இனி குழப்பமே இல்லை...! ISO - Part 7
"நண்பா நலமா ? என் வீட்டில் குழந்தைகள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி... அதான் எனக்கு பெரிய பிரச்சனை... யாரும் சொல்ற பேச்சை கேட்குறது இல்லை... ம்... சரி, அதை விடு; நான் விசயத்திற்கு வருகிறேன்..."
ஒரே குடும்பத்தில் பிறந்த குழந்தைகளில், அறிவில், செயலில், மாறுபாடுகளும் வேறுபாடுகளும் இருப்பதற்கு என்ன காரணம்...?
"நண்பா... சின்ன உதவி செய்யணும்... எனது நிறுவனம் சிறியது... ஐந்து துறைகள் (Departments) தான்... ISO சான்றிதழ் தேவையில்லை... ஆனால் தொழிலாளர்களை motivate பண்ணனும்; அதாவது அவர்களை எப்படியாவது ஆர்வத்துடன் வேலை செய்ய, செயல் பட வைக்கணும்..."
உலகில் உள்ள எந்தப் படைப்புகளிலும் கோளாறு உள்ளதென்றால், படைத்தவனிடமும் கோளாறு உள்ளது என்றல்லவா ஆகி விடும்... பெற்றோர்களிடம் கோளாறா...? குழந்தைகளிடம் கோளாறா...? குழந்தைகளிடம் கோளாறு என்றால் குழந்தைகள் என்ன செய்வார்கள்... அவர்கள் வெறும் களிமண்கள்... அவர்களாகவே உருவாக முடியுமா...? அப்படியென்றால் கோளாறு முதலில் எங்கே உருவாகின்றது...?
"அவர்களுக்கு வேண்டிய சம்பளத்தைத் தாராளமாகத் தருகிறேன்... ஆனால் வேலை தான் சரியாக, முறையாக நடக்கவில்லை... இதோ கிட்டத்தட்ட 40 பேர்களின் பட்டியல்... மூன்று பிரிவுகளாக நானும் மேலதிகாரியும் பிரித்துள்ளோம்... உனக்கு மிகவும் உதவியாக இருக்கும்... (1) இவர்கள் மிகவும் புத்திசாலிகள்... நாம் என்ன நினைக்கிறோமோ, அவற்றைக் கட்டளை இடாமல் உணர்ந்து செயல்படும் ஆற்றல் வாய்ந்தவர்கள்... அதனால் இவர்களை நீ கவனிக்கத் தேவையில்லை... (2) இவர்கள் கொஞ்சம் சுமாரான புத்திசாலிகள்... எதைச் செய்தாலும் கொஞ்சம் யோசித்தே செய்யும் ஆற்றல் வாய்ந்தவர்கள்... இவர்களைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும்... (3) இவர்கள், நீ ஒன்று சொன்னால் அவர்கள் ஒன்றைச் செய்வார்கள்... இங்கே தான் உனக்கு அதிக வேலை இருக்கும்... இந்தா பட்டியல்..."
பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் போதே, அதிபுத்திசாலிகள், புத்திசாலிகள், அறிவாளிகள், திறமைசாலிகள், தைரியசாலிகள், பயந்தான்கொள்ளிகள், முட்டாள்கள் என்று முடிவுகள் செய்தால் எப்படி...?
"உங்களின் ஆய்வுப்பட்டியல் வேண்டாம்... ஒவ்வொருத்தரையும் சந்திக்கும் போது, உங்களின் பிரிவுகள் ஞாபகம் வந்து என் மனதை தடுமாறச் செய்யும்... அவர்களின் சரியான அல்லது தவறான செயலைக் கண்டு, உங்களின் தகவலோடு 'ஆமாம்' போட வைக்கும்... பட்டியலில் உள்ள பெயர்கள் மட்டும் போதும்... நன்றி... எனது வேலையும் ஆய்வும் வேறு..."
