🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



சந்தோசப்படும் பெயர் எது...?

என் எழுத்துகள் என்னைப் பார்த்துச் சிரித்தன... ஏன்...? முந்தைய பகிர்வில் (இன்று ஒரு நாள் மட்டும்) ஒன்றை புகைப்படமாக எடுத்து இணைத்து வெளியிட்டேன்... பதிவு தளத்தில் இல்லை என்று பலரிடமிருந்து தகவல்... பதிவின் கடைசி வரியின் படி கற்றுக் கொண்டது-மடிக்கணினி நம் வேகத்திற்குச் சரி வராது என்பது தான்... ...ம்... 26 வருடம் கழித்துக் கல்லூரி நண்பனுடன் ஒரு சந்திப்பு... அப்போது ஒரு சிந்திப்பு... அதுவே இந்தப் பதிப்பு...


ஏன் சிரித்தன என்பதை அறிய இங்கே

என்னை மறந்ததால் இப்பிரச்சனை... பாடல்களைப் பாடவில்லை......

பாடலாம் மனசாட்சி... ஆரம்பிக்கலாமா...? சந்தோசப்படும் பெயர் எது...?

அவரவர் வணங்கும் கடவுளின் பெயர்...? ஆரம்பமே சும்மா அதிருதில்லே...! விழி இரண்டு இருந்த போதும், பார்வை ஒன்று தான்-பார்வை ஒன்று தான்... வழிபடவும் வரம் தரவும், தெய்வம் ஒன்று தான்-தெய்வம் ஒன்று தான்...

அது உணர வேண்டிய நம்பிக்கையின் பெயர்... அதிரக் கூடாது... அமைதியாகணும்... அதே பாட்டிலே தனிமை வரும் துணையும் வரும், பயணம் ஒன்று தான்-பயணம் ஒன்று தான்... (படம் : இரவும் பகலும்)

அம்மா...! பெற்ற தாயின் பெயர் என்னவாக இருந்தால் என்ன...? பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா... இந்த பிள்ளை மனசு பித்ததிலும் பித்தமடா... தெய்வம் அது தாயிக்கும் கீழே தான்... எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலே தான்... (படம் : என்னை பெத்த ராசா)

மறுப்பதற்கில்லை... ஏன்... அப்பா இல்லையா...? ஒரு செயலை செய்யும் போது பெற்றோர்களின் நினைப்பு இருந்தால், நாட்டில் ஏன் இவ்வளவு தப்புத்தாண்டா நடக்குது...? பெற்றோர்களின் கண்காணிப்பு, கவனம் எங்கே போயிற்று...? முதியோர் / அநாதை / மறுவாழ்வு இல்லங்களும் ஏன் பெருகிக் கொண்டே போகுது...? அதே பாட்டிலே : நல்ல வயிற்றில் பிறந்தா நல்லவனே தாண்டா... கெட்டது செய்ய மாட்டான் வல்லவனே தாண்டா-அவனே மனிதன் அதை நீ உணரு...

ரொம்ப டென்சன் ஆயிட்டேயே... இப்ப பார்... கவிதைகள் சொல்லவா...? உன் பெயர் சொல்லவா...? இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ... உள்ளம் கொள்ளை போகுதே-உன்னைக் கண்ட நாள் முதல்... உள்ளம் கொள்ளை போகுதே... அன்பே என் அன்பே... (படமும் : உள்ளம் கொள்ளை போகுதே)

ஓஹோ ! புரியுது... ஆரம்பப் பிதற்றல்... தொடருமா இது போல்...?--> ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன...? வேர் என நீ இருந்தாய்... அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்... என் தேவையை யார் அறிவார்...? உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்... உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி... (படம் : வியட்நாம் வீடு) யோசிடா...

குழந்தைகளின் பெயர்கள் ? நண்பர்கள் ? உறவுகள் ? இலக்கியவாதிகள் ? தேசத் தலைவர்கள் ? உலகத் தலைவர்கள் ? கவிஞர்கள் ? போராளிகள் ? எழுத்தாளர்கள் ? விஞ்ஞானிகள் ? வெற்றியாளர்கள்...? சிந்தனையாளர்கள் ? ஓவியர்கள் ? படைப்பாளிகள் ? நடிகர்கள் ? நடிகைகள் !!!?

