மனித வாழ்வில் நழுவ விடக்கூடாதது எது...?
வணக்கம் நண்பர்களே... இன்று நாம் மனித வாழ்வில் நழுவ விடக் கூடாதது ஏது...? என்பதைப் பற்றி அலசுவோம்...
நண்பர்களே... இது எல்லோருக்கும் தெரிந்தது தான்... குறள் எண் 489-ல்
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்.
பொருள் : கிடைப்பதற்குரிய காலம் வந்து வாய்க்குமானால், அப்போதே நாம் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து வெற்றி பெற வேண்டும்...
உனது கண்கள் அழும்போது, எந்த விரலும் துடைக்காது... பிறரை நம்பி நீயும் நின்றால், வந்த பாரம் தீராது... இன்று வந்த ராஜாக்கள், நேற்று என்ன செய்தார்கள்...? தோல்வி வந்து தீண்டும் போது, தன்னை நம்பி வாழ்ந்தார்கள்... (முதல் வரி) : சில நேரம் சில பொழுது, சோதனை வரும் பொழுது, நம்பிக்கையால் மனம் உழுது, வானில் உன் பெயர் எழுது... (படம்) : கிச்சா வயசு 16 - இந்த மனித வாழ்வே ஒரு வாய்ப்பு தானே தோழர்களே... அதனால் நழுவ விடக் கூடாதது : வாய்ப்பு - சரி தானே...?
"ஐ... இந்தக் கதை எல்லாம் வேணாம்... உன் மனதிற்கும் வயது 16 தான்... ஹிஹி... மனதை எப்போதும் இளமையாக வைத்திருக்க வேண்டும்... அதைப்பற்றிப் பிறகு பேசலாம்... ஒருவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது...?"
வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தேடு... வாய்ப்பு கிடைக்கும் வரை தேடு... 24 மணி நேரமும் உறங்கும் போது, கனவில் கூட தேடு... நழுவ விடக் கூடாதது : வாய்ப்பு கிடைக்கும் வரை தேடுதல் - சரி தானே...?
"ஒரு சந்தேகம் : ஒருவருக்கு வாய்ப்பே வாய்க்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்வது...?"
சும்மா இருக்க வேண்டியது தான்... அடடா... "மனித வாழ்வில் மிகக் கொடுமையான காலம் எது...?” எந்த வழியும், எந்த வலியும் இல்லாமல் சும்மா இருக்கிற மாதிரி கொடுமை எதுவும் இல்லே... அதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே.... ஆனால் அந்தப் பக்குவம் வர வேண்டும் என்றால்... என்று ஒரு பதிவு எழுதி இருக்கலாமே... இந்த ஞான ரகசியம் பற்றித் தாயுமானவரையோ, அருணகிரிநாதரையோ அல்லது பட்டினத்தாரரையோ கேட்டுச் சொல்லி இருக்கலாம்... சரி... 24 மணி நேரமும், உறங்கும் போது... கனவில் கூட... ஏதோ ஒன்றைத் துரத்திக் கொண்டிருக்கிறோம்... அல்லது ஏதோ ஒன்று நம்மைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது. இப்படி இருந்தால் வாழ்க்கை எப்படிச் சுவை ஆகும்…? சும்மா ஒரு கதை சொல்கிறேன்... கேளு...
ஒரு காட்டில் ஒரு மனிதன் ஒரு மரத்தை ரம்பத்தை அறுத்துக் கொண்டே இருந்தான். மரம் விழுந்தபாடில்லை. இவனுடைய அறுக்கும் முயற்சியும் ஓய்ந்தபாடில்லை. அந்த வழியே வந்த ஒருவர், அவனைப்பார்த்துக் கேட்டார். "என்ன செய்து கொண்டிருக்கிறாய்...?" "மரத்தை ரம்பத்தால் வெகு நேரமாக அறுத்துக் கொண்டிருக்கிறேன்.. மரம் துண்டுபட மறுக்கிறது" என்று பதில் கூறினான். "மரத்தை வெகு நேரமாக ரம்பத்தால் அறுத்துக் கொண்டிருக்கிறாயே... இதை இடையில் நிறுத்தி விட்டு ரம்பத்தைக் கூர்மைப்படுத்த, சாணை பிடிக்க ஏதாவது நேரம் ஒதுக்கினாயா...?" வந்தவர் கேட்டார்... "இடையில் அறுப்பதை நிறுத்தி விட்டு ரம்பத்தைக் சீர்செய்யத் தொடங்கினால், அறுக்கும் வேலை தடைப்பட்டுப் போகும்… அறுக்கும் நேரம் தாமதமாகிப் போகும்… கூட ஆகிப் போகும்…” என்று புலம்ப ஆரம்பித்தான்... வந்தவர், அவனுக்குத் தகுந்த ஆலோசனையை வழங்கினார்...
