🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நிலவே... மலரே...

வணக்கம் நண்பர்களே... // நிலவும் மலரும் பாடுது... என் நினைவில் தென்றல் வீசுது... நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது... சிரித்துச் சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா...? மனம் துடித்து துடித்துச் சேர்ந்த பின்னே தோல்வி காணுமா...? தந்தை பிரித்துப் பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா...? மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை... நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்...// தேன் நிலவு (படம்)



அதிகாரம் 112 ♥♥♥ நலம் புனைந்துரைத்தல் ♥♥♥

அய்யய்யய்யோ ஆனந்தமே... நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே... நூறு கோடி பாடல் வரிகள் மாறி மாறி மனதில் தோன்றியதில், குறளுக்கேற்றபடி சிலவற்றை ரசிக்க ஒவ்வொரு குறளின் விளக்கத்திற்கு மேலே சுட்டியைக் கொண்டு செல்லவும்... கைப்பேசியில் பதிவை வாசிப்பவர்கள், கைப்பேசியைத் திரும்பியபின், குறளின் விளக்கத்தில் சொடுக்கவும்... ► பட்டனைச் சொடுக்கி ரசிக்கலாம்...

// (படம் : ராமு ) நிலவே என்னிடம் நெருங்காதே... நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை... மலரே என்னிடம் மயங்காதே... நீ மயங்கும் வகையில் நான் இல்லை... // என்று பாடாமல், முடிவில் உங்களுக்கொரு அன்புக் கட்டளை...


அனிச்ச மலரே... எல்லாப் பூக்களையும் விட நீ வாழ்ந்து விட்டு போ...! பாராட்டுகிறேன். ஆனால், உனக்கு ஒன்று தெரியுமா ? என் காதலி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்...!

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள் (1111)

பால் போல் சிரிப்பதில் பிள்ளை...! அவள் பனி போல் அணைப்பதில் கன்னி...!2 கண் போல் வளர்ப்பதில் அன்னை...!2 அவள் கவிஞனாக்கினாள் என்னை...! காலங்களில் அவள் வசந்தம்...! கலைகளிலே அவள் ஓவியம்...! மாதங்களில் அவள் மார்கழி...! மலர்களிலே அவள் மல்லிகை...! ⟪ © பாவ மன்னிப்பு கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 P.B.ஸ்ரீனிவாஸ் @ 1961 ⟫

மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே...! எனக்கே சொந்தமான அவளின் கண்களைப் பார்த்த பின் மற்ற மலர்களைக் கண்டு மயங்குகிறாயே...!

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று (1112)

கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன...? கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன...?2 பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு, ஆட வாராமல் இருப்பதென்ன...?2 போகப் போகத் தெரியும்...! இந்தப் பூவின் வாசம் புரியும்..! ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்...! திருத் தாளம் அதிலே இணையும்...! ⟪ © சர்வர் சுந்தரம் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா @ 1964 ⟫

இளந்தளிர் மென்மை மேன்மை மேனி, முத்துப் பற்கள் புன்னகை, இதுவரை கண்டுபிடிக்க முடியாத உடலின் நறுமணம், மூங்கில் போன்ற தோள், என்னை நிலை குலையச் செய்த மையூட்டப் பெற்ற கண்களோ வேல்...!

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு (1113)

மானல்லவோ கண்கள் தந்தது, மயிலல்லவோ சாயல் தந்தது, தேனல்லவோ இதழைத் தந்தது, சிலையல்லவோ அழகைத் தந்தது | தேக்கு மரம் உடலைத் தந்தது, சின்ன யானை நடையைத் தந்தது, பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது, பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது | இடையழகு மயக்கம் தந்தது, இசையழகு மொழியில் வந்தது, நடையழகு ஆஆஆ ஒஓஓ நடையழகு நடனம் ஆனது, நாலழகும் என்னை வென்றது ! ⟪ © நீதிக்குப் பின் பாசம் கண்ணதாசன் K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன், P.சுசீலா @ 1963 ⟫


குவளை மலரே...! என் காதலியை காண முடிந்தால், வெட்கத்தால் தலை குனிந்து நிலம் நோக்குவாய்...! காந்த கண்களுக்கு ஈடாகுமா...?

காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று (1114)

விண்மணிபோலே மண் மேலே விளையாடும்2 கண்மணி நீயே பெண் மானே செந்தேனே2 காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு – உன் கண்களும் கவிபாடுதே உன்னாசையால்... காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு - உன் கண்களும் கவி பாடுதே ⟪ © அடுத்த வீட்டுப் பெண் தஞ்சை ராமையா தாஸ் ஆதி நாராயண ராவ் 🎤 சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் @ 1960 ⟫

அடடா...! என்னவள் தன் மென்மையை அறியாமல், காம்போடு கூடிய அனிச்சம் பூவை சூடி விட்டதால், நல்ல மங்கல ஒலி ஒலிக்காத இவளின் நொந்து வருந்தும் இடுப்பிற்கு என்ன பதில் சொல்வது...?

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை (1115)

நலம் நலம் தானா முல்லை மலரே...? சுகம் சுகம் தானா முத்து சுடரே...? இளைய கன்னியின் இடை மெலிந்ததோ...? எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ...? வண்ணப்பூங்கொடி வடிவம் கொண்டதோ...? வாடை காற்றிலே வாடி நின்றதோ...? அன்புள்ள மான் விழியே... ஆசையில் ஓர் கடிதம்... நான் எழுதுவது என்னவென்றால்... உயிர் காதலில் ஓர் கவிதை...! ⟪ © குழந்தையும் தெய்வமும் கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1965 ⟫

விண்மீன்களே...! மீன்கள் போல் அங்கும் இங்கும் ஏன் கலங்கித் திரிகிறீர்கள்...? உங்களால் எனது பேரழகின் முகத்திற்கும் நிலாவிற்கும் வேறுபாட்டைக் கண்டுபிடிக்கவே முடியாது...!

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன் (1116)

மரகத மலர் விடும் பூங்கொடி, மழலை கூறும் பைங்கிளி2 நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்2 என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்... அஹஹஹா(4)ஹஹா... அவள் ஒரு நவரச நாடகம்... ஆனந்த கவிதையின் ஆலயம்... தழுவிடும் இனங்களில் மானினம்... தமிழும் அவளும் ஓரினம்... அவள் ஒரு நவரச நாடகம்... ⟪ © உலகம் சுற்றும் வாலிபன் கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 S.P.பாலசுப்ரமணியம் @ 1973 ⟫

விண்மீன்களே, கலக்கம் கொள்வது ஏன்...? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் உள்ள சிறுகளங்கம்கூட என்னவளின் முகத்தில் கிடையாதென்பதாலா...?

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து (1117)

வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே நீதான், வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே... நானும் உன்னைப் பார்த்து விட்டால், வெண்ணிலாவே2 முகம் - நாணியே மறைவதேனோ வெண்ணிலாவே2 பட்ட பகலில் ஜோதி வீசும் வெண்ணிலாவே உன்னை, பார்ப்பதும் ஓர் விந்தையன்றோ வெண்ணிலாவே. வட்டமான உன் முகத்தில் வெண்ணிலாவே2 ரெண்டு வண்டுகள் சுழல்வதேனோ வெண்ணிலாவே ! ⟪ © கோமதியின் காதலன் கு.மா.பாலசுப்ரமணியம் G.ராமநாதன் 🎤 சீர்காழி கோவிந்தராஜன் @ 1955 ⟫

வாழ்க நிலவே...! உன்னையும் காதலிக்க வேண்டுமென்றால் என் மனம் மகிழும்படி, என்னை பரவசப்படுத்துபவளின் முகம்போல் ஒளிவீசு...!

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி (1118)

அந்தி வெய்யில் பெற்ற மகளோ, குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ...?2 உந்தி உந்தி விழும் நீரலையில், ஓடி விளையாடி மலர், சிந்தி வரும் தென்றல் தானோ...? இன்பம் தந்த மயில் இந்த மானோ...? இவள் ஆடை கட்டி வந்த நிலவோ...? கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ...? குளிர் ஓடையில் மிதக்கும் மலர், ஜாடையில் சிரிக்கும் இவள், காடு விட்டு வந்த மயிலோ ? நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ...?2© அமுதவல்லி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.R.மகாலிங்கம் @ 1959 ⟫

நிலவே...! நீ போட்டியில் தோல்வியுறாமல் இருக்க, எப்போதும் புத்துணர்ச்சி தரும் மலர் கண்களுடையவளின் முகம் போல ஆக நீ விரும்பினால், பலரும் பார்க்கும்படி தோன்றாமல் நான் மட்டும் பார்க்கத் தோன்று...!

