மை...

அனைவருக்கும் வணக்கம்... அதிகார வைப்பு முறை கொண்டு திருக்குறளில் அறிய வேண்டியவை பல உள்ளன... அவற்றில் "மை" மட்டும்... ஆமை என உச்சரிப்பில் முடியும் பொச்சாவாமையை, சோர்வு இல்லாமையாக இருக்க வேண்டும் என்பதை எழுதிய சில முந்தைய பதிவுகள் :மறதி மரணத்திற்குச் சமம்...← →என்னது மறதியா...?
மிதப்பின்மை (1)← →மிதப்பின்மை (2)


திருக்குறள் அதிகாரங்களில் வளர்க்கவேண்டிய ஆமைகள் எத்தனை...? உடைமைகளாக இருந்தாக வேண்டியவை எவை...? இவற்றைத் தவிர மற்ற மைகளில் தேவையான முதன்மை எவையெவை...? :
ஆமை = அறம்: 10: 15.பிறனில் விழையாமை, 17.அழுக்காறாமை, 18.வெஃகாமை, 19.புறங்கூறாமை, 20.பயனில சொல்லாமை, 29.கள்ளாமை, 31.வெகுளாமை, 32.இன்னாசெய்யாமை, 33.கொல்லாமை, 34.நிலையாமை பொருள்: 8: 41.கல்லாமை, 46.சிற்றினஞ்சேராமை, 54.பொச்சாவாமை, 57.வெருவந்தசெய்யாமை, 63.இடுக்கணழியாமை, 73.அவையஞ்சாமை, 90.பெரியாரைப் பிழையாமை, (பெரியார்ப் பிழையாமை - காலிங்கர்) 93.கள்ளுண்ணாமை இன்பம்: 1: 116.பிரிவாற்றாமை

உடைமை = அறம்: 5: 8.அன்புடைமை, 13.அடக்கமுடைமை, 14.ஒழுக்கமுடைமை, 16.பொறையுடைமை, 25.அருளுடைமை பொருள்: 5: 43.அறிவுடைமை, 60.ஊக்கமுடைமை, 62.ஆள்வினையுடைமை, 100.பண்புடைமை, 102.நாணுடைமை

மை = அறம்: 3: 3.நீத்தார் பெருமை, 12.நடுவு நிலைமை, 30.வாய்மை பொருள்: 12: 55.செங்கோன்மை, 56.கொடுங்கோன்மை, 61.மடியின்மை, 65.சொல்வன்மை, 66.வினைத்தூய்மை, 81.பழைமை, 84.பேதைமை, 85.புல்லறிவாண்மை, 96.குடிமை (குடி - மணக்குடவர்), 98.பெருமை, 99.சான்றாண்மை, 108.கயமை

கல்வியின் சிறப்பை கல்வி அதிகாரத்தில் சொல்லி விடும் தாத்தா, மேலும் எழுத வேண்டி உள்ளது; ஆனால் // சிலர் தான் படிக்க வேண்டும், அதுவும் இதுவரை தான் படிக்க வேண்டும்; சிலர் படிக்காமல் 'தொழில்களை' மட்டும் செய்ய வேண்டும்' // என்று, இந்தக்கால கயமை-யே மூச்சாகக் கொண்ட தலைமைகள் போல் அன்றே சிலர் இருந்திருக்கலாம்... இதனால் அனைத்து மக்களும் கல்லாமற்போனால் வரும் தீமைகளைப் பற்றி, ஆமையில் 41.கல்லாமை-யில் சொல்லி விடுகிறார்; அதோடு முடிக்காமல், 'சொல்வதெல்லாம் எதுவாயினும் நல்லவை கேள்' எனும் கேள்வி அதிகாரத்தில், கல்வி வாயிலாக அறிவைப் பெறும் முயற்சியை விட, கேள்வி வாயிலாக அறிவை எளிதிலும் கூடுதலாகவும் பெற முடியும் என்பதையும் விளக்குவார்... கற்றோர், அனைத்து துறையையும் கற்க முடியாதோர், இருவகையினருமே கேள்வியறிவினை பெற்றுப் பயன் பெற வேண்டும் என்கிறார்... கல்வி, கல்லாமை, கேள்வி, இவற்றின் பின்புதான் றிவுடைமை பெற முடியும்...! இவ்வாறு ஒவ்வொரு உடைமையும் சிறப்பே...! படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு; பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு...!