இப்படித்தான் நம்மில் பலர் தொடர்ந்து ஒரு வேலையை, இடையில் சோர்வு வந்தாலும் இடைவிடாமல் செய்து கொண்டிருக்கிறோம். ரம்பத்தைக் கூர்மைப்படுத்தும் வேலையில் இறங்குவதேயில்லை. மரம் அறுப்பவன் அறுப்பதை நிறுத்தி விட்டு ரம்பத்தைக் கூர்மைப்படுத்த சில நிமிடங்களை ஒதுக்கி இருந்தால், பல மணி நேரம் இழுக்கும் வேலையை, ஒரு சில மணிகளில் முடித்திருக்கலாம்...
சரி... ரம்பத்தைக் கூர்மைப் படுத்தும் வேலை என்றால் என்ன...? வாழ்வின் முழு நேரத்தையும் வேலை, லட்சியம், தேடல் (மற்றவை - நீங்கள் நினைக்கும் அனைத்தும்), என்றே செலவழித்தால் மனம் கூர்மை இழந்து போகும். மரவெட்டி ரம்பத்தைக் கூர்மைப்படுத்துவதைப் போல நம் மனதுக்கும் அவ்வப்போது ஓய்வளித்து செழுமைப்படுத்த, கூர்மைப்படுத்த, பொழுதாக்க நிகழ்வுகளில் ஈடுபட வேண்டும்... ரம்பத்தைக் கூர்மைப்படுத்துவதைப் போல மனத்தைக் கூர்மைப்படுத்த நல்ல நூல்களை வாசிப்பது, நல்ல இசையை ரசிப்பது, நல்ல திரைப்படங்களைக் காண்பது, மரங்களை வளர்ப்பது / பராமரிப்பது, முடிந்தளவு சமூகப் பணிகளில் பங்கெடுத்துக் கொள்வது, சிறந்த சுற்றுலா இடங்களுக்குச் சென்று வருவது-(வருடம் ஒரு முறையேனும்-வீட்டில் அனைவரும்) போன்றவற்றைச் செய்யலாம். புதிய சூழல், புதிய இடம், புதிய சிந்தனை போன்றவை நம் மனத்தைக் கூர்மைப்படுத்தி மறுசக்தி உண்டாக்கி நமக்கு உத்வேகத்தைத் தரலாம். ரம்பத்தை அவ்வப்போது ச்சே... மனதை அவ்வப்போது கூர்மைப்படுத்த, செழுமைப்படுத்த முயல்வோமா...?
இதில் ஓய்வு என்பது : ஆர்வம், பொறுமை, தன்னம்பிக்கை, உறுதி, முயற்சி, பயிற்சி, மகிழ்ச்சி, சேவை, அமைதி, நிம்மதி - இப்படி அவரவர் நிலைக்கேற்ப மாறும்... என்னைப் பொறுத்தவரை...
நழுவ விடக் கூடாதது : வாய்ப்பு தான்... அந்த வாய்ப்பு கிடைக்கும் வரை அமைதியான தேடுதலை நழுவ விடவே கூடாது... - சரி தானே...?
Posts = 56, Comments = 3070, Followers = 344, e-mail subscribers = 451, g+ = 83, Indli = 167, Facebook = 126, Page Views = 98,600, Alexa = 314,000 (Approx. data-05/12/2012) நண்பர்களே... எனக்கும் இட மாற்றம் & தொழில் மாற்றம்... சிறிது நாள் கழித்துச் சந்திப்போம்...