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி (1119)

காதலெங்கள் சொந்தமென்று அறியவில்லையா...? கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா...? – உன் மோகநிலையை மறந்து விடு வெள்ளி நிலாவே, வந்த மேகத்திலே மறைந்து விடு வெள்ளி நிலாவே... காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே, கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே...? ஓடி வந்த வேகமென்ன வெள்ளி நிலவே, நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே...? ⟪ © பாக்கிய லட்சுமி கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 P.சுசீலா @ 1961 ⟫

பட்டு போன்ற பாதத்தைச் சொல்லவும் வேண்டுமோ...? இந்த உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், அவளின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போலத் துன்பத்தைத் தருமே...!

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம் (1120)

கருவண்டு நடனம் தருகின்ற நளினம், இதயத்தில் சலனம் - அம்மம்மா2 உன் மைவிழிக் குளத்தினில் தவழ்வது மீனினமோ...? கவி கண்டிட மனத்தினில் கமழ்வது தமிழ்மனமோ...? செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்... ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள்... மலையில் நெளியும் மேகக் குழல்கள் தாகம் தீர்த்திடுமோ...? பூவில் மோதப் பாதம் நோக - நெஞ்சம் தாங்கிடுமோ...?2© ரயில் பயணங்களில் டி.ராஜேந்தர் டி.ராஜேந்தர் 🎤 P.ஜெயச்சந்திரன் @ 1981 ⟫

(படம் : திருடாதே) என்னருகே நீ இருந்தால், இயற்கை எல்லாம் சுழலுவதேன்...? உன்னருகே நான் இருந்தால், உலகமெல்லாம் ஆடுவதேன்...? இளமையிலே காதல் வரும்... எது வரையில் கூட வரும்...? முழுமை பெற்ற காதல் எல்லாம், முதுமை வரை ஓடி வரும்…!



அப்படித்தானே நண்பர்களே...?
அன்புக் கட்டளை : பதியுங்கள் உங்கள் மனதில் உள்ள பாடல் வரிகளை !
நன்றி... வாழ்த்துக்கள்...

காதல் காவியமானது ! புனிதமானது !! சிறப்பானது !!! இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...

நண்பர்களே... தங்களின் கருத்து என்ன ?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. நண்பரே காலை வணக்கம்.என்ன இப்படி அருமையான பழைய பாடல்களுடன் படங்களுடன் திருக்குறள் விளக்கமும் தந்து இலக்கணம் பக்கம் திருப்பி விடுகிறீர்கள்.அத்தனையும் அருமை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. திருடாதே படத்தின் படங்கள் எப்போது கேட்டாலும் இனிக்கும், பகிர்வுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  3. சிறப்பாக இருக்கின்றது! சிறப்பானதொரு பகிர்வினை பகிர்ந்தமைக்கு நன்றி!
    http://www.krishnaalaya.com
    http://www.atchaya.net

    பதிலளிநீக்கு
  4. குறளும். விளக்கமும், சினி பாடல்களின் மறை தோற்றமும்.... எல்லாமே அருமை.

    பதிலளிநீக்கு
  5. மனதில் என்றும் நிற்கும் இனிமையான பழைய திரைப்படப் பாடல்கள்; திருக்குறளின் எளிமையான விளக்கம் இரண்டையும் கையில் காபியுடன் காலை நேரத்தில் படிக்க முடிந்தது கூடுதல் ரசனை! நன்றி திண்டுக்கல்லாரே!

