🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉இதே வாழ்க்கை தான் வாழ்வீர்களா...?

வணக்கம் நண்பர்களே... வாழ்க்கை சுவாரஸ்யமாகவே இல்லை... என்ன வாழ்க்கைடா இது...? திவா கி திவா... என்ன இது உளறல்...? வாருங்கள் என்னவென்று பார்ப்போம்...


புலம்பலைப் பலரிடம் விசாரித்தால்... கேள்வி : இது வரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை எப்படி...? மீண்டும் உங்களுக்கு ஒரு வாழ்க்கை ஆரம்பத்திலிருந்து வாழுங்கள் என்று கொடுக்கப்பட்டால், எதை எதைத் திருத்திக் கொள்வீர்கள்...? எதை எதைச் செழுமைப்படுத்திக் கொள்வீர்கள்...? அல்லது இதே வாழ்க்கை தான் வாழ்வீர்களா...?

1. நன்றாகப் படிக்காமல் விட்டு விட்டு விட்டேன்... திரும்ப வாழ்க்கை கிடைத்தால், திருத்தி வாழ்வேன் (இது தான் திவா கி திவா...)

2. நல்ல வேலைக்கு முயற்சிக்காமல் விட்டு விட்டேன்... திவா கி திவா...

3. நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கவில்லை... திவா கி திவா...

4. நல்ல பிள்ளைகள் அமையவில்லை... திவா கி திவா...

5. நல்ல லட்சியங்களை எட்ட முடியவில்லை... திவா கி திவா...

இப்படி அவரவருக்கு நேர்ந்த தவறுகளை, அவரவர் செய்த பிழைகளை, அவரவர் இழந்த வாய்ப்புகளை எண்ணி, திவா கி திவா என ஆசைப்படுவோம்... தவறு செய்வது மனித இயல்பு... அதைத் திருப்பித் திருப்பிச் செய்தால் தானே முழுமை ஏற்படும்... அது எப்படி தப்பாகும்...?

முதலில் நாம் சொல்வது, பார்ப்பது, கேட்பது... மற்ற எல்லாவற்றையும் இரண்டாவது முறை செய்தால் தப்பா என்ன...? வாழ்க்கையில் பல பேர் இந்த இரண்டாவது முறையே நம்புவதால் தான், அவர்களால் முதலாவதாக எப்போதும் வர முடிவதில்லை... முதல் சொல்லைத் தொடங்கும் போதே, செயலில் முதல் அடியை எடுத்து வைக்கும் போதே, முறையான முழுப் பயிற்சியுடன், நம்பிக்கையுடன், தெளிவாகத் தீர்மானமாகச் செயல்பட்டால் தான், இரண்டாவது என்கிற நினைப்பிற்கே இடமிருக்காது... 'தவறு வரும்-திருத்திக்கலாம்' என்கிற அரைகுறை மனதோடு இருந்தால் குழப்பம் தான் மிஞ்சுமே தவிர, வெற்றிக்கான இலக்கை அடைய முடியாது.

வாழ்க்கை தவறுகளாலும் நிறைந்தது தான்... ஆனால் செயல்படும் ஒவ்வொரு நொடியும் கவனமாகச் செயல்பட்டால் தவறுகள் குறைந்து நிறைகளே ஏற்பட வாய்ப்புகள் பெருகும்.

தவறு என்பது தவறிச் செய்வது... தப்பு என்பது தெரிந்து செய்வது... தவறு செய்தவன்-திருந்தப் பார்க்கணும்... தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்...