ஓஹோ... விசயம் இது தானா...? இதுக்காக இப்படியா...? ஆக, எழுதுகிறதைச் சிறிது நாட்கள் நழுவ விடப்போறே... ம்... மறுபடியும் மனதிற்கும் ஒரு சந்தேகம்…
...ம்ஹீம்... இதற்கு மேல் தெரிந்து கொள்ள இங்கே அதில் மூன்றாவது மிகவும் முக்கியம் மனசே...! அதற்கு முன் பாட்டைக் கேளு...
உயிர் ஒன்று இல்லாமல், உடல் இங்கு நிலையாதே... உயிர் என்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதே... வாழ்க்கையின் வேர்களோ-மிக ரகசியமானது... ரகசியம் காண்பதோ மிக அவசியமானது... தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்... தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்... ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே... (படம் : துள்ளாத மனமும் துள்ளும்)
கிட்டத்தட்ட 14 மாதங்கள்-அனைவருக்கும் சொல்ல வேண்டிய ஒரு வார்த்தை "நன்றி"... விரைவில் பதிவுகள் மூலம் சந்திக்கலாம் / திண்டுக்கல் வரும் போது தொடர்பு (9944345233) கொள்ளவும்... எல்லாம் சிறப்பாக அமையும் என்ற மன உறுதியுடன், உங்களின் வாழ்த்துக்களும் உண்டு என்பதை நம்புகிறேன்... என்ன அன்பர்களே - சரி தானே...? நன்றிகள் பல...
நண்பர்களே... தங்களின் கருத்து என்ன ?

புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
இடமும்மும் மாறி தொழிலும் மாறிட்டா...
பதிலளிநீக்குபுதுத்தொழில் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.....
நழுவ விடக் கூடாத்தது வாய்ப்பு...
ம்ம்ம்ம்ம்ம் இதுவும் சரிதான் நான் ஓய்வு நேரத்தைத்தான் நழுவவ விடக் கூடாது என்பேன். ஓய்வு நேரம் கிடைப்பதுவும் வாய்ப்புத்தானே அதனால் ஓகே சொல்கிறேன்....
தேடல் மூலம் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை நன்கு நாம் பயன்படுத்திகொண்டால் வாழ்வில் சிறந்து விளங்கலாம்
பதிலளிநீக்குசமூகத்திற்கு பயன்தரும் நல்லதொரு ஆக்கம் !
தொடர வாழ்த்துகள்...
சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.. நழுவ விடக்கூடாதது வாய்ப்புதான்..
பதிலளிநீக்குஅதேபோல் ரம்பத்தை கூர்மைப்படுத்த நேரம் ஒதுக்குவதைப்போல... மனதை புத்துணர்வு பெறச் செய்ய தாங்கள் கூறும் வழிமுறைகளும் சரியானவை..
அற்புதமான பகிர்வுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி!
அத்தனை கருத்துகளும் உண்மை. நன்றி தனபாலன்.
பதிலளிநீக்கு‘வாய்ப்பு கிடைக்கும் வரை தேடுதலை நழுவவிடக்கூடாது.’ உண்மைதான். இதுவரை நல்ல பதிவுகளைத் தந்தமைக்கு நன்றி. நீங்களும் இரம்பத்தை கூர்மைப் படுத்தும் வேலையில் இறங்கப்போகிறீர்கள் என எண்ணுகிறேன். ஓய்வெடுத்து வந்து பதிவுகளில் வழக்கம்போல் மிளிர வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநல்ல தகவல்கள் !ஒரு நிமிடம் சிந்திக்க வைத்து விட்டீர்கள் .பழைய கழிதலும் ,புதியன புகுதலும் ,வாழ்க்கைக்கும் ,தொழிலுக்கும் நல்லவையாக அமைய எனது வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குஇந்த மனித வாழ்வே ஒரு வாய்ப்பு தானே
பதிலளிநீக்குஅதனால் நழுவ விடக் கூடாதது : வாய்ப்பு
நல்ல வாய்ப்புகளை அருமையாக எடுத்துரைத்த பகிர்வுகளுக்குப் பாராட்டுகள்..
