புதன், 15 மே, 2013

அதான் எனக்குத் தெரியுமே - பூரி மசால்...!


வணக்கம் நண்பர்களே... அனைத்து தொழிற்நுட்ப நண்பர்களுக்கு முதலில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்...♥♥♥ புதிய பதிவர்களுக்கும் உதவும் என்கிற எண்ணத்துடன் சிலவற்றைப் பகிர்கிறேன்...இந்தப் பதிவு புதுப்பிக்கப்பட்ட நாள் : 18.10.2019

நண்பர்களே சிறு வேண்டுகோள் : கீழே உள்ள Play button-னை சொடுக்கவும். ஒருமுறை அழுத்தினால், பதிவை வாசிக்க முடியாதென்பதால்... Ω இருமுறை சொடுக்கவும். பதிவைப் படித்து முடிப்பதற்குள் Load ஆகிவிடும்.


பல நேரங்களில் சில திரட்டிகள் / Gadgets வேலை செய்வதில்லை. அதனால் தளங்கள் திறக்க வெகு நேரம் ஆகும். சிலவற்றை நீக்கலாம். சிலவற்றை அவ்வப்போது நிறுத்தியும் வைக்கலாம். தேவை ஒரு ஆச்சரியக் குறி !

கவனிக்கவும் Δ = க்ளிக் = (சொடுக்கவும்) O.K. √ உங்களின் பிளாக்கர் (Gmail) Account-ல் நுழைந்து கொள்ளவும். மொழி தமிழில் இருந்தால், Settings »» Δ User settings »» Language என்பதில் Δ Google Account »» edit icon-யை சொடுக்கி, தமிழை தேர்ந்தெடுக்கவும்... ஆங்கிலத்தில் விளக்குவதற்கு எளிதாக இருக்கும்... மீண்டும் உங்கள் வலைத்தள பக்கத்திற்கு வந்து, தளத்தை Refresh செய்யவும்... பல பேர் பல தளங்கள் வைத்திருக்கலாம்... அதில் மாற்ற வேண்டிய தளத்தை தேர்வு செய்யவும். திரட்டியை abc.com என்று எடுத்துக் கொண்டுள்ளேன்...

HTML-யை திருத்துவதற்கு முன் முக்கியமாக முதலில் செய்ய வேண்டியது :- (தவறானால் மீண்டும் பழைய Template-யை upload செய்து கொள்ள முடியும்...)

1. Δ Theme »» 2. Δ Backup/Restore »» 3. Δ Download full Theme »» 4. Δ close

1. Δ Theme »» 2. Δ Edit HTML »» அதில் ஏதேனும் ஒரு இடத்தில் Δ செய்யவும். இப்போது திரட்டியை (abc.com) தேடப் போகிறோம். எப்படி...? : »» 3. Ctrl கீயை அழுத்திக் கொண்டு, F கீயை அழுத்தவும் »» 4. தோன்றும் சிறிய பெட்டியில் abc.com என்று டைப் செய்து enter (↵) தட்டவும். அந்த இடத்திற்குச் சென்று விடலாம். அங்கு abc.com highlight ஆக தெரியும். பல திரட்டிகள் script என்று ஆரம்பிக்கும். (சிலது div என்று இருக்கலாம்) »» 5. எது இருந்தாலும் அந்த script / div க்கு முன்னாலும் முடிவிலும் கீழே படத்தில் உள்ளது போல் டைப் செய்யவும் »» 6. Δ Save theme »» 7. Δ back
td என்று இருக்கிறதே...! நீங்கள் திரட்டியை அழகாக கட்டத்தில் வைத்து உள்ளீர்கள். அப்படி இருந்தால் அதற்கு முன் சேர்த்து விடுங்கள். அவ்வளவு தான்... அந்தத் திரட்டி வேலை செய்யாது. மீண்டும் திரட்டி வேலை செய்யும் போது, இதே முறையைப் பின்பற்றிச் சேர்த்ததை நீக்கி விடவும். இது திரட்டிகளுக்கு மட்டுமல்ல. தளத்தில் இணைக்கப்பட்ட மற்றவைகளுக்கும் (Gadgets) பொருந்தும். இதே போல் செய்யலாம்...!

