தூக்கத்தை தொலைக்க வைத்த வ.பதிவர்...! (பகுதி 8)


நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது ? (பகுதி 7) (படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்...) வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... மேலும்...மேலும் மாணவ மாணவியர்களின் படைப்புகள் !

மனிதனிடம் இல்லை

இனிய குரல் இருக்கிறது-ஆனால்
எளிய இதயம் இல்லை.

மாடங்கள் இருக்கிறது-ஆனால்
மரியாதை இல்லை.

பஞ்சு மெத்தை இருக்கிறது-ஆனால்
பசிக்குத்தான் உணவு இல்லை.

பத்தும் பேசும் பணம் இருக்கிறது-ஆனால்
தவிப்புறும் வாய்கோ தண்ணீரில்லை.

பாராளுமன்றம் இருக்கிறது-ஆனால்
பரந்த மனம் இல்லை.

ஆராய்ச்சி மையம் இருக்கிறது-ஆனால்
ஒரு சொல்லை ஆராய்வதற்கு நேரமில்லை.

புன்னகை பூக்கும் பூக்கள் இருக்கிறது-ஆனால்......
அப்புன்னகை யாரிடமும் இல்லை.

(உண்மை தான்... அதுக்காக
Profile படத்தை மாற்றுகிற எண்ணம் இல்லை... ஹிஹி...
பாடலை இணைத்துள்ளேன்...
)
மண் வளம்

உலோகம் கலந்தால்தான்
அணிகலனாகும் பொன் !

குப்பையைக் கலந்தால்
எழில் பெறுமோ மண் ?

நாளும் பேணுகிறோம்
உடல் நலம் !

ஆனால், மறந்தோமே
மண் வளம் !

தூய்மை நிறைந்த நன்னிலம் !
இதுவே நம் நாட்டின் பலம் !

மட்காத பொருட்களை
வீசலாமோ கீழே ?


வீட்டைப் போல் நாட்டையும்
பாதுகாப்பது நம் வேலை !

கண்போல் காப்போம் மண்ணை !
மண் தான் நம்மைச் சுமக்கும் அன்னை !

(நமக்கு வேண்டும் மன வளம்)
சுற்றுச் சூழல் காப்போம்

பார்க்கும் இடமெல்லாம்
காற்று வாங்கிய காலம் போய்
பாக்கெட்டில் காற்று வாங்கும் காலம்
- வெகு தூரமில்லை

எங்கு நோக்கினும் மரங்கள்
பூத்துக் குலுங்கிய மலர்கள்
மாண்டுபோய் மண் நிறைந்த வறண்ட காலம்
- வெகு தூரமில்லை

உணவுப் பொருள் வாங்க பிளாஸ்டிக்
உடை வாங்கும் கவர்களும் பிளாஸ்டிக்
பால் வாங்கும் பாக்கெட்டும் பிளாஸ்டிக்
உடுத்தும் ஜாக்கெட்டும் பிளாஸ்டிக்
உடம்பே ஒரு நாள் பிளாஸ்டிக்காய் உருமாறும் காலம்
- வெகு தூரமில்லை

மரங்களைக் குறைத்ததால்
மண்வளத்தை மாசுபடுத்தியதால்
மழை இம்மண்ணுலகை மறக்கும் காலம்
- வெகு தூரமில்லை

இளைய சமுதாயமே ! விழித்துக் கொள்
இல்லையென்றால் எப்படி வாழ்வது என்று
விழித்துக் கொண்டிருப்பாய் !

உன் ஒவ்வொரு பிறந்த நாளிற்கும்
ஒவ்வொரு மரம் நட வேண்டாம்
நீ வாழ்வதற்காக ஒரே ஒரு மரமாவது நட்டுவை !
அதையும் உன்னைச் சுமந்த நிலத்திற்காக விட்டுவை !
கற்றுக் கொள்

மிதந்து செல்லும் மேகம் போல்
கற்பனை கொள்.

தெளிந்த நீர் போல்
எண்ணம் கொள்.

ஒளிரும் விளக்குப் போல்
புரிந்து கொள்.


பெரிய மலையைப் போல்
இலட்சியம் கொள்.