ஒரு சிலருக்குப் படிப்பில் புத்திசாலித்தனம் இருக்கும்... சிலருக்குக் கலைகளின் ஈடுபாடு இருக்கும்... சிலருக்கு விளையாட்டில், சிலருக்கு அறிவியலில், சிலருக்கு ஓவியத்தில்... இப்படி ஆர்வங்களில் வேறுபாடுகள் இருக்குமே தவிர, புத்திசாலித்தனத்திலும் அறிவிலும் மாறுபாடு இருக்காது...
"நண்பா... இப்போது தான் ஒவ்வொருத்தரின் பற்றியும், அவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலைகளையும், சரியான நேரத்தில் உணர்ந்து செய்கிறார்களா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்... இப்போது வேலையின் தரம் சிறிது அதிகரித்துள்ளதால் உற்பத்தியும் கூடியுள்ளதா...? இன்னும் வேலை இருக்கிறது... இப்போது மேலதிகாரியும் என்னுடன் இருக்க வேண்டும்..."
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். (516)
அவரவர் ஆர்வத்தைக் கண்டுபிடித்து அவற்றை ஊக்குவிக்காமல், அவர்களை மட்டம் தட்டும் வேளைகளில் மட்டுமே பெரும்பாலான பெற்றோர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்... பெற்றோர்கள் சொல்லி விட்டார்களே என்று பல திறமைகள் வளராமலே புதைக்கப்படுகின்றன... இதில் மேலும் கொடுமை என்னவென்றால், குழந்தைகளிடம் இருக்கும் திறமையைச் சீரழிக்க, மற்றக் குழந்தைகளோடு ஒப்பிடுதல் வேறு... பிற்காலத்தில் கூட்டுக்குடும்பம்...? கனவு தான்... குடும்பத்தில் வரும் புது உறவுகளிடமும் ஒப்பிடுதல் தொடர்ந்தால் அலைச்சல் தான்... இல்லை என்றால் முதியோர் இல்லம் தான்... முதலில் குழந்தைகளைக் கவனிப்போம்.
"நண்பா... முதலில் 'நாம் வந்தால் தான் வேலை நடக்கும்' என்று நினைக்கும் இந்த ஆறு பேர்களையும் சரி செய்ய வேண்டும்... மற்றபடி யார் யார் எந்தெந்த வேலையைச் சரியாகவும், விரைவாகவும் செய்து முடிப்பார்கள் என்கிற விரிவான தகவல் இதில் உள்ளது... இதன்படி படிப்படியாக, ஒவ்வொன்றாக, பொறுமையாக, எல்லாவற்றையும் மாற்றம் செய்..."
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.(517)
ஒரே ஒரு வினாடி புத்திசாலி என்றோ, முட்டாள் என்றோ முத்திரை குத்தி அப்படியே வளர்த்து விட்டால் சரியாகுமா...? எல்லோரும் அறிவாளிகள், புத்திசாலிகள்... குழந்தையோடு குழந்தையாக மாறி, குறைகளைக் குற்றமாக அவர்களிடம் பேசாமல், நிறைகளை அற்புதமாகப் புகழ்ந்தால் போதும்... அவர்களின் திறமையை அறிந்து தெரிந்து புரிந்து ஊக்குவித்து, தொடர்ந்த கண்காணிப்புடன் வளர்ப்பது மட்டுமே தான் பெற்றோர்களின் கடமை...