இதோ எனது தளத்தின் HTML-ன் ஆரம்ப வரிகள் உங்களின் பார்வைக்காக...
ஒவ்வொரு முறையும் நமது இணையத் தொழிற்நுட்ப நண்பர்கள் பதிவில் செய்ததை எல்லாம், நமது HTML ஆரம்பத்தில் குறித்து வைத்தோமானால் (added1-விவரம்-நண்பரின் தளம்) தேடுவதும் திருத்துவதும் எளிது...

1. தமிழ்மணம் எங்கே எப்படி இணைப்பது பற்றி அறிய Δஇங்கே
2. துள்ளிக் குதிக்கும் ப்ளாக் - தீர்வு என்ன? அறிய Δஇங்கே

3. HTML is easy to learn - You will enjoy it. அப்படியா...? அறிய Δஇங்கே

"அதெல்லாம் சரி, இப்படி செயல்படாத திரட்டிகளாலோ, மற்றவைகளாலோ தளங்கள் முழுவதுமாக உடனே திறக்காது... அந்தச் சமயங்களில் தளங்களை விரைவாகத் திறக்க ஒரு வழி இருக்கா...?

ஏகப்பட்ட Gadgets, Logos வைத்திருந்தேன். தற்போது குறைத்து, இணைத்து வைத்துள்ளேன் என்று நினைக்கிறேன்... இதுவும் கடந்து போகும்...! ஹா... ஹா...

வழக்கமாக வாசிக்கும் தளங்களில் ஓட்டுப்பட்டை எங்கிருக்கும் என்பது நமக்குத் தெரியும். ஓட்டு இட்டவுடன் செய்ய வேண்டியது. (Example : http://xyz.blogspot.com-Browser tab-ல் கீழுள்ளவாறு) ↓

1) http://xyz.blogspot.com/2013/05/blog-post_15.html - இதை சொடுக்கினால்...

2) http://xyz.blogspot.com/2013/05/blog-post_15.html (இவ்வாறு highlight ஆகும்.)

3) மறுபடியும் ஒருமுறை அதே tab-ல் வெற்று இடத்தில் ஒருமுறை Δ செய்யவும். அல்லது Right Arrow key-யை (—>) அழுத்தவும். கர்சர் அந்த இடத்தில் மினுக்கி கொண்டிருக்கும். (html-க்கு அடுத்து) ↓

4) http://xyz/2013/05/blog-post_15.html|-இங்கு ?m=1 என்றடித்து enter(↵) தட்டவும்.

5) http://xyz/2013/05/blog-post_15.html?m=1 ← இது போல்...

ஒரு நிமிடம் ஆவதற்கு முன்னாலே எந்தத் தளமும் திறந்து விடும். அந்தத் தளத்தின் பதிவு மட்டும் வரும். வாசிக்க எளிது. Post a Comment-யை சொடுக்கி, கருத்திடவும் எளிது ! (கவனிக்க: Mobile View வைத்துள்ள ப்ளாக்கர் தளங்கள்)

அவ்வாறு URL-ல் ?m=1 இட்டு விட்டு பார்க்கும் போது, ஓட்டுப்பட்டைகள் உட்பட எந்த Gadget-ம் வராது. (நான் வாசிக்கும் தளங்களில் முதலில் தமிழ்மணம் ஒட்டு இட்டவுடன் தான் இவ்வாறு செய்கிறேன்) அப்புறம் புதிய தளம் என்றால் Followers, Email Subscription, Facebook இவற்றில் இணைந்து விட்டால், புதிய பதிவர்களுக்கு அதுவும் ஒரு ஊக்கம் தான்... பிறகு Reader-ல் படிப்பதால் தளங்களுக்கே செல்வதில்லை... காரணம் பலரும் பதிவில் Until Jump break-யை பயன்படுத்துவதில்லை... விளக்கம் அடுத்தடுத்த பதிவுகளில்...

நண்பர்களே... இப்போது மேலே உள்ள Play ≥ பட்டனை சொடுக்கி சிறப்பான நகைச்சுவையை ரசிக்கலாம்... சின்ன DD Mix + உதவி : வைகைப்புயல்...!