செயல்திறன் கொண்ட
எறும்பு போல்
சேமிக்கக் கற்றுக் கொள்.

விண்ணில் இருக்கும்
விண்மீன் போல்
வழிநடத்திக் கொள்.

சுறுசுறுப்பான தேனீ போல்
வேலையைக் கற்றுக் கொள்.

சமுதாயத்தில் உயர்ந்து நிற்க
திடமான நம்பிக்கை கொள்.

( தன்னம்பிக்கை
தம்பி...
<---இதையும்
கவனத்தில் கொள்...!
)

சிந்தனைக்கு ஒரு சின்னக் கதைக்கு முன்

"என்னம்மா... ஞாயிறு அன்று பதிவு எழுதுவேன்னு தெரியுமில்லே..."

"என்னப்பா... கசக்கி போட்டுட்டீங்க... ஒரு காகிதத்தைக் கிழிச்சா, ஒரு மரக்கிளையை வெட்டுறதுக்குச் சமம் என்று சொல்லுவீங்க... பள்ளியில் இருந்து உங்களுக்காக எழுதி வந்தேன்... படிச்சி பாருங்க... க்கும்..."

"ஙேஹேழேஸேக்ஷேஞே...!!!ஹூஹூ"

சிந்தனைக்கு ஒரு சின்னக் கதை

அப்பா தன் சிறுவயது மகனிடம் உலகப்படம் ஒன்றைக் காட்டி, "இது என்ன படம் சொல்", என்றார். சிறுவன், "உலகப்படம்", என்றான். "அது எப்படி உனக்குத் தெரியும்?" என்று கேட்டார் தந்தை. அவனோ, "வட்டமாகப் பந்து மாதிரி இருந்தால் உலகப்படம் என்று தெரியும்" என்றான். உடனே அப்பா, அந்த உலகப் படத்தை மடித்துப் பல துண்டுகளாகக் கிழித்துச் சிறுவன் கையில் கொடுத்து "இந்த உலகப்படத்தைப் பழையபடி சரி செய்து வா", என்று கூறி அனுப்பினார். எப்படியும் அதிக நேரம் ஆகும், அதுவரை நிம்மதியாகத் தூங்கலாம் என்று நினைத்தார். சற்று நேரத்திற்குள் சிறுவன் சரி செய்து, "உலகம் சரியாகி விட்டது" என்று அப்பா கையில் கொடுத்தான். அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. "அது எப்படி இவ்வளவு சீக்கிரமாகச் சரி செய்தாய்?", என்றார். அவனோ, "தாளின் பின் பக்கத்தில் ஒரு மனிதன் இருந்தான், அதைச் சரி செய்தேன், உலகம் சரியாகி விட்டது. ஒவ்வொரு தனிமனிதனும் சரியானால் உலகம் சரியாகிவிடும்...!" என்றான்.

சரி தான் தம்பி...! க்கும்... எத்தனையோ பதிவுகளில் சொல்ல வந்ததை ஒரே கதையில் சொல்லிட்டே...! உங்கப்பாவுக்கு மட்டும் தூக்கம் போகலை...

ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று உலக சிரிப்பு தினம்... (அப்படியா தம்பி... சிரிப்புக்கு ஒரு தினம் என்கிற அளவிற்கு ஆகிப் போச்சி இன்றைய நிலை... ...ம்... இன்றைக்கு இல்லை... இல்லை... என்றைக்கும் இந்தப் பதிவை படிக்கும் போதும் சிரிக்க வைச்சிடுறேன்... நன்றி...)

ருங்காலப் பதிவர்கள் எப்படி அசத்துறாங்க... வாழ்த்துக்கள்... நீங்களும் சொல்லிடுங்க !

© ராஜா ராணி அ. மருத காசி T.R.பாப்பா N.S.கிருஷ்ணன், T.A.மதுரம் @ 1956 ⟫

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்திற்கே சொந்தமான கையிருப்பு...! வேறு எந்த ஜீவராசிகளும் செய்ய முடியாத செயலாகும் இந்தச் சிரிப்பு...!

தூக்கம் வரலே...! பாடலைக் கேட்டு சிரிப்பு வந்ததா...? நன்றி...