அமெரிக்க அறிவியலாளர், எழுத்தாளர், அரசியலாளர், மிகப் பெரிய சிந்தனையாளர், பெஞ்சமின் பிராங்க்ளின் - 87 வயது வரை வாழ்ந்தவர்... மேலே உள்ள கேள்வி அவருக்கும்... அவரின் பதில் இதோ :

"இதுவரை நான் வாழ்ந்த வாழ்கையில் எந்த வருத்தமும் எனக்கில்லை... நான் நன்றாகவே வாழ்ந்திருப்பதாகவே கருதுகிறேன்... மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தால், இதே வாழ்க்கையே வாழ்வதாக ஆசைப்படுகிறேன்"

நண்பர்களே... தவற விட்டதை நினைத்து வருந்துவதா வாழ்க்கை...? நேர்ந்து விட்ட தவறுகளுக்காக ஏங்குவதா வாழ்க்கை...? ஒவ்வொரு நொடியையும் தவறே நேராமல் விழிப்புணர்வோடு வாழ்வதே வாழ்க்கை... வாழும் போதே வாழ்க்கையை வசப்படுத்தி வாழ்வது, வருத்தமில்லா வாழ்க்கையாக வடிவமைத்துக் கொள்வது போன்றவற்றில் கவனம் செலுத்தினால் திருத்தமில்லாத வாழ்க்கையை அர்த்தத்தோடு வாழலாம் அல்லவா...?
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
(குறள் எண் 27)
பொருள் : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் தெரிந்து நடப்பவனிடமே உலகம் உள்ளது...

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
(குறள் எண் 43)
பொருள் : தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் பேணுதல் இல்வாழ்பவனுக்குச் சிறப்பாகும்.

இரு குறளிலும் உள்ள ஐந்தையும் ஒப்பிட்டும் சிந்திக்கலாம்... தவறில்லை... மேலும் தினமும் வாழ்க்கையை இனிமையாக்க :


உறவுகள் மேம்பட என்ன செய்ய வேண்டும்...? அறிய : இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி நண்பர்களே தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. ஒவ்வொரு நொடியையும் தவறே நேராமல் விழிப்புணர்வோடு வாழ்வதே வாழ்க்கை...

  வாழ்க்கை வாழ்வதற்கே ..

  எண்ணித்துணிக துணிவுடன் ...

  பதிலளிநீக்கு
 2. அருமை! அழகான அவசியமான அற்புதமான தகவல்கள்.

  திரும்ப திரும்ப வாசிக்கவைத்த நல்ல பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி!
  வாழ்த்துக்கள்!

  திவா கி திவா!

  பதிலளிநீக்கு
 3. மிக நீண்ட நாளைக்கு பிறகு அற்புதமான பகிர்வு.. இன்று ஒரு நாள் மட்டும் அற்புதம்

  பதிலளிநீக்கு
 4. சிந்தனையாளர் வரிசையில் வரும் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் அவர்களின், மேற்கோளோடு மீண்டும் ஒரு துவக்கமாக, வலைப்பககம் வலம்வரும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. பெஞ்சமின் ப்ராங்க்ளின் மாதிரி சொல்ல வேண்டுமானால் கவனமாக செயல்பட்டு தவறுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

  சிறப்பான கருத்து.

  பதிலளிநீக்கு


 6. மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளலாகாதென
  திருவடி சரணம் என்று நான் நம்பி வந்தேன்

  எனும் பாடலை இன்னுமா கேட்கவில்லை....

  இன்னும் ஒரு சனுமம் எடுத்து திரும்பவும் இந்த தமிழ் நாட்டுக்கு வந்து தமிழ் பேசி திண்டுக்கல் தனபாலனோட‌
  பதிவுகளைப் படிக்க ஆசை தான்.
  இருந்தாலும்,

  பயமா கீதே..

  சிவாஜி, ஜெமின், எம்.ஜி.ஆர்,
  கமல், ரஜினி, சூர்யா, ஆர்யா, வடிவேலு, பவர் ஸ்டார் எல்லாருமே அப்ப இன்னொரு ஜனுமம் புறப்பாங்க புதுசா... இல்லயா.
  நடிப்பாங்க.. படம் எடுப்பாங்க.. ஸ்டைல் காட்டுவாங்க..
  அதுக்கும் ஆசைதான்.