"நண்பா... இனிமேல் இந்தப் பட்டியல் போடுவதை மறந்து விடு... தொழிலாளர்களோடு தொழிலாளராக மாறி, அவர்களின் வேலைகளைச் செய்து பார்க்கும் போது, ஒவ்வொருவரின் ஆர்வத்தையும், அந்த வேலையின் நேரத்தையும் கணக்கிட்டு, சின்ன சின்ன இலக்குகளை வைத்துப் பாராட்டினேன்...(னோம்) நான் மட்டுமல்ல உனது மேலதிகாரியும்... இப்போது மேலதிகாரிக்குப் பட்டியலில் உள்ள அனைவரின் பெயர் மட்டுமல்ல... அவர்களின் குடும்பத்தைப் பற்றிய நிலைமையைப் பற்றியும், அன்பான ஒரு சின்ன விசாரிப்பும் பாராட்டும், உண்மையான அக்கறையும் எந்தளவு சக்தி வாய்ந்தது என்று இப்போது அவருக்குத் தெரியும்... இனி எல்லோரும் ஈடுபாட்டுடன் சந்தோசமாக வேலை செய்வார்கள். வீட்டில் ஏதோ பிரச்சனை என்றாயே, ஏதேனும் குழப்பம் இருக்கா ? யோசிக்கிறே ?"
"இனி குழப்பமே இல்லை...!" குறிப்பு: பல வருடங்கள் கழித்துச் சந்தித்த நண்பனுக்குச் செய்த சிறு உதவியை, இரண்டே குறளில் வேலையை எளிதாக்கிய நம்ம வள்ளுவருக்கு நன்றி... நீல வண்ண வரிகளைத் தனியாகவும் படிக்கலாம்...
எங்களின் உரையாடலின் போது சிந்தித்த பதிவை வாசிக்க இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
வணக்கம்
பதிலளிநீக்குஅதுவும் சரிதான் அப்பறம் எப்படி வரும் குழப்பம்
சிறப்பாக சொன்னீங்க
பகிர்வுக்கு நன்றி
அருமையாக, அதே சமயம் எளிமையாக கூறியுள்ளீர்கள் அய்யா. அன்பான வார்த்தைகளும், ஆறுதலான சொற்களும் அனைத்தையும் சாதிக்கும் திறன் வாய்ந்தவை அய்யா. நன்றி
பதிலளிநீக்குவீட்டிலும் சரி, வெளியிலும் சரி non-judgmental behavior வாழ்வில் மிக முக்கியமான, தேவையான, குணம். நன்றாகச் சொன்னீர்கள்.
பதிலளிநீக்குகுழந்தை வளர்ப்பானாலும் சரி, தொழிலில் உற்பத்திதிறனை மேம்படுத்துவதானாலும் சரி, இரண்டுக்கும் அடிப்படை ஒன்றே என்ற கருத்தை அருமையாக, எளிமையாக விளக்கினீர்கள். மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅருமையாகவும் , எளிமையாகவும் கூறியுள்ளீர்கள் . நன்றி
பதிலளிநீக்குதங்களது அருமையான பதிவைப் படித்தபின் குழப்பமே இல்லை. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅருமை. அழகாக விளக்கி அதற்கு குறளும் இட்டு எளிதாக விளங்க வைக்கிறீர்கள். நன்றி!
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கும் அருமையான பகிர்வு
பதிலளிநீக்குஎளிமையான வரிகளில் , அறிவுரை சொல்லிவிட்டீர்கள் தனபாலன்.
பதிலளிநீக்குநல்ல கருத்துகளைக் குழந்தைகள் மனத்தில் பதிக்க வேறு பாடுகள் எங்கிருந்து வரும்.
உலகப் பொது மறைக்கு உன்னத உதாரணங்கள் . அருமை
பதிலளிநீக்குநீல வண்ணம் தனியே படித்தால் தனி பதிவாக தெரிகிறது. இணைத்துப் படித்தாலும் பொருளுள்ளதாக அமைந்துள்ளது. இதுவரை அறியாத 516 வது குறளுக்கு நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குவழக்கம்போல் சிறப்பு.