    பதிலளிநீக்கு
  6. தனபாலன், என்ன சொல்வது திருக்குறள் , சினிமா பாடல்கள் என்று அசத்தி விட்டீர்கள்.
    இளமையில் காதல் வரும் உண்மை ,எதுவரை கூட வரும் என்பது தான் இப்ப உள்ள நிலைமை!
    முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை ஓடி வரும் உண்மை.
    காலத்தால் அழியாத காவிய பாடல்களை தந்து விட்டீர்கள். இன்றைய இளம் தலைமுறைகளுக்கு பிடித்த கும்கி பாடலை கொடுத்து ஆனந்த படுத்திவிட்டீர்கள்.
    நிலவும், மலரும் பாடிய அழகிய பாடல்களை தந்து அன்பு கட்டளை கொடுத்து இருக்கிறீர்கள். மனதில் வந்த பாடல் வரிகளை பதியுங்கள் என்று.

    எனக்கு மனதில் வந்த பாடல் என்பது
    உங்கள் பாடல்வரிகளை கேட்டு மனம் துள்ளியதால்
    //துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்!
    இசை இன்ப தேனையும் வெல்லும்.//

    மனம் சோர்ந்த பயிர் போல் இருந்தாலும் உங்கள் பாடல் வரிகளால் துளிர்க்க செய்து விடுவீர்கள்.
    நன்றி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. அற்புதமான காலை . . . உங்களின் பதிவோடு ஸ்டார்ட்

    பதிலளிநீக்கு
  8. இன்றைக்கும் வருகின்ற பாடல்கள் எல்லாம் ,அன்றைய பாடல்களின் உல்டாக்கள் தான் என்று தெரிகிறது !ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் ..ஆனால் அதே வர்ணனைகள் மட்டும் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறதே !
    தொடர்ந்து உங்கள் இளமை 'பூஸ்ட் 'டை அருந்தத் தோன்றுகிறது !

    பதிலளிநீக்கு
  9. அருமையான விளக்கங்களுடன்
    அருமையான கவிதைகளின் தொகுப்பு
    நிலவின் குளிரில் மலரின் மணத்தில்
    அவைதந்த சுகத்தில் சிறிது நேரம்
    சூழல் மறந்தேன்
    மனம் மயக்கிய பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. // நிலவும் மலரும் பாடுது... என் நினைவில் தென்றல் வீசுது... நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது... //

    மிக இனிய அருமையான பாடல்கள் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  11. அழகுக்கு அழகு செய்வது என்பார்களே!... அது இது தானோ!... திருக்குறளுக்கு இசைந்த திரை இசைப் பாடல்கள்..காலத்தை வென்ற கவிதை வரிகளுடன் அருமையான படைப்பு!. வாழ்க!.. வளர்க!..

    பதிலளிநீக்கு
  12. தொடக்கத்தில் இருப்பது அனிச்ச மலர் படமா? பார்த்ததே இல்லை.

    குறள் படிப்பது என்றைக்கும் சுகம். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. ஆம்.. உங்களுடைய பணி அளப்பரியது.. ஒவ்வொரு பாடலைகளையும் நினைவில் வைத்திருப்பதே பெரும்பாடு.. அதையும் இக்கால கட்டதிற்கேற்ப சுவைபட எழுதி, சுட்டிக்காட்டி, இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்வது என்பது மிகப்பெரிய விடயம்.. அதை நீங்கள் செய்திருக்கிறீரகள்.. பாராட்டுக்கள்..!!!

    பகிர்வுக்கு நன்றி!!!

    பதிலளிநீக்கு
  14. படிக்க படிக்க இனிக்கும் குறள் அட அட என்னே இனிமை.. அத்துடன் சேர்ந்தமைந்த தமிழ் சொட்டும் பழைய பாடல்கள் இன்னும் அருமை...

    பதிலளிநீக்கு
  15. குறளை மிக அருமையான பதிவாக்கியமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  16. திருக்குறளும் பழைப்பாடல்களும் கலந்த கலவை அருமை.
    எனக்கு பாவ மன்னிப்பு பாடல் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  17. தீராத அதிசயம் ஆச்சரியம் திருவள்ளுவர்.

    பதிலளிநீக்கு
  18. திரைப் பாடல் வரிகள்...ஒவ்வொரு திருக்குறளுக்கும் அழகுக்கு அழகு சேர்க்கிறது.

    பதிலளிநீக்கு
  19. பல குறள்களில் வள்ளுவன் மிகச் சிறந்த காதலன் என்பதை விட ரசிகனாக இருக்கிறான்... அருமை... எங்கள் பக்கத்தில் கொண்டும் செல்லும் போது பாடல் வரிகள் வருகிறதே எப்படி அது...

