மறைமொழி...
திருக்குறள் அதிகாரங்கள் மட்டும்...!
மேலும் மறைமொழி பற்றிப் பேசியதின் ஒரு சிறு பகுதி :
"ஏனய்யா, உனக்கும் அருணாசலத்திற்கும் இப்ப 79 இல்ல...?" (பொருள் : "ஏன் நட்பு இல்லை...?" அதிகாரம் 79.நட்பு) "அது அவன் திடீரென்று 93, 94-க்குப் போய் விட்டான்; (பொருள் : "குடி, சூது-ன்னு போய் விட்டான்; அதிகாரம் 93.கள்ளுண்ணாமை, 94.சூது) "அதனாலே 82 என்று நினைத்து சும்மாயிருந்து விட்டேன்..." (அதிகாரம் 82.தீநட்பு) "இருந்தாலும் இப்படிச் செய்யலாமா ஐயா...?" - "என்ன செய்ய? என் 97 போய் விடாதா...? (அதிகாரம் 97.மானம்)
(அ - அறத்துப்பால் | பொ - பொருட்பால் | கா - காமத்துப்பால்)
கை : அ2⊕பொ5⊕கா1 = 5.இல்வாழ்க்கை, 23.ஈகை ⊕ 47.தெரிந்துசெயல்வகை, 68.வினைசெயல்வகை, 76.பொருள்செயல்வகை, 89.உட்பகை, 103.குடிசெயல்வகை ⊕ 133.ஊடல் உவகை
சி : பொ = 39.இறைமாட்சி, 77.படைமாட்சி, 87.பகைமாட்சி
து : அ1⊕பொ3 = 1.கடவுள் வாழ்த்து...? / ...? (#) ⊕ 69.தூது, 94.சூது, 95.மருந்து
பு : அ1⊕பொ3 = 2.வான்சிறப்பு ⊕ 79. நட்பு, 82. தீநட்பு, 83. கூடாநட்பு
ம் : அ4⊕பொ5⊕+கா1 = 6.வாழ்க்கைத்துணைநலம், 21.தீவினையச்சம், 27.தவம், 28.கூடாவொழுக்கம் ⊕ 58.கண்ணோட்டம், 67.வினைத்திட்பம், 97.மானம், 101.நன்றியில்செல்வம், 107.இரவச்சம் ⊕ 132.புலவிநுணுக்கம்
வி : பொ2⊕+கா1 = 40.கல்வி, 42.கேள்வி, 131.புலவி
வு : அ1⊕பொ3 = 35. துறவு ⊕ 104.உழவு, 105.நல்குரவு, 106.இரவு
ழ் : அ = 24.புகழ், 38.ஊழ்
று, சு, டு, ண், கு, ர், தி : அ1⊕பொ5⊕கா1 = 7. மக்கட்பேறு...? / புதல்வரைப்பெறுதல்...? (#) ⊕ 64.அமைச்சு, 74.நாடு, 75.அரண், 78.படைச்செருக்கு, 92.வரைவின்மகளிர் ⊕ 120.தனிப்படர்மிகுதி
மறைமொழியாக எண்களால் பேசின காலம் அன்றைக்கு...! இன்றைக்கு மேற்கண்ட அதிகாரத்தின் முடிவு எழுத்தைக் கவனத்தில் கொண்டு, சில 'மை'களையும் சேர்த்துக்கொண்டு, எண்களாக எழுதாமல் எழுத்துக்களாகவே 'எண்'ணி எழுதின ஒரு முயற்சி:
வாழ்க்கைத்துணை நலத்தோடு ஆரம்பிக்கும் இல்வாழ்க்கை, ஈகையோடு இரக்கத்தோடு வாழ்ந்து முடிந்தால் கிடைப்பது புகழ்...! இல்லையேல் விளையாடுவது ஊழ்...! இதனை ஆள்வினையுடைமையுடன் வெற்றி கொண்டாலும், அச்சம் கொள்ள வேண்டியது - தீவினையச்சம், இரவச்சம்... நட்பு எனப்படுவது வான்சிறப்பு போல ஆக வேண்டும் என்றால், தவிர்க்க வேண்டியது தீநட்பு மற்றும் கூடாநட்பு...! இவ்விரு நட்பைத் தவிர்க்காமல் தொடர்ந்தால் உட்பகை உண்டாகலாம்...! இதனால் வாழ்வில் வரைவின்மகளிரோ அல்லது கள் உட்கொண்டு, சூது என்பதில் விழுந்து, உடலுக்கும் மனதிற்கும் எவ்வித மருந்தும் பயனளிக்காமல், குடி கெட்டு, மானம் இழந்து, நீத்தார் பெருமையும் அற்றுப் போகும்...! கூடாவொழுக்கம் இருந்தாலே அது ஒரு தவம்; கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை புரிந்தாலே அது ஒரு இல்லறம் சிறக்கும் துறவு அறம்...! இறைமாட்சி பொருந்திய தலைமைக்கு, கல்வி, கேள்வி, அறிவுகளுடன் தெரிந்து செயல்வகையோடு கூடிய கண்ணோட்டம் தேவை...! அதனால் அமையும் அமைச்சு, சொல்வன்மையும் அச்சமின்மையும் கூடிய திறனாகிய வினைத்திட்ப தூதும், வினைசெயல்வகையும் இருந்தால், நாடும் அரணும் சிறக்கும்...! புலவி எனும் ஒருவர்க்கொருவர் பிணக்கம் கொள்வது இருந்தால் தான் புலவிநுணுக்கம் அறிய முடியும்...! பொருளை அறிந்து, செயலை தெரிந்து, வினையைப் புரிந்து செயல்படும் செயல்வகைகளே குடி செயல்வகை; அதனால் ஊடலும் உவகை கொள்ளும்...!