கேள்விற்குப் பதில் வேள்வி நடப்பதை 58.ண்ணோட்டம் கண்ட தாத்தா, 90.பெரியாரைப் பிழையாமை, 93.கள்ளுண்ணாமை, 94.சூது, 95.மருந்து, என தொடரும்... காமத்துப்பாலில் ஒரே ஒரு ஆமை : பிரிவாற்றாமை; அனைத்து மையையும் விட, தனக்கு தானே ஆறுதல் அடைவது கடினம் என்பதை உணர்த்தும்... காமத்துப்பாலுக்கு முன், 'கடவுள் வாழ்த்து' ஆரம்பித்து 'கயமை' என்று அதிகாரம் முடிவடைகிறது; இந்த 108-யை அறிந்து தெரிந்து புரிந்து கொண்டால், தினம் தினம் மனதில் ருளுடைமையுடன் ஒரு ஆமை தோன்றும்; அது மனித வாழ்வின் நிலையாமை...! இதுவே ஆமை என முடித்த அறம் அதிகாரங்களில் முடிவு என்றாலும் முதன்மை...!

மையில் உள்ள 55, 56, ஆட்சியைப் பற்றி →இணைத்தே← எழுதியுள்ளேன்... அடுத்ததாக வரும் 57-ல், →இவறல்← போல் ஒரு நாட்டின் கொடுங்கோலன் எவ்வாறு வெங்கோலனாக மாறக்கூடாது என்பதையும், மாறினவனைச் சூழ்ந்து கொண்டு எப்பொழுதும் குடிமக்களைத் திடுக்கிடும்படியான செயல்களையே செய்யும் கூட்டத்தை, இந்த பூமியில் என்னவாகச் சித்தரிக்கிறார் தாத்தா என்பதையும், மை 57-ல் விளக்கியுள்ளார்... இன்றைக்கு 84, 85, 108, எல்லாம், (வேல் கொண்டும்) ஆட்டம் போடுவது சமூக சீரழிவு...

எந்தக் காலத்திற்கும், எந்நாட்டிற்கும், எத்தகைய அரசிற்கும், அரசு இயல் குறள்களும்... இல்லை அதிகாரங்களின் பெயர்கள் கூட அறநெறிப்படுத்தும்... ஆனால், ↜அன்றைக்கு-இன்றைக்கு↝ / ↶அவரா?-இவரா?↷ / ↺அதுவா?-இதுவா?↻ என்று பல அவசியமற்ற எண்ணங்கள் பெருகி, இன்றைக்கு எதற்கும் உதவாத பொய்மை கதை கட்டுரைகளால், பல காலமாகவே சிலர் செய்யும் அடிமைத்தனத்திலிருந்து நாடு மீளவில்லை...! பேதைமையால் புல்லறிவாண்மை கூடி, கயமைத்தனமான செயல்களால் தலைமைகளின் உயர்வு கண்டு, அதுவே சா-ணக்கிய மேன்மை என நேர்மை இழந்தவர்கள், அறியாமை மக்களின் படித்த மூத்த அடிமை ஆவர்... பார்ப்பவன் குருடனடி, படிப்பவன் மூடனடி... உள்ளதைச் சொல்பவனே உலகத்தில் பித்தனடி... பேதைமையோ வளருதடி, புல்லறிவோ சிறக்குதடி... கயமையை மேன்மையென்று, கல்லாமை காட்டுதடி...! மனிதன் இருக்கின்றானா...? - இறைவன் கேட்கிறான் – அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்...? எங்கே வாழ்கிறான்...? நான் குறள்களைக் கொடுத்தேன்; அவன் தொடக்கூடவில்லை... மத மடமை தீர்க்கவும் அவன் துணை வரவில்லை...!

வாய்மை, மெய்ம்மை, உண்மை எனவும் பல குறள்கள் உள்ளன... வாயால் சொல்வதினால் வாய்மை; உடம்பால் (மெய்யால்) நடந்து காட்டுவதினால் மெய்ம்மை; உள்ளத்தில் இருப்பதினால் உண்மை... இதன் மூன்று பொருளுக்கும் இன்றைய தமிழ் : Truth...! ஆம்; Verified...! அறம் மறந்த ஒரு கூட்டம் வாயால் சுடுவது வாய்மை... செயலில் எதுவுமே நடக்காமல் பல வேடங்கள் போட்டு உடலாலும் ஊரை ஏமாத்திட்டு திரிவது மெய்ம்மை... மற்றபடி உண்மை ஊஞ்சலாடுகிறது...!

