுக்க இனிக்கும் ஞாயிறு அன்று, இதுவரை எந்தப்பதிவையும் வெளியீடு செய்ததில்லை... இப்போது இன்று முதன்முறையாக, இதுவரை திருப்தியுடன் பகிர்ந்து கொண்டதில், இந்தப்பதிவு முதன்மை... வியாபார பயணத்திலிருந்தாலும் - வாசிக்கும் அனைத்தையும், நேரில் காண்பதில் எனக்குத் தோன்றும் சிந்தனைகளையும், கைப்பேசி குறிப்பேட்டில் (notes) அல்லது எனக்கு நானே அனுப்பிக்கொள்ளும் பகிரியில் (Whats-App) சேமித்துக் கொள்ளும் பழக்கமுண்டு... ஊருக்கு வந்தவுடன் மறக்காமல் அதைக் கணினிக்கு மாற்றி விடுவேன்... அவ்வாறு உருவான பதிவுகள் அதிகம்... வியாபாரத்தில் பாரம் குறையும் போது, வெளியிட்ட பதிவுகளைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள்... சரி முதலில் :-

புதிய திரட்டி அறிமுகம் - ☛தமிழ்ச்சரம்☚ இதை உருவாக்கியவர் திருவாரூர் திரு.ஆரூர் பாஸ்கர், @புளோரிடா | இதன் அவசியத்தை முதலில் கூறியவர் திண்டுக்கல் திரு.ஆல்பிரட் R.தியாகராஜன், @நியூயார்க் | தொழினுட்பத்தில் உதவியாக இருந்தவர் நீச்சல்காரன் மதுரை திரு.சே.ராஜாராமன், @சென்னை | மற்றும் துணை நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றிகள்... விளக்கம் அறிந்து இணைந்து கொள்ள, நம் நண்பர் நீச்சல்காரன் அவர்களின் பதிவு : தமிழ்ச்சரம் | நண்பர் சிகரம் பாரதி அவர்களும் வலை ஓலை என வலைத்தளங்களின் சங்கமத்தை உருவாக்கியதிலும் இணைந்து கொள்ளுங்கள்... வலைப்பூ பதிவர்கள் + பதிவுகள் பெருக்கட்டும்... உலகம் முழுக்க பதிவுகளால், சிந்தனையைப் பகிர்ந்து கொள்ளும் சிந்தனை இல்லாமல் போனதை மாற்ற, முடிந்தளவு வாசிப்போம்... மிக முக்கியமாக, நாம் இடும் கருத்துரைகள், பதிவுகளைப் பெருக்கும் உரம் என்பதை மறக்காமல் இருப்போம்...

இந்தப்பதிவில் சிலவற்றை எழுதும் போது, கைபேசியி(லே)ல் பலமுறை பதிவை எழுதும் இனிய நண்பர் கில்லர்'ஜி ஞாபகம் வந்து, திகைக்கவும் வைத்தது...! சமீபமாக (அனுபவ) சிந்தனை பதிவுகளையே எழுதாத எனக்கு, குறளும் அதற்கான குரலும், அதற்கும் திரைப்படப் பாடல் வரிகளும் மட்டுமே அதிகம் வருகிறதே என்று நினைத்துக் கொண்டிருந்த போது ஜோதி'ஜி அவர்களின் செயல்பாடு - பலவற்றை வாசித்து சர்வசாதாரணமாக பகிரும் வேகமும் ஞாபகம் வந்து, திகைப்புடன் அதிரவும் வைத்தது...! அவரே வந்தபின் இன்னொரு 'ஜி'யின் ஞாபகம் வராமல் இருக்குமா...? வாங்க, தொடருவோமா...?

12,13.10.2018 அன்று புதுக்கோட்டையில் இணையத் தமிழ்ப் பயிற்சி முகாமும், 63 ஆண்டுகள் கழித்து 'தமிழ்நாடு நாள்' கொண்டாடிய 1.11.2019 அன்று, முனைவர் அ.கோவிந்தராஜூ அவர்களின் அழைப்பில், கரூரில் வலைப்பூ பயிற்சிப் பட்டறையும் நடைபெற்றது... இதற்காக, ஒரு வலைப்பூ உருவாக்கம் பற்றிய கையேடு ஒன்றைக் கொடுத்தேன்... இதுவரை எழுதிய 19 தொழினுட்ப பதிவிலிருந்து சிறுசிறு குறிப்புகளை எடுத்து, கையேட்டை உருவாக்கி விடலாம் என்கிற எண்ணம்... எழுதியிருந்த தொழினுட்பம், கிட்டத்தட்ட 60 சதவீதம் மாறி இருந்தது...! அனைத்தையும் புதுப்பித்து விட்டு, கையேட்டை உருவாக்கினேன்... அன்று எனக்கிருந்த டெங்கு காணாமல் போனதை இங்குப் பதிவு செய்வதிலும் மகிழ்ச்சி... ஹா... ஹா... அன்றைக்கு எழுத நினைத்த பதிவு, வியாபார சூழ்நிலையாலும் தாமதம்...!