    பதிலளிநீக்கு
  20. என்ன அருமையான பழைய பாடல்கள், அதன் வரிகளை உங்களது பதிவில் பார்க்கும்போது ஆனந்தமாக இருக்கிறது. நிறைய இது போல எழுதுங்கள் சார்......படிக்க காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. பழைய திரைப்பட பாடல்களையும், திருக்குறளையும் மிக ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  22. அருமை... மனதுக்கு இனிமையாக இருக்கிறது. உங்கள் அன்புக்கட்டளைப்படி...

    இன்று தேடி வரும், நாளை ஓடி விடும்
    செல்வம் -சிரித்தபடி அமுதிடுமா!
    எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா!

    பாடலின் தொடக்கம் நினைவுக்கு வருகிறதா? :)

    பதிலளிநீக்கு
  23. அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்...
    அதுவொரு அழகிய நிலாக்காலம்...

    பதிலளிநீக்கு
  24. இன்பத்துப் பாலின் இனிய பொழிப்புரை. சினிமாப் பாடல்கள் இணைப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  25. தமிழ் இப்பிடி வளைந்து குடுக்குதே தனபால்....!

    எல்லாமே தமிழ் தேன் தென்றல் இதம்...!

    பதிலளிநீக்கு
  26. திருக்குறளை நீங்கள் கையாண்டு விளக்கும் பாணியை தனி. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  27. என்றும் இனிக்கும் பாடல்களின் வரிசை. திருக்குறளையும் பாடல்களையும் இணைத்துக் கொடுத்ததுநல்லதொரு முயற்சி.


    நீங்க கேட்டதுக்கு ஒரு பாடல் இது

    நீயோ நானோ யார் நிலவே
    இன்று நிம்மதி இழந்தது யார் நிலவே

    பதிலளிநீக்கு
  28. காலங்களில் அவள் வசந்தம்....
    போகப் போகத் தெரியும்...
    மானல்லவோ கண்கள் தந்தது...
    கண்களும் கவி பாடுதே...
    அடடா இப்படி அற்புதமான வரிகள்... மறைந்து நின்று மகிழச்சியளித்தது.. மிக அற்புதமான பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  29. எந்தப் பாடல் என்றால் எல்லாப் பாடல்களுமே சிறப்புத் தான்.
    அத்துடன் இனிய குறளும் சேர்ந்தால் சொல்லவே வேண்டாம்,
    அதன் பெருமையை. மிக நல்ல பதிவு.
    மனம் நிறை பாடல்கள் இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  30. திருக்குறளுக்கேற்றபடி தந்திருக்கும் அனைத்துப்பாடல்களுமே மிக மிக அருமை. கேட்டுக்கொண்டே இருக்கலாம்.எல்லாமே முத்தான‌ பாடல்கள். மிகவும் அழகான ரசனையான‌
    பதிவு சார்.நன்றி,வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  31. எத்தனை சுவை தரும் குறள்களும் அதற்கேற்றபாடல்களும்!

    படிக்க நாவினிக்கும்.
    நினைக்க நெஞ்சினிக்கும்.
    சொல்ல... அத்தனையும் இனிக்கும்!

    அருமை! அருமை!
    வாழ்த்துக்கள் தனபாலன் சார்!

    த ம.15

    பதிலளிநீக்கு
  32. அனிச்சம்பூவைவிட அவள் அழகு அவள் திருக்குறள் மிகவும் ரசித்த பாடல்களுடன் குறள் விளக்கம் அருமை அதுவும் ரயில் பயணங்களில் சுகம்மீட்டும் வரிகள் .நன்றி அருமையான தொகுப்புக்கு தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு
  33. இளமையிலே காதல் வரும்...
    எது வரை கூட வரும்...
    முழுமை பெற்ற காதல் எல்லாம்
    முதுமை வரை ஓடி வரும்....

    இந்த அருமையான, நிதர்சனமான பொருள் பொதிந்த பாடல் வரிகளை எடுத்துக்காட்டிய உங்கள் திருக்குறள்-திரைப்பபட பாடல் ஒப்புநோக்கு ஆய்வுப் பதிவுக்கு வாழ்த்துகள்... நன்றி....

