காணொளியும் கேட்பொலியும்...


வணக்கம்... கொரோனா கிருமி பரவாமல் இருக்க அனைவரும் அவரவர் வீட்டிலிருந்து, அனைவரையும் காப்போம்... நன்றிகள் பல...


// வானம் எனக்கொரு போதி மரம் - நாளும் எனக்கது சேதி தரும்... ஒரு நாள் உலகம் நீதி பெறும் - திருநாள் நிகழும் தேதி வரும்; கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன் - இது ஒரு பொன்மாலைப் பொழுது // என்று 2019-ல் கோடை சுகம் தரும் கொடையில் (கொடைக்கானலில்) என்னுயிர் மகள் சொல்ல, எனது 'தெய்வ மச்சான்' எனது இடது காலின் சிறிய பிரச்சனை நினைத்துச் சொன்னது : // அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது // என்று சொல்ல... முடிவாக என் மனதில் தோன்றிய பாடல், பதிவின் முடிவில்...!

நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்வதில் எனக்கு ஒரு பழக்கமுண்டு... தெரியாத ஒன்றைத் தெரியாமலே, தெரிந்து கொள்ள முயல்வது... சாதி மத இனம் தெரியாத குழந்தையைப் போலவே...! எனது பதிவுகளும் அவ்வாறே... சரி, முந்தைய ☛ வலைப்பூ ஆய்வு ☚ பதிவில், மற்றுமொரு புதிய "மறைந்திருந்து பார்க்கும் மர்ம" தொழினுட்பத்தைப் பயன்படுத்தினேன்... அது மறைந்திருந்து தாக்கும் கொரோனா போல மாறி, அதனை ரசிக்கத் தெரியாதென்று தொழினுட்பமே சொல்லி விட்டதால் நீக்கி விட்டேன்... (1) சுட்டிக்காட்டிய நம் இனிய நண்பர் → திரு. வெங்கட் நாகராஜ் ← அவர்களுக்கு நன்றி... அடுத்ததாக YouTube காணொளி பற்றி (2) → திருமதி. வல்லிசிம்ஹன் ← அம்மா அவர்களின் கருத்துரையால், மறந்து விட்ட ஒன்றை அந்தப்பதிவிலேயே கேள்வி ஒன்றின் பதிலில் சேர்த்து விட்டேன்... மற்றொன்று :- நம் சொந்த காணொளியைப் பதிவேற்றம் செய்து, பதிவில் காண்பதில் எவ்வித பிரச்சனையுமில்லை... நாமாக அதை நீக்கும் வரையில், பதிவில் என்றும் இருக்கும்... ஆனால், நமக்குப் பிடித்த திரைப்படப் பாடலைக் கொண்ட காணொளிகள் என்றால்...? சில நாட்கள் கழித்து, அவை 'YouTube சென்று பார்' என்று Google சொல்லி விடும்...! அதனால்...?

தெரிந்த ஒன்றையே அவ்வப்போது தொடரவிட்டால், அவை தெரியாமலே போய்விடும்... நீச்சல் தெரிந்தவர்களும், வாழ்வில் எதிர்நீச்சல் போடுபவர்களைத் தவிர...! சரி என்ன நடந்தது என்றால், என்னதான் பாடல்வரிகளை எழுதி, அதன் காணொளியை இணைத்தாலும், காணொளி செயல்படவில்லை என்றால், கேட்க முடியாதே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, "செவிச் செல்வம் முதன்மை" என்று தாத்தா அன்போடு சொல்ல, அது என் காதில் சற்று உரக்கவே கேட்டது...! எனது பதிவுகளில் YouTube காணொளிகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை... அதிகமில்லை... 500 திரைப்படப் பாடல் வரிகளைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது...! அதில் பாதியளவிற்கு மேல் குறள் சார்ந்து உள்ளவை... அனைத்து கேட்பொலியும் (mp3) முழுப்பாடலாக கணினியில் உண்டு... அதிலிருந்து தேவையானதைத் துண்டித்து இணைத்து, பாடல் வரிகளுடன் தரவேற்றம் செய்த கேட்பொலி உண்டு... கேட்பொலி இல்லாத பல பதிவுகளில் அதன் காணொளியும் உண்டு... இந்த 'பல பதிவுகளில்' தான் எதிர்நீச்சல் போட்டேன்...!