அடேய்... இவையெல்லாம் விருப்பமான பெயர்கள்... அடிக்கடி அவரவர் மனதிற்கேற்றவாறு மாறும்... அதிகரிக்கவும் செய்யும்... உழவர்கள், உழைப்பாளிகள் தவிரக் கிட்டத்தட்ட எல்லாம் சொல்லிட்டே... நம்புவோம் நம் நாடு வல்லரசு ஆகும்... ...ம்... முதலில் நல்லரசு... மொழி தெரியாத அல்லது அதிகம் பரிச்சயம் இல்லாத இடத்தில் இருக்கும் போது, அங்கே நம் இந்தியரைச் சந்தித்தால்...? தமிழரைச் சந்தித்தால்...? அட... நம் ஊர்க்காரரையே சந்தித்தால்...? அப்போது பொங்கும் சந்தோசம் இருக்கே....! என்னைப் பொருத்தவரை சந்தோசப்படும் பெயர் : நமது ஊர்ப் பெயர் தான்...

தான் வாழ்க்கையில் முன்னுக்கு வருகிறோமோ இல்லையோ, இது வந்தால் போதும், எவரெஸ்ட் சிகர உயரத்தில் கொடி நாட்டும் ஆர்வத்தில் இதுக்காக அலைகிறார்கள்... இதில் ஆய்வு செய்து, இதை வைத்து இவர்கள் இப்படித்தான் என்கிற முடிவு வேறு... அட... சுவர் கிடைத்தால் போதும்...

நிறுத்து... நீ என்ன சொல்ல வருகிறாய் என்று தெரிகிறது... இதை முதலில் கேள் : யாராலும் அடக்க முடியாத திமிரும் குதிரையை, பலரும் திகைக்கும்படி ஒரு சிறுவன் (1) அமைதிப்படுத்தினான் (அந்தக் குதிரை தன் நிழலைப் பார்த்தே பயந்து கொண்டிருந்தது...!) பின்னாளில் புத்திசாலியான அந்த மாவீரன் (2) தன்னுடைய சிறந்த படை வீரர்களைத் தத்ரூபமாக அழகான சிலையாக வடித்து அவர்களின் பெயர்களோடு வைத்திருந்தான்... அதனைப் பார்வையிட்ட பலரும் வியந்தனர்... ஆனால் எல்லார் கண்களும் ஒரு சிலையை மட்டும் ஆர்வத்துடன் தேடினர்... ஆதங்கப்பட்டனர்... (1) (2) யார்...? மாவீரன் நெப்போலியன்... இப்போது புரிகிறதா..?

...ம்... அன்று மாவீரனாக இருந்தாலும் அறிவாற்றலுடன் இருந்தார்கள் என்று புரிகிறது... ஒரு சந்தோசமான பெயர் ஒன்று இருக்கே... சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வராது, எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கு ஈடாகாதுன்னு சொல்லிட்டே... பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா...? (படம்: ஊரு விட்டு ஊரு வந்து)

அது மொழி... அவரவர் தாய்மொழி அவரவருக்குச் சந்தோசம் தான்... இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்-மனிதரின் மொழிகள் தேவையில்லை... இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்-மனிதர்க்கு மொழியே தேவையில்லை (படம் : மொழி)

எப்படிப் போனாலும் பாட்டுப் பாடி ரவுண்டு கட்றானே... கதை வேறே... ம்... தொலைக்காட்சியிலோ, செய்தித்தாளிலோ, புத்தகத்திலோ, வேறு எந்த இடத்திலும் நம் பெயரைத் தற்செயலாகப் பார்த்தாலோ, தேடும் போது இருந்தாலோ-அது நாம் இல்லை என்றாலும், நம் பெயர் என்றவுடனேயே சந்தோசம் அடைகிறோம்... நான் முன்னே சொன்ன 'இது'வும் நம் பெயரே ! அதனால் நம் பெயர் தான் சந்தோசம் தருகிறது என்பேன் ! பெயரையும் சேர்த்துக்கோ; மனசாட்சி சொன்ன கேட்டுக்கணும்...!

சந்தோசப்படும் பெயர்கள் : அவரவர் ஊரும் பெயரும்...