  அதுனாச்சும் பரவாயில்ல..
  இன்னொரு தரம் தலைவரு, அம்மா , கேப்டன் சாரு புறந்து அடிச்சுக்குவாங்க..

  அதுனாச்சும் பரவாயில்ல.
  தினப்படி இன்னிக்கு எப்ப கரன்ட் போகும் அப்படின்னு கொட்ட கொட்ட முழிச்சுட்டு இருக்கணும்.

  போதும்டா சாமி....

  இன்னொரு சனுமம் வேண்டவே வேண்டாம்.

  ஆனா ஒன்னு இருக்கு
  நயனு யாருக்குன்னு தெரிஞ்சுடும்.

  தமிழ் மக்கள் கவலையெல்லாம் தீந்து போயிடும்.

  அப்ப புறந்து தான் பார்ப்போமே !!

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 7. அருமையான வாழ்வியல் பகிர்வுங்க //மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 8. வெகுநாட்களுக்குப் பின் தங்கள் பதிவைப் படிப்பதில் மகிழ்ச்சி.வழக்கம் போல் நல்ல கருத்துக்கள் எடுத்துக்காட்டுகளுடன்.

  பதிலளிநீக்கு
 9. மீண்டும் வாசிக்க வருவேன் ..மொழிபெயர்த்து மகளுக்கும் சொல்லணும் நான்

  பதிலளிநீக்கு
 10. திவா கி திவா...

  ரொம்ப நாளா உங்க வலை திறக்காமல் இருந்தது...அப்புறம் திறக்க ஆரம்பிச்சது...ஆனா நீங்க ஓய்வில இருந்தீங்க போல ...-:)

  காத்திருப்பு வீண்போகல...அருமையான படைப்பு...வாசித்ததில் மகிழ்ச்சி...

  பதிலளிநீக்கு
 11. தன் தவறிலிருந்து பாடம் கற்று கொள்ளாதவர்கள், அதே தவறை திரும்பத்திரும்ப செய்வார்கள். என்பதை நேற்றுதான் படித்தேன், அருமையான பதிவு, சிந்திக்க வைக்கிறது, அப்படியே எனது வாழ்க்கையையும் திரும்பிப்பார்க்க வைத்தது. நன்றி நண்பரே! தொடர்ந்து எழுதுங்கள். கொஞ்சநாள் இடைவெளி போதும். நன்றி.

  பதிலளிநீக்கு
 12. திவா கி திவா ...எல்லாம் கிடையாது !நடந்ததை நினைத்து வருத்தப் பட்டால் அவன் மடையன் ,,இதுதான் என் பாலிசி !அதற்குத்தான் நான் லைப் டைம் பிரிமியம் கட்டி உள்ளேன் ,,,இந்த பாலிசி எங்கே கிடைக்கும்ன்னு தெரியாத்தனமா கேட்டு விடாதீர்கள் ...வாசலில் ஆயிரம் ஏஜண்டுகள் வந்து நிற்ப்பார்கள் !

  பதிலளிநீக்கு
 13. நீண்ட நாட்களுக்குப் பின் வரும் சுவையான அர்த்தம் நிறைந்த பதிவு.

  பதிலளிநீக்கு
 14. நல்ல பகிர்வு, மீண்டும் பதிவிட ஆரம்பித்தமைக்கு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 15. நல்லதொரு தகவல்

  சமூகம் விழிப்புணர்வு பெறுவது அவசியம்

  பதிவு அருமை !

  தொடர வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 16. மிகவும் அருமையான பதிவு ..நன்றி நண்பரே ....:)

  பதிலளிநீக்கு
 17. நல்ல பகிர்வு, மீண்டும் பதிவிட ஆரம்பித்தமைக்கு மகிழ்ச்சி.
  Vetha.Elangathilakam

  பதிலளிநீக்கு
 18. தனபாலன் சார் பதிவில் குறள் இல்லையேன்னு நினைச்சேன்.. கடைசியில கொடுத்து இருக்கீங்க...

