அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது...? (பகுதி 7)
நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய மரம் நட்டவர்களை மறக்கலாமா...? (பகுதி 6) பதிவை வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... மேலும்...
நேரத்தைப் பற்றிய பள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் !
நேரம் ஒதுக்கிடு
அன்னைக்கு நேரம் ஒதுக்கிடு - அன்பில் உயர்வாய் !
தந்தைக்கு நேரம் ஒதுக்கிடு - நற்சிந்தனையில் உயர்வாய் !
குருவுக்கு நேரம் ஒதுக்கிடு - நல்லறிவில் உயர்வாய் !
உறவினருக்கு நேரம் ஒதுக்கிடு - பாசப்பந்தத்தில் உயர்வாய் !
தோழனுக்கு நேரம் ஒதுக்கிடு - நட்பில் உயர்வாய் !
மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்கிடு - தொண்டில் உயர்வாய் !
புத்தகங்களுக்கு நேரம் ஒதுக்கிடு - கல்வியில் உயர்வாய் !
விளையாட்டுக்கு நேரம் ஒதுக்கிடு - உடல்நலத்தில் உயர்வாய் !
உன் சிந்தனைக்கு நேரம் ஒதுக்கிடு - வாழ்வில் உயர்வாய் !
உழைப்பிற்கு நேரம் ஒதுக்கிடு - அது வெற்றியாக மாறும் !
உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கிடு - அது உடல் நலமாக மாறும் !
படிக்க நேரம் ஒதுக்கிடு - அது உங்களுக்கென்று தனி இடத்தை அமைக்கும் !
நட்புக்கென்று நேரம் ஒதுக்கிடு - அது மகிழ்ச்சிக்கான பாதையைக் காட்டும் !
இலட்சியத்திற்கு நேரம் ஒதுக்கிடு - அது செல்வத்தைக் கொண்டு வந்து கொட்டும் !
உதவுவதற்கென்று நேரம் ஒதுக்கிடு - அது நிச்சயம் எதையும் சாதிக்கும் வல்லமையைக் கொடுக்கும் !
மகிழ்ச்சியான வாழ்வு மலரும் !
பெரியாரின் சாதனைப் பயணம்
தந்தைப் பெரியார் நம் வாழ்நாளில் சுற்றுப்பயணம் செய்த தொலைவு 8,20,000 மைல்கள். இது பூமியின் சுற்றளவைப் போல் மூன்று மடங்கு பெரியது. தன்னுடைய வாழ்நாளில் 58 சதவீதம் பயணத்தில் கழித்துள்ளார். அதாவது சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாட்கள் = 30,000 நாட்கள்... 8,200 பேசிய கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகளில் 21,400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவுகளை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் ஆகும். பெரியார் நேர மேலாண்மையைச் சரியான முறையில் பயன்படுத்தி தன் வாழ்நாளில் வாழ்ந்து காட்டினார்.
அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் : "தாமதம்"
நானும் என்னமோ நினைச்சேன்... எல்லாம் என் நேரம்...
அதுசரி... நேர மேலாண்மை பற்றி ISO-வில் உள்ளது போல் வேறு ஒரு கட்டுரை எழுதலாம் என்றால் குழந்தைகள் இப்படி அசத்துறாங்க...! அடுத்த பகிர்வுக்கு தலைப்பு சொன்ன மனசாட்சிக்கு நன்றி... பதிவிட வாய்ப்பளித்த குழந்தைகளுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல...
எல்லாம் என் நேரம்...! இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...
நண்பர்களே... தங்களின் கருத்து என்ன ?
நேரத்தைப் பற்றிய பள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் !
