🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉மனமே உனக்கு உபதேசம் இதே...

அனைவருக்கும் வணக்கம்... ஆய்வுப்பதிவு எழுதும் போது பாடல் வரிகளையும் எழுதினால் ஆய்வின் போக்கு மாறக்கூடும்... அதனால் ஊழ் அதிகார இரண்டாவது ஆய்வுப் பகுதியை பிறகு பகிர்கிறேன்... ஆனால், பக்கம் பக்கமாக எழுதுவதை ஒரே ஒரு படம் உணர்த்துவதைப் போல, பாடல் வரிகளும் எளிதாக உணர்த்தும்... குறளுக்கேற்ப ஒவ்வொரு பாடலுக்கும் முன்பாக, குறளை பாடும் திருவள்ளுவர் தாத்தாவையும், அதன்பின் குறளைவிடக் குறைவாக விளக்கம் கூறும் வாசுகி பாட்டியையும் பற்றி பலர் விளக்கம் கேட்டார்கள்... அது ⇣


1) இணையத்தில் 1330 குறள்களையும் கொண்ட, கேட்பொலியாக உள்ள காணொளிகள் பலவற்றில், எனக்குப் பிடித்த ஒரு இணைப்பு
2) அந்த காணொளியை கேட்பொலியாக மாற்றி, அதில் வேண்டியதை வெட்ட இணைக்கத் தொழினுட்ப பதிவின் இணைப்பு
3) ஒவ்வொரு அதிகாரம் வாரியாக கேட்பொலியை தரவிறக்கம் செய்து கொள்ள மற்றொரு இணைப்பு
திரைப்படப் பாடல்கள் ரசிகர்களுக்கு ஒரு ஊகித்தல் தேர்வு : குறளும் அதன் விளக்கமும் வாசித்து விட்டு, (1) அதற்கேற்ப மனதில் தோன்றும் பாடலை ஊகித்து விட்டு, கேட்பொலி (►) பொத்தானைச் சொடுக்கிக் கேட்கலாம் / (2) நீங்கள் கணித்த பாடலுள்ள குறள் எண்ணையும் கருத்துரையில் தெரிவிக்கவும்...
சரி, இந்தப்பதிவில் குறளுக்கேற்ப பாடல் வரிகளிலிருந்து இந்தப் பதிவிற்கும், 5 தலைப்புக்கள் தேர்ந்தெடுத்துச் சிந்தித்ததைத் தருகிறேன்... இதன் மூலம் எளிதாக ஊகிக்கலாம்... கவனிக்கவும் ஒவ்வொரு பாடலுக்குமிடையே ஒரு கோடு போட்டு () பிரித்துள்ளேன்... சேர்த்து வாசித்து எதற்கு வீண் குழப்பம்...? 5 பாடல்களின் வரிகள் இதோ ⇣

⟪ இயற்கையே சிரிக்கும் எத்தனை கோடி பணமிருந்தாலும் வருந்தாதே மனமே பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் இறந்தவன் அல்லவோ திறக்கின்றான் ⟫

இந்தப்பதிவிற்கு மேலே உள்ள 5 தலைப்புகளும் திருப்தியில்லை... முடிவாக என்கிற முதல் பகுதியின் தலைப்பு, இன்றைய இரண்டாம் பதிவின் தலைப்பிற்குச் சரியாக இருக்குமென்று முடிவு செய்தேன்... இந்த தலைப்பும் ஒரு பாடலில் வரும் சிறு வரியே... அந்த சிறப்பான பாடல் தான், ஒரு குறளுக்கு இரு பாடல்களைத் தேர்வு செய்ய ஆரம்பித்து வைத்தது...! கடவுள் பற்றிய சிறு விளக்கமும் அந்த கேட்பொலியில் உள்ளது...


பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம 376

ஆகாதவற்றை வருந்தினாலும் பெறமுடியாது, தமக்குரியதை எறிந்தாலும் இழக்கமுடியாது...
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை... வந்தவர் யாருமே நிலைத்ததில்லை... தொகுப்பார் சிலர் அதைச் சுவைப்பதில்லை... தொடங்குவார் சிலர் அதை முடிப்பதில்லை... சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்... தீமைகள் செய்பவன் அழுகின்றான்... இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்... ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆ╱ற╱டி━நி╲ல╲மே━சொ╱ந்╱த╱மடா...© நீர்க்குமிழி சுரதா V.குமார் சீர்காழி கோவிந்தராஜன் @ 1965 ⟫எங்கே வாழ்க்கை தொடங்கும்...? அது எங்கே எவ்விதம் முடியும்...? இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது... பாதையெல்லாம் மாறிவரும், பயணம் முடிந்துவிடும்... மாறுவதைப் புரிந்து கொண்டால், மயக்கம் தெளிந்துவிடும்... நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை... நடந்ததையே நினைத்திருந்தால், அமைதி என்றுமில்லை... ⟪ © நெஞ்சில் ஓர் ஆலயம் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி P.B.ஸ்ரீனிவாஸ் @ 1962 ⟫


வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது 377

எவ்வகைச் செல்வம் உடையவர்க்கும் முறைப்படியே எதனையும் துய்க்கமுடியும்...
அர்த்த ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ஆடிக்கொண்டே நுழைவதை, அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டங்கள் செய்வதை, அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால் வெட்கம் வருவது இல்லையா...? சின்னையா நீ சொல்லையா... எத்தனை கோடி பணமிருந்தாலும் - நிம்மதி வேண்டும் வீட்டிலே... ⟪ © அன்பு எங்கே கண்ணதாசன் வேதா P.சுசீலா @ 1958 ⟫விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால், மதியும் மயங்குதடா - சிறு மனமும் கலங்குதடா... கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா - கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா... மனிதன் நினைப்பதுண்டு - வாழ்வு நிலைக்குமென்று... இறைவன் நினைப்பதுண்டு - பாவம் மனிதனென்று... ⟪ © அவன் தான் மனிதன் கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1975 ⟫


துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின் 378

துன்புறுக்கும் வேண்டிய முறைமையினால், பொருள் இல்லாதவர் துறவாதிருக்கின்றனர்...
அத்தனை செல்வமும் உன் இடத்தில் - நான் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்...? - வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் - அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்... பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே - உன் அருள் அருள் அருள் என்று, அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே... ⟪ © நான் கடவுள் இளையராஜா இளையராஜா மது பாலகிருஷ்ணன் @ 2009 ⟫பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே... ☀☊ பொம்மலாட்டமென்றேயிரு பொல்லாவுடலை அடர்ந்த சந்தைக் கூட்டமென்றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர் ஓட்டமென்றேயிரு நெஞ்சே உணர்த்துவதேசமிதே... ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம் அன்பென்றிரு... ⟪ © பட்டினத்தார் பட்டினத்தார் G.ராமநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1962 ⟫


நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன் 379

நல்வினையால் இன்பம் ஏற மகிழ்பவர், தீயவை உண்டாகும்போது துன்புறுதல் ஏன்...?
பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்... ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே... இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்... முகிலினின் கண்ணீர் மழையெனச் சொல்வார்... இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் - மனிதன் அழுதால் இயற்கையே சிரிக்கும்... இயற்கையே சிரிக்கும்... ⟪ © கவலை இல்லாத மனிதன் கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் J.P.சந்திரபாபு @ 1960 ⟫சதிச்செயல் செய்தவன் புத்திசாலி - அதைச் சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி... உண்மையைச் சொல்பவன் சதிகாரன் - இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்... கடவுள் ஏன் கல்லானான்...? - மனம் கல்லாய் போன மனிதர்களாலே... ⟪ © என் அண்ணன் கண்ணதாசன் K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1970 ⟫