இதுக்கு திண்டுக்கல் தனபாலன் என்று சொல்ல வேண்டியது தானே...? "சந்தோசப்படும் பெயர்கள் என்ன...?" என்று தலைப்பை மாற்று...

அடேய்... நம்மைக் கிண்டலடிக்க நம் மனதே போதும் போலே... நாம் வளர்ந்த அல்லது வளர்த்த விதம் அப்படி + நீ சொல்வதிலும் உண்மை உள்ளது என்பதாலும் தான் இப்படிச் சொன்னேன்... எந்த இடத்திலும் குறைகளைக் குற்றங்களாகக் கருதாமல், ரசிக்கும், சமாளிக்கும், மனதார சிறிய பாராட்டும், சந்தோசத்தை விதைத்துச் சந்தோசப்பட்டால்... நம்மை நினைப்பார்கள்...

என்ன நண்பர்களே... மற்றவர்கள் நம்மை நினைப்பார்களோ இல்லையோ, அதைப் பற்றிச் சிந்திக்காமல் நம்மில் நம்மை முழுமையாகப் பலங்களையும், முக்கியமாகப் பலவீனங்களை முதலில் தேடுவோம்... நம்ம திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்பதையும் சிந்திப்போம்...

நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது
(235)
பொருள் : புகழால் மேன்மை பெறக்கூடிய கேடும், செத்தும் புகழால் வாழ்ந்திருக்கும் சாவும், அறிவிற் சிறந்த வித்தகனுக்கு அல்லாமல், பிறருக்கு ஒருபோதுமே கிடையாது. வித்தகன் : தன் நலத்தைக் காக்கும் அதே வேளையில், பிறருடைய நலத்தையும் காக்கும் வகையில் தனது மனதை அமைத்துக் கொள்கிற கெட்டிக்காரன்...

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி... அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி... ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்... ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்... இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி... காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்...



© அபூர்வ ராகங்கள் கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 வாணி ஜெயராம் @ 1975 ⟫

சந்தோசம் என்றும் தொடர இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி நண்பர்களே... தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. நிச்சயம் சந்தோசப்படும் பெயர்கள் ஊரும் பெரும் தான்..
    இவண்
    "கோவை" ஆவீ

    பதிலளிநீக்கு
  2. //சந்தோசப்படும் பெயர்: நமது ஊர்ப்பெயர் தான்//

    கரெக்ட்... எனக்கு கூட என் ஊர்க்காரர்களை சென்னையில் சந்தித்துவிட்டால் போதும்... நீங்கள் சொன்ன அந்த சந்தோசம் வந்துவிடுகிறது....

    பதிலளிநீக்கு

  3. ‘சந்தோசப்படும் பெயர்கள்: அவரவர் ஊரும் பெயரும்.’ சரியாய் சொன்னீர்கள். எனவே நீங்கள் திண்டுக்கல் தனபாலன் என்று சொல்லிக்கொள்வதில் தப்பேதும் இல்லை. ஒருவரிடம் பேனா கொடுத்து ‘எழுதுகிறதா?’ என பார்க்க சொல்லுங்கள். அவர் தான் பெயரைத்தான் எழுதுவார். அதுதான் மனித இயல்பு. நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயரைக் கேட்கையில்
    மகிழ்ச்சி...
    பொதுவாக நீங்கள் கூறியதுபோல. சொந்த ஊர்ப் பெயரைக்
    கேட்டால். சற்று உன்னிப்பாக கவனிப்போம்..
    இதிலும் இடத்தைப் பொறுத்தே
    மகிழ்வும் இருக்கிறது என்பது என் கருத்து...
    என்னைப்போல வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள்
    எதிர்ப்படும் யாரோ தமிழில் எந்த வார்த்தை சொன்னாலும்
    மகிழ்ச்சி வரும்...
    அட... நம்ம நாட்டுக்காரங்க என்று..
    அப்போது தமிழ் எனும் சொல்லில் தான்
    எத்தனை மகிழ்ச்சி...

    அழகான பதிவு நண்பரே..