வாய்ப்பு ஒருமுறைதான் வந்து கதவைத்தட்டும்னு சொல்வாங்க நாம தான் சரியான படி பயன்படுத்திக்கனும்.அதி தெளிவாக சொன்ன பகிர்வுக்கு நன்ரி
பதிலளிநீக்குஅருமையாக சொல்லி செல்கிறீர்கள் இதை படிக்கும் போது எனக்குள் எழுந்த சிந்தனை எழுதுவதை கூர் தீட்ட சிலகாலம் நல்ல நூல்களை படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ..உங்கள் சிந்தனை துளிகளும் அதற்கான கதையும் அருமையாக இருக்கிறது நல்ல தெளிவை ஏற்படுத்துகிறது தொடருங்கள் தோழா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநல்ல கருத்துக்கள்.
பதிலளிநீக்குநழுவ விடக்கூடாதது எது எனக்கேட்டு அதற்குரிய பதிலையும்
பதிலளிநீக்குநாசூக்காக எடுத்துரைத்த தங்களுக்கு
நன்றி.
நழுவ விடக்கூடாதே என்று எண்ணித்தான் நானும் தங்கள் செல்
நம்பர் தெரிந்த அடுத்த நிமிடம்
'நானும் அதையே தான்
நினைக்கிறேன்' என்று சொல்லிப்போனேன்.
தாங்கள் உதிர்த்த
அத்தனை வார்த்தைகளும்
அமுதம்.
சொல்லமுதம்.
சிறப்புடன் வாழ,
சுப்பு தாத்தாவின்
வாழ்த்துக்கள்.
சுப்பு தாத்தா.
புதிய தொழிலில் சிறப்புடன் மிளிர என் மனமார்ந்த வாழ்த்துகள்..!
பதிலளிநீக்குஆஹா....அந்த கதை பல சிந்தனைகளை கிளப்பி விடுகிறது சார் !! உங்களது எழுத்துக்களும், கருத்துக்களும் எங்களை நன்கு கூர் தீட்டுகிறது. உங்களது இடமாற்றமும், தொழில் மாற்றமும் வெற்றியடைய வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குபுதிய தொழில் சிறப்பாக அமைய வாழ்த்துகள், கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடமாட்டோம். அருமையான பாடத்தை கற்பித்து கொடுத்திருக்கிறீர்கள். கூடிய சீக்கிரம் மீண்டும் திருப்பி வரவும்.
பதிலளிநீக்குபுதியவை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅற்புதமான பகிர்வுக்கு நன்றி!
பதிவுலகில் ஆக்டிவ்வா இப்போது இருப்பது ஒரு சிலர் தான்..அதில் நீங்களும் ஒருவர்..நீங்களும் லீவில் போய்விட்டால், பதிவுலகை யார் காப்பாற்றுவது தனபாலன்?
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துகள்!
கூர் இல்லா ரம்பத்தை வைத்து மரம் அறுத்தவன் உவமானம் கருத்தில் தைக்கக் கூடியது. நழுவ விடக் கூடாதது வாய்ப்புதான் என்பதனை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறீர்கள். மாணிக்கவாசகர் இறைவனைப் பற்றிய வாய்ப்பினை
பதிலளிநீக்கு“ இடைவிடாது உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருளுவது இனியே.”
என்று திருவாசகத்தில் (537) கேட்கிறார்.
நழுவ விடக் கூடாதது : வாய்ப்பு தான்... அந்த வாய்ப்பு கிடைக்கும் வரை அமைதியான தேடுதலை நழுவ விடவே கூடாது... - சரி தானே...?
பதிலளிநீக்குஉண்மை
பயன்தரும் நல்ல பகிர்வு தனபாலன்
புதிய தொழில் சிறப்பாக அமைய வாழ்த்துகள்
தன்னம்பிக்கையும் , வாய்ப்பும் மிக அவசியம்..இது ரெண்டையும் விடாம இருந்தால் வெற்றி நிச்சயம். அருமையான பகிர்வு சகோ.. வாழ்த்துக்கள்..!