இந்தப் பதிவை போல் யோசித்தால் கூட தூக்கம் வருவது சிரமம் தான்... அறிய இங்கே சொடுக்கி தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...

நண்பர்களே... தங்களின் கருத்து என்ன ?

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. மே -1 உலக சிரிப்பு தினம்.
  படித்ததும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
  பாடலும் சிரிப்பை வரவழைத்து விட்டது.

  சின்னச் சின்னத் தத்துவங்கள் அருமையாக உள்ளது தனபாலன் ஐயா.
  வாழ்த்தி வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. அருமையாக அழகாக படிப்பவர்கள்
  பயன்பெறும்படியாக தொடர்ந்து தருவது
  மனம் கவர்ந்தது.தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. குழந்தைகள் வாழ்நாளில் ஒரு மரம் நட்டாலே போதும் நீங்கள் சொல்வது நல்ல யோசனை.
  பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலும் தவிர்ப்பது நலம் என்பதை அழகாய் சொன்னீர்கள்.
  //தூய்மை நிறைந்த நன்னிலம்!
  இதுவே நம் நாட்டின் பலம்!//
  நன்றாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.

  உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மண்வளத்தையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்று சொல்வதுஅருமை.
  சுற்றுசூழலை பாதுகாக்க சொல்லும் விழிப்புணர்வு மிக மிக முக்கியம். குழந்தைகளுக்கு முதலில் சொன்னால் அவர்கள் எதிர்காலத்திற்கு நல்லது.
  சிந்தனைக்கு ஒரு சின்ன கதை மிக அருமை.
  ஒவ்வொரு தனி மனிதனும் சரியானால் உலகம் சரியாகி விடும் உண்மை.
  //சிந்திக்க தெரிந்த மனிதகுலத்திற்கு சொந்தமான கையிருப்பு,வேறு எந்த ஜீவராசியும் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு.//

  பாடல் பகிர்வுக்கு நன்றி.
  கேட்டு மகிழ்ந்தேன்.சிரித்து அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து மகிழ்ந்து வாழ்வோம்.
  நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. சின்னக் கதை, புத்திசாலியாய் வாழத் தூண்டும் ‘பெரிய’ கதை.

  தொடரும் பதிவு, மிகமிகப் பயனுள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 5. உலக சிரிப்பு தினம்.

  வாழ்த்துகள் !..

  வாழ்த்துவமே..!!!

  பதிலளிநீக்கு
 6. இனிய வணக்கம் நண்பரே...
  சிந்தனைச் சிற்பி, விந்தை நடிகர் திரு.கலைவாணர் அவர்களின்
  அற்புதமான பாடலை எங்களுக்கு பகிர்ந்தளித்தமைக்கு
  நன்றிகள் பல..
  ===
  அத்தனையும் பொன்னேட்டில் போதித்து வைக்கவேண்டிய
  பொன்மொழிகள்.
  ===
  ஒவ்வொரு தனிமனிதனும் சரியானால் உலகம் சரியாகும்
  என்பது நிதர்சனமான வார்த்தை..
  ===
  சிரிப்பு எந்த ஒரு உயிரினத்திற்கும் கிட்டாத வரம்..
  அதைப்பற்றிய சிறந்த பதிவு நண்பரே...

  பதிலளிநீக்கு
 7. தனபாலன் அவர்களே, உங்கள் சுறுசுறுப்பின் ரகசியம் தான் என்னய்யா? தவறாமல் தினமும் ஏதாவது posting போடுகிறீர்கள். யாருடைய வலைப்பூவை முகர்ந்தாலும் முந்திரிக்கொட்டை மாதிரி உங்களுடைய பின்னூட்டம் தான் முதலில் கண்ணில் படுகிறது. (அதிலும் மகளிர் வலைப்பூக்களுக்கு நீங்கள் தரும் மகத்தான ஆதரவு இருக்கிறதே, அடடா!) தினமும் எவ்வளவு நேரம் கணினிக்குச் செலவிடுகிறீர்கள்?

  பதிலளிநீக்கு
 8. மனிதன் சரியானால் உலகம் சரியாகும். எத்தனை எளிமையாகச் சொல்லிப் போய்விட்டீர்கள்!