18.10.2011 அன்று வலைப்பூவிற்கு வந்த நாள் முதல், இன்று வரை என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளது எனும் ஒரு சிறிய ஆய்வு... சில பதில்கள் நீண்டு இருக்கலாம்... அவை, தெரியாத புதிய பதிவர்கள் உட்பட அனைவருக்கும் பயன் தரும் என்கிற ஒரு எண்ணம்... நான் ஒரு ஏணியாக ஆக்கப்பட்டதில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி சொல்ல மிகவும் கொடுத்து வைத்துள்ளேன்... நன்றிகள் தொடரட்டும்... ஏனென்றால் கற்றுக்கொடுத்து கற்றுக் கொள்ளல் என்பது சிலருக்கு மட்டுமே அமையும்... அது எனக்குத் தெரியாமலே எனக்கு வாய்த்த சிறந்த வாய்ப்பு... உங்கள் வலைப்பூவில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள்... அதைச் செய்வதை விட, எனக்கு எனது பதிவுகள் முக்கியமில்லை... சரி, இன்னும் வலைப்பூ என்னென்ன புதுமையான மாற்றங்கள் செய்யுமோ, அதையும் இரு கை கொண்டு இணைந்து மா(ற்)றுவோம்...! வலைப்பூவில் இணைக்கும் கோப்புகள், கேட்பொலி, அழைப்பிதழ் மற்றும் இதர இணைப்புகள் எனப் பலவற்றை எளிதாக்கி உள்ளது... அவசியமான சிலவற்றை மட்டும் இங்குக் கேள்விகளாக மாற்றி, எனது சிந்தனையைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்...

01. வலைப்பூ மேம்பட்டுள்ளதா...?

ஆம்... 16/04/2016 முதல் வலைப்பூவையும் பாதுகாப்பு முறையில் மாற்றியுள்ளது... அதாவது http to https இதை வலைப்பூவில் செயல்படுத்த : DashboardSettingsHTTPS redirectON செய்க இதனால் வலைப்பூவிற்கோ வலைப்பதிவுகளுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை... Online உலகில் பணப் பரிவர்த்தனை செய்யும் போது, கவனமாக ஒன்றைக் கவனிப்போமே, அதே பாதுகாப்பு... https என்று ஆரம்பித்த வங்கி(கள்) திவாலாகிக் கொண்டே வந்தாலும், http என்று ஆரம்பிக்கும் எந்த இணைப்பையும் நம்பவே ம்ஹிம்... சொடுக்கவே வேண்டாம்... அனைத்து நாட்டிற்கும் blogspot.com என்று மாற்றியது, ஒவ்வொரு கருத்துரைக்கும் கீழே மறுமொழி (Reply) சேர்த்தது எனவும் சில மேம்பாடுகள்... முகநூலுக்குப் போட்டியாக g+ ஆரம்பித்துத் தோற்றது, இதற்காக Followers Gadget பலிகடா ஆக்கப்பட்டது (முன்பு இதன் மூலம், நம் வலைப்பூவைப் பின்பற்றுபவர்களுக்குத் தகவல் அனுப்ப முடியும்... இப்போது சும்மா ஒரு பெருமைக்காக....!) மற்றும் அருமையான Google Reader-யை விலக்கியது எனவும் சில குறைபாடுகள்...

பிற்சேர்க்கை : ஏதோ முக்கியமான ஒன்றை மறந்து போல இருந்தது... வல்லிசிம்ஹன் அம்மா அவர்களின் கருத்துரை கண்டதும் ஞாபகம் வந்தது... (g+) Google Plus-யை ஆரம்பித்தபோது, g+ கருத்துரை பெட்டியை வைக்கச்சொல்லி வற்புறுத்தியது... சிலர் அறிந்தோ, அறியாமலோ வைத்துக் கொண்டார்கள்... அது வேண்டவே வேண்டாம் என்று, ஒரு தொழினுட்பப் பதிவிலும் சொல்லி இருந்தேன்... Google அதை விலக்கிக் கொள்ளும் போது, கருத்துரைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளைச் சொன்னாலும், அதைச் செய்யாத வலைப்பூக்கள், அதுவரை பதிவுகளில் வந்த g+ கருத்துரைகளையும் இழந்தது... நன்றி அம்மா...

02. புதிய வார்ப்புருக்களின் (Templates) சிறப்புகள்...?