பொங்கும் காலை முதல் மங்கும் மாலை வரை கூரை ஓடு முதல் மாடிவீடு வரை ஜன்னல் ஓரம் முதல் சாலை ஓரம் வரை பூவின் மடல் முதல் மங்கை கடல் வரை பொன் மழலை முதல் மாமனிதன் வரை இனிய இளமை முதல் முனங்கும் முதுமை வரை புயல் காற்று முதல் நாற்று வரைகுடிக்கும் நல்லநீர் முதல் நடிக்கும் கானல்நீர் வரை நிஜம் முதல் நிழல் வரை நிகழும் இன்று முதல் அற்புத நாள் வரை மொத்தமாக ஓரறிவு முதல் ஆறறிவு வரை என் சேவை - இவை அத்தனையும் தேவை ஆனால் எனக்கு... நேரமில்லை என்பதற்கே நேரமில்லை-அதை சொல்லிடக்கூட எனக்கொரு வாய்ப்பில்லை | பணம் இழந்தால்... சொற்ப நட்டம் நேரத்தை இழந்தால்... எல்லாமே நட்டம் ஒரு நாளின் முடிவில் எழுதுக ஏட்டில்... 1. செய்ய நினைத்தது 2. செய்ய முடிந்தது 3. செய்ய முடியாதது அன்றைய மணித்துளிகளை நினைவுபடுத்திவிடும்-இந்த சுய விமர்சனம் |
நேர்மை இல்லார் கவலைப்படுவதை விட நேரமில்லார் கவலைப்படுவது தான் அதிகம் நேரம் பொன் போன்றதல்ல... அது மண் போன்றது ! வாய்ப்புக் கொடுக்கும் போது... வளத்தைக் கொடுக்கும் ! பொழுது புலரும் பொன்னான நேரத்தை பொழுதுபோக்குக்காகக் கழிப்பவர்களுண்டு மண்ணில் சரியாகப் பயிர் செய்தாவது வேளாண்மை நேரத்தைச் சரியாகப் பயிர் செய்தாவது நேர வேளாண்மை மண்ணின் தன்மை மகத்தானது என்றால் நேர மேலாண்மை நேர்த்தியானது என்பேன் நேரமில்லை என்பது நேற்றோடு போகட்டும் நேர மேலாண்மை இன்றைக்கு வரட்டும் நேர மேலாண்மை உன் வாழ்வில் கொண்டு வா உலகின் சிகரத்தை நீ தொட்டு வா | Life is the TEST Thinking of future is BEST In everything you should come FIRST Until then don’t take REST Don’t take rest after your first victory, because if you fail in second, more lips are waiting to say, that your first victory was JUST LUCK ! -Dr. Ap.J.Abdul Kalam |
அன்னைக்கு நேரம் ஒதுக்கிடு - அன்பில் உயர்வாய் !
தந்தைக்கு நேரம் ஒதுக்கிடு - நற்சிந்தனையில் உயர்வாய் !
குருவுக்கு நேரம் ஒதுக்கிடு - நல்லறிவில் உயர்வாய் !
உறவினருக்கு நேரம் ஒதுக்கிடு - பாசப்பந்தத்தில் உயர்வாய் !
தோழனுக்கு நேரம் ஒதுக்கிடு - நட்பில் உயர்வாய் !
மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்கிடு - தொண்டில் உயர்வாய் !
புத்தகங்களுக்கு நேரம் ஒதுக்கிடு - கல்வியில் உயர்வாய் !
விளையாட்டுக்கு நேரம் ஒதுக்கிடு - உடல்நலத்தில் உயர்வாய் !
உன் சிந்தனைக்கு நேரம் ஒதுக்கிடு - வாழ்வில் உயர்வாய் !
உழைப்பிற்கு நேரம் ஒதுக்கிடு - அது வெற்றியாக மாறும் !
உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கிடு - அது உடல் நலமாக மாறும் !
படிக்க நேரம் ஒதுக்கிடு - அது உங்களுக்கென்று தனி இடத்தை அமைக்கும் !
நட்புக்கென்று நேரம் ஒதுக்கிடு - அது மகிழ்ச்சிக்கான பாதையைக் காட்டும் !
இலட்சியத்திற்கு நேரம் ஒதுக்கிடு - அது செல்வத்தைக் கொண்டு வந்து கொட்டும் !