ஆமைகளை அறிவுடைமையுடன் அறிந்து, உடைமைகளை ஊக்கமுடைமையுடன் தெரிந்து, மைகளை பண்புடைமையுடன் புரிந்து கொண்டால், தாய்மைக்கு அடுத்து ஆண்மை சிறக்கும்...!
நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. நண்பரே! உங்களுக்கு யார் மை போட்டது?
  ஆற்றாமையை வெளிப்படுத்திய விதம் அருமை.
  இறுதி வரி இனிமை!

  பதிலளிநீக்கு
 2. அருமை ஜி பிரமிப்பாக இருக்கிறது தங்களது ஆய்வு

  தொடரட்டும் இன்னும்..

  பதிலளிநீக்கு
 3. ///அடிமை தனத்தில் இருந்து நாடு மீளவில்லை..../// நாடு மீண்டது ஆனால் என்ன செய்ய அடிமைகளாக இருந்து பழகியவர்களின் வாரிசுகளும் இன்றும் அடிமைகளாகவே இருக்கின்றதது அதனால் நாடு மீண்டும் அடிமைத்தனத்தில் மாட்டிக் கொண்டது

  பதிலளிநீக்கு
 4. நீங்களும் திருக்குறள் மூலம் எங்களை எல்லாம் மை வைத்து இழுத்து விட்டீர்கள் . வாழ்க

  பதிலளிநீக்கு
 5. பிறப்பில் ஏற்றத் தாழ்வின்றி அனைவரும் கற்கவேண்டும் என்று கல்லாமையில் பாடிய வள்ளுவரையும்,
  வள்ளுவச் சீடராம் திருக்குறளாரையும் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 6. ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும். திருவள்ளுவர் காலத்து ஒழுக்கம். சோழர் காலத்து ஒழுக்கம் (இடையே ஆயிரம் ஆண்டுகள்) விஜய நகர பேரரசு காலத்து ஒழுக்கம் (இடையே 500 வருடங்கள்) ஆங்கிலேயர் காலத்து ஒழுக்கம் ( மீண்டும் 500 வருடங்கள்) இன்று ஒழுக்கம் தன்மை (இதுவும் மை தான்) மாறியுள்ளதே. அதே கள்ளுண்ணாமை (இந்த மை யை கணக்கிட்டுப் பாருங்கள்) இது மது ஆலை தொழில் அதிபர்கள் தானே நாட்டை ஆளத் துடிப்பவர்கள். இந்தப் பக்கம் வந்து எங்களைப் போன்ற எளிய தமிழ்ப்பிள்ளைகளின் நேயர் விருப்பத்தை எழுதுங்களேன்.

  பதிலளிநீக்கு
 7. மை....என்பதை இதுவரை எதிர்மறையில்தான் பார்த்துள்ளேன். இப்பதிவு மூலமாக நேர்மறை சிந்தனையோடு அணுகும் எண்ணம் ஏற்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. எல்லா மைகளையும் சேர்த்து அலசியவிதம் சி றப்பு

  பதிலளிநீக்கு
 9. கொடுங்கோலர்களை பற்றிய நாட்டு நடப்பை ஐயன் அன்றே பாடியதை...இன்றைக்கு பொருத்தமாக வெளிப்படுத்தியமைக்கு பெருமையும் நன்றியும்......

  பதிலளிநீக்கு
 10. இனிமையும் அருமையுமாக இருக்கும் தங்கள் பதிவிற்கு இனிய நன்றி!!

  பதிலளிநீக்கு
 11. யாரங்கே..
  நம்ம வலை சித்தருக்கு ஒரு குறளின் சித்தர் என்ற
  முனைவர் பட்டம்
  உடனே அனுப்பு.....

  பதிலளிநீக்கு
 12. அருமை டிடி!! எல்லா மைகளும் சிறப்பாகச் சொல்லியிருக்கீங்க. கண்ணுக்கு மை அழகு என்று பாடல் ஆனால் நம்ம தாத்தா எத்தனை மை களைச் சொல்லி அழகும் அறிவும் ஊட்டியிருக்கிறார்!

  கீதா

  பதிலளிநீக்கு
 13. '''குரல் கொடுப்பதாக" எண்ணிக்கொண்டு,

  "குறள்"களைக் கொடுப்பதைத் தொடருங்கள்......

  தங்களது திருக்குறள் குறித்தான ஆய்வுப்பணிக்கு
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. ஆகா ... குறளும், உங்கள் குரலும் இனிமை .... அருமை ... என்றென்றும் தமிழுக்கோ பெருமை !!!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.