  பதிலளிநீக்கு
 9. காலத்தால் அழிக்க முடியாத கலைவாணர் பாட்டை மறுபடி கேட்டோம் நன்றி

  பதிலளிநீக்கு
 10. அருமையான கருத்துக்கள் ..

  என்று மனிதன் பணம் பணம் என்று ஓட துவங்கிநானோ அன்றே சிரிக்க மறந்துவிட்டான் . அது போன்ற நபர்களுக்காகதான் சிரிப்பு தினம் ...

  பதிலளிநீக்கு
 11. மிகச்சிறப்பாக இருந்தது பதிவு. அதுவும் சிரிப்பிற்கென்று ஒரு தினமா? என்று கேள்விகேட்டு, அந்த அளவிற்கு தற்போதைய நிலைமை ஆகிவிட்டது என்று வருத்தம் கொள்வதும் அழகு...!

  அதை விட 'சிரிப்பு' பாடல் வெகு அருமை... சிரிக்க வைத்தது.. நன்றி தனபாலன் சார் அவர்களே..!

  பதிலளிநீக்கு
 12. ஒவ்வொரு தனிமனிதனும் சரியானா உலகம் சரியாகிவிடும் என்பது சர்வ நிச்சயம் சார்.. அருமையான நல்ல விழிப்புணர்வு பதிவு .. ஒருநாள் நிச்சயம் நம் உலகம் பிளாஸ்டிக் மயமாய்த் தான் ஆகபோகிறது

  பதிலளிநீக்கு
 13. மிகவும் அருமையான+அழகான பதிவு. கதை சின்னது.தத்துவம் பெரியது. காலத்தால் அழியாத கானம். வாழ்த்துக்கள்.நன்றி.

  பதிலளிநீக்கு
 14. நீங்கள் தருவது அனைத்தும் சிறப்பாகவும் ,தனித்துவம் பெற்றதாகவும் உள்ளது .முத்துச் சரங்களில் இதுவும் ஒரு முத்தாக சேர்ந்துள்ளது
  நான் பலமுறை கலைவாணர் பாட்டை கேட்டு ரசித்து வீட்டில் குழந்தைகளுக்கு போட்டு காண்பித்து (காணொளியை) அவர்களும் மகிழ நானும் மகிழ்வேன்

  பதிலளிநீக்கு
 15. தனி மனிதன் சரியானால் உலகமும் சரியாகிவிடும் என்பது உண்மைதான் !திருடனாப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்கமுடியாது என்ற பட்டுக் கோட்டையின் பாட்டு நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை !

  பதிலளிநீக்கு
 16. உன்னைச் சரிசெய்துகொள்
  உலகம் சரியாகும் .. கதையல்ல‌
  உண்மையே.

  ஒவ்வொருவருமே நாம்
  உலகத்தை நம் கண்கள்
  ஊடே தான் பார்க்கிறோம். இவ்
  உலகத்தைப் புரிந்தோமென நினைத்து
  உலகத்தை யாம் கண்டவாறு மற்றவர் காணின்
  உவகையுறுகிறோம். இல்லயெனின் காய்கிறோம்.

  நமது அணுகுமுறையே
  நமது புரிதலுக்கும் அறியாமைக்கும் இடையே
  நமது அழுகைக்கும் சிரிப்புக்கும் இடையே
  நில்லும் தொங்கு பாலம்.

  அறிந்தவன் ஆனந்தப்படுகிறான்.
  அறியாதவன் அழுதுகொண்டு இருக்கிறான்.

  நல்ல பாடம்.

  சுப்பு தாத்தா.


  பதிலளிநீக்கு

 17. nsk யின் சிரிப்புப் பாடல் அக்காலத்தில் பிரசித்தம். இன்றைய தலைமுறையினர் இதன் மூலம் மகிழ்ச்சி அடையலாம். வருங்காலப் பதிவர்களை ஒரூங்கிணைத்து பதிவுகள் வெளியிடுவது பாராட்டுக்குரியது.அது சரி எதை நினைத்துச் சிரிப்பது.?நிகழ்வுகளெல்லாமே சந்தி சிரிக்குதே. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. புதையல் போல் இருக்கிறது..