    பதிலளிநீக்கு

  34. மிக இனிய அருமையான பாடல்கள் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. அன்பான இனிய நல்வாழ்த்துக்ள்.

    பதிலளிநீக்கு
  35. திருக்குறளும் சினிமா பாடல்களும் எத்தனை தூரம் ஒத்துப் போகின்றன என்று உங்களின் இந்தப் பதிவிலிருந்து தெரிந்து கொண்டேன். யாரைப் பாராட்டுவது? உங்களையா? திருவள்ளுவரையா, சினயா பாடல்கள் எழுதியவர்களையா?

    அருமை, புதுமை!

    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  36. யார் மனதையும் புண்படுத்தாத சிறந்த பதிவுகளால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்துவிட்டீர்கள்..அனைத்துத் தமிழ்ப்பதிவர்களுக்கும் பிடித்த ஒரே பதிவர் நீங்கள்தான்..

    பதிலளிநீக்கு
  37. குறள்வழி பாடல் விளக்கம் அருமை! சிறப்பான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  38. படித்தேன் ரசித்தேன்...


    ரொம்ப பொருமைய அழகான பதிவை தொகுத்துள்ளீர் வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  39. தமிழ்மண மகுடம் வாழ்த்துக்கள்...

    தமிழ்மணம் 19

    பதிலளிநீக்கு
  40. அருமையான குறள்கள்; அதற்கேத்த பாடல்கள். நன்றிகள் பல. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  41. அடடா... அருமையான பதிவு தனபாலன் அண்ணா.

    எதை எடுத்துச் சொல்வதென்று தெரியவில்லை.

    நீங்கள் கேட்டற்காக..
    முழுமை பெற்ற காதல் என்றால்
    முதுமை வரை ஓடிவரும்

    பாவேந்தரின் குடும்பவிளக்கிலிருந்து..

    புதுமலர் அல்ல! காய்ந்த
    புற்கட்டே அவள் உடம்பு!
    சகிராடும் நடையாள் அல்லள்
    தள்ளாடி விழும் மூதாட்டி!
    மதியல்ல முகம் அவட்கு
    வறள்நிலம்! குழிகள் கண்கள்!
    எதுஎனக்(கு) இன்பம் நல்கும்?
    “இருக்கின்றாள்“ என்ப தொன்றே!!

    பழையதிலிருந்து தான் புதியவைகள் தோன்றுகிறது. ஆனால் புதுமையாகத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  42. நிலவு தொடர்பான வள்ளுவனின் அனைத்து பாக்களும் அதன் விளக்கமும் அதற்கேற்ற திரைப்படப் பாடலும் கலக்கல் DDசார்
    உங்க வழி தனி வழிதான்.

    பதிலளிநீக்கு
  43. அருமையான பாடல் . நிறைவான கருத்துகள் அடங்கிய கட்டுரை .உங்களுக்கே உரிய தனித்துவம் .அத்தனையும் அருமை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  44. நீங்கள் செய்யும் கிராபிக்ஸ் விதைகள் அருமை. உங்கள் திருக்குறள் தெளிவுரைக்காக காத்திருக்கிறேன்.


    வெண்ணிலவே வெண்ணிலவே
    விண்ணைத்தாண்டி வருவாயா
    விளையாட ஜோடித் தேவை ............

    பதிலளிநீக்கு
  45. மனதில் என்றும் நிற்கும் இனிமையான பழைய திரைப்படப் பாடல்கள்; திருக்குறளின் எளிமையான விளக்கம் ,இரண்டுமே அருமை அருமை

    பதிலளிநீக்கு
  46. குறளின் குரலில் காதல்.காதலுக்கு ஜாதி இல்லை மதமும் இல்லையே கண்கள் பேசும் வார்த்தையிலே பேதம் இல்லையே. கண்திறந்து காத்திருந்தேன்காதலந்தான் குடிபுகுந்தான் கண் திறந்தால் போய்விடுவான் கண்மூடிக் காத்திருப்பேன்.

    பதிலளிநீக்கு
  47. குறளுக்கேற்ற ரசனை பாடல்கள்...!

    வேரின்றி விதையின்றி விண் தூவும் மழையின்றி இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே....