அருமையான பகிர்வு ! நன்றிங்க
பதிலளிநீக்குசார், எனக்கு குழப்பம் என்னவென்றால் எப்படி உங்களால் மட்டும் இப்படி எளிமையாக புரியும் படி எழுத முடிகிறது என்பது தான். அருமை வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசிந்திக்க வேண்டிய தகவல்... அருமை அலசல்
பதிலளிநீக்குநல்லதொரு உளவியல் பதிவு. பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளின் ரசனை, தேர்வு முதலியவற்றைத் தங்களது எதிர்பார்ப்புகளிலிருந்தே திணிக்கிறார்கள். அதிலிருந்தே ஒப்பிடுதல், கட்டுப்படுத்துதல் என்ற பயனற்ற, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அணுகுமுறைகளை மேற்கொள்கிறார்கள். குழந்தைகள் ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு மாதிரியாக, வேறு வேறு ஆற்றல்களுடன் வளர்வதே அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சமுதாயத்திற்கும் நல்லது.
பதிலளிநீக்குபணித்தலத்தில் சக பணியாளர்களைக் கையாள்வதிலும் இந்த அணுகுமுறை தேவைதான். ஒரு தொழிலாளியின் சிறு செயலை அங்கீகரித்தால் அது அவரைப் பலமடங்கு செயல்பட வைக்கும்.
அருமை.. அருமை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்புடன்
பவள சங்கரி
ஒப்பிடல்கள் கூடாது என்று அருமையாகச் சொன்னீர்கள் சார்!
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கும் அருமையான பகிர்வு..
பதிலளிநீக்குகுழப்பமே???????? இல்லை...
ஆம் சிறு வயதிலிருந்தே சரியான வழிகாட்டல் சிறப்புத் தரும்.
பதிலளிநீக்குநல்ல பதிவு. இனிய வாழ்த்து சகோதரா தனபாலன்.
Vetha.Elangathilakam
நல்ல பதிவு வித்தியாசமான எழுத்து நடை
பதிலளிநீக்குகுழப்பமே இல்லாதபடி சிந்திக்க வைக்கும் அருமையான பகிர்வு.
பதிலளிநீக்குபாராட்டுக்கள்.
பதிவு அருமை நண்பரே! வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குபார்த்தவுடனே ஒருவரை எடை போடாமல், அவருடன் பழகி அவரது நிறை குறைகளைத் தெரிந்து கொண்டு நிறையைப் பாராட்டி, குறைகளையும் நிறைகளாக்க முயலவேண்டும்.
பதிலளிநீக்குசிறப்பாகச் குறள் வழி இதனைச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
இனிக்குழப்பமே இல்லை...
பதிலளிநீக்குவாசிக்கும் எல்லோருக்கும் கொஞ்சமேனும் எதிலாவது குழப்பம் இருந்தால் தீர்ந்துவிடுவும், தீர்த்துவிடும் பதிவு சகோதரரே!
நல்ல குறள் உதாரணங்களுடன் சிறந்த பதிவு.
பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!!!
மிக சிறப்பான பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குThanks for sharing!!
பதிலளிநீக்குஉண்மை தான் அண்ணா எல்லாம் இடங்களிலும் இப்படி தான் இருக்கிறது இதை மாற்றவே முடியாது என்று தான் நான் சொல்கிறேன் சில இடங்களில் வேண்டுமானால் மாறலாம் பயனுள்ள பதுவு அண்ணா நன்றிகள்
பதிலளிநீக்குநான் நீலக் கலர் தனியாக, கறுப்புக் கலரில் இருப்பது தனியாக என்றுதான் படித்தேன்.
பதிலளிநீக்குஅழகிய அறிவுரை - எளிய விளக்கம்
பதிலளிநீக்குதொடர வாழ்த்துகள்...
எந்த பதிவையை ஆராய்ந்து தெளிவாக எழுதுவதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை.அதுவும் பதிவுக்கு பதிவு திருக்குறளை எடுத்து காட்டி சொல்லவது மிகச்சிறப்பு..
பதிலளிநீக்குஅனைவரையும் சிந்திக்க வைக்கும் பதிவு
வாழ்த்துக்கள்
த ம = 10
குறைகளை ஆராயாமல், திறமைகளை கண்டு பிடித்து ஊக்கு வித்தால் வெற்றிதான். இனி குழப்பமில்லை நல்ல சிந்தனைகளை சொன்னது.