  மாணவர்களின் படைப்புகள் அருமை...

  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 19. ரசிக்க, ருசிக்க வைத்த சிரிப்பதிவு வாழ்த்துக்கள் சார்.

  பதிலளிநீக்கு
 20. சிறந்த பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. பாடல் மிக அருமை அண்ணே

  பழைய பாடல் பழைய பாடல் தான்

  பதிலளிநீக்கு
 22. சுற்றுச்சூழல் காப்போம் பகுதி அருமை..உடம்பும் ஒருநாள் பிளாஸ்டிக் ஆகலாம்-உண்மை.

  பதிலளிநீக்கு
 23. சிரிப்பு பாடலும் சிந்தனைக்கு சின்னக் கதையும் கூடவே தகவல்களும் அபாரம்...! வர வர உங்க ரசிகனாய்ட்டு வர்ரேன்..!

  பதிலளிநீக்கு
 24. அருமையான தகவல்கள் நிறைந்த பதிவுக்கு நன்றி. கருத்தாழமிக்கதொரு பழைய பாடல் கேட்கத் தந்தமைக்கும் நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 25. ஒரு பதிவில் எத்தனை எத்தனை அருமையான விஷயங்கள் ..அனைத்தும் top !!

  சிரிப்பு பாடல் அப்படியே என்னையும் தொற்றிக்கொண்டது அவர்களின் சிரிப்பு .
  சின்னகதை சொல்லும் விஷயம் எல்லாவற்றுக்கும் இன்னொருபக்கம் இருக்கு அதை புரிந்து நடந்தால் வாழ்க்கை எளிதாகும் .
  பிளாஸ்டிக் ..நம்மூரில் நான் பார்த்ததுஎதை வாங்கினாலும் இந்த பிளாஸ்டிக் பைகள் கூடவே அழியா சின்னமாக
  .பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் காகித bags புழக்கத்தில் இருக்கணும்

  பதிலளிநீக்கு
 26. அருமையான கருத்துக்கள் தனபாலன் சார் அதுவும்சிரிப்புக்கு ஒரு தினம் புதிய தகவல்.

  பதிலளிநீக்கு
 27. எனெஸ்கே அவர்களின் கருத்துகள் சிரிக்க சிந்திக்க வைக்கும். ஒருவரையும்
  துன்புறுத்தாத வசனங்கள். நீங்கள் கொடுத்திருக்கும் பாடல் சிரிக்கவும் வைத்தது. அரிதாகிவிட்ட விஷயம் இல்லையா.
  நீங்கள் சொல்லும் சிறு சிறு கருத்துகள் நாற்றுகள் போல எல்லார் மனங்களிலும் பதிந்து நல்ல மரங்களாக வளரட்டும்.

  பதிலளிநீக்கு
 28. சிரித்தேன். சுருங்கிப்போன என் உடலின் நரம்புகள் விரிந்தன நன்றி.

  எதிர்காலத்தில் தற்போது மருத்துவ மனைகளில் மட்டுமே உள்ள ,சுவாசிக்க பிராணவாயு காஸ் சிலிண்டர்கள் வாங்கி பயன்படுத்தும்சூழ்நிலை வரத்தான் போகிறது.

  குடிதண்ணீருக்காக வல்லரசுகள்
  மோதப்போகின்றன .எதிர்காலத்தில் திருடர்கள் தண்ணீரைதான் திருடுவார்கள் தங்கத்தை அல்ல.

  மனிதர்கள் மரம் நடவேண்டாம்
  அந்த வேலையை யானைகளும்,காகங்களும்
  அழகாக செலவில்லாமல் அற்புதமாக செய்து கொண்டிருக்கின்றன

  மனிதர்கள் மரம் நாடு விழா என்று கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள் மரங்களை நாடுவதற்கும் பராமரிப்புக்கும் அல்ல விளம்பரதிற்க்காக

  மனிதர்கள் இருக்கும் மரங்களை சவபெட்டிபோல், பறவைக்கூடுகள்போல், விலங்குகளின் கூண்டுபோல் அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டுவதற்கும், சாலைகள் அமைப்பதற்கும்,அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்ப்பை காட்டுவதற்கும் மரங்களை வெட்டி சாய்க்காமல் இருந்தால் போதும்.
  ஆனால் அது பகற்கனவு. என்றும் நடக்கபோவதில்லை.