நண்பர்களே... பல இணைய நண்பர்கள் அவர்களின் தள விவரங்களைத் தந்து மாற்ற சொல்வார்கள்... அதனால் தான் இந்தப் பகிர்வே... அவர்களுக்கு மிக்க நன்றி.... தமிழ்வாசி பிரகாஷ் வலைப்பூ வழிகாட்டுதல் தொடர் பகிர்வு ஒன்றில் ஒன்றைப் பற்றிய விசாரிக்க, அதனால் நான் அடைந்த அதிர்ச்சியும், கிடைத்த பயனும்... அறிய : →இங்கே ← சொடுக்கி தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...

நண்பர்களே... தங்களின் கருத்து என்ன ?

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

தொடர்புடைய பதிவுகளை படிக்க :


84 கருத்துகள்:

 1. அருமையான, உபயோகமான தகவல்களைத் தந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 2. அண்ணே...!
  நல்ல தகவல்கள் ...!

  நானும் முயற்சிக்கணும்....!

  நன்றி !

  பதிலளிநீக்கு
 3. மிகவும் பயனுள்ள பதிவு .புதிய பதிவர்களுக்கு மட்டுமல்ல என்னைப் போன்றோருக்கும் மிகவும் பயன்படும்.நன்றி

  பதிலளிநீக்கு
 4. தொடரட்டும் உங்கள் பணி ...என்னைப் போன்றவர்களுக்கு உங்களின் வழிகாட்டல் வேண்டும் !

  பதிலளிநீக்கு
 5. காலத்தால் அழியாத நகைச்சுவைக் காட்சி இது
  பகிர்வுக்கு நன்றிகள் பல நண்பரே..
  அற்புதமான தகவல்களுடன் இன்றைய பதிவு மிக அருமை....
  ==
  நண்பர் தமிழ்வாசிக்கு... வைகைப்புயல் ..
  அட... அங்கேயும் ஆச்சர்யக்குறியா!!!!

  பதிலளிநீக்கு
 6. சிரமம் பாராமல் ஆய்வு செய்து பல அறிய நூதனமான தகவல்களை அளித்தமைக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 7. அது தான் தெரியுமே! :) உபயோகமான பகிர்வு. நன்றி :)

  பதிலளிநீக்கு
 8. நீங்க கில்லாடி என்ற கில்லி தான்

  பதிலளிநீக்கு
 9. அறியாத தகவல்களை
  அனைவரும் அறிய விரிவாகவும்
  எளிமையாகவும் பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 10. மிகவும் உபயோகமுள்ள பதிவு. நன்றி!

  பதிலளிநீக்கு
 11. இது புதியவர்களுக்கு மட்டுமில்லை பழையவர்களுக்கும் உபயோகமாகவே இருக்கிறது. நன்றி தனபால்...!

  பதிலளிநீக்கு
 12. நன்றி! நன்றி! தமிழ்மணம் ஓட்டுப்பட்டை பதிவிற்கு கீழே கொண்டுவந்துவிட்டேன்..
  பிரபு அவர்களுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 13. எனக்கு மிகுவும் பயனுள்ள தகவல். இந்த செயல் முறைகளை இப்போதுதான் மெதுவாக கற்றுக்கொள்கிறேன்.பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. நன்றி அண்ணா. நாங்களும் ?m=1 பண்ணினோமில்ல ஹஹஹா.

  பதிலளிநீக்கு
 15. நல்ல தகவல் தான் முயற்சி செய்கிறேன் அண்ணா

  பதிலளிநீக்கு
 16. நல்லது நிறைய தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள் பதிவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்...

  பிளாக்கர் செட்டிங் எல்லாம் புதிய வடிவில் இருக்கிறது எனக்கும் மிகவும் குழப்பாக இருக்கிறது... புரிந்துக்கொள்ள இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்....

  தகவல்களுக்கு மிக்க நன்றி தனபாலன்...

  பதிலளிநீக்கு
 17. அண்ணே பேஸ் புக் கமெண்ட் பாக்ஸ் இணைப்பு பற்றி கொஞ்சம் விரிவா சொல்லுங்க

  பதிலளிநீக்கு
 18. உபயோகமான பதிவு ஐயா!