  "திவா கி திவா" எதோ சைனீஸ் பற்றிய பதிவு என்று நினைத்தேன் :-)

  பதிலளிநீக்கு
 19. ஆமா ல எதுக்கு சும்மா முன்ன விட்டு பின்ன பொலம்பனும் "அப்பவே ஒழுங்கா படிச்சிருக்கலாமோனு"..அப்பப்ப செய்ய வேண்டியதா ஒழுங்கா கவனமாச் செஞ்சா நோ பொலம்பல்ஸ்..புரிஞ்சுகிட்டேன்...நல்லப் பதிவிற்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு

 20. இனிய வணக்கம் நண்பரே..

  நலமா??

  நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்திக்கிறோம்....


  அழகாக ஒரு குறிச்சொல்லுடன் பதிவு...


  சில சமயங்களில் சிலவற்றை தவற விட்டுவிடும் நாம்

  அதற்கான மற்றொரு வாய்ப்பை எதிர்பார்த்து

  நூல் கிடைத்தாலும் போதும் மலையேறி விடலாம்

  என்ற எண்ணத்துடன் எதிர்நோக்கி இருப்போம்...


  சிலர் அது போன்ற சந்தர்பங்கள் கிடைத்து

  கோலேச்சி இருக்கிறார்கள்..

  பலர் இன்னும் எதிர்பார்த்தே காலம் கழிக்கிறார்கள்....


  நன்றே செய்

  இன்றே செய் அதுவும்

  இப்பொழுதே செய்...


  என்ற தாரக மந்திரத்துடன் வாழ்ந்திட வேண்டும்

  என்ற அருமையான பதிவுக்கு நன்றிகள் பல நண்பரே...

  பதிலளிநீக்கு
 21. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிவைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
  பதிவின் கருத்து மிக மிக அருமை.
  நீங்கள் முதன் முதலில் கேள்வி கேட்டதும் நானும் ஒரு வினாடி யோசித்துத் தான் பார்த்தேன். யோசனையைத் துாண்டும் பதிவு.
  தொடர்ந்து எழுதுங்கள் தனபாலன் ஐயா.

  பதிலளிநீக்கு

 22. திவா கி திவா அட்டகாசம். பயங்கர தத்துவ ஞானியாயிட்டீங்க... அருமையான சிந்தனை. பேசாம திண்டுக்கல் தனபாலனந்தா -னு பெயரை மாத்திக்குங்க...!!!

  தித சிதூ த -னு ஒரு புத்தகம் வெளியுடுங்கள். (திண்டுக்கல் தனபாலந்தாவின் சிந்தனையைத் தூண்டும் தத்துவங்கள்..)

  பதிலளிநீக்கு
 23. கடந்தவற்றை நினைப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை. நிகழ்காலத்தில் வாழ வேண்டும். வருங்காலத்தைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும். அருமையான கருத்தைச் சொல்லி சிந்தனைக்கு விருந்து தந்த அற்புதமான பதிவு. சூப்பர் தனபாலன்!

  பதிலளிநீக்கு
 24. நீண்ட இடைவெளிக்குப்பின் நல்ல கருத்துக்களுடன் பதிவிட வந்தமைக்கு நன்றி! திரு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் அவர்களின் கருத்தே என் கருத்தும்.

  பதிலளிநீக்கு
 25. வாழ்வை அதன் போக்கில் விட்டு வாழ்ந்துவிடுவது சந்தோசம் பயக்கும் என்பது எமது கருத்து...நண்பரே..

  பதிலளிநீக்கு
 26. எல்லாருமே எல்லா நேரமும் எல்லா விஷயங்களையும் சரியா செய்யறதில்லையே.. சோ எல்லாருக்குமே தி.வா..கி.. தி.. வா தானே.. ரசித்துப் படித்தேன்.. குரல்களுடன் விளக்கம் அருமை..