உதவுவதற்கென்று நேரம் ஒதுக்கிடு - அது நிச்சயம் எதையும் சாதிக்கும் வல்லமையைக் கொடுக்கும் !
மகிழ்ச்சியான வாழ்வு மலரும் !
தந்தைப் பெரியார் நம் வாழ்நாளில் சுற்றுப்பயணம் செய்த தொலைவு 8,20,000 மைல்கள். இது பூமியின் சுற்றளவைப் போல் மூன்று மடங்கு பெரியது. தன்னுடைய வாழ்நாளில் 58 சதவீதம் பயணத்தில் கழித்துள்ளார். அதாவது சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாட்கள் = 30,000 நாட்கள்... 8,200 பேசிய கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகளில் 21,400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவுகளை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் ஆகும். பெரியார் நேர மேலாண்மையைச் சரியான முறையில் பயன்படுத்தி தன் வாழ்நாளில் வாழ்ந்து காட்டினார்.
நானும் என்னமோ நினைச்சேன்... எல்லாம் என் நேரம்...
அதுசரி... நேர மேலாண்மை பற்றி ISO-வில் உள்ளது போல் வேறு ஒரு கட்டுரை எழுதலாம் என்றால் குழந்தைகள் இப்படி அசத்துறாங்க...! அடுத்த பகிர்வுக்கு தலைப்பு சொன்ன மனசாட்சிக்கு நன்றி... பதிவிட வாய்ப்பளித்த குழந்தைகளுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல...
நண்பர்களே... தங்களின் கருத்து என்ன ?
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
இன்று நான் “தாமதம்” செய்யாமல் உடனே வந்து விட்டேன்.
பதிலளிநீக்குமிகச்சிறப்பான பதிவு.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், தொடருங்கள்.
நல்ல கருத்தாழமிக்க வரிகள் அண்ணே!
பதிலளிநீக்குமனம் நிறைந்தது...!
வாழ்த்துக்கள் சொந்தமே...!
பெரியார் பற்றிய செய்தி சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குதாமத மதம் - அட!
குழந்தைகள் அசத்துகிறார்கள்.
நேர மேலாண்மை பற்றி அருமையாய் சொல்லியதற்கும், தலைப்புக்கு சரியான பதிலை கடைசியில் தந்தமைக்கும் வாழ்த்துக்கள்! பதிவை இரசித்தேன்!
பதிலளிநீக்குபயனுள்ள மிக மிக அருமையான பதிவு
பதிலளிநீக்குபகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 3
பதிலளிநீக்குதாமதம்... இதனால் அழிபவர் அநேகர்.
பதிலளிநீக்குசிறு வயதிலேயே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டால் வரும் காலம் வசந்தம் தான்!
அனைத்தும் அருமை..
பதிலளிநீக்குபெரியார் பற்றிய தகவலுக்கு நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!
எந்த நிகழ்ச்சி்க்கும் நேரத்துக்கு செல்லும் பழக்கம் இல்லாத கவிஞர் கண்ணதாசன், ஒரு விழாவில் இப்படிப் பேச்சை ஆரம்பித்தார்: சிலருக்கு இந்து மதம் பிடிக்கும், சிலருக்கு புத்த மதம் பிடிக்கும், சிலருக்கு கிறிஸ்துவ மதம் பிடிக்கும், எனக்கோ தாமதம் மிகப் பிடிக்கும். அள்ளினார் கைதட்டுகளை! அதான் முதல்ல நினைவுக்கு வந்தது. மாணவர்களின் ஒவ்வொரு படைப்பும் விழி உயர்த்த வைக்கிறது D.D. வெகு அருமை!
பதிலளிநீக்கு"அதிக பக்தர்கள் கொண்ட மதம் "சுண்டி எழுத்து விட்டது .தாமதம் .சரியான தீர்ப்பு சார்
பதிலளிநீக்குஅசத்தலான குழந்தைகள்...
பதிலளிநீக்குஅருமையான பயனுள்ள பகிர்வுகள்..
பாராட்டுக்கள்..