கவர வைக்கும் அனைத்தும், அதன் போக்கினிலே தான் நாம் மாற வேண்டி வரும்... அது போல இலவசமாக எண்ணிலடங்கா தனியார் வார்ப்புருக்கள் Template Theme இருந்தாலும், நமது விருப்பப்படி அவைகளைச் சரி செய்ய முடியாது... அதைத் தெரிந்தவர்கள் தொடரலாம்... மற்றவர்கள் கூகிள் தரும் இலவச சேவையான வலைப்பூ வைத்துக் கொண்டு, அதன் Theme-களை பயன்படுத்தலாம்... அதோடு மட்டுமில்லாமல், அனைத்து உதவிக்கும் இங்கே தொடர்பு கொள்ளலாம்... 20/03/2017 அன்று Contempo | Soho | Notable | Emporio | என்று நான்கு வார்ப்புருக்களை அறிமுகம் செய்தது... இந்த நான்கைப் பற்றியும், வலைப்பூ பற்றிய புதிய செய்திகளை அறியவும், Official Blogger Blog வலைத்தளத்தைத் தொடரவும்...!

எனது சோதனை வலைப்பூவில், மேற்சொன்ன நான்கு Theme-களையும் சோதனை செய்துள்ளேன்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு தான்... Contempo theme முதலில் இருப்பதால், புதியவர்கள் வலைப்பூ உருவாக்கும் போது, தெரிந்தும் தெரியாமல் இந்த Theme அமைந்து விடும்... திரை முழுவதையும் அகலமாக்கிக் கொள்ளும் வசதி இதிலிருப்பதால் பயன்படுத்தியுள்ளேன்... எனது விருப்பப்படி சில மாற்றங்கள் செய்துள்ளேன்... அதனால் இங்கு சொடுக்கிச் சென்று, முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களின் வலைப்பூவைப் பார்க்கலாம்...

03. Theme-யை எவ்வாறு மாற்றுவது...?

கீழுள்ள பெட்டியில் இருப்பதை நகலெடுக்க முடியும்... சுட்டியால் முழுவதையும் தேர்வு செய்து, Ctrl-C (copy) நகல் எடுத்து, உங்கள் இடத்தில் சேமித்துக் கொள்ளலாம்... அதன்படி சோதனை செய்தும் பார்க்கலாம்...

04. உபகரணங்கள் (Gadgets) பற்றிய மேம்பாட்டுத் தகவல்கள்...?

அவை சமீபத்தில் நம் இந்தியத் திருநாட்டைப்போல் இல்லாமல், தனியாரின் உபகரணங்களை (Gadgets) அனுமதிப்பதில்லை... ஆனால், மக்களின் கருத்துக்கணிப்பு கேட்பது நீக்கப்பட்டு விட்டதால், வலைப்பூவும் தான் வைத்திருந்த Poll gadget-யை இரவோடு இரவாக எடுத்து விட்டது என்பதை அறிவது, உடலுக்கு மட்டும் நல்லது...!

வலைப்பூ அனுமதித்த Gadgets-யை உங்கள் தளத்திலும் பார்க்கலாம் : DashboardLayout+ Add a Gadget ⇒ (இங்குள்ளவற்றை எழுதிக் கொண்டபின்) ⇒ X (close) இதில் HTML/JavaScript என்றிருக்கும் Gadget மூலம் தான் பல தகவல்களை இணைக்கிறோம்... அதனால், வலைப்பூவின் வேகத்தைத் தீர்மானிப்பதும் இதுவே...

செயல்படாத Gadgets, இவ்வாறு     சிதறிக் கிடைப்பதை நீக்குவதற்கு :- DashboardLayoutGadget ⇒ கீழுள்ள ⇒ Edit அல்லது Pencil icon-யை சொடுக்கி ⇒ Remove இவ்வாறு செய்து வலைப்பூவை விரைவாகத் திறக்க வைப்போம்... சொர்க்கம் என்பது நமக்குச் சுத்தம் உள்ள வலைப்பூவும் தான்...!

05. வலைப்பூ Gadgets-ஆல் கூட பதிவு திறக்க தாமதமென்றால், என்னென்ன Gadgets தான் தேவை...?

இணைய இணைப்பின் வேகத்தைப் பொறுத்தது என்றாலும், சில Gadgets தேடும்... தினம் தினம் மாறும் அவை தேடுவது எவை ? :- (1) பிரபலமான பதிவுகள் (Popular Posts gadget), (2) பார்வையாளர்களின் எண்ணிக்கை (Blog's stats gadget) இந்த பிரபலமும், எண்ணிக்கையும் அறியாமல் நடத்தும் அரசு நல்லரசாகவும், அறிந்தபின் மேலும் தெரிந்து கொள்ளாமலும், புரிந்து கொள்ளாமலும் புறந்தள்ளினால், வல்லரசாகவும் மாறும்... இவை வலைப்பூவிற்கும் பொருந்தலாம்...! இரண்டு Gadgets மிகவும் முக்கியம் :-