  பதிலளிநீக்கு
 19. நல்ல பயனுள்ள பதிவு .
  வாழ்த்துக்கள்.
  என் வலைத்தளம் துள்ளி குதிப்பதாய் என்னிடமும் , உங்களிடமும் சில பதிவர்கள் சொன்னதால் உங்கள் ஆலோசனைப்படி சில திருத்தங்கள் செய்தவுடன் இப்போது துள்ளி குதிப்பது இல்லை.
  உங்களுக்கு நன்றி தனபாலன்.
  உங்கள் சேவை வாழ்க!

  பதிலளிநீக்கு
 20. அதான் எனக்கு தெரியுமே நீங்கள் சிறப்பான கட்டுரை தருவீங்கன்னு. நல்ல பயனுள்ள பதிவு .
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. பயனுள்ள தகவல்கள்..பாராட்டுக்கள்.
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு
 22. மிகவும் பயனுள்ள தகவல்கள். பொறுமையாக படித்தேன். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 23. பலருக்கும் பயன் உள்ள பகிர்வு நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 24. நல்ல தகவல்தனைக் கொடுத்திருக்கின்றீர்கள்!...

  பதிலளிநீக்கு
 25. தமிழ்மணம் ஓட்டுப்பட்டை செயல்படவில்லையே????

  பதிலளிநீக்கு

 26. எல்லோருக்கும் பயனுள்ள பதிவு

  தகவல்களுக்கு நன்றி சார்

  பதிலளிநீக்கு
 27. கணணி தொழில்நுட்பம் பற்றிய அறிவு கொஞ்சமும் இல்லாததால் ஒவ்வொரு வரியாகப் படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன், தனபாலன்.

  படித்து அதை செயலாக்கும்போது தான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றுகிறது.

  உங்களின் சேவை மிகவும் போற்றத்தகுந்தது.

  பதிலளிநீக்கு
 28. நல்ல தகவல்கள்.ஆமாம்,தங்கவேலு காமெடியில் இடையில் எப்படி வடிவேலு?மிக்ஸ் சூப்பர்.ஒரு முறை மனோ அக்கா இந்த ப்லே பட்டனை எப்படி ப்ளாக் போஸ்டில் காட்டுவதுன்னு என்னிடம் கேட்டாங்க,எனக்கு விளக்கம் தெரியலைன்னு சொன்னேன்.ஒரு பதிவாக போட்டால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.
  அதான் தெரியுமேன்னு இருக்க முடியலை..

  பதிலளிநீக்கு
 29. மிகப் பிரயோசனமான பகிர்வு. நல்ல உதவிகளைச் செய்கிறீர்கள் தனபாலன் நன்றி,.

  பதிலளிநீக்கு
 30. கற்றதை கற்றுக்கொடுக்கும் மனசு எல்லோருக்கும் வருவதில்லை :) ஆடியோவில் நீங்க ஏதும் நகைச்சுவையா பேசி இருப்பீங்கன்னு நெனச்சேன்.

  பதிலளிநீக்கு
 31. எனக்கு மிகவும் உதவும் பதிவு.நன்றி நண்பரே..

  பதிலளிநீக்கு
 32. மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே. வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  பவள சங்கரி

  பதிலளிநீக்கு
 33. மிகவும் பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 34. தொழில் நுட்ப பதிவர்களுக்கு போட்டியாக ஒரு பதிவு அருமை

  பதிலளிநீக்கு
 35. அருமையான தகவல்கள்! இண்ட்லி திரட்டி இரண்டு தினங்களாக சரியாக வேலை செய்யவில்லை போல் உள்ளதே! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 36. நல்ல தகவல்களை மீள்பதிவாக்கியிருப்பது சிறப்பு. இந்த விஷயத்தில் உங்கள் மீது எனக்கு எப்போதுமே பிரமிப்பு உண்டு.

  பதிலளிநீக்கு
 37. பயன்மிக்க தகவல்கள். அருமை. பகிர்விற்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 38. நல்ல பயனுள்ள பதிவு. ஆனால் நடைமுறை படுத்தும் போது எங்கேயாவது தப்பு செய்கிறேன். இந்த உங்களுடைய பதிவை நிறுத்தி நிதானமாக படித்து சிலவற்றை நடை முறை படுத்த முயற்சிக்கிறேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு

 39. வணக்கம்!