ஹாஹஹா.. உண்மைதான்.. அதுவும் தமிழ்நாட்டில் இந்த மதத்தை பின்பற்றுவோர் ஏராளம்..
பதிலளிநீக்குசரியாச் சொன்னீங்க உங்க பதிவுக்கு பதில் சொல்ல யாராலும் முடியாது அதற்கும் நேரமில்லை
பதிலளிநீக்குசிறப்பான கருத்துக்கள். நேர மேலாண்மை எனக்கு கைவருவதில்லை.
பதிலளிநீக்குஎன்னைப் போன்றவர்கள் பின்பற்றவேண்டிய அவசியமான பதிவு
பதிவின் வடிவமைப்பும் வித்தியாசமாக உள்ளது.உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்கு பயனளிக்கும் விதத்தில் செலவு செய்ததற்கு நன்றி.
நேரம் இல்லை, நேரம் இல்லை என்று சொல்லாமல் நேரமில்லை என்பத்ற்கே நேரம் இல்லை என்று ஆக்குவோம்.
பதிலளிநீக்குநேரத்தை இழந்தால் நட்டம் தான்.
சுயவிமர்சனம் நன்று.
நேரமேலாண்மை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் தான்.
நீங்கள் நேரம் ஒதுக்க சொல்லும் அனைத்தும் நம் வாழவை மகிழ்ச்சியாக மலரவைக்கும் உண்மை.
பெரியாரின் சாதனை பயணம் அருமை.
தாமதம் விளக்கம் அருமை.
வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள் தனபாலன்,
கலக்கல் பதிவு அண்ணா... நான் கூட என்ன அண்ணன் மதம் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்து விட்டாரா என நினைத்தேன்.. கிளைமாக்ஸ் நன்று.. உண்மையும் கூட. நன்றி அண்ணா
பதிலளிநீக்குஉங்கள் தம்பி ராம்
பெரியார் பற்றிய செய்தி அருமை,,
பதிலளிநீக்குநேர மேலான்மைக்கான தகவல்கள் அருமை.. பலர் பின்பற்றும் மதம் தாமதம்தான்..
t.m7
நல்லதொரு சிந்திக்கவைத்த பதிவு.பெரியாரைப்பற்றிய தகவல் ஆச்சரியமளிக்கிறது.அருமையான பகிர்விற்கு நன்றி
பதிலளிநீக்குஅது சரி
பதிலளிநீக்குகுறைந்த பக்தர்களை
கொண்ட மதம் எது?
சம்மதம்
,
சரிதானே.
அருமை. இந்தப் பதிவைப் படிக்க நேரம் ஒதுக்கிய என் மனதுக்கு நன்றி அருமையான கருத்துகளை அள்ளித்தரும் உங்கள் உள்ளத்திற்கும் அறிவிற்கும் நன்றி. வாழ்கவளமுடன்.தனபாலன்.
பதிலளிநீக்குதிரு .அப்துல் கலாம் அவர்களின் saying என்னை மிகவும் கவர்ந்தது.
பதிலளிநீக்குநீகள் என்ன மதம் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்து விட்டீர்கள் என்று நினைத்தேன்.
கடைசியில் தாமதம் என்று புரிந்தது.
தாமதத்தினால் வருந்துபவர்கள் ஏராளம் ஏராளம்.
மிக அருமையான பகிர்வுகள் தனபாலன் சார்.
பதிலளிநீக்குமுதன் முதலா உங்களுக்குப் பின்னூட்டம் இடுகின்றேன். எப்பவும் பின்னூட்டம் இட ஆசைதான் ஆனா உங்க ப்லாக் திறப்பதில் ஏகப்பட்ட தாமதம் ஆகும்.