  பதிலளிநீக்கு
 27. குடும்பத்தில் என்னுடைய வழிக்கே மற்றவர்கள் வர வேண்டும் என்ற மனப்போக்கையே பெரும்பாலானவர்கள் கடைபிடிக்கிறார்கள். இந்த போக்கை விட்டொழித்தால் வாழ்க்கை சிறப்பானதாகும்.

  பதிலளிநீக்கு
 28. முதல் முறையே வாழ்க்கையை நிர்ணயித்து வாழ சொல்லியிருக்கிறீர்கள்..வழிகள் நான்கும் நச்... ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க வாங்க...


  பதிலளிநீக்கு
 29. அருமையான கருத்து . திரும்பிப் பார்ப்போம் . திருந்தி வாழ்வோம்

  பதிலளிநீக்கு
 30. அருமையான பதிவு.
  இன்று ஒரு நாள் மட்டும் சொல்லும் சிந்தனைகள் எல்லாம் அருமை.
  மறுபடியும் எழுத வந்து நல்ல கருத்துக்களை சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 31. தி வா கி தி வா? என்ற கேள்வியுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையத்தில் இணைந்த உங்களுக்கு முதலில் நல்வரவு!

  'இன்று ஒருநாள் மட்டும்' என்ற தலைப்பில் கொடுத்திருக்கும் குறிப்புகள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியவை.

  இடைவெளி இல்லாமல் இணையத்தில் தொடர்ந்து வருக!

  பதிலளிநீக்கு
 32. திருத்திக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தால் அலுப்புகளும் சபலங்களும் திருத்திக் கொள்ள விடாது. புதிய தவறுகள் செய்ததாக பின்னால் தோன்றலாம்! உடைந்த பானையான நேற்றையும், மதில்மேல் பூனையான நாளையையும் மறந்து ப்ரெசென்ட் ஆக நினைத்து நிகழ்காலத்தில் மட்டும் வாழ வேண்டியதுதான்.

  திருத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் என்று கேட்கப் படும்போது கற்பனை ஓடுவதைத் தவிர்க்க முடியவில்லை!

  பதிலளிநீக்கு
 33. அருமையான பகிர்வு. மீண்டும் பதிவிட ஆரம்பித்ததற்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 34. நல்லா சொன்னீங்க போங்க..... என்ன இருந்தாலும் அந்த செய்ய மறந்த ஒன்றை நினைத்து பார்ப்பது ஒரு சுகம்தான் இல்லையா ?! இருக்கும் வாழ்கையில் எல்லாம் சரியாக நடந்தால் கடவுள் எதற்கு ?

  //நினைபதெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் எதுவும் இல்லை,

  நினைந்ததையே நினைத்திருந்தால் மனதில் அமைதியில்லை //

  பதிலளிநீக்கு
 35. அருமையான தங்களது ஆழ்ந்த தேடலின் பதிவு .திவா கி திவா இராகம் அருமை .இது என்ன இராகம்?

  பதிலளிநீக்கு
 36. நல்ல பிள்ளை அமையாததற்கு நாம என்னங்க பண்ண முடியும், அதற்கெல்லாம் தினா வானா போட்ட எப்பூடி...........??!!

  பதிலளிநீக்கு
 37. வணக்கம்
  திண்டுக்கல்தனபால்(அண்ணா)

  நீண்ட இடைவெளிக்குப் பின் சிந்திக்க தூண்டும் வகையில் நல்ல தலைப்பில்நல்ல கருத்தை வாசக உள்ளங்களுக்கு கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா, தொடர்ந்து எழுதுங்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 38. ஒரு நாள் என்ன, வாழ்நாள் முழுக்கப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள்.

  மிக்க நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 39. அருமையான பதிவு சார்...வாழ்க்கைக்கு நல்ல நண்பனாக வழிகாட்டியாக அமையும்.