  பிளாஸ்டிக் மனிதர்களோடு
  ஒட்டிக்கொண்டுவிட்டது. இனி அதை அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாது.

  பிரிக்க நினைத்தால் உடலின் சதையோடு தான்
  அது வரும்

  பதிலளிநீக்கு
 29. சுவையான படைப்புக்கள்! குட்டிக்கதை மிகவும் ரசித்தேன்! ஒவ்வொரு மனிதனும் சரியானால் உலகம் சரியாகும் எத்தனை உண்மையான வார்த்தை! அருமையான பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 30. நீ வாழ்வதற்காக ஒரே ஒரு மரமாவது நட்டு வை // சத்தியமான வார்த்தைகள். மரம், மனிதம் எல்லாவற்றையும் தான் நாம் மறந்து கொண்டே வருகிறோமே என்ன செய்வது?? கூறியுள்ள அனைத்தும் அருமை நண்பரே குறிப்பாக அந்த குட்டிக்கதையின் கடைசி வரிகள் மகுடம் போல...

  பதிலளிநீக்கு
 31. சிந்தனைக்கான சிறு கதை மிக மிக அருமையான கதை! இதில் இன்னொன்றும் இருக்கிறது. பெரியவர்களை விட சிறியவர்களுக்கு புத்திக்கூர்மை அதிகம் என்பது!

  பதிலளிநீக்கு
 32. சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு. இந்த ஞாயிரு நான் சிரித்தேனா?...இல்லையே...
  ஒலிபெருக்கி பழுது அடைந்து இருப்பதால் பாடலை ரசிக்க முடியவில்லை. விரைவில் பாடலை கேட்கிறேன்.

  பதிலளிநீக்கு
 33. என்.எஸ்.கே அவர்களின் பாட்டு கேட்டு நீண்ட் நாட்களாகி விட்டது. அவரின் ஒவ்வொர பாட்டும் நமக்கு ஒரு பாடம்.
  சிந்தனைக்கு ஒரு சிறுகதை அற்புதம். ஒவ்வொரு தனி மனிதனும் சரியானால்தான் உலகமே சரியாகும். நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 34. சிந்தனையைத்தூண்டும் பகிர்வு. சிரிப்பு பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி.சிந்திக்க தெரிந்த மனிதர்களுக்கே சொந்தமானது சிரிப்பு...:)..

  பதிலளிநீக்கு
 35. சிந்திக்க வைக்கிறது சின்னக் கதை. முற்றிலும் உண்மை.

  சிறப்பான பதிவு.

  பதிலளிநீக்கு
 36. பாடல் அருமை.

  அவசியமான நல்ல கருத்துக்களை தந்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 37. சிரிக்க வைக்கும் சிறந்த பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்ள்.

  பதிலளிநீக்கு
 38. பதிவின் வடிவமைப்பும் சரி கருத்துக்களும் சரி பிரமாதம். வித்தியாசமான சிந்தனைகள்
  நேர்த்தியாக சொன்ன விதம் நன்று

  பதிலளிநீக்கு
 39. அருமை. மனிதன் சரியானால் உலகம் சரியாகும்.. எளிமை. இந்த மாத pit போட்டிக் கூட புன்னகை, சந்தோஷம்தான் தீம் என்று 'முத்துச்சரம்' ராமலக்ஷ்மி பதிவிட்டிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 40. நம் எதிர்காலம் சிறப்பானவர்கள் கையில் தான் உள்ளது தன்பாலன்ஜி...அனைத்தையும் ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 41. சிரிக்க வைத்தது பழைய பாடல். சிந்திக்க வைத்தது மாணவ மாணவியர் படைப்புகள்.. பெருமையாக இருக்கிறது இந்த மாணவ, மாணவியர்களால் எதிர்காலத்தில் சிறப்பான சமுதாயம் உருவாகும். இவர்களை அழகாக வழி நடத்தி ஊக்குவிக்கும் உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. நல்ல கருத்துக்களை சொல்லும் இந்த மாணவ, மாணவியரின் படைப்புகளில் பெயரையும், பள்ளியையும் தனி தனியாக குறிப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். மிக்க நன்றி! என் பாராட்டுதல்களை அவர்களுக்கு தெரிவித்து விடுங்கள்.