என் வலைத்தளம் வந்து என்னைத் தினமும் ஊக்குவிப்பதற்கு நன்றி சார். :)
எனக்கு கூகுள் கொடுத்த கிஃப்ட் நீங்க எல்லாருமே .. :)
தாமதம் சம்மதம்
பதிலளிநீக்குநேரத்தை நிர்வகிப்பவர்கள் நிச்சயம் பெரிய வெற்றியாளர்கள்தாம். நேரமில்லை என்று சொல்வதற்கே நேரமில்லை என்று ஒடி கொண்டிருக்கிறோம். இதில் தாமதம் அன்றாட வழக்கமாகி விட்டது. சரியான நேரத்திற்கு 15 நிமிடங்களாவது தாமதம் ஏற்பட்டு குற்ற உணர்வுடன் நுழைய வேண்டியதாயிருக்கிறது.குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுத்து நல்ல ஆக்கங்களை தருகிறீர்கள். உங்களுக்கும், குழந்தைகளுக்கும் பாராட்டுக்கள்!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஎண்ணம் என்பது எல்லோருக்கும் உண்டு. எண்ணியதைச் சொல்ல வாய்ப்பு கிடைப்பதே அருமை. இளம் குழந்தைகளுக்கும் அவர்கள் நினைப்பதைச் சொல்ல தளம் கொடுக்கும் உங்களைப் பாராட்டுகிறேன். நேரம் என்பது எல்லோருக்கும் ஒரே அளவுதான்.அதை உபயோகிக்கும் விதமே மாறுபடுகிறது. IF YOU REST YOU WILL RUST என்று சொல்லாமல் சொன்னவர்களுக்குப் பாராட்டுக்கள். TIME MANAGEMENT IS AS IMPORTANT AS MAN MANAGEMENT. வாழ்த்துக்கள்.
அத்தனையும் அரிய முத்துக்கள் தனபாலன் சார்...
பதிலளிநீக்குஅருமை இதுவன்றோ...
அதிகமானோர் பக்தராக இருக்கும் மதத்தில் நானும் இருந்திடாமல் எனைக்காக்க முயல்கிறேன்...
சிறப்பான பதிவு...
பகிர்விற்கு மிக்க நன்றி!
எல்லாவற்றிற்க்கும் நேரம் ஒதுக்குவதின் அவசியம் நன்றாகப் புரிகிறது...!
பதிலளிநீக்குநேரம் குறித்த அருமையான பதிவு... மாணவர்களின் பதிவுகள் என்பது வியக்க வைக்கிறது... அத்தனை அருமை...
பதிலளிநீக்குதா (மதமா) வந்தாலும் வந்துட்டோம்ல... அருமையான பதிவு பொருமையாக படிக்கவேண்டியவை.
பதிலளிநீக்குBeautiful poems. If possible, could you please write the children’s name, who penned the poems?
பதிலளிநீக்குThanks.
எம்மதமும் எனக்குச் சம்மதமே..தாமதம் நம் வெற்றிகளைத் தாமதமாக்கும் என்று அழகாக விளக்கியுள்ளீர்கள்...நன்றி தோழரே.
பதிலளிநீக்குஆஹா !!! அருமையான குறிப்புகள்
பதிலளிநீக்குதா ""மதம் ....:)) சரியானபொருத்தமான விளக்கம்
நேரத்தின் அருமையை அழகாகவிளக்கபடுத்தியிருக்கீங்க.நேர ஒதுக்கீடு பற்றி குறிப்பிட்டுள்ள அனைத்தும் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டியவை .மிக்க நன்றி .
அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே ப்ளாக் எது? பதில் உங்களோடது தான் சகோ.நல்ல பகிர்வு.தொடர்ந்து நல்ல கருத்துக்களைப் பகிர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅச்சோ நான் பக்தர் கூடத்தில் சேர்ந்திடேனோ தாமதமாய் வந்து நான் என்ன செய்வேன் நான் உங்கள் பதிவு மிக கவனமுடன் ஆழமுடன் படித்தால் தான் சரிவரும் என்று கொஞ்சம் நேரம் ஒதுக்க நினைத்தேன் இங்கே பிள்ளைகளின் அணிவகுப்பு நேரம் ஒதுக்கிடு என்ற வரிகள் அழகு அத்தனையும் சிறப்பு பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குஅருமையான கருத்துக்கள்.