    பதிலளிநீக்கு
  5. @வே.நடனசபாபதி அவர்களுக்கு நேற்று தாங்கள் என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த விதமும், அதனை வரவேற்ற திரு. தி.தமிழ் இளங்கோ அவர்களின் கருத்தும் என்னை மேலும் ஊக்கப்படுத்தி, எழுதிய பதிவு சரியே என்று சந்தோசப்பட வைத்தது...

    பெரியோர்களின் ஆசிர்வாதத்திற்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  6. அருமையான பாடல்கள்..
    /சந்தோசப்படும் பெயர்: நமது ஊர்ப்பெயர் தான்///அருமை

    பதிலளிநீக்கு
  7. ஊரும் பேரும்தான் என்பதை பழைய பாடல்களின் துணை கொண்டு சொன்னது ரசனையின் உச்சம்! ஒவ்வொன்றும் எனக்குப் பிடித்த பாடல்கள் என்பதால் வரிகளைப் பாடியபடியே படித்தேன் மகிழ்ந்தேன். நன்றி தனபாலன்!

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் சொல்வது சரிதான். நம் ஊர் பற்று வேண்டும். நீங்கள் சொல்வது போல் குற்றம் குறைகள் பார்க்காமல் அனைவரையும் பாராட்டி, அரவணைத்து செல்லும் குணமே உயர்ந்த பண்பு. அது உங்களுக்கு நிறையவே இருக்கிறது.
    மனசாட்சி சொல்வது சரிதான் நம் பேர் சந்தோஷம் தருவது உண்மை.

    பதிலளிநீக்கு
  9. சொந்த ஊரின் பெயரைக் கேட்டாலும் நினைத்தாலும் ஏற்படும் மிகிழ்ச்சியே தனிதான்.

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான பதிவு.

    உண்மைதான் நம்முடைய பெயரையும்,ஊரையும் கேட்டால் சந்தோஷப்படுவோம்.

    //மற்றவர்கள் நம்மை நினைப்பார்களோ இல்லையோ, அதைப்பற்றி சிந்திக்காமல் நம்மில் நம்மை முழுமையாக பலங்களையும்,முக்கியமாக பலவீனங்களையும் முதலில் தேடுவோம்.//

    சிறப்பாக சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  11. @திண்டுக்கல் தனபாலன்

    ஆசிகளும் வாழ்த்துக்களும் என்றும் உண்டு தங்களுக்கு நண்பரே!

    பதிலளிநீக்கு
  12. நல்ல பாடல்களைப் பகிர்ந்திருப்பது தங்களின் அழகிய ரசனையைக் காட்டுகிறது.கவிஞரின் வியட்நாம் வீடு படப்பாடலில் 'ஆழம் விழுதுகள்போல்' என்றிருக்கிறது. அது 'ஆலம் விழுதுகள்போல்' என்றிருக்கவேண்டும். ஆலமரத்தின் விழுதுகளைச் சொல்கிறார் கண்ணதாசன். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. @Amudhavan அவர்களுக்கு, கவனிக்கவில்லை... மாற்றி விட்டேன்.. நன்றி...

    பதிலளிநீக்கு
  14. நம்ம ஊரும் நம்ம பேரும்தான் - அருமை

    பதிலளிநீக்கு
  15. ஊர்ப் பெயரோடு நமது பெயரையும் சேர்த்து எழுதுவதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. இந்த மகிழ்ச்சி உங்கள் பதிவில் நன்றாகத் தெரிகிறது. எனது தந்தை இன்னும் எங்கள் ஊர்ப் பெயரோடுதான் அவர் பெயரையும் சேர்த்து எழுதுவார். டாக்டர் ரா பி சேதுப்பிள்ளை எழுதிய ஒரு நூலின் பெயர். “ தமிழகம் - ஊரும் பேரும்”. இந்நூலில் ஊர்களுக்கான பெயர்க் காரணம் சொல்லுவார்.