பதிலளிநீக்குநல்ல பதிவு வாழ்த்துக்கள் (இடம் மாறுவதற்கும் சேர்த்து)
பதிலளிநீக்கு//அடடா.. சும்மா இருப்பது.. கொடுமையான காலம்//
ஒரு படத்துல வடிவேல் மரத்துக்கீழே படுத்துட்டு ஒரு லெக்சரே அடிப்பார் இப்ப நினைத்தாலும் சிரித்துக்கொண்டே இருக்கலாம். (சும்மா இருப்பது நகைப்புக்குரிய விசயம் என்று இந்த காட்சி மூலம் புரிந்து கொண்டதால் குறிப்பிடுகிறேன்.)
பதிலளிநீக்குவாய்ப்பை நழுவ விடக்க கூடாது என்பதை மிக அழமாக விளக்கினீர் தனபால்! பதிவு அருமை! பாராட்டுக்கள்!
##தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்## நிதர்சனமான உண்மை எனக்கும் பிடித்தமான வரிகள் இப்பொழுதுதான் உங்கள் பதிவுகளை படிக்க ஆரப்பித்திருந்தேன். சீக்கிரம் மீண்டும் வருக வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், புத்தியை கூர்மையாக்க நேரத்தையும் ஒதுக்கி - அருமையான யோசனைகள்.
பதிலளிநீக்குகொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுவதும் இதற்காகத்தானோ?
புதிய இடம், புதிய வேலை இறவன் அருளால் எல்லாம் நல்லபடியே நடக்கப் பிரார்த்திக்கிறேன்.
மனித வாழ்வில் நழுவ விடக் கூடாதது வாய்ப்பு தான் என்பது மிகச் சரி சகோ.அருமையான பகிர்வு.
பதிலளிநீக்குI hope you will come back again soon.
பதிலளிநீக்குநல்ல கருத்துக்கள் !
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் !
நழுவ விடக்கூடாதது வாய்ப்பு....நூற்றுக்கு நூறு சரி...அருமையாக சொல்லி உள்ளீர்கள்...நன்றி
பதிலளிநீக்குஅற்புதமான கருத்துக்கள்.நன்றி!
பதிலளிநீக்குஎல்லோரோட பதிவுலும் உங்க கருத்துரையை பார்க்க முடியும். ஊக்கப்படுத்தி பாராட்டி வருகிறீர்கள். புதிய சூழலுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் எழுத்துக்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
என்னைப்போல் அல்லாமல் நல்ல பதிவுகளை தந்த நீங்களும் விடுப்பிலா ? சரி சரி தொழிலையும் பார்க்கனுமே வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி காண வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஆவலுடன் உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
மனதை கூர்மைபடுத்த சொன்ன ஆலோசனைகள் சரிதான். நானும் அப்படித்தான். சுற்றுலாத்தான் என் சாய்ஸ்
பதிலளிநீக்குஉங்களின் வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! விரைந்து வருவீர்கள் இன்னும் சிறப்பான பதிவுகளை தருவீர்கள் என்ற நம்பிக்கையை நான் நழுவ விட மாட்டேன்! நல்ல பதிவு! வாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்குஅருமையான பதிவு..
பதிலளிநீக்குஉங்களுடைய Photoshop யினை Activate செய்ய எவ்வாறு Adobe Photoshop CS5.1 யினை Crack செய்து Activate செய்வது எனும் Link ஐ click செய்யுங்கள்
அனைத்துமே நல்ல கருத்துகள். விரைவில் வந்து மீண்டும் எழுத துவங்குங்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தனபாலன், வென்று வருக, மீண்டும் வருக
பதிலளிநீக்குஒரு இடுகையில் எவ்வளவு விஷயங்கள்! சூப்பர்! :-)
பதிலளிநீக்குகாற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று சும்மாவா சொன்னார்கள் நழுவ விடக்கூடாதது வாய்ப்பு அருமையான பதிவு தொடருங்கள்
பதிலளிநீக்குபதிவு மிகவும் அருமை.
பதிலளிநீக்குபுதிய இடமும் புதிய தொழிலும் உங்களை மென் மேலும் உயர்த்தட்டும். வாழ்த்துக்கள் தனபாலன் ஐயா.