பதிலளிநீக்குதாமதம்... சூப்பர் ..
பதிலளிநீக்குசிறப்பான பதிவு தனபாலன்ஜி...
பதிலளிநீக்குநேர மேலாண்மை அவசியம், அதை முறையாகப் பயன்படுத்துவதும் அவசியம். கட்டுரை நன்று.
பதிலளிநீக்குbetter late than never - இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
என்னமோ..ஏதோ..ன்னு உள்ளே வந்தா தாமதம்..ன்னு போட்டுத் தாக்கீட்டிங்களே!..அருமை...
பதிலளிநீக்குஅதுதான் என்னுடைய மதம்!
பதிலளிநீக்குஅருமை!
நேரத்தின் அருமை பற்றிய சிறப்பான கட்டுரை.
பதிலளிநீக்குசுய விமர்சனம் நன்று
பதிலளிநீக்குநான் இவ்வளவு தாமதமாக வந்ததிலிருந்து எனது மதமும் அதுதான் என்பது புரியும்.
பதிலளிநீக்குநல்ல அலசல் நன்றி
Miga nall visayam.... valthugal...
பதிலளிநீக்குபெரியாரின் வாழ்வே சாதனை வாழ்வுதான். பெரியார் மட்டும் பயணம் செய்யாமல் இருந்திருந்தால், தமிழர்களது வாழ்வுமல்லவா தேங்கி, முன்னேற்றமின்றி ஒரே இடத்தில் நிலைபெற்றிருக்கும்
பதிலளிநீக்குதாமதம்.... என்ற மதம் நம்மைப் பிடிக்காமல் இருந்தால் நல்லது....
பதிலளிநீக்குசிறப்பான கருத்துகள். வாழ்த்துகள் தனபாலன்.
தாமதமாக வந்து கருத்திட்டாலும் நேரத்தின் அருமையை சிறப்புடன் விளக்கிருப்பது பெருமை தருவதாக இருக்கின்றது !
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்...
நேரத்தைப் பற்றிய பகிர்வு சிறப்புங்க.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் செல்வங்களுக்கு. பகிர்வுக்கு நன்றிங்க.
தாமதம் :) அருமையாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ....
பதிலளிநீக்குஇனிய இதயமே நலமா...
பதிலளிநீக்குஒரு முறை கண்ணதாசன் மலேசியா சென்றிருந்தாராம். வழக்கம் போல் நிகழ்சிக்கு தாமதமாக சென்றிருக்கிறார். அங்கு இருந்த மக்களை சமாதம் செய்ய இப்படி சொன்னாராம். சிலருக்கு ஹிந்து மதம் பிடிக்கும், சிலருக்கு கிருஸ்துவ மதம் பிடிக்கும், சிலருக்கு இஸ்லாமிய மதம் பிடிக்கும். எனக்கு தாமதம் பிடிக்கும் என்று. உங்கள் கருத்தை பார்த்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது/
நேரம் பொன் போன்றதல்ல அது மண்போன்றது
பதிலளிநீக்கு'' வாய்ப்புக் கொடுக்கும் போது வளத்தைக்கொடுக்கும் ''
உண்மையான கருத்துக்கள் ,,,எல்லோரும் பெரியாரைப்போல இருக்கமுடியாது இருந்தம் அதில் அரைவாசியாய் ஆவது வாழலாமே...
....
மனம் கவர்ந்த பதிவுகள் வாழ்த்துக்கள் .........
அருமையான சிறப்பான பதிவு! பெரியார் பற்றிய தகவல் புதியது!
பதிலளிநீக்குஅருமையான கவிதை வடிவில் வந்த தொகுப்பு நேரச்சிக்கல் என்ன செய்வது இன்றுவரை தாமதம் தான் என் நிலமையும்:))) வாழ்த்துக்கள் சார் நல்ல கட்டுரைவடிவில் நல்ல விடயம் பகிர்ந்ததுக்கு!
பதிலளிநீக்குநல்ல கருத்துகள்.