(1) எடுத்துக்காட்டாக நாம் வாசிக்கும் நண்பரின் பதிவில், ஒரு வரி மிகவும் பிடித்திருக்கும்... சில நாட்கள் கழித்து, அந்தப்பதிவின் பெயரையோ அல்லது முழு வரியோ மறந்து இருக்கலாம்... ஆனால் ஏதேனும் ஓர் சொல் ஞாபகம் இருக்கும்... மீண்டும் அங்குத் தேடுவோம் என்று தேடினால், ஊர்ப்பட்ட குறிச்சொற்கள் (Labels) இருக்கும் தளத்தில், தேடும் பெட்டியே இருக்காது... அதனால் (Blog search) தேடுதல் பெட்டி இருக்க வேண்டும்... (2) இதே போல் (Follow by Email) புதிய பதிவுகளைப் பெறுதல் Gadget-ம்... நம் தளத்தை மின்னஞ்சல் மூலம் தொடரும் வலைப்பூவே இல்லாத வாசகர்களுக்கும், நமது அனைத்து பதிவுகளும் சென்றடைய... ம்ஹிம் சற்றே நீண்ட பதிவுகளும் சென்றடைய, நாம் செய்ய வேண்டியவை :- (i) DashboardSettingsSite feed கீழே ⇒ Allow Blog FeedUntil jump Break (தேர்வு செய்க) ⇒ Save (ii) புதிய பதிவில் இரண்டு வரிகளை எழுதிய பின், மேலுள்ள icon-களின் முடிவில் உள்ள மூன்று புள்ளிகளைச் சொடுக்கி, சிறு கோடு போலுள்ள 'Until jump Break' icon-சொடுக்கி விட்டுத் தொடர்ந்து எழுத வேண்டும்... இவற்றைச் செய்யாமல், Follow by Email Gadget வைத்திருந்து பயனில்லை... அடுத்து, சுயவிவரம் (Profile Gadget) வைத்துக் கொள்வது, இணைய நட்பை விரிவாக்கும் வழிகளில் ஒன்று... நாம் வைத்துக் கொண்டிருக்கும் மற்ற Gadgets அனைத்தும், பிறருக்காக உதவும் என்று நாம் நினைத்துக் கொண்டு, நாம் தான் அதிகம் பயன்படுத்துகிறோம் + தற்பெருமை கொண்டு மகிழ்கிறோம் என்பது தான் உண்மையான உண்மை...!

உங்கள் வலைப்பூவிலும் பார்க்கலாம் → DashboardStats(select) Last 30 daysMORE ABOUT THIS BLOGPageviews by Operating Systems ⇒ (கவனிக்க Windows & Android+etc.) | இங்கு Windows 30 சதவீதத்திற்கும் குறைவு (?!) நாளுக்கு நாள் கணினி பயன்பாடு ⇓ கைப்பேசி பயன்பாடு ⇑ வலைப்பதிவுகள் கைப்பேசியில் வாசிக்கும் போது, எந்த Gadgets-ம் தெரியாது... நாமாக, பதிவிற்கு முடிவில் உள்ள 'வலையில் காட்டு' (View Web Version) என்பதைச் சொடுக்கினால் தான், கணினியில் காண்பது போல், அனைத்து Gadgets-களும் காண முடியும்... கண்கள் மீது அக்கறை உள்ளவர்கள், அவ்வாறு காண விரும்புவதில்லை... பதிவுகள் அதிகமாக எழுதப்பட்ட + என்னிடம் NOKIA 1100 இருந்த வசந்த காலத்தில், எழுதிய முதல் தொழினுட்ப பதிவு இங்கு சொடுக்கி Gadgets பற்றிய எனது எண்ணங்களை அறியலாம்...

06. சரி, வலைப்பூவின் எதிர்காலம்...?

'பழசை என்றும் மறக்கக்கூடாது' என்று வாழ்விலும் தொடர்பவர்கள், பதிவுகளை அவ்வப்போது எழுதினாலும், வலைப்பூ வாசிப்பிற்கென நேரம் ஒதுக்கி, பதிவைச் சார்ந்து ஊக்குவிக்கும் வகையிலும் கருத்துரையிடும் நல்லுள்ளங்கள் இருக்கும் வரை, எதிர்காலம் நன்றாகவே இருக்கும்... இருக்கட்டும்... சிலவற்றை Google-ல் தேடும்போது சில வலைப்பூக்களை வாசிப்பதுண்டு... சிறப்பான பதிவுகளை வாசிக்கத் தவறி விட்டோமே என்று நினைப்பதுண்டு... சிலவற்றில் எந்த கருத்துரையும் இல்லாததைக் கண்டு வருத்தப்பட்டதும் உண்டு... அனைத்தும் உண்டு வலைப்பூ கடலில்...! ஒன்றை அழிப்பதற்கு, அதன் மேல் ஏறி வந்தவர்களே, "சீச்சீ... இந்தப்பழம் புளிக்கும்" என்று அவமதிப்பதில், வலைப்பூவும் ஒன்றாகி விட்டது என்பதை மறப்பதே நல்லது... பூனை கண்ணை மூடிக்கொண்டால் வலைப்பூ இருண்டு போகுமா என்ன...? அட... கூகுளே வலைப்பூவை மூடிவிட்டால், வலைத்தளத்திற்கு (website) மாறுவோம்... வருடத்திற்கு ஆறு நூறு தானே...? இலவசம் இல்லை என்றாலும், ஓட்டுப் போடும் திரட்டி இல்லாவிட்டாலும் நாம் எழுத வேண்டும்... ஓட்டு / EVM என்பது இன்றிரவு கிடையாது எனும்போது, இன்னும் அதிகம் எழுத வேண்டும்...! இப்போது சொல்லப்போவது சில வலைப்பூக்கள் காணாமல் போனதற்குக் காரணமாக இருக்கலாம் :- "பதிவைச் சார்ந்து கருத்துரை"... அதைச் செயல்படுத்த DashboardSettingsPosts, Comments கீழேComment ModerationAlways