இத்தனையும் மாற்ற வேண்டுமே என்று நினைப்பதற்கு முன்பே, சோம்பலைப் பற்றி தாத்தா எந்த குறள் சொல்வாரோ என பயந்து, அந்த அதிகாரத்தைப் பற்றி எழுதவே சோம்பலா என வியந்து(!), புத்துணர்வுடன் அனைத்து காணொளிகளையும் கேட்பொலியாக மாற்றி விட்டேன்... (3 பதிவுகள் தவிர) கேட்பொலி இணைப்பது முன்பைவிட எளிது... சில சொடுக்குகள் மட்டுமே... அதைப் புதுப்பிக்கப்பட்ட ☛ நேயர் விருப்பம் ☚ பதிவின்படி, விருப்பப்பட்டு ஒருமுறை செய்தால் போதும்...!

பிற்சேர்க்கை : இந்தப்பதிவில் → திரு. ஸ்ரீராம் ← சார் அவர்களின் கருத்துரையால் சில தகவல்களும் இணைப்புகளும் :-
1) நமக்கு வேண்டிய பாடலின் அல்லது படத்தின் பெயருடன் mp3 song free download என்று இணையத்தில் தேடினால் கிடைக்கும்... அதை நாம் கணினியில் சேமித்துக் கொண்ட பின், அதில் வேண்டிய பகுதியை வெட்ட → Online mp3 Cutter
2) மேலே உள்ள இணைப்பில் Audio Joiner இருந்தாலும், அதைவிட எளிதான → Online Audio Joiner
3) நமக்கு வேண்டிய mp3 கிடைக்காது, ஆனால் காணொளி கிடைப்பதாக வைத்துக் கொள்வோம்... அதிலிருந்து mp3 மட்டும் பிரித்தெடுக்க : → YouTube to mp3 Converter ← இது எனக்குப் பல சமயத்தில் உதவி செய்திருக்கிறது... நீண்ட உரைகளை மாற்றவும்...! மாற்றிய mp3 உரைகள் அதிக கொள்ளளவு இருக்கும்... 20mb-க்கு சற்று குறைவாக இருந்தால் தான் இணையத்தில் தரவேற்றம் செய்ய முடியும்... அதற்கு முதலில் உள்ள Online mp3 Cutter உதவும்... நன்றி...


© கலங்கரை விளக்கம் வாலி M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1965 ⟫

சரி, இப்போது எனது விருப்பப்படி பாடலை குறைந்த ஒலியில் வைத்துவிட்டு, கீழுள்ள வரிகளில் பாடியவர்கள் யார்யார் என்பதைக் கருத்துரையில் சொல்வீர்களா...? நன்றி...

நான் காற்று வாங்கப் போகலை - ஒரு கொரோனா வாங்கி வரலை... இதைக் கேட்டு Gate-டை பூட்டினால் - அந்த தொற்று என்ன செய்யும்...? // நம் அழுக்கு உள்ள கைகள் - அது உலவுகின்ற மேடை... அதன் பார்வை நீந்தும் இடமோ - நம் மூச்சை நிறுத்தும் வேலை... சோப்பு போட்டு அழித்தால், அந்த கிருமி தருமியாகும்... // நடை பழகும்போது கூட்டம் - தொற்றைப் பரவிக்கொண்டு போகும்... அந்த தும்மல் ஒன்று போதும் - நெஞ்சை அடைத்துக் கொண்டு போகும்... இதைக் கேட்டும் walking போனால், அந்தக் குடும்பம் என்னவாகும்...? // நல்ல நிலவு தூங்கும் நேரம் - அந்த வைரஸ் தூங்கவில்லை... கொஞ்சம் விலகி நின்ற போதும் - நம் இதயம் தாக்கவில்லை... இதைக் கேட்டும் வீட்டிலிருந்தால், உலகம் உன்னைப் போற்றும்...//

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன்.. கொரொனாவை இன்னும் பார்க்கலியே:))..