சிறப்பான கருத்துகள் தனபாலன். விரைவில் மீண்டும் பதிவுலகில் உங்களைக் காணும் விருப்பத்தோடு.....
பதிலளிநீக்குஇந்த பதிவை நழுவ விட்டுருப்பேன் மின்னஞ்சலில் பார்க்கமால் இருந்தால் ,,,
பதிலளிநீக்குஉண்மைதான் சரியான வாய்ப்பென்பது எப்போதாவதுதானே கிடைக்கிறது.அதனையும் நழுவ விட்டால்.....எப்போதும்போல சிறந்த பதிவு !
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு! தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும் - மனம் புத்துணர்வு அடையவும் நேரம் ஒதுக்க்குவது அவசியம்தான்!" நன்றி!
பதிலளிநீக்குஅற்புதமான கருத்துக்கள்.வாழ்த்துக்கள்விரைவிலே பதிவுலகம் வர வாழ்த்துகிறேன்...16
பதிலளிநீக்குநல்ல கருத்துக்கள்.அழகான குட்டிக்கதை
பதிலளிநீக்குத.ம.17.
புதிய தொழிலிற்கு இனிய நல் வாழ்த்து.
பதிலளிநீக்குபதிவு சிறப்பு வாழ்த்துடன் நல்லதிஷ்டமும் கிட்டட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
வாழ்த்துக்கள் தனபாலன் அருமையான பதிவு . இதனை வாசிக்கும் 'வாய்ப்பு'
பதிலளிநீக்குகிடைத்தமைக்காக மகிழ்கிறேன்
கெழுப்புரங்க சார், புத்தாண்டு வரும் நேரத்தில் நல்ல தகவல்
பதிலளிநீக்குசிறப்பானதொரு பகிர்வு! நன்றி! தொடருங்கள் தோழரே!
பதிலளிநீக்குநல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க.
பதிலளிநீக்குஉண்மைதான் வாழ்வில் எந்த நல்ல விஷயங்களையும் நழுவ விட்டிடக்கூடாது:).
மலை போலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கி விடும் வரிகளும், வாழும் வரை போராடு வரிகளும் நினைவுக்கு வருகின்றன முதல் சில பாராக்கள் படிக்கும்போது.
பதிலளிநீக்குசீக்கிரம் வலையுலகம் திரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். நடனசபாபதி சார் கமெண்ட் ரசிக்க வைத்தது. ஆமோதிக்கிறேன்.
Very good thoughts na. Wishing u all the best the future has to offer.
பதிலளிநீக்குநழுவ விட்டுவிடாமல் நானும் ஓடோடிவந்து படித்துவிட்டேன்..:)
பதிலளிநீக்குஅருமையான பதிவு. வாழ்த்துக்கள்!
இடையிடையே
பதிலளிநீக்குஇடைவெளியிருந்தால்
இனிதென
இனிப்பாயுரைத்தீர்
சமூகத்திற்கு பயன்தரும் நல்லதொரு ஆக்கம் !நன்றி!
பதிலளிநீக்குsuperb sir அட்டகாசமான பதிவு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅருமையான ரம்பத்தைக் கூர் தீட்டி எழுதிய பதிவுக்கு நன்றி.
பதிலளிநீக்குஉங்கள் உதாரணங்களும் அதற்கேற்ற பாடல்களும் எல்லாமும் அருமை.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
உங்கள் புதிய செயற்பா டுயரட்டும்!
எங்கள் இனியநல் வாழ்த்துக்கள்! - எங்கே
இருப்பினும் உன்னிதயம் எண்ணும் வலையை!
கரும்பினும் நற்சுவை கண்டு!
கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
kambane2007@yahoo.fr
பதிலளிநீக்குவணக்கம்!
நான்பெற்ற இன்னட்பு! நண்பா் தனபாலா்!
தேன்பெற்ற தீஞ்சுவை தீட்டுபவா்! - ஊனுருக
ஓங்கும் கருத்தெழுதும் உங்கள் வரவுக்கே
ஏங்கும் எனது வலை
கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
kambane2007@yahoo.fr
மரத்தினை அறுக்கும் கதை அருமை. நம்மில் நிறையபேர் இப்படித்தான்... புத்தியை தீட்டாமல்..