பதிலளிநீக்குகுழந்தைகளை வளர்க்கும் முறையில் ஒப்பிடல் கூடாது என்பதை தெளிவாக எளிமையாக விளக்கிய விதம் சிறப்புங்க.
பதிலளிநீக்குநல்ல பயனுள்ள பதிவு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....
பதிலளிநீக்குதொடர வாழ்த்துகள்...
அன்புடன்: 99likes
அன்பால் எதையும் சாதிக்கலாம்.அன்பால் இணைவோம்
பதிலளிநீக்குஒரு பதிவுகுள் இரண்டு வெவ்வேறு அம்சங்களை ஒப்புமைபடுத்தி மிக அழகாக கொடுத்து இருக்கீங்க சார் ஒருவரை சந்திக்கும் முன்னரே அபிப்ராயம் கொள்வது சரி அல்ல என்பதை காண்பித்தது அருமை குழந்தை வளர்ப்பையும் அழக சொல்லிடீங்க குறளுடன்
பதிலளிநீக்குசிந்தித்தேன் சிந்திக்கிறேன் சிந்திப்பேன் ..........இனி குழப்பமின்றி இருக்க
As usual good one with apt “Thirukuralhal”. Thanks.
பதிலளிநீக்குகுழந்தைகள், வேலை செய்யுல் அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் எல்லோரையும் பாராட்டி, உன்னால் முடியும் உன்னிடம் எல்லா திறமைகளும் இருப்பதை உணர்த்தி அன்பால் மாற்றங்கள் கொண்டு வரலாம் என்று அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு அடிக்கடி எடுத்து படித்துக் கொண்டால் நல்லது.
குழந்தைகளுக்கு பிடிக்காத விஷ்யம் ஒப்பிடுவது பிடிக்காத விஷயம்.
உங்கள் கட்டுரை நாடும் , வீடும் நலம்பெறும்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குகன்ஃப்யூசன் பெற்றோர்கிட்ட தான் இருக்கு. பசங்க வெவரமாத்தான் இருக்காக.
அவங்களுக்கு அப்பப்ப வர்ற சந்தேகங்களுக்கு அவங்களுக்கு புரியறாப்போல சொல்வதற்கு
பொறுமையில்லை பெற்றோர்களுக்கு...
இன்னிக்கு குழந்தைகளுக்கு பல விஷயங்களில் க்ளாரிட்டி தேவையா இருக்கு. அது
பெற்றோர் வழியா கிடைக்கல்ல. அதனால மோஸ்ட்லி அவங்க இத தமது நண்பர்களிடமிருந்து
தனக்கு தெரிந்த விஷயங்களை அப்டேட் பண்ணிக்கறாங்க...
கொஞ்சம் கொஞ்சமா பெற்றோர் தன் குழந்தைகளிடமிருந்து வெகு தூரம் தள்ளி போயிடறாங்க...
மிஸ்ஸுக்குத் தான் எல்லாம் தெரியும். வீட்டுலே அப்பாக்குத் தான் எல்லாம் தெரியும் அப்படின்னு அஞ்சு வயசிலே
நினைச்ச குழந்தை பதினஞ்சு வயசுலே என்னா சொல்லுது:
ஐ அம் சாரி டாடி, யூ லீவ் இட் டு மி. யூ டோன்ட் நோ. ஐ அம் சாரி டு சே திஸ்.
அப்ப அம்மாக்காரி என்ன சொல்றா :
எப்ப பாரு, அந்தக்குழந்தைய கரிச்சுக்கொட்டிண்டே இருக்கீக..
ஒரு தடவையாச்சும் அந்த குழந்தை சொல்றத சரின்னு சொல்லுங்களேன்.
அப்பா அப்ப சொல்றாரு.