  ஹா ஹா ஹா படம் பார்த்த கணத்தில் மனதில் உதித்த வரிகள்..

  வழமைபோல தொகுப்பையும் பாடல்களையும் ரசித்தேன்..

  கேள்வி-பதில் பகுதிக்கு நான் வரவில்லை.. அதற்கெனப் பதில் சொல்ல பல பாடல் வல்லுனர்கள் இருக்கினம் நம் வலையுலகில் ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /// அட பல நாள் இருந்தேன் உள்ளே - அந்த நிம்மதி இங்கில்ல… உள்ளே இருக்கும் அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க... வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க... //

   இன்றைய நிலையில், உள்ளே = வீட்டிற்குள்ளே

   இந்தப் பாடலும் பிடிக்கும்... நன்றி சகோதரி...

   நீக்கு

 2. //எனக்கு ஒரு டழக்கமுண்டு தெரியாத ஒன்றை தெரியாமலே... தெரிந்து கொள்ள முயற்சிப்பது//

  ஸூப்பர் ஜி நானும் பல நேரங்களில் இந்த ஜாதிதான் இதை பதிவுகளில் சொல்லி இருக்கிறேன்

  போதி மரத்தை பார்ப்பது அருமை ஜி நான் பலமுறை மொட்டை மாடியில் படுக்கும்போது பார்த்து இருக்கிறேன்.

  வழக்கம் போல தொழில்நுற்பத்தில் அசத்தல்.

  வாழ்த்துகள் ஜி கொரானோ வந்த வழியே போகட்டும் இறைவனை பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 3. "வானம் எனக்கொரு போதிமரம்" வரிகளுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் போஸா அது DD?  இது எப்போது எடுத்த படம்?  தமிழ்த் திரையுலகம் ஒரு நல்ல கதாநாயகனை இழந்திருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 3 மாதங்களுக்கு முன் கொடைக்கானலில் செல்ல மகள் எடுத்த புகைப்படம்... பதிவின் முடிவில் உள்ள பாடலை எழுதி பாடிக்கொண்டிருந்தபோது, எனது படத்தையும் போட வைத்ததும் அவரே...

   நீக்கு
  2. மகளுக்கு வாழ்த்துகள். 21 நாளில் நல்ல திட்டத்தை உருவாக்கி அதன்படியே செயல்படவும். எங்களுக்கு அறியத் தரவும்.

   நீக்கு
 4. காணொளிகள் கொஞ்ச நாளில் காணாமல் போகும் என்பதை பார்த்திருக்கிறேன்.  இந்தப் பாடல் வரிகளை வெட்டும் தொழில்நுட்பம் என்னிடம் இல்லை.   பொறுமையாகச் சேர்த்து விட்டேன் என்கிறீர்கள்.  ரொம்பவே பொறுமை தேவைப்படும் வேலை அது.    பாராட்டுகள்.   தமிழில் சொல்லணும்ணா ஹாட்ஸ் ஆஃப்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் சார்... பதிவில் சில தகவல்களையும் இணைப்புகளையும் சொல்லியுள்ளேன்... நன்றி...

   நீக்கு
  2. காலையிலேயே அந்த இணைப்பைப் பார்த்து லிங்க் குறித்து வைத்திருக்கிறேன்.

   நீக்கு
 5. காற்று வாங்கப்போனேன் பாடலின் உல்ட்டா மிகவும் ரசிக்க வைத்தது.  பாடலை உல்ட்டா செய்து பாடி இருக்கிறீர்களோ என்று பார்த்தால் ஒரிஜினல் பாடலையே போட்டிருக்கிறீர்கள்!  எனவே நான் இபப்டிக் பாடுகிறேன்..  "பாட்டுக்கு கேட்கப் போனேன்...   அங்கு பல்பு வாங்கி வந்தேன்.."  !!!

  ஆனால் எனக்கு மிகவும் பிடித்த அப்பாடல் DD 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று TMS பிறந்தநாள் என்பதற்காக சில பாடல்களை தேர்வு செய்ததில், இந்தப்பாடல் முழுவதும் இன்றைய சூழலுக்கு சரியாக இருந்ததால் தேர்வு செய்தேன்...