'மை' தொகுப்பில், 96.குடி/குடிமை அதிகாரம் போலவே கணக்கியலில், (#) இதையும் பிறகு அறிவோம்...! 'மை' என முடியும் அதிகாரங்கள் 44 + இங்கு 45 = 89 அதிகாரங்கள்... மீதம் (133-89) 44 அதிகாரங்கள் உள்ளன... அவை எவ்வாறு முடிகின்றன...? மனதில் 'தில்' இருந்தால் தான் காதல் என்று, கவிஞர் வாலி அவர்கள் மறைமொழியாக சொல்வது : தில் தில் தில் மனதில்; ஒரு தல் தல் தல் காதல்... ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்2 - ஆடல் பாடல் கூடல் :
⟪ © மெல்லத் திறந்தது கதவு ✍ வாலி ♫ M.S.விஸ்வநாதன், இளையராஜா 🎤 S.P.பாலசுப்ரமணியம், P.சுசீலா @ 1986 ⟫ காமத்துப்பால் 25 அதிகாரங்களில் மட்டும், 20 'ல்' என முடியும் அதிகாரங்களின் தொகுப்பும் அடுத்த பதிவில் தொடரும்... நன்றி...
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
பதிலளிநீக்குவலைச் சித்தர் என்பதைவிட திருக்குறள் சித்தர் என்பதே உங்களுக்கு சாலச் சிறப்பான பெயர். இவ்வளவு ஆழமாக பார்ப்பதே உங்கள் சிறப்பு. வாழ்த்துகள்
அருமை. குறள் சித்தர் என்பதே சரியாக இருக்கும்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. மிகவும் ஆழமான அலசல். இதுவரை திருக்குறளை நான் இந்தளவுக்கு புரிந்து கொண்டதில்லை. எண் வாரியாக எத்தனை விளக்கம்.... வியப்பு மேலிட அறிந்து கொண்டேன். உங்களுக்கு, உங்கள் திறமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பாடலும் அருமை. இத்தனை நாள் வெறும் பாடலாக கேட்டு ரசித்த இந்தப்பாடலை, இன்று குறளின் வாசத்தோடு கேட்டு மகிழ்ந்தேன். மீண்டும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கி ஆ பெ மறைமொழி பற்றி பேசிய பகுதியை ரசித்தேன்.
பதிலளிநீக்குநாங்கள் ஆறாம் வகுப்பு படித்தபோது இதுபோன்ற ஒரு உத்தியை எங்கள் தமிழ் ஆசிரியர் கூறினார். ஆனால் நாங்கள் படிக்கவில்லை.
பதிலளிநீக்குமிகவும் ஆழமான சிந்தனை.
பதிலளிநீக்குசுட்டிக்கு சென்று வந்தேன் மீண்டும் சென்று படிப்பேன் நன்றி ஜி
சிறப்பான சிந்தனை. தொடரட்டும் உங்கள் சிந்தனைகள்.
பதிலளிநீக்குவலை சித்தரின் பதிவுகள் ஒவ்வொன்றும் கொஞ்சம் மலைப்பாகவே உள்ளது. அதிகாரத்தில் குசலம் விசாரித்தது புதுமை...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசிறப்பு... வாழ்த்துக்கள் தல.. பேசாமல் ஒரு பல்கலைகழகத்தில் சேர்ந்து இங்கு நீங்கள் திருக்குறளை எழுதவதை அங்கு செய்தால் டாக்டர் பட்டம் நீங்கல் எளிதில் வாங்கலாம்
Dr.Dhanabalan 👏👏👌🙏 அண்ணா, இவ்வளவு ஆராய்ச்சி யாரும் பண்ணியிருக்க முடியாது!! செம அண்ணா. உங்கள் 71 கிடைத்தது மகிழ்ச்சி அண்ணா😊🙏
பதிலளிநீக்குவழியை வழிகாட்டியமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஹா ஹா ஹா இது என்ன கொடுமை, இலக்கம் வைத்துப் பேசுவது.. இப்படி நாமும் சில விசயங்களை உருவாக்கினால் நல்லதுதான்.. ஒட்டுக் கேட்போரிடமிருந்து தப்பிக்கலாம்... அருமையான + நகைச்சுவையான போஸ்ட்:)
பதிலளிநீக்கு