🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



ஆல்...

அனைவருக்கும் வணக்கம்... முந்தைய பதிவுகள் : "மை" என முடியும் அதிகாரங்களின் தொகுப்பின் →இணைப்பு← மற்றும் இரண்டாம் தொகுப்பின் →இணைப்பு← இனி "ல்" தொகுப்போடு திருக்குறளின் அனைத்து அதிகாரங்களும் முடிவடைகிறது...


அறத்துப்பால்: 8 + பொருட்பால்: 16 + காமத்துப்பால்: 20 = 44 அதிகாரங்கள்

1. அறிதல் : 11. செய்ந்நன்றியறிதல், 22. ஒப்புரவறிதல், 48. வலியறிதல், 49. காலமறிதல், 50. இடனறிதல், 71. குறிப்பறிதல், 72. அவையறிதல்

அறிதல்/உணர்தல்# : 110. குறிப்பறிதல் (குறிப்புணர்தல் - காளிங்கர்)

2. அழிதல் : 124. உறுப்புநலனழிதல், 126. நிறையழிதல்

3. அழிதல்/பழித்தல் : 118. கண்விதுப்பழிதல் (கண்விதுப்பழித்தல் - காளிங்கர்)

4. உணர்தல்# : 36. மெய்யுணர்தல்

5. அறுத்தல் : 37. அவாவறுத்தல்

6. ஆடல் : 52. தெரிந்துவினையாடல், 59. ஒற்றாடல்

7. ஆராய்தல் : 80. நட்பாராய்தல்

8. ஆல் (தழால்) : 53. சுற்றந்தழால்

9. இரங்கல் : 117. படர்மெலிந்திரங்கல், 123. பொழுதுகண்டிரங்கல்

10. உரைத்தல் : 112. நலம்புனைந்துரைத்தல், 113. காதற்சிறப்புரைத்தல், 114. நாணுத்துறவுரைத்தல், 122. கனவுநிலையுரைத்தல்

11. உறுத்தல் : 4. அறன்வலியுறுத்தல், 109. தகையணங்குறுத்தல், 115. அலரறிவுறுத்தல், 128. குறிப்பறிவுறுத்தல்

12. ஒழுகல் : 70. மன்னரைச்சேர்ந்தொழுகல்

13. ஓடல் : 45. பெரியாரைத்துணைக்கோடல்

14. ஓம்பல் : 9. விருந்தோம்பல்

15. கல் : 86. இகல்

16. கடிதல் : 44. குற்றங்கடிதல்

17. கிளத்தல் : 125. நெஞ்சொடுகிளத்தல்

18. கூறல் : 10. இனியவைகூறல்

19. சேறல் : 91. பெண்வழிச்சேறல்

20. தெரிதல் : 88. பகைத்திறந்தெரிதல்

21. தெளிதல் : 51. தெரிந்துதெளிதல்

22. பருவரல்/உறுதல் : 119. பசப்புறுபருவரல் (பசப்புறுதல் - மணக்குடவர்)

23. புலத்தல் : 130. நெஞ்சொடுபுலத்தல்

24. புலம்பல் : 121. நினைந்தவர்புலம்பல்

25. மகிழ்தல் : 111. புணர்ச்சிமகிழ்தல் (புணர்ச்சியின்மகிழ்தல் - காளிங்கர்)

26. மறுத்தல் : 26. புலான்மறுத்தல்

27. விதும்பல்/விரும்பல் : 127. அவர்வயின்விதும்பல், (அவர்வயின்விரும்பல் - காளிங்கர்), 129. புணர்ச்சிவிதும்பல்
நண்பர்களே... உரையாசிரியர்கள் கொண்ட தலைப்பின் வேறுபாட்டை பிறகு கணக்கியலில் அறிவோம்... அதிகாரங்களை இவ்வாறு பிரித்து விட்டதால் எளிதில் புரிதல் ஆகும்...! மை=44, ல்=44, மற்றவை=45, என இதோடு மூன்று பதிவுகளாக, 133 அதிகாரங்களின் முடிவு எழுத்துக்களைக் கொண்டு பிரித்து இருந்தாலும், ஒவ்வொரு அதிகார தலைப்பிற்கும் தொடர்புண்டு; இதே போல் வரிசைப்படி அதிகார வைப்பு முறைக்கும் தொடர்புண்டு; அதிகாரங்களே இவ்வாறு என்றால் குறள்களும் அவ்வாறே...! எடுத்துக்காட்டாக, 106. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு : "குற்றமற்றவரின் நட்பை மறக்காதே; துன்பத்தில் துணையாக இருந்தவரின் நட்பை இழக்காதே..." 800. மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு : "குற்றமற்றவரின் நட்பை நாடிப் பெறுக; மனம் ஒன்றாத பண்பற்ற நட்பை என்னத்தையாவது கொடுத்து நீங்கிவிடுக..." அதிகாரங்கள் : முன்னது 11.செய்ந்நன்றியறிதல்; பின்னது 80.நட்பாராய்தல்...