    பதிலளிநீக்கு
  16. வாவ் !ப்ளாக் தன்பால் சார்
    கொஞ்சம் இடைவேளைக்கு பிற்கு மீண்டும் உங்கள் பதிவு முதலில் உங்களுக்கு அதற்கு என் வாழ்த்துகள் கைதட்டல் படித்துவிட்டு வருகிறேன் இன்று இப்போது என் ப்ளாகில் லாகின் செய்தவுடன் உங்கள் பதிவு பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷம்

    பதிலளிநீக்கு
  17. மிக சிறப்பான பகிர்வு வாத்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. வெளிநாடுகளில் என்னதான் இருந்தாலும் எங்க ஊர்க்காரங்களை பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷம் சொல்லிடமுடியாது.நல்ல பாடல்களை தெரிவுசெய்து இருக்கிறீங்க. அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  19. ஆம். அவரவர் பெயரும் ஊரும் தாய்மொழியும் பிறரால் பாராட்டப்படும்போது அலாதி இன்பம் தான். இன்னும் நாலு பேராவது சொல்லும்படி நம் வாழ்வை அமைக்க வேண்டுமல்லவா...!

    பதிலளிநீக்கு
  20. கருத்துச் செறிவுள்ள, மனதில் ஆழப் பதியும் அருமையான பாடல் அடிகள்.

    பதிலளிநீக்கு
  21. ஆமாம் நீங்க சொல்வது போலதான் நம்ம பெயரை எங்கு கேட்டலும் படித்தாலும் அது நாம் இல்லாவிட்டாலும் நமக்கு ஒரு சந்தோசசம் வந்து ஒட்டி கொள்கிறது ஏன் நம் குடுமபிதில் உள்ளவர்கல் துணையின் பெயரோ குழந்தகளின் பெயரோ கேட்டலும் வந்தாலும் கூட நம் மனது சந்தோஷ படுகிறது நம் ஊரைவிட்டு தள்ளி இருக்கும் போது நம் ஊரின் பெயரை கேட்டால் நாம் திரும்பி பார்க்காமல் இருக்க மாட்ட்டோம்
    நம்மை கிண்டல் அடிக்க நம் மனதே போதும் போல நாம் வளர்ந்த அல்லது வளர்ந்த விதம் அப்படி இது சூப்பர் உண்மை

    பதிலளிநீக்கு
  22. உண்மைதான் பெயரும் ஊரும் பிடித்ததுதான் .இருந்தாலும் என் போன்று பிறந்த ஊர் ஒன்று,பள்ளிப் படிப்பு படித்த ஊர் ஒன்று,கல்லூரி ஊர் மற்றும் திருமணமாகி சென்ற ஊர், வாழும் ஊர் என அனைத்துமே பிடிக்கிறது... பிடித்ததன் வரிசைக் கிரமம் மாறுபடுகிறது அவ்வளவே...

    பதிலளிநீக்கு
  23. ஊரும் பேரும் மகிழவே செய்கிறது.....
    ஆனால் அதை விட
    அதிக மகிழ்வை தருவதென்னவோ
    நம் தாய்மொழிதானென்பது
    எனது தாழ்மையான கருத்து...

    தமிழ் தமிழ் தமிழ்...

    சொல்லி சொல்லி பரவசமடைகிறேன்

    பதிலளிநீக்கு
  24. பிடித்த அருமையான பாடல் வரிகளுடன் பதிவைப் படித்தேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  25. எங்களுக்கெல்லாம் எங்காவது தமிழ்மொழிப் பேச கேட்டுவிடின் உள்ளத்தே ஒரு துள்ளல் ஏற்படும் பாருங்க அதை சந்தோசம் வெளிநாடு வாழும் எங்களுக்கு வேரென்ன வேண்டும்

    பதிலளிநீக்கு
  26. நம் மொழி நம் நாடு பேச்சில் மட்டும்தான் உள்ளது, தமிழின் பேசுவது ஆங்கிலம் [அது எவ்வளவு பீட்டராக இருந்தாலும்] , வாழ நினைப்பது அமரிக்காவில். எங்கே போய் முட்டிக் கொள்ள?

    பதிலளிநீக்கு
  27. ரசித்து படித்தேன்

    உள்ளூரில் குடும்ப பெயரைக்குறிப்பிட்டு சொன்னாலும் வெளியூர் என்றால் ஊர் பெயரைக் குறிப்பிட்டுக் கூறுவதுதான் சிறந்தது.

    அருமையான பதிவு !

    தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  28. ஆஹா.......இதுதான் உங்களின் பெயருக்கான ரகசியமா !! ஆமாம் சார், என்னதான் இருந்தாலும் நம்ம ஊர் பெயர் கேட்டால் அது ஒரு தனி சந்தோசம்தான்.....தொடரட்டும் நல்ல பதிவுகள் !