  பதிலளிநீக்கு
 40. வாழ்க்கை வாழ்வதற்கே...
  இருந்தாலும் எல்லாருக்கும் திவா கி திவா சொல்வதில்தான் சந்தோஷம் இருப்பதாக தெரிகிறது தனபாலன்.

  பதிலளிநீக்கு
 41. விழிப்புணர்வோடு வாழ்வதே வாழ்க்கை...அதுக்கு தேவை திடமான திவா! அருமையான கருத்தினைப்பகிர்ந்ததுக்கு நன்றிகள் சார்!

  பதிலளிநீக்கு
 42. மிகவும் சிந்திக்க வைத்த அருமையான பதிவு. நன்றிகள்.

  பதிலளிநீக்கு

 43. வணக்கம்!

  தனபாலன் தந்த தமிழைச் சுவைத்தால்
  மனபாரம் தீரும் மடிந்தே! - இனமோங்க
  நல்ல நெறிகளை நாடிப் படைக்கின்ற
  வல்ல வலையிது வாழ்த்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு

  பதிலளிநீக்கு
 44. மிகவும் உபயோகமான பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 45. Hi! Brother!
  I'm a student!
  I'm new to blog.
  I'm also in Dindigul.

  Maximum % peoples again do the same thing after THI.VA VA KI. Include Me!

  பதிலளிநீக்கு
 46. நல்ல பதிவு. இன்று ஒரு நாள் மட்டும். . . யோசிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
 47. கருவரையில் இருந்து தொடங்கும் பாதையில் எல்லாமே புது அனுபவம்தான். இதில் எந்த ஒரு அனுபவத்தையும் நாம் திருப்பி பெற முடியாது என்ற போதிலும், மனித மனமானது எதையும் ஒப்பிட்டு நோக்கக் கூடியது. திரும்ப திரும்ப அசை போட்டு மகிழ்ச்சிக் காணக் கூடியது. அந்த வகையில் நல்லதொரு பதிவு இது. வாழ்த்துகள் தி.த.

  பதிலளிநீக்கு
 48. தனபாலன், குறளின் மீது உங்களுக்கு இருக்கும் பற்றுதல் வியப்பும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.

  அருமையான கருத்து உள்ளடங்கிய பதிவு..அனைவருக்கும் இப்படி வாழ்க்கையத் திரும்ப வாழும் ஆசை இருக்கும்.

  முக்கியமாக சுய அலசல் இருக்கும் அனைவருக்கும் இந்த எண்ணம் வாழ்வில் ஒருமுறையாவது வரும்;எனக்கும் வந்திருக்கிறது.

  ஆனால் உடனடியாக அதன் பொருளற்றதனம்-இர்ரெலவன்ஸ்- அறிவில் தோன்று புன்னகையை வரவழைக்கும்.

  எவருடைய வாழ்க்கயிலும் திரும்ப வாழ்வது சாத்தியமில்லை;இருக்கும் நாட்களை பொளுளுடையதாக மாற்றுவதே-யூஸ்ஃபுல்னஸ்- அறிவுடைமை.

  நல்ல பதிவுக்கு நன்றி.

  குறளை கை விடாதீர்கள்; அது என்றும் உங்களை வாழ்வில் கைவிடாது. :)))

  பதிலளிநீக்கு
 49. அருமையான கருத்து.

  'ஒரு செயலைச் செய்யும் முன்பே, அதனை ஆராய்ந்து செய்தால், தவறு நடக்க வாய்ப்புகள் குறைவு'

  எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
  எண்ணுவம் என்பது இழுக்கு.

  இன்னொன்றையும் சொல்ல வேண்டும்:

  தவறுகள் செய்யாத மனிதர்களே இல்லை.. ஆனால், அதனை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொள்ளாதவர்கள் மனிதர்களே இல்லை!!