ஆல் : சுற்றந்தழால் : நாட்டை ஆள்பவருக்கும் மட்டுமல்ல, வெற்றி பொருந்திய வாழ்க்கை நடத்த விரும்பும் ஒவ்வொரு மனிதருக்கும் சுற்றம் தேவை... ஆல மரத்தைப் போல ஒருவர் நிறையச் சுற்றம் சூழ இருந்து வாழ்வதையே ஐயன் விரும்புகிறார்; சரி, ஒருவருக்கு நிறையச் சுற்றம் எவ்வாறு அமையலாம் என அவரவர் சிந்திக்கலாம் மனிதர்களே... ஆலம் விழுதுகள் போல் - உறவு ஆயிரம் வந்தும் என்ன...? வேர் என நீ இருந்தாய் - அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்... - வியட்நாம் வீடு படத்தில் கவியரசர்... ஒருவரின் வாழ்வின் ஆணிவேர் எனத் தாத்தா சொல்வது என்ன'வென்றால் : இல்லாள் நற்பண்பே உருவாகத் திகழும் ஏழையின் குடிசையைக் கண்காணித்த தாத்தா, "இல்லதென்...?" என்றும், இல்லாள் பெருமைக் குணங்கள் அற்றவளாய் இருந்த அடுக்குமாடி வீட்டைக் கண்காணித்தவர், "உள்ளதென்...?" என்கிறார்...! குடிசையில் இல்லாதது என்று ஒன்றுமில்லை; அடுக்குமாடி வீட்டில் உள்ளது ஒன்றுமில்லை...! (53. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை) - அதிகாரம் : வாழ்க்கைத்துணைநலம்...

மீண்டும் ஒருமுறை காதற்சிறப்புரைத்தல் அதிகாரத்திற்குச் சென்று ஆராய்ந்தால் : நம்ம தாத்தா, வாசுகி பாட்டிக்கு உலகமெல்லாம் இடம் தேடவில்லை; 'என் மனம் முழுக்க நீயே' என்று பொய் சொல்லவும் விரும்பாமல் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா; நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா... அடி நீதான் என் சந்தோசம் - பூவெல்லாம் உன் வாசம், நீ பேசும் பேச்சே நான் கேட்கும் சங்கீதம்... உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி - நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி... (பெண்ணின் மனதைத் தொட்டு படத்தில் கவிஞர் முத்து விஜயன்) சரி, தாத்தா தன் கண்ணில் வெண்மை பகுதியை நீக்கிக் கருமை விழியை எடுத்து, "கருமணியின் பாவையே...! நீ போய்விடுவாயாக...! யாம் விரும்பும் நெற்றியழகி இருக்க இடம் வேண்டும்..." என்கிறார்... வாசுகி பாட்டி மட்டும் சும்மாவா...?; "என்னவர் கண்ணுள் இருக்கும் போது கண்ணுக்கு மை தீட்டுவதா...? முடியாது, அவரைச் சற்று நேரம் காணாமல் இருக்க நேருமே...!" எப்பூடி...? சரி ஒரு பாட்டு : ஆண்: நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை - பெண்: நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை... ஆண்: மெய்யா? பொய்யா? - பெண்: மெய்தான் ஐயா... (புதுமைப் பெண் படத்தில் கவிஞர் வைரமுத்து) உறுத்தலில் ஆரம்பித்து உவகையில் முடிகிறது காமத்துப்பால்... இடையிடைைைையே பாடல் வரிகள் வருவதற்குக் காரணம் : இப்படிதாாாான் + இதனால் தாாாான் மறைந்திருந்து காண்பிக்கும் பலவகையான தொழினுட்ப பதிவுகள் உருவாகின்றன நண்பர்களே; →நலம் புனைந்து உரைத்தல்← செய்ய வேண்டும் அல்லவா...?

சரி, அறத்துப்பாலில் அறன் வலியுறுத்தலை விருந்தோம்பலில் ஆரம்பித்து, 'அவா' அறுத்தலில் "ல்" தொகுப்பு முடிகிறது... அதன்பின் முடிவில் ஒருவர் தன் வாழ்வில் மேற்கொள்ளும் அறம் பொறுத்து, அவரின் வாழ்வு முறையையும் ஊழ் நின்று கண்காணித்து முடித்து, அறத்துப்பாலும் முடியும்... 'அவா'வை மட்டும் அறுத்து நீக்கி விட்டால் உலகமே சிறப்புறும்...! நிறைவே இல்லாத ஆசை அறும்போது மனமும் இயக்கத்தை மெல்ல மெல்லக் குறைத்துக் கொள்கிறது... இயற்கையின் பேரியக்கத்தை உள்வாங்கிக்கொண்ட நிறைந்த அமைதியான ததும்பல் இல்லாத மனதால், ஒருவரது உயிர்வாழ்வு கலக்கமில்லாத, நிறைவான, அமைதியான, இறுதி பெறுவதற்கான நெறியைச் சொல்வது தான் அவா அறுத்தல் அதிகாரம்; அதற்கு முன் மெய்யுணர்தல் அதிகாரம்...!