    பதிலளிநீக்கு
  29. மனதில் நிற்கின்ற அருமையான பாடல் வரிகள் அதனோடு நீங்கள் தந்த விளக்கங்கள் வெகுசிறப்பு.

    நாடிழந்து ஊரிழந்து உற்றம் சுற்றமுமிழந்து பெயரும் இழந்து போய்விடும் அவலத்தில் எம் வாரிசுகளில் சிலர் வெளிநாடுகளில்...

    பெயரும் பெருமைதரும் ஊரும் மறந்த வாழ்வு ஒரு வாழ்வோ...

    உணர்வினைத்தொடும் நல்ல பதிவு... பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  30. அழகாய் அருமையாய் பாடல்களுடன் விளக்கப்படுத்தி இருக்கிறீர்கள்
    உண்மைதான் ...நம் ஊர்//பல்லர்யிரம் மைல்கள் தாண்டிஇருக்கும்போது அதன் அருமை!!!
    எங்காச்சும் தமிழ் பேச்சு தூரத்தில் கேட்டாலும் யார் எவர் என கண்கள் மற்றும் மனமும் தேடும் :)

    பதிலளிநீக்கு
  31. நானும் பழைய நினைவுகளில் மூழ்கிப்போனேன்....

    நல்லது தலைவரே...

    பதிலளிநீக்கு
  32. அடடா ! எத்தனை சினிமா! எத்தனைப் பாடல்! வியப்பினும் வியப்பே!

    பதிலளிநீக்கு
  33. புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலோர் தமிழ் காற்றில் வந்தால் ஒரு சிலிர்ப்போடு அந்தப்பக்கம் தேடி ஓடுவதுண்டு...

    சிலரோ வந்துட்டாண்டா நமக்கு போட்டியா என்று எதிர்திசையில் ஓடுவதும் உண்டு...

    வழக்கம் போல் தரமான படைப்பு தனபாலன்ஜி ...

    பதிலளிநீக்கு
  34. உண்மைதான் .ஊர் பெயர் சொன்னாலே சந்தோஷம்தான்.
    இன்னாருடைய பெண் என்றாலும் சந்தோஷம். இன்னாருடைய மனைவின்னு சொன்னாலும் அதே. இந்தப் பிள்ளைகளோட அம்மான்னாலும் சந்தோஷமே. அருமையான பாடல்கள்.
    இனிக்கும் வரிகள். அசத்துகிறீர்கள் திண்டுக்கல் தனபாலன்!!!

    பதிலளிநீக்கு
  35. நட்புச் செய்து கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. அவர் மிகுதியாகத் தவறு செய்யும் போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.- super..

    பதிலளிநீக்கு
  36. தன் பேரைஅயும் ஊர்ப்பேரையும் நேசிக்காத மனிதர் உண்டா?!

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் தனபாலன் ஐயா.

    பதிவு அருமையாக உள்ளது.

    எனக்கெல்லாம் ஊர் பெயர் கூட சொல்ல வேண்டாம். உலக மேப்பை விரித்தவுடன் கண்கள் என்னையும் அறியாமல் நம் நாட்டைப் பார்த்து மகிழும்.

    பதிலளிநீக்கு
  38. மிக சிறப்பான பகிர்வு!!வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  39. உண்மைதான்! நம் ஊர்ப்பெயரும் நம் பெயரும் எங்காவது உச்சரிக்கப்பட்டால் மகிழ்ச்சி பொங்கும் இயல்பாகவே! இந்த பதிவில் கூட "நத்தம்" என்ற எங்கள் ஊர்ப் பெயர் வரும் குறள் எனக்கு மகிழ்ச்சி தந்தது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  40. நானும் ஒத்துக் கொள்கிறேன் நம்ம பெயர் ஊரும் என்பதனை . நிறைந்த ஆய்வு.
    அனைத்திற்கும் மிக நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  41. அத்தனையும் உண்மை ... மிக அழகாகச் சொல்லிட்டீங்க..

    பதிலளிநீக்கு
  42. உண்மைதான் சார் ஊர் பெயர் கேட்கும் போது இனம்புரியாத சந்தோஸம் வருவது இயல்பு அருமையான பாடல்கள் தொகுப்பு!