  பதிலளிநீக்கு
 42. இருவரி செய்திகள் எல்லாம் அருமையாக சிந்திக்க வைப்பவை. உங்கள் சிரிப்பு பாட்டு ரசித்தேன்.
  நன்றி பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
 43. சிரிக்கவும் அதே சமயம் சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 44. ஒன்னுன்னாலும் உயர்வா கொடுக்கிறீங்க
  ஒவ்வொருவரையும் துடிக்க வைக்கிறீங்க
  நண்பரே.தாமத்திற்கு மன்னிக்கவும்

  பதிலளிநீக்கு
 45. புதிய முயற்சியுடன் கூடிய அருமையான பதிவு !

  தொடர வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 46. மே 1 உழைப்பாளர் தினம் மட்டுமல்லாமல் சிரிப்பு தினம் என்றும் அறியத் தந்தீர்கள்.

  ஒரு மரமெனும் நட்டு வை- 'நச்'

  தனி மனிதன் சரியானால் உலகம் சரியாகும்- நிச்சயமாக.

  பதிலளிநீக்கு
 47. வருங்காலப் பதிவர்களின் சமூக சிந்தனையும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் வியக்கவைக்கிறது. பாராட்டுகள்.

  சிரிப்புக்கும் தினம் ஒன்று வைத்து சிரிப்பைத் தக்கவைக்கவேண்டியுள்ள பரிதாப நிலையை நினைத்தால் மனம் நொந்துதான் போகிறது.. சிரிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் புன்முறுவலாவது என்றென்றும் இதழ்களில் தவழவிட்டு நேசம் பேணுவோம். அருமையானப் பகிர்வுக்கு நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 48. நல்லதோர் பாடல் .
  நல்லதோர் பகிர்வு.

  பதிலளிநீக்கு
 49. சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள். கலைவாணரின் பொருத்தமான நாளில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது.

  பதிலளிநீக்கு
 50. சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்த பதிவு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 51. பரவால்ல சிரிப்புக்காகவும் ஒரு தினம் வைச்சிருக்காங்க.புதிய விடயத்தை அரிய தந்தமைக்கு நன்றி சார்

  பதிலளிநீக்கு
 52. வணக்கம்
  தனபால் (அண்ணா)

  அருமையான பதிவு பல கருத்துக்கள் பலர் சிந்தனை அறிவை வளர்க்கும் கருத்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா இயற்கையை காப்போம் என்ற கருத்தையும் அழகாக சொல்லி விட்டீர்கள் அருமை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 53. ஒரு பதிவிலேயே பல விஷயங்கள் சொல்லிட்டீங்க படித்து புல்லரித்துவிட்டது... மரம் நடுங்கள் எறும்புபோல சேமியுங்கள்.. சிந்தனைக்கு கதைபடியுங்க.. சிரிங்க என.. அப்பப்பா..

  அதுசரி சிரிப்புக்காகவும் ஒருநாள் என இன்றுதானே அறிந்தேன்ன்... ஹையோ முருகா.. .. அதைக் கேட்டாவது நாம், கொஞ்சமாவது திருவாய் மலர்ந்து சிரிக்கட்டுமே என்றுதானாக்கும்:).. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:). நானும் சிரிச்சிட்டுப் போறேன்ன்.

  பதிலளிநீக்கு
 54. மிக அருமையான பதிவு.
  ஓவ்வொரு சிறு வரியும் மிக சிந்திக்க வைக்கிறது.
  அருமை!...அருமை.
  இனிய வாழ்த்து.சகோதரா.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 55. இளம் வயதிலேயே இந்தப் போடு போடுகிறார்களே இந்த குழந்தைகள்!
  மனிதனை நேர் செய்தால் உலகம் நேராகிவிடும் - நல்ல கருத்து கொண்ட கதை!
  வருங்கால பதிவர்களுக்கு (நம் தூக்கத்தை தொலைக்க வைத்த , வைக்கும்) பதிவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
  சிரிப்புக்கு ஒரு தினம்!!!!