  தனபால் அளித்த தமிழ்வலை நுட்பம்
  மனமேல் மிளிரும் மணந்து!

  கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 40. உங்க வேகத்துக்கான ரகசியத்தை எளிமையா புரிகிற மாதிரி சொல்லிட்டீங்க. நாங்களும் முயற்சி செய்து பாக்கறோம்.
  தற்காலிகமா திரட்டிகளை நிறுத்தி வைப்பதற்கும் மீண்டும் இயக்குவதற்கும் நல்ல ஆலோசனை
  நன்றி.

  பதிலளிநீக்கு
 41. nalla thagaval. nandri sir! valthukal..

  comment ..

  ithu HTML program eluthu bothu navagam vaika payan padum..
  naan oru galathula padichan... ippa navagam vanthucuu.. nandriii...

  by. 99likes

  பதிலளிநீக்கு
 42. வித்தியாசமான முயற்சியுடன் கூடிய அழகிய தொழில்நுட்ப பதிவு !

  தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 43. இப்படியெல்லாம் செய்யமுடியுமென்பதை அறிந்து வியப்பு. பல வகையிலும் பதிவர்களுக்குப் பயன்படும் தகவல்கள். நான் சமீபகாலத்தில்தான் html இல் திருத்தங்கள் செய்யும் வழிகளைக் கற்றுக்கொண்டேன். மிக மிக நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு

 44. இப்போது ஏதோ சிரமமில்லாமல் போகிறது.படித்தாலும் நினைவில் இருக்குமோ என்னவோ. தேவைப்பட்டபோது உபயோகிக்கிறேன். ஓட்டுப் பட்டைகளால் என்ன பிரயோசனம்.? நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓட்டுப் பட்டைகளின் உதவியுடன் பதிவுகளுக்கு வாக்களிக்க முடியும். குறிப்பிட்ட வாக்குகளைப் பெற்ற பதிவுகள், திரட்டியில் (தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்10) முதல் பக்கத்தில் காட்சியளிக்கும். திரட்டிகளின் மூலம் பதிவுகளை படிப்பவர்கள் முதல் பக்கத்தில் இருக்கும் பதிவுகளையே அதிகம் வாசிக்கின்றனர். இதனால் உங்களுடைய வலைப்பூவிற்கு அதிக வாசகர்கள் கிடைப்பார்கள். உங்களுடைய வலைப்பூவும், பதிவும் அதிக நபர்களை சென்று பிரபலமடையும்.

   நீக்கு
 45. இதே போன்ற தொழில்நுட்பத் தகவலைத் தொடர்ந்து பகிருங்கள்.

  பதிலளிநீக்கு
 46. வணக்கம்
  தனபால் (அண்ணா)

  வலைப்பூ பதிவர்களுக்கு சிறந்த பதிவு அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 47. புதிய பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு...

  Why didn't you post it in Tamailmanam...?

  பதிலளிநீக்கு
 48. நல்ல தகவல்கள் தனபாலன் அண்ணா.
  தெரிந்து கொண்டேன். நன்றி தனபாலன் அண்ணா.

  பதிலளிநீக்கு
 49. அச்சச்சோ... எங்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுத்ததால் உங்களின் தமிழ்மண ஓட்டுப் பெட்டி இயங்கவில்லையா...?

  பதிலளிநீக்கு
 50. நன்றி ஐயா. பயனுள்ள தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 51. நண்பர்களே...
  நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
  அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
  நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,
  பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்
  எதுவும் வெளியிடாமல்...
  அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என
  இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.

  அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
  இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 52. மிகவும் உபயோகமானதாக இருந்து. நன்றி.

  இன்று என் தளத்தில் புதிய பதிவு-பேய் வீடு.

  பதிலளிநீக்கு
 53. பயனுள்ள பதிவு முயற்ச்சிக்கின்றேன்
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 54. ஆவ்வ்வ்வ் 3 நாள் தாமதமானாலும் முக்கியமான பதிவு படிக்க, மிஸ் ஆகிடாமல் வந்திட்டேன்ன்.. = !.(நீங்க சொன்ன ஸ்டைலிலேயே சொல்லிப் பார்க்கிறேன்ன்.. ஒரு ஆச்சரியக்குறி:))..