   நீக்கு
 6. என்னவோ "ரசினியின் காதலில் தீபமொன்று" என நினைவுபடுத்துகிறது அண்ணா!

  பதிலளிநீக்கு
 7. காலம், நேரம் பார்த்து உருவான கருப்பொருளுடன் தமது இலக்கியப் பாணியில் தம்மைச் சமூகப் பொறுப்புள்ள வலைப்பதிவர் என அடையாளப்படுத்தி உள்ளீர்கள். பாராட்டுகள்.
  ஒவ்வொரு வலைப்பதிவரும் கொரோனா விழிப்புணர்வைப் பகிர்ந்து மக்களைக் காப்பாற்றும் பணியைச் செய்வோம்.

  பதிலளிநீக்கு
 8. இனிமையான பாடல்.

  பதிவில் என்னையும் குறிப்பிட்டு இருப்பதற்கு நன்றி.

  நேயர் விருப்பம் இனிமேல் தான் கேட்க வேண்டும்.

  நலமே விளையட்டும்.

  பதிலளிநீக்கு
 9. உங்கள் படம் அருமை, எடுத்தவர் உங்கள் மகளா? அருமையாக எடுத்து இருக்கிறார்.

  உங்களுக்கு தோன்றிய பாடல் அருமை.
  காற்று வாங்க போனேன் பாடலை முன்பு எல்லோரும் அவர்கள் இஷ்டம் போல மாற்றி பாடுவார்கள். பள்ளி காலத்தில்.

  நீங்களும் அழகாய் மாற்றி எழுதி விட்டீர்கள். பாடலை யார் பாடி இருக்கிறார்கள் என்று கேள்வியும் கேட்டு விட்டீர்கள்.

  எப்படியோ கேட்பொலியை முழுமையாக கேட்டு இருப்பார்கள் .
  ஒரு பாட்டு என்றாலும் முழுமையாக கேட்க வழி உங்கள் கேள்வி.

  உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. அந்தி மழைப் பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது
  என்பதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது
  ஒவ்வொரு வலைப்பூவிலும் வாசம் வீசுகிறது,
  ஒவ்வொரு இதழிலும் தங்கள் முகம் தெரிகிறது என்பதுதான்.
  வானம் எனக்கொரு போதிமரம் என்று வானத்தைப் பார்க்கும் தங்கள் படம் அழகு.

  பதிலளிநீக்கு
 11. வழக்கம்போல் பதிவு மூலம் பல புதியவற்றை அறிந்தேன். உங்களின் புகைப்படத்தை மிகவும் ரசித்தேன். ரசனையாக எடுக்கப்பட்டது. .

  பதிலளிநீக்கு
 12. தாய்க்கொரு தாலாட்டு படத்தில் பாண்டியன் காதலா காதலா என்று பாடுவது போல இருக்கு டிடியின் மரச்சாயுதல்.பாடல்கள் எப்போதும் தனித்துவம்.

  பதிலளிநீக்கு
 13. யூட்டிப்பில் வெட்டி ஒட்டும் செயல்முறை இன்னும் கைகூடவில்லை!

  பதிலளிநீக்கு
 14. கற்றது (நான் )கடுகளவு கற்க வேண்டியது வானளவு

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. வானமெனும் போதி மரத்தை நோக்கும் உங்கள் படமும் அருமை.. புகைப்படத்தை அழகாக எடுத்த உங்கள் மகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். நல்ல தொழில் நுட்ப தகவல்களுக்கும் நன்றி. பழைய முழு பாடலுக்கும், பொருத்தமாக புதிய வைரஸ் பாடலாக்கி தாங்கள் தந்த விதத்தை பாடியே ரசித்தேன். அனைவரும் இந்த வைரஸிடமிருந்து தப்பித்து நலமே வாழ நானும் பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 16. எனக்குப் பிடித்த காணொளியை கேட்பொலியாக மாற்ற தாங்கள் தந்திருக்கும் இணைப்புக்கு நன்றி! வழக்கம் போல் தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள உதவியுள்ளீர்கள். பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 17. /தும்மல் ஒன்று போதும்  நெஞ்சை  அடைத்துக்கொண்டு போகும் //இப்போதல்லாம் யாரக்காகும் ஒரு மைல் தள்ளி தும்மினாலும் நமக்கு நெஞ்சு பதறுது .கொரோனா பேரைக்கேட்டாலே  அதிருது சுத்து வட்டாரம் .பாட்டை கேட்டுட்டே கமெண்ட் எழுதறேன் .