இவ்வாறு செய்து விட்டால், பதிவிற்குச் சம்பந்தமே இல்லாமல், கருத்துரையில் கும்மியடிப்பதைத் தடுத்து விடலாம்... நேரம் எவ்வளவு முக்கியம் என்பதையும், பல வலைப்பூக்களைப் படித்து கருத்துரை இட்டுத் தொடர வேண்டும் என்பதையும், வேலைவெட்டி இல்லாத கும்மியானார்களுக்குத் தெரிவிக்கும் மறைமுக யுக்தி...! அப்படிச் செய்தும் அன்புத் தொல்லை அதிகமானால், அடுத்த நொடி ஒரு பகிரி குழுமம் (தமிழில் Whats-App Group) ஆரம்பித்து, அதில் சேர்த்து விட்டு, வலைப்பூவுக்குரிய மதிப்பைக் காப்பாற்றிய மகிழ்வில், பதிவைப்பற்றிய கருத்துரையில் கலந்து கொண்டு விவாதிக்கலாம்... அவை மேலும் பதிவு எழுதத் தூண்டும் என்பதோடு, பின்னாளில் நாம் எழுதிய பதிவுகள், நாமோ அல்லது புதிய வாசகர்களோ படிக்க நேரும் போது, ரசனையோடு இனிமை சேர்க்கும்... ஆக்கும் - காக்கும் - அழிக்கும் திறன்கள் மனிதனுக்கே நிறைய உண்டு...! அடுத்ததாக, சூழ்நிலையால் பலர் தொடர விட்டாலும், மீண்டும் மீண்டு வரும் போது, அவர்களைத் தொடர்வதும் முக்கியம்... அப்பாடா, இது எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே பொருந்தும்...! ☺

07. வலைப்பூ ⇒ நூல் வெளியீடு ⇒ மின்னூல் ⇒ அடுத்த முன்னேற்றம்...?

கிண்டில்...! அண்ணன் ஜோதிஜி மூலம் சிறிய ஜோதி தெரிந்தது...! நன்றி... மிகப்பெரிய நூலகத்தை சின்னஞ்சிறு கிண்டிலில், எண்ணிலடங்கா புத்தகங்களை வாசிப்பவர்களுக்கு அதன் அருமை தெரியும்... தெரிய வைத்த உறவினருக்கு நன்றி... இங்கே 'அருமை' என்று சொல்வது, கிண்டிலில் புத்தகத்தின் பக்கங்களை வாசிக்கும் அனுபவத்தையும்...! சிறப்பாக உள்ளது... Kindle with Audible கிடைக்கிறதாம், அதை வாங்கி கிண்டும் காலம் விரைவில்... அதுவரை கிண்டில் வாங்க முடியாத வல்லவனுக்குக் கணினியும் ஆயுதம்...! கைப்பேசி அதன் அண்ணன்...!

ஆனாலும், பிடித்த இடத்தில், பிடித்தமான புத்தகத்தை, ஒவ்வொரு பக்கமாகத் திருப்பி திருப்பி ரசித்துப் படிக்கும் அந்தச் சுகம், சிலுசிலுவென சிறிது மழைக்காற்று, மண் மணத்துடன் சிறிது புத்தக மணம், மனதில் ஆகா...! → இனி இவையெல்லாம் கனவு தான்... எந்த மணமும் கிடையாது... மரங்களை அழிக்கும் நமக்கு இதுவும் வேண்டும், கிண்டிலும் வேண்டும்...! ஆனால் தளத்தின் Theme மாற்றம், கிண்டில் மூலம் கிடைத்த ஒரு சிறு பொறி...!