  பதிலளிநீக்கு
 50. திவா கி திவா - எல்லோரும் சொல்லும் இந்த மந்திரம் தேவையற்றது என்று இதைவிட அழகாகச் சொல்ல முடியாது! நன்றி! 'இன்று ஒரு நாள் மட்டும்' - சொல்லியிருப்பதை முயற்சி செய்கிறேன்..

  பதிலளிநீக்கு
 51. தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

  பதிலளிநீக்கு
 52. (முதல்ல ஹிந்தியில ஏதோ சொல்றீங்கன்னு நினைச்சேன்..)

  நல்ல பதிவு. ஒவ்வொரு நாளும் வாழ்வதற்கே.

  பதிலளிநீக்கு
 53. திரும்ப வாழ்க்கை கிடைத்தால் திரும்ப வாழலாம் திருந்தி.நல்ல கருத்து/

  பதிலளிநீக்கு
 54. திவா கி திவா . ஏதோ ஹிந்தி வாக்கியம் என்று நினைத்தேன். Interesting .
  நன்றி

  பதிலளிநீக்கு
 55. அக கண்களை திறக்கும்
  திண்டுகல்லாரின்
  படைப்புக்கள்
  ஒவ்வொன்றும்
  முத்துக்கள்

  அதை வாழ்வில்
  கடைபிடிப்போருக்கு
  அவைகள் என்றும் நிரந்தர சொத்துக்கள்

  புன்னகை பூத்த முகம்

  அறிந்த செய்திகளை
  புதிய பரிமாணத்தில்
  புரிய வைக்கும் பாங்கு
  அற்புதம்.

  விஞ்ஞான அற்புதங்களை
  கருத்துக்களுடன் இணைக்கும்
  அதிசயம். அற்புதம்.

  பாராட்ட வார்த்தையில்லை
  என் மௌனமே பல கோடி
  வார்த்தைகளை சொல்லும்.

  இருப்பதை கொண்டு
  சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் வாழ்க்கைதான் மகிழ்ச்சியாக இருக்கும்
  என்பது என் அனுபவம்.

  அதிலும் அதை புரிந்துகொண்டு நம்முடன் அனுசரித்து போகும் மனைவி மக்களும் கிடைத்தால் அதைவிட பேரின்பம்
  இந்த உலகத்தில் இல்லை.

  திருப்தியில்லாதவன் எவ்வளவு பொருளாதாரத்தில்
  முன்னேறினாலும்
  அவன் உள்ளம் எப்போதும் இருள்சூழ்ந்துதான் கிடக்கும் என்பதுதான் உண்மை.

  பதிலளிநீக்கு
 56. சுவையாக வாழ்வியல் கட்டுரை. பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 57. வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி வருந்துதல் வீண். வாழப்போகும் வாழ்க்கையை செம்மைப்படுத்த நினைப்பதே மேல்.

  பதிலளிநீக்கு
 58. அருமையான பதிவு. தெளிவான கண்ணோட்டம். இப்படி ஒரு கோணம் மிக நன்று. வாழ்த்துகள். தவறை நினைந்து வருந்தாவிட்டாலும் அறியாமல் நேரும் தவறுகளையோ, அல்லது சரி என நினைத்துச் செய்யப்படும் தவறுகளையோ தவிர்க்க வேண்டும். அதற்கான முன்னெச்சரிக்கையை ஆண்டவன் அளிக்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 59. ragasiyam ragasiyamaagave irukkattum
  athai veliye "kasiya"vidakkoodaathu.
  appothu athu elloraiyum "vasiyam" seiyyum"
  sakthiyaaga maari vetriyai kodukkum.

  பதிலளிநீக்கு
 60. மிக அருமையான பதிவு.
  மீண்டும் படித்தேன்.
  இறுதியில் பகிர்ந்த நான்கும் நான்கு முத்துக்கள்.
  உறவுகள் மேம்பட சொல்லி இருப்பதை கடைபிடித்தால் நன்மையே!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.