பதிலளிநீக்குகவிதைகள் அனைத்தும் அருமையாக இருந்தது. அனைவருக்கும் பிடித்த மதம் 'தாமதம்' செம சூப்பர் மேட்டர்
பதிலளிநீக்குகொன்னு புட்டிங்க போங்க
தாமதம், தவிர்க்க வேண்டிய ஒன்று. அதிகம் பேரால் இயலாததும் அதுவே. சரியாகச் சொன்னீர்கள்.
பதிலளிநீக்குதாமதம் சம்மதம். மதம் பிடிக்காது மதத்தைப் பின்பற்றுவது எல்லோருக்கும் சம்மதம் என்றே நினைக்கிறேன். இந்தியாவைப் பொறுத்த அளவில் இந்து மதம் மிகுந்திருந்தாலும், உலக அளவில் கிறித்துவமதமே மேலோங்கியிருப்பதாக நான் எண்ணுகிறேன். கிரேக்க மதம் உலகின் ஆதிமதம், அதை மிகவும் தழுவியஒன்றுதான் நம் இந்துமதமும் என என எண்ணுகிறேன்.....நன்றி,,,, முத்து ஐயர்
பதிலளிநீக்குஅருமையான படைப்புக்கள்...
பதிலளிநீக்குஎழுதிய ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள் தனபாலன்...
சுயவிமர்சனம் சூப்பர்....
பதிவு .சிறப்பு
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி
பெரியாரின் சாதனைப் பயணம் மலைக்க வைக்கிறது.
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
அருமையான படைப்புக்கள்....நன்றி
பதிலளிநீக்குwww.usetamil.net
நேர மேலாண்மை பற்றிய மேலான செய்திப் பகிர்வுகளுக்கும் எண்ணப் பகிர்வுகளுக்கும் நன்றி தனபாலன். பெரியார் அவர்களைப் பற்றிய தகவல் வியப்பளிப்பதாய் உள்ளது. அவர் பெருமை போற்றும் பதிவுக்கு என் வந்தனம்.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு! தாமதத்தை மிகவும் ரசித்தேன்! கருத்திட தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன்! நன்றி!
பதிலளிநீக்குநான் அனைவரும் செய்து கொள்ள வேண்டிய விமரிசனம் : சுய விமரிசனம் - அருமை அருமை!
பதிலளிநீக்குநேர மேலாண்மை - பெரியாரின் சாதனை வியக்க வைக்கிறது. நாம் இப்படி இல்லையே என்று வெக்கப்படவும் வைக்கிறது.
நிறைய பக்தர்களைக் கொண்ட மதத்தில் நானும் சேர்ந்து விட்டேனே!
அடுத்தமுறை மதம் மாறி முதலில் வந்து விடுகிறேன்.
சிந்தனைச் சிற்பிகளான குழந்தைகளுக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஎனக்கென்னவோ அதிக பக்தர்களைக்கொண்ட ஒரே மதம்
மதம் தான்.
மதம் எனின் கர்வம்.
தான் எனும் ஆணவம். அகங்காரம்.
தான் நினைப்பது, சொல்வது, நடப்பது தான் சரி என்னும் எண்ணம்.
நாம் எல்லோருமே தெரிந்தோ தெரியாமலோ இந்த மதத்தின்
பக்தர்களாகத்தான் இருக்கிறோம்.
இந்த மதத்தை ஒருவன் பின்பற்றத்துவங்கிவிடின் பிறகு அதை விட்டுவிடுவது
என்பதே இயலாத காரியம்.
இந்த மதத்தை விடுவோம் விடுவோம் என்று ஆண்டுக்கொருமுறை சபதம் மட்டும்
தவறாது எடுத்துக்கொள்வோம்.
எனக்குத் தெரிந்து இதுவரை இவ்வுலகத்தே பிறந்தவர்களில்
இம்மதத்தை துறந்தவர்கள்
இரண்டோ அல்லது
மூன்றோ தான்
அது யார் யார் யார் அப்படின்னு சொல்லிட்டு,
நான் சொன்னது தான் சரின்னு நான் போராடவேண்டாம்.