மாற்றத்தை விரும்பவர்களே... வாருங்கள் மேலும் கற்றுக்கொள்வோம்... ☑

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார் (கல்வி 399)

கற்றறிந்த நண்பர்களே... மேலும் தங்களின் கேள்வி என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்


  1. தமிழ்ச்சரம் பலமுறை அலைபேசியில் முயன்றும் இணைய மறுக்கிறது அடுத்து கணினியில் முயற்சிக்கிறேன்

    இதை உருவாக்கிய நல் உள்ளங்களை வாழ்த்துவோம்

    என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்ச்சரத்தில் முன்பு இருந்த சிறுசிறு பிரச்சனைகளை சரி செய்து உள்ளார்கள்... இருந்தாலும் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன்... கைபேசியில் விவரங்களை தட்டச்சு செய்வதற்குள் "Time Out" என்று சொல்லி விடுகிறது... எனவே, கணினியில் செய்யவும்... கைபேசியில் பதிவு எழுதி பகிரும் தங்களின் கருத்துரை முதலில் வந்ததில் மகிழ்ச்சி...

      நீக்கு
    2. நம்ம பன்மொழி பண்டிதரான மதிப்புக்குரிய கில்லர்ஜி சார் அவர்கள் கைபேசியில் வாய் பேசாமல் கையால் பேசியே பதிவு எழுதுகிறார்கள் என்று உங்கள் மூலமாகவே தெரிந்துகொண்டேன் ... இன்னும் எத்தனை எத்தனை திறமைகள் அன்னாருக்குள் முக்காடு போட்டுக்கொண்டு ஒளிந்து கொண்டிருக்கிறதோ தெரியவில்லை !!! ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

      நீக்கு
  2. வலைப்பதிவுகள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. ஆனால் அவற்றை ஒருங்கிணைக்க முறையான திரட்டிகள் இல்லை. தற்போது தமிழ்ச்சரமும் எமது வலை ஓலையும் களத்தில் இறங்கியுள்ளன. இரண்டினதும் நிலைத்திருப்பு ஏனைய வலைப்பதிவர்களின் கரங்களில் தான் உள்ளது. வலைப்பதிவுகளும் ஏராளமான மாற்றங்களை சந்தித்துள்ளது. கூகுள் வலைப்பதிவுகளை மூடினால் இருக்கவே இருக்கிறது வேர்ட் பிரஸ். வேர்ட் பிரஸ் போன்ற சேவைகளை வழங்க கூகுளும் முன்வர வேண்டும். எதிர்காலத்தில் அது நடக்கலாம். காரணம், கூகுளில் தற்போது டொமைன் வாங்க முடியும் என்பதே. சந்திப்போம்.

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 20 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது தமிழ்ச்சரம் திரட்டியும், வலைப்பூ ஆய்வும்… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு

  3. 06. வலைப்பூவின் எதிர்கலம்...?

    தங்களது கண்ணோட்டம் மிகவும் சிறப்பு

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான பதிவு தனபாலன்.

    இரண்டாம் கேள்வி சுட்டும்போது அதற்கான பதில் வரவில்லை. என்னவென்று பார்த்து சரி செய்யுங்கள்.

    பல விஷயங்கள் உங்கள் மூலம் அனைத்து பதிவர்களும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடரட்டும் உங்கள் சீரிய பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர்களிடமும், கில்லர்ஜி அவர்களிடமும் பேசினேன்... அவ்வாறு இல்லை என்று சொன்னார்... அவ்வாறு வரவில்லை என்றால், அனைத்து தொழினுட்பமே வேலை செய்யாது... இருந்தாலும் இப்போது பார்க்கும் போது தான் தெரிந்தது... விளம்பரத்தால் தான் இந்த தொல்லை... பயன்படுத்திய தொழினுட்பத்தை வேறுவிதமாக மாற்றிப் பார்த்தாலும் வேறு எண்ணில் பதிலை வாசிக்க முடியவில்லை... எனவே அந்த தொழினுட்பத்தை எடுத்து விட்டேன்... நன்றி...

      நீக்கு
  5. அதை செய்வதை விட எனது பதிவுகள் முக்கியம் இல்லை . தங்கள் மனம் போலவே இந்த எழுத்தும் வெள்ளையாக இருக்கின்றன நண்பரே. உதவி வேண்டுமெனில் நிச்சயம் நான் உங்களிடம் வருவேன்.

    பதிலளிநீக்கு
  6. ஆத்தாடி எப்பூட்டு விசயத்தை எழுதியிருக்கீங்க. ஜோதிஜி என்று ஒவ்வொருவர் பெயரிலும் கர்சர் வைக்கும் போது அப்படியே மென்மையாக ஒரு நிறம் வருகிறது. அட்டகாசம். கலக்கல்.

    பதிலளிநீக்கு
  7. அவரவர்களின் பெயர்களைத் தொட்டவுடன் வண்ணமயமாக லிங்க் காட்சி தருவது சிறப்பாக இருக்கிறது DD.  