இறைமாட்சி, கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை அதிகாரங்கள் அடுத்து, குற்றங்கடிதல் அதிகாரம் பொருட்பாலில் "ல்" தொகுப்பு ஆரம்பிக்கிறது; அங்கு அரசுக்கும் குடிமக்கட்குமாகப் பொதுவாகச் சொல்லப்படுவன : இறுமாப்பு, சினம், அற்பத்தனம், பொது நிதியைச் செலவழிக்காமல் பதுக்கிக் கொள்ளல் →இவறல்← வறட்டு மானவுணர்ச்சி, பெருமையற்ற மகிழ்ச்சி காட்டல், தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்வது, நல்லதல்லாதவற்றில் விருப்பு கொள்வது போன்ற பலவற்றைக் குற்றம் எனச் சொல்கிறது... இவற்றையெல்லாம் நாம் வாழும் இன்றைய தலைமுறையில் காணும் அவலநிலை பெற்றுள்ளோம்...! ம்... வாழ வேண்டும் நாடு - அதை →நாடு← நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்


  1. நாம் படித்திருக்கின்றோம். இவ்வளவு ஆழமாக சிந்திப்பது இல்லை. அதிகார வைப்புமுறை கற்றோம். கற்பித்தோம். ஆனால் இந்தக் குறள் சித்தர் திருக்குறளின் உள் நுழைந்து அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி ஆய்வு செய்வது பிரமிப்பாக இருக்கின்றது வாழ்த்துக்கள் தொடருங்கள் நானும் தொடர்கின்றேன்

    பதிலளிநீக்கு
  2. உண்மையிலேயே எனக்கு தலை சுத்துது. இன்னும் பத்து வருடங்கள் கழித்து இந்தப் பக்கம் ஆராய வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு வழக்கம் போல் அருமை. திருக்குறளை இப்படி ஆராய்ந்து சொல்வதற்கு ஒரு தனித்திறன் வேண்டும். அது உங்களிடம் நிறையவே உள்ளது. ஐயன் திருவள்ளுவரே பார்த்தால் திகைத்து மகிழ்ந்து போவார். ஒவ்வொரு பதிவிலும், உங்கள் புதிது புதிதான திறமைகள் கண்டு நானும் வியக்கிறேன். உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள் நன்றிகள். இன்றைய இப்பகிர்வினுக்கும், மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. படிக்கப் படிக்க வியப்புதான் கூடுகிறது ஐயா

    பதிலளிநீக்கு
  5. தங்களது குறள் ஆராய்ச்சி மேலும் சிறக்கட்டும் ஜி

    பதிலளிநீக்கு
  6. திருக்குறளில் ஆய்வு செய்து நுணுக்கமாக பல செய்திகளைக் வெளிக்கொணர்கின்ற உங்களின் பணி போற்றத்தக்கது. திருக்குறளில் ஆய்வு செய்கின்ற பல ஆய்வாளர்களுக்கு உங்களின் பதிவுகள் மிகவும் துணையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. இதைப் படிக்கவே நிறைய நேரம் தேவைப்படுது, அப்போ எப்படித் தொகுத்து எழுதியிருப்பீங்கள் என யோசிக்கிறேன், மிக அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. நாம் வாழும் இன்றைய அவல நிலை மாறட்டும்..திருக்குறள் வளரட்டும். திருவள்ளுவர் புகழ் ஓங்கட்டும்..

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    அண்ணா

    வள்ளுவனின் பாடலை பிரித்து பிரித்து நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. திருக்குறளுக்கு மாற்றாக வேறு நூலில்லையே!
    சிறப்பாகத் திருக்குறளைப் பகுப்பாய்வு செய்து பதிவிடும் தங்கள் பணி தொடரட்டும்
    ஐயா!
    2021 இல் - தங்கள்
    தளத்திற்கு அடிக்கடி வருவேன்.

    பதிலளிநீக்கு
  11. திருக்குறள் ஆராய்ச்சி அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
  12. தொடரட்டும் உங்கள் திருக்குறள் ஆராய்ச்சி.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. "ஆல மரத்தைபோல ஒருவர் நிறைய சுற்றம் சூழ இருந்து வாழ்வதையே ஐயன் விரும்புகிறார்" .... உண்மைதான் .... நம்முடைய விருப்பமும் அதுவேதான்... ஆனால் கூடி வாழ்வது என்பது இப்போது மறைந்துபோய்விட்டதுதான் வேதனை . திருமணபந்தம் என்பதே கூடி வாழ்வதற்காகத்தான் என்பதனை அறியாமல் சிந்தனைகளைக் குறுக்கிக்கொள்ளும் தம்பதிகளால் வரும் பிரச்சனை இது. "இல்லாள்" என்பது "இல்லத்தை ஆள்பவள்" என்ற நினைப்பு மாறி மாமனார், மாமியார், நாத்தனார் என்று எந்த உறவும் இல்லாதவளாகையால் "இல்லாள்" என பெயர் ஏற்பட்டதோ என எண்ண தோன்றுகிறது. எல்லாம் காலத்தின் அவலம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.