  பதிலளிநீக்கு
 56. அருமையாக அழகாக படிப்பவர்கள்
  பயன்பெறும்படியாக தொடர்ந்து தருவது
  மனம் கவர்ந்தது.தொடர வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 57. அனைத்தும் அழகிய பதிவுகள்....
  கடைசியா குட்டிக் கதை
  ஒருகணம் சிந்திக்க வைத்தது நான் சரியாய் இருக்கிறேனா எனும் சந்தேகத்தோடு....

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 58. "ஒவ்வொரு தனிமனிதனும் சரியானால் உலகம் சரியாகிவிடும்" சுவையான குறுங்கதை விளக்கம்

  பதிலளிநீக்கு
 59. சிறந்த தலைப்புகள்
  சிறந்த பதிவுகள்
  வலுவான சிந்தனைகள்
  தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 60. ஒரு சிறிய உதவி..

  மின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன்.

  படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்

  http://kannimaralibrary.co.in/power9/
  http://kannimaralibrary.co.in/power8/
  http://kannimaralibrary.co.in/power7/
  http://kannimaralibrary.co.in/power6/
  http://kannimaralibrary.co.in/power5/
  http://kannimaralibrary.co.in/power4/
  http://kannimaralibrary.co.in/power3/
  http://kannimaralibrary.co.in/power2/
  http://kannimaralibrary.co.in/power1/

  நன்றி,
  வினோத்.

  பதிலளிநீக்கு

 61. ஒவ்வொரு தனிமனிதனும் சரியானால் உலகம் சரியாகும்
  என்பது நிதர்சனமான வார்த்தை..

  என் மனதின் கருத்தும் இதுதான் நண்பா...!

  பதிலளிநீக்கு
 62. சுற்றுபுற தூய்மை ஆரோக்கியமான வாழ்க்கையின் அடித்தளம் அருமையான கருத்துகள்.கலைவாணரின் அருமையான சிரிப்பு பாடல்.

  பதிலளிநீக்கு
 63. :) என் எஸ் கே அவர்களின் சிரிப்பு பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்போது கேட்டு மிக்க மகிழ்ச்சி. ஆமாம் ஆடியோ பைலை இங்கே எப்படி அப்லோட் செய்யணும் தனபாலன்.

  பதிலளிநீக்கு
 64. முன்பே இப்பதிவைப் படித்திருந்தாலும் இன்றுதான் கருத்துப் பதிவு செய்ய நேரம் அமைந்தது.
  'மனிதனிடம் இல்லை' கவிதையும் அதற்கு ஏற்ற பாட்டும் அருமை. திரு.மருதகாசி அவர்கள் அழகாகப் பலவித சிரிப்புகளைப் பற்றி எழுதியுள்ளார்.

  'மண் வளம்' மற்றும் 'சுற்றுச் சூழல் காப்போம்' கவிதைகளும் உண்மையை கூர்மையாகச் சொல்கின்றன. விழித்துக் கொண்டால் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு வாழும் சூழலை விட்டுச் செல்லலாம், இல்லையென்றால்..பயமாக இருக்கிறது. இருந்தாலும் பிள்ளைகள் யோசிக்கின்றனர் எனும்பொழுது நம்பிக்கை வருகிறது.
  //மிதந்து செல்லும் மேகம் போல் கற்பனை கொள்// அழகான வரி!
  சின்னக் கதையும் அருமை.
  அருமையானப் பதிவு..பல கவிதைகள் சேர்த்து திகட்ட திகட்ட கொடுத்துள்ளீர்கள் :) நன்றி!

  பதிலளிநீக்கு
 65. இன்று தான் முதல் முறையாக உங்கள் பதிவுகளை பார்க்கிறேன் ... பிரமாதம்... இன்னும் சிறப்பான விஷயங்களை பகிர்ந்து சீரிய சிறப்படைய மனமார வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.