    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாருமில்லையே... என்ற பாடலின் ஒவ்வொரு வரிகளும் காதலை மென்மையாக சொல்லும்.மனம் லயித்து கேட்பதுண்டு!
    படம்- மதராச பட்டினம்.




    ( கருத்துரை பெட்டி chorme-ல் வேலை செய்கிறது )

    பதிலளிநீக்கு
  48. அட அட அற்புதம் போங்க..திருக்குறள், ஒவ்வொன்றிற்கும் விளக்கம், ஏற்ற பாடல், அதை இங்கு அளிக்கும் விதம்..எதைச் சொல்ல..கலக்கிட்டீங்க திரு.தனபாலன்..எப்படிதான் சரியான பாடல் கண்டுபிடித்து இணைக்கிறீங்களோ :)
    திருக்குறள் முழுவதும் கரைத்து குடித்துவிட்டீர்கள் போல .. மலைப்பாக இருக்கிறது :)
    அருமையானப் பதிவிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு

  49. வணக்கம்!

    அருமை! அருமை! மிகஅருமை!
    அளித்த குறளோ மிகஇனிமை!
    பெருமை! பெருமை! மிகப்பெருமை!
    பேணும் வலையில் பலபுதுமை!
    ஒருமை உளத்தால் உன்பதிவை
    உற்றுப் படித்து வாழ்த்துகிறேன்!
    கருமை வைத்துக் காத்திடுக!
    கண்ணின் அலைகள் கழியட்டும்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


    பதிலளிநீக்கு
  50. குறளும் பாடல்களும் நீங்கள் தொகுத்துத் தருவது அழகு.

    பதிலளிநீக்கு
  51. இந்தப் பாடல் எத்துணை பழையது. எத்தனை தடவை கேட்டிருப்பேன். ஒரு தடவை கூட இப்படி ஒரு கோணத்தில் பார்த்ததே இல்லை. மிகவும் அருமையான ஆக்கம்.

    பதிலளிநீக்கு
  52. குறளுடன் கொடுத்த எல்லா பாடலும் அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  53. எல்லாம் படித்த பின்னே
    எதைஎதையோ எழுதவந்தேன்
    அருமை என்று சொல்லிவிட
    அணுகளவும் மனமில்லை
    அத்தனை சிறப்பாக எல்லாம்
    அடிமனதில் உறைந்ததனால்
    அரிதரிது பதிவில் அரிது
    அழகழகு அழகிலும் அழகென்று
    ஆன்மாவால் வாழ்த்துகின்றேன்
    அன்புருகி நிற்கின்றேன்...!

    குறளுக்கேற்ற பாடல் வரிகள் மிக பொருத்தம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  54. உங்க பதிவுகள் அறிவின் தெளிவை தரும் நேரம், சுட்டும் பாடல் வரிகள் நினைவில் வெகுநேரம்...

    பதிலளிநீக்கு
  55. குறள் மற்றும் பாடல் தொகுப்புகள் மிக அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  56. அனிச்ச மலரழகே!

    கவிதை, பாடல்கள், கருத்துகள் எல்லாம் அருமை..

    பதிலளிநீக்கு
  57. பாடலுடன் சேர்ந்த கவிதை அருமை அண்ணா

    பதிலளிநீக்கு
  58. உங்கள் உழைப்பு அசர வைக்கிறது தனபாலன். ஒவ்வொரு குறளின் விளக்கமும் அதற்கான பாடலும் என அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  59. வணக்கம்
    தனபால்(அண்ணா)
    அருமையான குறளும் பழைய பாடல்களும் கலந்த ஒரு வித அதிரடிக் கலவை பதிவு அருமை வாழ்த்துக்கள் அண்ணா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  60. நண்பரே
    இந்த பதிவு பற்றி என் உள் உணர்வுகளை எப்படி சொல்வது என தெரியாமல் புரியாமல் தவிக்கிறேன். அருமை என ஒரு சொல்லில் அடங்க மறுக்கிறது

    பதிலளிநீக்கு
  61. எத்தனையோ விளக்கங்களை திருக்குறளுக்காக படித்து இருந்தாலும், உங்களது விளக்கங்கள் சுவையாகவும், மனதில் எளிதில் பதியும் வண்ணமும் இருக்கிறது....... நல்ல பதிவுக்கு நன்றிகள் !