நான் சரின்னு சொல்லாட்டியும் அதான்டி அர்த்தம்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
நல்ல பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குநீல கலரில் மட்டும் படித்தால் அதிலும் வித்தியாசமாக கொண்டு சென்ற விதமும் அருமை தனபாலன் ஐயா.
நல்ல பதிவு சகோ....அன்பால் எதையும் சாதிக்கலாம்.
பதிலளிநீக்குபடித்த பின் குழப்பமே இல்லை தனபாலன்ஜி...
பதிலளிநீக்குஅருமையாச் சொல்லியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குகுழந்தை வளர்ப்பும்,நிர்வாகத்திறனும்
பதிலளிநீக்குஒன்றே என்பதை அருமையாக உரைக்கும் பதிவு.ஒரே கல்லில் இரண்டு மாங்காய் மாதிரி பதிவு.
நன்றி பகிர்விற்கு.
அருமையான பயன் தரும் பதிவு!
ரொம்ப நல்லா சொல்லியிருக்கிங்க. பிரச்சனை பெற்றோர்களிடம் தான். நீங்க நல்ல வாசிப்பனுபவம் உள்ளவர்ன்னு நெனக்கிறேன்.
பதிலளிநீக்குஅழகாவும் சிறப்பாகவும் இருக்கிறது,வாழ்த்துக்கள் சகோ..ஒரு பதிவு போட்டாலும் முத்தாக இருக்கிறது!!
பதிலளிநீக்குசிந்தனையைத் தூண்டும் பதிவு! பகிர்விற்கு நன்றி!
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.....
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஆம் தனபாலன். குழப்பமில்லை.நிலைமையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் எதிர்பார்ப்புகள் கூடும்போதுதான் குழப்பம். எந்தக் குழுவிலும் அதிபுத்திசாலிகள் புத்திசாலிகள் மக்குகள் 20,60, 29 சத வீதத்தில் இருக்கிறார்கள். நல்ல பெற்றோர்களும், மெலதிகாரிகளும் பொதுவாக leader களாக இருக்க வேண்டும். commander களாக இருக்கக் கூடாது. பாராட்டுக்கள்.
சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு,
பதிலளிநீக்குதொடருங்கள்...
அருமையாக சொன்னீர்கள் .ஒப்பிட்டு பேசுவது நமக்கே பிடிக்காது எனும்போது பிள்ளைகள் மனது என்ன பாடுபடும் ....அதற்க்கு பொருத்தமாக குறளும் கொடுத்து அழகாக விளக்கியிருக்கீங்க .குழப்பமே இல்லை .
பதிலளிநீக்குநீல வர்ணத்தில் எழுதியிருக்கும் அனைத்தும் முத்தான கருத்துக்கள்
வணக்கம்
பதிலளிநீக்குதனபால் (அண்ணா)
வாசக உள்ளங்கள் வாசித்து ரசிக்க வைக்கும் பதிவு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அண்ணன் திண்டுக்கல் தனபாலன் அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிகக் நன்றி.
பதிலளிநீக்குதங்களது தொடர் சேவையாக மற்றவரை ஊக்குவிப்பது அனைவரையும் பிரமிக்க வைக்கிறது .உங்கள் பார்வை படாத வலைப்பூ ,வலைதளமில்லை /வியப்போடு வாழ்த்துகின்றேன் .தக்க சமயத்தில் அறிவுரையும் தந்து தவறை திருத்தவும் செய்துள்ளீர்கள் .பல நேரங்களில் அது மிகவும் பயன்பட்டது
vaazhviyal thathuvam..,
பதிலளிநீக்குnantri sako...
மிக அற்புதமான அலசல். எந்தக் குழந்தையையும் ஒன்றுக்கும் உதவாது என்று ஒதுக்க முடியாது. அதுபோல்தான் பணியாளர்களையும். அவரவர் திறமையைக் கொண்டே அவர்களை வேலைவாங்குவது என்பது தனித்திறமை. எழுதிய விதமும் குறள் கொண்டு விளக்கியமையும் மனம் தொட்டது. பாராட்டுகள் தனபாலன்.