என்னைப்பொறுத்த அளவில்,
திண்டு ஒண்ணு வாங்கி அதிலெ
கல் போல அசையாம குந்திக்கினு , நல்லதே பேசி, நியாயமா நடந்து, வந்த சம்பாதித்த சேர்த்த
தனத்தை எல்லாம்
பாலனம் பண்ணிக்கிட்டு இருக்கறது தான் எனது
மதம்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
அனைத்துமே அருமையான படைப்புகள் ஐயா. எழுதிய குழந்தைகட்கு அன்பான பாராட்டுதல்கள்.அவற்றை உலகறியச் செய்யும் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். தொடரட்டும் வருங்கால சிற்பிகளின் எழுத்துப் பொக்கிஷங்கள்!!!
பதிலளிநீக்குமகிழ்ச்சி.
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
தாமதமா!!! எதிர்பார்க்கல!
பதிலளிநீக்குஹா..ஹா..ஹா.. சூப்பர் மதம்:).... மீயும் இன்று இதே மதமாகிட்டேன்ன்:)
பதிலளிநீக்குஉழைப்பிற்கு நேரம் ஓதுக்கீடு .. அது வெற்றியாக மாறும் ..எனக்கு பிடித்த வரிகள்.அருமையான பதிவு
பதிலளிநீக்குநேரம் குறித்த அருமையான பதிவு...
பதிலளிநீக்குVetha.Elangathilakam.
அருமையான அவசியமான பதிவு!
பதிலளிநீக்குசரியாத மேல் நோக்கு ...
பதிலளிநீக்குஅருமையான சிந்தனை!
பதிலளிநீக்குதாமதமாக வந்துள்ளேன்.
பதிலளிநீக்குNever Rest
Life is the Test
Thinking of future is Best
In everything you should come first
Until then don't take Rest
ரொம்பப் பிடிச்சது.
அடுத்து அன்னைக்கு நேரம் ஒதுக்கிடுவும். அருமையான குழந்தைகள்.
அருமை
பதிலளிநீக்குஅந்த மதத்துல சிறப்பு உறுப்பினர் நாந்தான் :-)
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை..
பதிலளிநீக்குஎல்லாரும் கட்டி காப்பாத்திடுட்டு வருகிற மதம் தாமதம்தான் :)...
கண்ணதாசன் சொன்னாராம் ஒரு நிகழ்ச்சிக்கு தாமதமாக சென்றதற்கு எல்லாருக்கும் ஒவ்வொரு மதம் பிடிக்கும் எனக்கு தாமதம் பிடிக்கும் அப்படின்னு.. :)
ஒரு கதம்பப் படையல் நண்பரே.. ஒவ்வொரு வரியும் மனங்களை ஊக்குவிப்பதாக உள்ளது. நன்றி..
பதிலளிநீக்குமிக அருமையான வரிகள்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநல்ல விசயத்தை நாடுபோற்றும்.
-Killergee
www.killergee.blogspot.com
டிடி அவர்களே! //படித்து விட்டு சிரிக்காமல் இருந்தால், பரிசு வழங்கப்படும்... ஹிஹி...//
பதிலளிநீக்குஎங்களுக்குப் பரிசு நிச்சயம்!!! என்ன ஒரு அருமையான கருத்து!!!! அற்புதமான கருத்து! வாழ்வில் அனைவரும் கடை பிடிக்க வேண்டிய ஓன்று!! உங்கள் பதிவுகள் எல்லாமே மிகவும் நேர்த்தியாகவும், அருமையாகவும், படிப்பினையும், சிந்தனையையும் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது!!!
தாங்கள் சொன்னது சரிதான்! சாதி, இன, மத வித்தியாசம் இல்லாமல் உள்ள ஒரு மதம் "தா"மதம்'" தான்!
அருமை! ரசித்தோம்!!!
வாழ்த்துக்கள்!!!!
மீண்டும் படித்து மகிழ்ந்தேன் ஜி
பதிலளிநீக்கு