  பதிலளிநீக்கு
 18. கடைசிப்பத்தி அருமை. mp3 cutter மற்றும் பிற தொழில்நுட்ப செய்திகளுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 19. அட கொரோனாவும் பாடலில்!! கொரோனா எல்லாரையும் பாட வைக்கிறது!! பாடல் எழுதவும் வைக்கிறது ஹா ஹா ஹா.

  யூட்யூப் டு எம் பி 3 அது செய்திருக்கிறேன், டிடி. எம் பி 3 கட்டர் ஒரு முறை முயற்சி செய்தேன். அது போல வீடியோவும் ஏதோ ஒரு ஃப்ரீ ஸாஃப்ட்வேர் டவுன்லோட் செய்து அதில் எடிட் செய்து ஒரே ஒரு முறை பதிவில் பயன்படுத்தியுள்ளேன். ஆனால் விரிவாகச் செய்ய க் கற்றுக் கொள்ள வேண்டும். நானும் புதிதாக ஏதேனும் கற்க விழைவதுண்டு. தற்போது கணினி நேரம் குறைவு என்பதால் செய்ய இயலவில்லை.

  உங்கள் உல்டா வரிகள் செம...ரசித்தேன். அந்த வாய்ஸ் நீங்கள் எழுதிய வரிகளைப் பாடியிருப்பீங்கனு நினைச்சேன் டிடி ச்சே செம ப்ரைட் பல்பு..ஹா ஹா ஹா ஹா...ஒரிஜினல் பாடல். காற்று வாங்கப் போனேன் பாடல் மிகவும் பிடித்த பாடல்...

  வானம் எனக்கொரு போதி மரம் அருமையான பாடல் அதுக்கான போஸ்!!! சூப்பர். ச்சே தமிழ்த்திரையுலகம் ஒரு ஹான்ட்சம் ஹீரோவை மிஸ் பண்ணிடுச்சோ!!!!!!!!!!!!!டிடி! ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 20. தும்மல்...ஆஆஆஆ டிடி யாராச்சும் சும்மா தும்மினாலே அல்லது ரொம்ப இருமினாலோ டென்ஷனாகிடுது...கொரோனாவா ந்னு. அந்த அளவுக்கு கொரோனா மறைஞ்சு இருந்துக்கிட்டு மாயாவி போல உலகையே ஆட்டிப் படைக்குது...

  நாங்களும் வீட்டுக்குள்ளதான்..வெளியில் அதுவும் நான்கைந்து பேராகச் சுற்றுபவர்களைப் பார்க்கும் போது கோவிடியட்ஸ் என்று கோபம் வருது...

  கீதா

  பதிலளிநீக்கு
 21. பாடல், குறள், தெளிவுரை அருமை.
  கொரோனா விழிப்புணர்வோடு - ஈழத்தில்
  நாமும் வீட்டுக் காவலில் தான்...

  பதிலளிநீக்கு
 22. அழகாக POSE கொடுத்துள்ளீர்கள் நண்பரே.
  கேட்பொலி எனும் சொல் எனக்கு புதியாக உள்ளது. தங்கள்ளின் "காற்று வாங்க போன" கவிதை இன்றைய தேவை.

  பதிலளிநீக்கு
 23. காற்று வாங்கப் போனேன் - ஒரு
  "கொரானா" வாங்கி வந்தேன்.... அதை
  கேட்டு வாங்கி போனாள் அந்த
  கன்னி என்னவானாள். (நான் காற்று ... )

  என் உணர்வு தூங்கும் நேரம் - அவள்
  நினைவு தூங்கவில்லை ... ஆனால்
  அந்த நிலவு தூங்கும் நேரம்
  அவள் "டெட்பாடி" யானாள்...
  >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.