    தமிழ்ச்சரத்தில் எங்களை இணைக்க பலமுறை முயன்றும் முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  8. பயனுள்ள தகவல் களஞ்சியம்
    முயற்சி, பயிற்சி இரண்டும் வேண்டும்.
    நீங்கள் சொல்லி தருவதற்கு நன்றி.

    என்னைப் போன்றவர்கள் உங்களிடம் நிறை கற்றுக் கொள்ள வேண்டும்.

    உங்களை டெங்கு என்ன செய்யும் ஓடியதில் வியப்பு இல்லை.

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. மன்னிக்கவும்... இதே வந்து விட்டது... நம் நண்பர் வெங்கட்ஜி அவர்கள் கருத்துரையை வாசிக்கவும்... அந்த தொழினுட்பத்தை மாற்றி விட்டு, கருத்துரையில் சொல்லி விடலாம் என்று முயற்சி செய்து பார்த்தேன்... ம்ஹிம்... சில காரணங்களால் அதை எடுத்து விட்டேன்...

      தமிழ்ச்சரத்திற்கு தகவல் தெரிவிக்கிறேன்...

      இப்போது கருத்துரைகளை வெளியிட்டு பார்த்ததில் ஒரு வியப்பு... நீங்களும் ஜோதிஜி அவர்களும் ஒரே ரசனை - முந்தைய குறளின் குரலில் பதிவில் வந்தது போல...!!!

      நீக்கு
    2. ஹா...    ஹா...   ஹா...    அதுதான் சட்டென கண்ணைக் கவர்ந்தது DD.

      நீக்கு
  10. டிடி பதிவு சூப்பர். ஹை ஜி க்கள் மர்ட்டும் முனைவரின் பெயர் தொட்டா ஜிங்குச்சா...ன்னு கலர் காலரா வருது... பதிவு என் மண்டைல ஏற மீண்டும் வாசிக்க வேண்டும்....
    தமிழ்ச்சரம், வலை ஓலை எல்லாவற்றிலும் எங்கள் தளத்தையும் இணைக்க முயற்சி செய்கிறோம்...

    மிக்க நன்றி டிடி...

    கீதா

    பதிலளிநீக்கு
  11. அன்பு தனபாலன், தங்கள் தொழில் நுட்பம்
    அசரவைக்கிறது.என் கணினியில் ,வலைப்பதிவில் மாற்றம் செய்யவே ,மாற்றம் செய்தே
    பல நாட்கள் ஆகிவிட்டன. பயம் தான் காரணம். யூ டியூபில் இருந்து பாடல் பதிவு செய்ததும்
    பதிவே காணாமல் போகிறது.

    எல்லோரிடமும் இருக்கும் இந்த ரிப்ளை லிங்க்
    நானும் செய்யணும் என்று இருந்தேன்.
    யாரையும் தொந்தரவு செய்யக் கூடாது என்று
    விட்டு விட்டேன்.
    தங்களுக்கு டெங்கு காய்ச்சல் வந்ததா. அடக் கடவுளே.
    நலமே வாழ்க தனபாலன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் தொந்தரவே இல்லை அம்மா... எந்த நேரமும் உரிமையுடன் கேளுங்கள்... அதை உடனே செய்து விடலாம்... அது சும்மா ஒரே ஒரு 'ஸ்கிரிப்ட்' மட்டும் இணைக்கும் வேலை... ஏதோ முக்கியமான ஒன்றை மறந்து போல இருந்தது... உங்களின் கருத்துரையால் ஞாபகம் வந்து, அதை கேள்வி ஒன்றிக்கான பதிலில், எழுதி விட்டேன்... நன்றி அம்மா... காணொளி விவகாரம், சிறிது விளக்கமாக அடுத்த பதிவில் சொல்கிறேன்...

      நீக்கு
  12. பெயர்களை தொட்டவுடன் வண்ணமயமாக வருவது போன பதிவிலும் இருந்தது என்று நினைக்கிறேன் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் அம்மா... இந்த நான்கு திருக்குறள் அதிகாரங்கள் பற்றிய 'முன்னோட்டம்' பதிவிலிருந்தே இருக்கிறது... அந்தப் பதிவுகளிலெல்லாம் இணைப்புகள் (links) அதிகம் கிடையாதென்பதால், தெரியவில்லை...