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குதனபால் (அண்ணா)
ஒவ்வெரு பந்தியையும் வாசிக்கும் போது ஒவ்வெரு விதமான கருத்துக்களை எனக்கு தருகிறது எடுத்துக்காட்டாக
ரம்பத்தை கூர்மையாக்குவது போல மனினும் தனது அறிவை கூர்மையாக்க வேண்டும் என்பதை அழகாக சொல்லிவிட்டிர்கள் இதை விட வேறு என்ன தத்துவம் இருக்கா? இருக்கவே முடியாது,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல தகவல்கள் தொடருங்கள்
பதிலளிநீக்குஎன் வலைத்தளத்தை சுசீலா அம்மா வலைச்சரத்தில் பகிர்ந்ததை எனக்கு சொல்லியதற்கு நன்றி தனபாலன்.
பதிலளிநீக்குநான் ஊரில் இல்லை. நேற்றுத்தான் வந்தேன்.
பணி மாற்றம், இடமாற்றம் எல்லாம் செட்டில் ஆகி மறுபடியும் புத்துணர்வுடன் எழுத வாருங்கள்.
பதிலளிநீக்குபுதிய வேலைக்கு வாழ்த்துக்கள்.
பதிவு வழக்கம் போல் சிறப்பு பாடல் பகிர்வு அருமை.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.....
பதிலளிநீக்குபடித்தேன்...மகிழ்ந்தேன்
பதிலளிநீக்கு-வீரா
தங்களின்இந்தப் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். வாருங்கள் ஐயா!http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_20.html நன்றி!-காரஞ்சன்(சேஷ்)
பதிலளிநீக்குநம்பிக்கையூட்டும் வார்த்தைகள் அதோடு கூடிய மனதில் பதியவைக்கும் திரைப்படப்பாடல் வரிகளோடு ஒப்புமைப்படுத்தி எழுதும் எழுத்துக்கள் சபாஷ் போட வைக்கின்றன.
பதிலளிநீக்குஇனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குரம்பம் சரியான எடுத்துக்காட்டு சகோதரா...
பதிலளிநீக்குபொறுமையாகப் படித்து முடித்தேன் நன்றி
அடுத்த வருடத்திலாவது பதிவுலகத்தில் முழுமையாகச் சந்திப்போம்
தங்களை விழாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇனிய ஆங்கில புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குகவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
01.01.2013
kambane2007@yahoo.fr
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இந்த ஆண்டு தங்களுக்கு மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் குறைவில்லாமல் தரட்டும் !
பதிலளிநீக்குwhere are you?? are you ok?
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!!
பதிலளிநீக்குவாய்ப்பு கிடைக்கும் வரை தேடுதலை நழுவவிடக்கூடாது.’ உண்மைதான். மீண்டும் உங்களை விரைவில் பதிவுலகில் சந்திக்கவேண்டும். உங்களின் அனைத்து புது முயற்சிகளும் வெற்றியடைய உங்களுடைய உழைப்பும், இறைவனின் அருளும் என்றும் உங்களுடன் இருக்க வேண்டிகொள்கிறேன்.
வாய்ப்பு, அது கிடைக்கும் வரை அதை தேடுதல் இதை நழுவவிடக்கூடாது என்று மிக அழகாக சொல்லியிருக்கீங்க தனபால், வாழ்த்துகள் நல்லதொரு பதிவிற்கு.
பதிலளிநீக்குஇதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு//தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்//
பதிலளிநீக்குதேடல் என்பதே பசி.. அருமையான கருத்துகளை நயம்பட உரைத்த உங்களுக்கு எனது வாழ்த்துகள்
தனபாலன் சார் உங்களை எங்குமே பார்க்க முடியவில்லை.நலம் தானே!விரைவில் திரும்பி வந்து பதிவிடுங்கள்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குவரும் வாய்ப்பை நழுவ விடாமல் இருப்போம் என்பதை அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.