    பதிலளிநீக்கு
  43. அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  44. உங்களால் உங்களுக்கு மட்டும் அல்ல உங்கள் ஊருக்கும் நற் பெயரைத் தேடித் தந்துள்ளீர்கள் .வாழ்த்துக்கள் மென்மேலும் சிறந்து விளங்க .

    பதிலளிநீக்கு
  45. உங்களது இந்தப் பதிவைப் படித்தபின் ஊர் பெயரை சேர்த்து வைத்துக் கொள்ளாமல் போய்விட்டோமே என்று தோன்றுகிறது.
    ஆனால் எல்லோருக்கும் உங்களைப்போல சந்தத்துடன் பெயர் வருமா?
    தமிழில், ஆங்கிலத்தில் இரண்டிலும் அண்ணாச்சியின் பெயர் தனியாக நிற்கிறதே!

    பதிலளிநீக்கு
  46. அவரவர் வணங்கும் கடவுளின் பெயர் ...? ஆரம்பமே சும்மா அதிருதிலே...! விழி இரண்டு இருந்த போதும், பார்வை ஒன்று தான்- பார்வை ஒன்று தான்.வழிபடவும் தரவும் தரவும் , தெய்வம் ஒன்று தான் -தெய்வம் ஒன்று தான் .... சும்மா சொல்ல கூடாது ரொம்பவே அதிருதில்லே
    திண்டுக்கல் என்றால் என் நினைவுக்கு வருவதே தனபாலன் தான் சந்தோசமான பெயர் தான் -நன்றி

    பதிலளிநீக்கு
  47. நிச்சயம் சந்தோஷப்படும் பெயர் ஊரின் பெயர் தான் எங்கள் ஊர் என்றாலே தனி மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  48. இயங்குநிலைப் படமும் எடுத்தாளப்பட்ட கருத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
  49. அருமையான தெளிவான கருத்துப் பகிர்வு.

    பதிலளிநீக்கு
  50. தாங்கள் மேற்கோள் காட்டிய குறளில் வித்தகர் என்னும் வார்த்தை.
    வித்தகர் என்போர் யார் ? என ஒரு கேள்வி வருகையிலே
    பொதுவாகப்பொருளுரைப்போர் இப்புவியிலே இருக்கையிலே தன்னலத்துடன் பிற நலத்தையுமே பேணுவார் எனச் சொல்லிவிடுகிறார்கள்.

    பரிமேலழகரோ ஒரு படி மேலே செல்கிறார்:
    உடல் நிலையில்லாதது.
    உடலில் உயிர் உள்ளவரை தான் புகழ் ஈட்ட இயலும்.
    அந்தப்புகழ் நிலைத்து நிற்க, பூத உடலோ இறக்கிறது. .
    நிலையில்லாத ஒன்று நிலைத்து ஒன்று நிற்பதற்கு அடித்தளமாக ஆகின்றது.
    இதை அறிந்தவன் வித்தகன் என்கிறார் வள்ளுவர்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  51. ஏதோ ஒன்றினை எழுத முற்பட்டு மறந்தேன் என்பதை
    இப்பொதே உணர்ந்தேன்.

    ஊர்ப்பெயரினைத் தத்தம் பெயருடன் எழுதுவதும் சிறப்பே.

    எனினும் நான் எழுதவில்லை.
    ஏன் எனக்கேட்பவர் இருப்பின், அவர்களுக்காக சொல்வது இது.

    நான் பிறந்தது ஆங்கரை எனும் ஒரு குக்கிராமம். ( இன்று அது குட்டி நகரமாக உள்ளதென்பது வேறு) ஆக, முதல் எழுத்து A
    என் தந்தை பெயர் சிவசுப்பிரமணியன். ஆக இரண்டாம் எழுத்து S
    என் பெயரோ சுப்பு ரத்தினம். ஆக மூன்றாம் எழுத்தும் S
    மூன்றெழுத்தையும் ஒன்றே திரட்டின் வருவதோ
    ASS
    அதுதான் பார்த்தாலே கேட்டாலே தெரிகிறதே, எழுதவும் வேண்டுமா என்ன, என‌
    எழுதாமலே விட்டுவிட்டேன் முதல் எழுத்தை.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.