      நீக்கு
  13. தங்களின் வலைப் பூ ஆய்வு அருமை ஐயா
    வலைப் பூவின் எதிர்காலம் பற்றிய தங்களின் கருத்தும் அருமை ஐயா
    மீசைக்கார நண்பர் கில்லர்ஜி, தேவியர் இல்லம் ஜோதிஜி எனப் பெயரினைத் தொட்டவுடன் ஒரு வண்ணம் மேலெழுகிறது பாருங்கள்,
    அதில் தெரிகிறார் வலைச் சித்தர்

    பதிலளிநீக்கு
  14. சிறந்த தொழில்நுட்ப ஆய்வுக் கண்ணோட்டமாகவே இப்பதிவை நோக்குகிறேன். வலைப்பதிவர்கள் இதனைக் கவனித்துத் தமது வலைப்பூவை மேம்படுத்த வாய்ப்புண்டு.
    மொத்தத்தில் யாவருக்கும் பயனுள்ள தகவல்
    நன்றி

    பதிலளிநீக்கு
  15. ஆவ்வ்வ் ஒரு போஸ்ட்டில் நிறையத் தகவல்கள் போட்டு விட்டீங்கள்.. அனைத்தையும் ஒரே நேரத்தில் உள்ளே ஏத்த முடியவில்லை:)) .. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வாசித்துப் புரிஞ்சுகொள்கிறேன், பகிர்வுக்கு நன்றி.

    வலைத்திரட்டிகள் இருப்பது தெரியும், ஆனா அதில் எப்படி இணைவது, என்ன பண்ணுவது என இதுவரை புரியவில்லை...

    பதிலளிநீக்கு
  16. மிகச் சிறப்பான பகிர்வு அண்ணா... பெயர்களைத் தொட்டால் வண்ணம் விரிகிறது... நிறைய உங்ககிட்ட கத்துக்கணும்... நிறைய விஷயங்களை எழுதியிருக்கீங்க...
    அருமை... அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  17. பதில்கள்
    1. இந்த வயதிலும் கேட்பொலியை சர்வசாதாரணமாக இணைத்து, சமீபத்தில் பதிவை வெளியிட்ட தங்களின் முயற்சிக்கு, மற்ற பதிவர்களை...? ஏனெனில், அவர்களைப்பற்றி கருத்து சொல்வதும் வீண் என்றும் நினைக்க மாட்டேன்... அவர்கள் வந்து கேட்டால், உதவி செய்யவும் தயாராக உள்ளேன்... நன்றி ஐயா...

      நீக்கு
  18. ஒரு பெரிய ஆய்வுக்கட்டுரையினைப் படித்த நிறைவு. ஆங்காங்கு இணைப்புகளுடன், புரிதல்களுக்கு எளிதாகத் தந்துள்ள விதம் அருமை. முயற்சித்துப் பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  19. தகவல் களஞ்சியம்...

    மாற்றம் ஒன்றே மாறதது... அதற்கு வலைத்தளமும் விதிவிலக்கல்ல!! எப்படி இருந்த நாம் இப்படி ஆகிட்டோம்?!

    பதிலளிநீக்கு
  20. முன்னோடியின் முத்திரைப் பதிவு

    பதிலளிநீக்கு
  21. பயனான பகிர்வு டிடி! கிண்டில் மின்நூல் கொண்டுவர முயற்ச்சிக்கின்றேன் விரைவில்

    பதிலளிநீக்கு
  22. மிகச் சிறப்பான பதிவு ஐயா! பதிவுத் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் சுருக்கமாக ஒரே பதிவில் நீங்கள் விவரித்திருப்பது பலருக்கும் பயன்படும். நன்றி!

    ஒன்பது ஆண்டுகளாக நீங்கள் பதிவு எழுதி வருகிறீர்கள் என அறிந்து மகிழ்ந்தேன். நான் வந்து ஏழு ஆண்டுகள்தாம் ஆகின்றன. என் பட்டறிவிலேயே பற்பல மாற்றங்களைப் பார்த்து விட்டேன். அப்படியிருக்க, நீங்கள் எவ்வளவு பார்த்திருப்பீர்கள்! இத்தனை ஆண்டுகளாக நீங்கள் எழுதிய தொழில்நுட்பத் தகவல்களையெல்லாம் இன்றைய நாளுக்கேற்ப மாற்றி நூலாக்குவது என்றால் அது புதிதாக நூலே எழுதுவதற்குச் சமம்! உங்கள் பேருழைப்புக்குத் தலைவணங்குகிறேன்!

    நீச்சல்காரன் என்று மட்டுமே இணையத்தமிழ் உலகெங்கும் அறியப்பட்ட நம் தொழில்நுட்ப மேதையின் பெயரை இன்றுதான் உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். தமிழ்ச்சரப் படைப்புக்குப் பின்னுள்ள மேலும் பலரையும் வலை ஓலை எனும் புதிய திரட்டியையும் அறிந்து கொள்ள முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி! மிக்க நன்றி! தொடர்ந்து வருவேன்.

    பதிலளிநீக்கு
  23. எனக்க இந்தத் தொழில் நுட:பங்கள் மிக தெரியாது டிடி

    பதிலளிநீக்கு
  24. நிறைய தொழில் நுட்பங்கள் பற்றிச் சொல்லியிருக்கீங்க.... ஒவ்வொன்றாக படித்து எப்படிச் செய்வது என முயற்சிக்க வேண்டும் . நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.