    பதிலளிநீக்கு
  62. பழைய பாடல்களைப் படித்தேன், ரசித்தேன். நன்றி. ஜம்புலிங்கம்.

    பதிலளிநீக்கு
  63. அட்டகாசம் போங்க ....!

    தமிழ் இலக்கியப்பாடல்களும் , திரை இசைப்பாடல்களும் அப்படிங்குற தலைப்புல நீங்க ஒரு ஆராய்ச்சி பண்ணுங்கன்னேன்...!


    திண்டுக்கல் தனபாலன் ... ! டாக்டர் திண்டுக்கல் தனபாலன் ஆகிடுவீங்க ...!

    DD TO DDD.....!

    பதிலளிநீக்கு
  64. குறளும்,விளக்கமும்,மறைந்துள்ள பாடல்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  65. குறள்களும்,அவற்றிற்கான விளக்கங்களும் அருமை. குறள்களுக்கு ஒத்துப் போகும் இனிமையான திரைப் பாடல்களும் அவற்றை நீங்கள் வழங்கிய விதமும் மிக அருமை ஐயா. மிகவும் இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  66. வித்யாசமான முயற்சி! ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  67. திண்டுகல் தனபாலன் அவர்களே !

    சற்றே ஞாபகப்படுத்தி சொல்லிவிடுங்கள்.

    முற்பிறவியில் நீங்கள் வள்ளுவர் தானே !!

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
  68. அருமையான அபூர்வமான தொகுப்பு. பொருத்தமான பாடல்களைத் தெரிவுசெய்ய எவ்வளவு மினக்கெட்டிருப்பீர்கள் என்பதை நினைத்துப் பார்த்தேன்!

    பதிலளிநீக்கு
  69. நல்ல படைப்பு....தொடரட்டும் உங்கள் பணி....:-)

    என் வலைப்பூவிற்கு வந்ததற்கு நன்றி !!!

    பதிலளிநீக்கு
  70. வித்யாச முயற்சி அருமை தனபாலன் சார்

    பதிலளிநீக்கு
  71. வணக்கம்
    தனபால் (அண்ணா)

    பதிவு மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  72. குறளுடன் பாடல்கள் மனதில் உவகையூட்டிச் சென்றது நண்பா...!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  73. ரசித்தேன், சவைத்தேன் நன்றி

    பதிலளிநீக்கு
  74. பாடல்களின் தொகுப்பு பரவசத்தில் திளைப்பு இனிமையின் சுவைப்பு இன்பக்களிப்பு அருமை

    பதிலளிநீக்கு
  75. டி.டி. சார்...
    என்ன ஒரு ஒப்பீடு..!
    திருக்குறள் பத்தோடு ஒப்ப நிறுத்திய எத்துணை திரைப்படப்பாடல்கள்..!
    திருக்குறள் வராமல் பின்பு வெறி கொண்டு வாசித்தது என்றாலும் திரையிசைப்பாடல்களை மனதில் இருத்தாதது எவ்வளவு பேரிழப்பு என்பது இப்போது தெரிகிறது.

    நீங்கள் காட்டிய திருக்குறளில் “ நல்ல படா பறை “ எனும் இடத்தில் நான் விளங்கிக் கொண்ட அருமையான குறிப்பு ஒன்று உள்ளது.

    எனது தற்போதைய (பழைய) பதிவு காட்டும் பாடல்கள் இருப்பின் அறியத்தாருங்கள்.

    தனிப்பதிவாக எனில் தனிப்பதிவாக..

    பின்னூட்டத்தில் எனில் பின்னூட்டத்தில் ....

    ஏனெனில் அதன் இருண்மை...

    பொருட்புலப்படுத்தாமை குறித்த பின்னூட்டங்களுக்குத் தங்களின் திருக்குறள் விளக்கம் போல அது நிச்சயம் எளிதாய் இருக்கும்.

    என் தளத்திற்கு வருவதற்காகவும் தொடர்ந்து கருத்துகளை இட்டு ஊக்கப்படுத்துவதற்காகவும் எப்பொழுதும் நன்றியுடையேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  76. எவ்வளவு ஆழமான பதிவு. சிறப்பான முயற்சி. உங்கள் பதிவை நீங்கள் அழகு செய்யும் விதமே சிறப்புத்தான்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.