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.
எவ்வளவு அருமையா,எளிமையாச் சொல்லிட்டீங்க!
பதிலளிநீக்குஇதை நான் வாழ்கையில் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இப்போது தான் குறளோடு பொருத்திப் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஉண்மையான கருத்து
பதிலளிநீக்குஎவரையும் புத்திசாலி முட்டாள் என முற்றுமுழுதாக முடிவெடுத்துவிடாது
திறமைகளை கண்டுபிடித்து ஊக்குவிக்க வேண்டும்
அருமை
சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம்
பதிலளிநீக்குதனபால் (அண்ணா)
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
அருமையான சிந்தனைப் பகிர்வு.
பதிலளிநீக்குஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரை வருட வாழ்த்துகள்.
உண்மையிலும் உண்மை. அருமையான பதிவு தனபாலன் சார்.
பதிலளிநீக்குமிக அருமையான படைப்பு.நீலவரிகள் தனியாகவும் வாசித்தேன்.என்னவொரு உண்மையான வார்த்தைகள்.என்னுடைய மகனும் மகளும் வேறுவேறு குணாதிசயங்கள் தான் ..இனி எனக்கு குழப்பம் வராது..:) !
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
அன்பு தனபாலன்,
பதிலளிநீக்குஇனிய விஜய வருட புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
அன்புடன்,
ரஞ்சனி
தெளிவான சிந்தனை உள்ளவர்களை இனம் காட்டும் பதிவு.குறைகளை மறைத்து நிறைகளை நிறைவாக சொல்வதால் பிறப்பது ஆர்வம். ஆர்வத்தை தொடர்வது ஆற்றல். ஆற்றலை தொடர்வது ஆழுமை. நன்றி நண்பரே
பதிலளிநீக்குமாறுபட்ட கோணத்தில் மிகவும் சிறந்த கருத்தாக்கம் பாராட்டுகள்
பதிலளிநீக்குஅருமையான பதிவு. வாழ்த்துகள் !!!
பதிலளிநீக்குகுறள் எடுத்துக்காட்டு அருமை.
பதிலளிநீக்குநல்ல பகிர்வுக்கு நன்றி.
தெளிவா குழப்பிட்டீங்க!ஸ்...ஸாரி...ஸாரி
பதிலளிநீக்குகுழப்பாம தெளிவாக்கிட்டீங்க!
ஹி...ஹி...!
உண்மைதான். வெகு அழகாக விளக்கியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குசொல்லிய விதம் அருமை!
பதிலளிநீக்குகுறளுக்கு பொருந்தும் மேலாண்மை கருத்துக்களை சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்! அருமை! நன்றி!
பதிலளிநீக்குஇருவரிக் குறள் இரண்டை இணைததே இனிதாக
பதிலளிநீக்குஇன்றைய தேவைகளை அழகாக சொன்னீர்கள்
பார்த்தேன் புரிந்தே ரசித்தேன்
மிக அருமை
வாழ்த்துக்கள்
அருமையான ஆக்கபூர்வமான சிந்தனை. வாழ்த்துகள். தாமதமாக வந்திருக்கேன். :))))
பதிலளிநீக்குநண்பரே! அருமையான பதிவு! அதுவும் இரு வேறு தளங்களின் அடிப்படையும் ஒன்றுதான் என்று சொல்லிய விதம் அற்புதம்! குழந்தை வளர்ப்பு பற்றிச் சொல்லியதும் நாங்கள் எழுதியதும் கிட்டத்தட்ட ஒரே கருத்துதான். என்ன ஒரே ஒரு வித்தியாசம் நாங்கள் ஸ்பெஷல் குழந்தைகள் பற்றி பேசியுள்ளோம். அருமையான நடை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஏன் தமிழ் மணத்தில் இணைக்கவில்லை நண்பரே! ஓட்டு போட முடியய்வில்லையே!
பதிலளிநீக்கு