நட்புடன்,
ராஜி
@rajalakshmi paramasivam
பதிலளிநீக்குரொம்ப நாளைக்கு பிறகு இப்போது தான் நேரம் கிடைத்தது வரும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது தான் மிக அருமையான பகிர்வு.
இடம் மாற்றம் தொழில் மாற்றம் ,
எல்லாம் நல்லபடியாக முடிந்து மீண்டும் இங்கு வந்து பயனுள்ள பதிவுகளை பதிய வாழ்த்துக்கள்.
http://samaiyalattakaasam.blogspot.com/2013/01/blog-post_5444.html
சமையல் போட்டி வெற்றியாளர்கள்.
பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் நலமா?
பதிலளிநீக்குஉங்கள் உயர் படிப்பு, பணி மாற்றம் எல்லாம் எப்படி போகிறது.
உங்கள் பின்னூட்டங்கள் பார்த்து நீங்கள் பதிவுலகத்திற்கு வந்து விட்டீர்கள் என்று தெரிந்து கொண்டேன்.
ரசித்தேன்.
பதிலளிநீக்குமிகமிகச்சரி.
பதிலளிநீக்குவணக்கம் தனபாலன் ஐயா.
பதிலளிநீக்குநலமா....?
ரொம்ப நாட்களுக்குப் பிறகு கும்மாச்சி அண்ணா இடுகையில் உங்களைக் கண்டேன். மகிழ்ந்தேன்.
அருமையாக குறளுக்கு விளக்கம் கொடுப்பீர்கள். திரும்பவும் உங்கள் பதிவுகளைக் காண ஆவலுடன் இருக்கிறேன்.
நன்றி.
தேடலும்
பதிலளிநீக்குகிடைக்கும் வாய்ப்பைப்
முறையாகப் பயன்படுத்தலும்
அழகாகச் சொன்னீர்கள்
வாய்ப்பை இறுகப் பிடித்தல் வாசி தான: இனிய வாழ்த்து.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
நன்று
பதிலளிநீக்குபல ப்ளாக்களின் பின்னூட்டங்களில் கண்ட உங்களை,உங்களின் ப்ளாக்கில் இன்று தான் கண்டேன் 'இந்த மனித வாழ்வே ஒரு வாய்ப்பு தானே தோழர்களே' மிக அருமையான கருத்தாளமிக்க கருத்து என்றால் மிகையல்ல. நன்றி நண்பரே
பதிலளிநீக்குதனபாலன் சார், ரெண்டு மாசம் ஆச்சு...... பதிவை போடுங்க சார் !
பதிலளிநீக்குஉங்கள் வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் தனபாலன் சார்.
பதிலளிநீக்குபதிவு இன்னும் படிக்கவில்லை.
மீண்டும் வந்து படித்துவிட்டு கருத்து எழுதுகிறேன்.
அறியாத தகவல் பகிர்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குவணக்கம் தனபாலன் ஐயா.
பதிலளிநீக்குஉங்களின் இடுகை ஒன்று என் டாஸ்போர்டில் தெரிந்தது.
ஆனால் இங்கே வந்து தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
வலையில் ஏதெனும் பிரட்சனையா...?
இல்லை எனக்கு மட்டும் தான் தெரியவில்லையா...?
நட்புடன் அருணா
ஒவ்வொரு நொடியையும் தவறே நேராமல் விழிப்புணர்வோடு வாழ்வதே வாழ்க்கை...
பதிலளிநீக்குஎண்ணித்துணிக துணிவுடன் ..!
உங்கள் எழுத்தைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு இன்றுதான் கிடைத்தது அருமையாக எழுதுகிறீர்கல் தனபாலன்
பதிலளிநீக்குவாழ்க்கையில் நழுவ விடக்கூடாதது வாய்ப்பும் நேரமும் இரண்டும் போனால் திரும்ப வராது
அருமையான கட்டுரை . தேடுதல் நம் கடமை .கொடுப்பது இறைவனது அருள். 'ஒட்டகத்தை கட்டு இறைவனிடன் பாதுகாப்பு வேண்டு ' நபி மொழி.
பதிலளிநீக்கு