  தமிழ் மண இணைப்புபற்றி சொல்லியிருக்கிறீங்க படிக்கிறேன்ன் திறந்து.

  எனக்கு HTML Code இல சேஜ் பண்ண முடியாமல் இருக்கு. சரி உங்கள்

  முக்கோணம் = இங்கே:).. .....அதில போய்ப் படிச்சுப் பார்க்கிறேன்ன்.. ஏதாவது எனக்கும் புரியுதோண்டு பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 55. பல்வேறு தகவல்கள்.
  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 56. அருமையான பதிவு!

  http://karuvooraan.blogspot.in/
  ஆதரவு அளிக்கவும்! நன்றி.

  பதிலளிநீக்கு
 57. மிகவும் உபயோகமான பதிவு சகோ

  அன்புச் சகோதரன்
  ம.தி.சுதா

  பதிலளிநீக்கு
 58. எங்களுக்கெல்லாம் உதவ வேண்டும் என்பதற்காகவே, இவ்வளவு விளக்கமாக-விரிவாக-அழகாக-அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி சார்...உங்கள் சேவை தொடர வேண்டுகிறேன்...!

  பதிலளிநீக்கு
 59. மிகவும் சிறந்த பதிவு தேவையானதும் கூட பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 60. எனக்கே புரியுற மாதிரி பதிவு போட்டிருக்கீங்க பகிர்வுக்கு நன்றி அண்ணா!

  பதிலளிநீக்கு
 61. மிக்க நன்றி சார்...உங்கள் சேவை தொடர வேண்டுகிறேன்...!

  பதிலளிநீக்கு
 62. வலைச்சரத்திலிருந்து இதை அறிந்து கொண்டு வந்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 63. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள், மன்னிக்கவும்! பல மாங்காய்கள்.

  பதிலளிநீக்கு
 64. அதான் எனக்கு தெரியுமே ! அப்புறம் என்ன செய்யணும் ? அதாங்க எனக்கு தெரியாது. !! நன்றி !!

  பதிலளிநீக்கு
 65. எத்தனை நாள் கழித்து பார்த்தாலும் உபயோகமாகும் வகையில் தங்கள் பதிவு... நன்றி பாலாண்ணா.

  பதிலளிநீக்கு
 66. அண்ணா...நான் புதிதாக (www.santhanamrobin.blogspot.com) என்ற தலத்தை
  உங்கள் பதிவுகளை கண்டு கற்று உருவாக்கியுள்ளேன்..மிக்க நன்றி...
  மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கல்....

  அண்ணா..உங்கள் பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளது....
  அண்ணா...என்தலத்தில் விளம்பரங்களை சேர்ப்பது பற்றி தயவுசெய்து
  விலக்கவும்..
  நான் எனது இணையத்தில் விளம்பரம் பகுதியை இணைக்கும்போது (could not save earnings setting ) என்ற தகவல் வருகின்றது. தயவு செய்து
  விலக்கம் தறவும்....

  பதிலளிநீக்கு
 67. தனபாலன் சார்

  தமிழ் மணத்தில் நுழையவே முடியவில்லை . பதிவை ஏற்றவும் முடியவில்லை. நீங்கள் வழி காட்டுவீர்கள் என்று தருமி அவர்கள் சொல்கிறார். எப்படி நுழைவது என்று வழி காட்டுகிறீர்களா?

  பதிலளிநீக்கு
 68. பயனுள்ள பதிவு, முயற்சிக்கிறேன் டிடி சார்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 69. முதலில் அனைவரும் சேர்ந்து ஒரே சமயத்தில் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு ஒரு கோரிக்கை பதிவு எழுதி ஒரே சமயத்தில் வெளியிட ஏற்பாடு செய்யவும். அங்கு நிர்வாகம் இருக்கின்றதா? இல்லையா? என்பது நமக்கு தெரிய வேண்டும்.

  பதிலளிநீக்கு

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.