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும் 380

ஊழ்வினை மிக்க வலிமையுடையது... ஒன்றைச் செய்ய எண்ணினால், வினை தனக்குரியதைச் செய்யும்...
எழுதிச் செல்லும் விதியின் கை, எழுதி எழுதி மேற் செல்லும்... அழுதாலும் தொழுதாலும் – அதில் ஓரெழுத்தும் மாறாதே... இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப்பார்... இலைகள் உதிர்ந்து மீண்டும் தோன்றும் - நிலையை எண்ணிப்பார்... ஒரு போதும் அவனன்றி ஓரணுவும் அசையாதே... வருந்தாதே மனமே - வீணே வருந்தாதே மனமே... ⟪ © போர்ட்டர் கந்தன் அ.மருதகாசி விஸ்வநாதன்-ராமமூர்த்தி S.C.கிருஷ்ணன் @ 1955 ⟫இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா...? உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா...? கூக்குரலாலே கிடைக்காது – இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது... ⟪ © பாலும் பழமும் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன் @ 1961 ⟫ ∬ கவியரசரின் முதல் திரைப் படப்பாடல் : கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே - உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே ஒரு தினமே... கலங்காதிரு மனமே... ⟪ © கன்னியின் காதலி கண்ணதாசன் C.R.சுப்புராமன், S.M.சுப்பையா நாயுடு K.V.ஜானகி @ 1949 ⟫


கடவுள் பற்றிய சிறு விளக்கத்தைக் கேட்டவர்கள் அதைப்பற்றியும் கருத்துரையில் கூறவும்...நன்றி...


புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்


 1. வழக்கம்போல் குறளும், பாடலும் அருமை ஜி

  கண்ணதாசனின் முதல்பாடல் அறிந்து கொண்டேன்.

  எல்லா கேட்பொலியும் ரசித்தேன் நன்றி.

  பதிலளிநீக்கு
 2. போஸ்ட் மிக அழகாக டிசைன் பண்ணி எழுதுறீங்க.... இதை நீங்கள் யூ ரியூப்பில் மினக்கெட்டுச் செய்தால், பொழுதுபோக்கோடு பணமும் கிடைக்கும் என்பது என் ஒரு தாழ்மையான கருத்து... குறள்களும் பாடல்களும்... சொல்லி வேலையில்லை...

  பதிலளிநீக்கு
 3. வாசித்தேன், கேட்டேன், ரசித்தேன், பிரமித்தேன். சில பக்கங்களை ஸ்டார் செய்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. தேர்ந்தெடுத்த பாடல்கள் அனைத்துமே சிறப்பு. ஒவ்வொரு குறளையும், அதற்கேற்ற பாடலையும் தெரிவு செய்து, தேவையான அளவு வெட்டி, ஒட்டி - எத்தனை உழைப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும் தனபாலன்.

  பதிலளிநீக்கு
 5. //இணையத்தில் 1330 குறள்களையும் கொண்ட, கேட்பொலியாக உள்ள காணொளிகள் பலவற்றில், எனக்குப் பிடித்த ஒரு இணைப்பு ☛இங்கே☚ அந்த காணொளியை கேட்பொலியாக மாற்றி, அதில் வேண்டியதை வெட்ட இணைக்கத் தொழினுட்ப பதிவின் இணைப்பு ☛இங்கே☚ ஒவ்வொரு அதிகாரம் வாரியாக கேட்பொலியை தரவிறக்கம் செய்து கொள்ள மற்றொரு இணைப்பு///


  அருமை பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 6. தங்களின் உழைப்பிற்கு மிக்க நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 7. --கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது.--இந்த ரஜினி டயலாக் மூலம் வள்ளுவர்தான் போல --ஒவ்வொரு குறள் பதிவுக்கும் உங்கள் ஈடுபாடு அசாதரணமானது . வாழ்த்துகள் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 8. குறள் தரும் அமுதத்தோடு தொழிட்நுட்பமும் கற்றோம். நன்றி

  பதிலளிநீக்கு
 9. எல்லாக் குறள்களும் தெரிய வில்லையே என்னும் ஆதங்க ம் எழுவதை தவிர்க்க முடியவில்லை

  பதிலளிநீக்கு
 10. குறளும் அதை அழகாய் புரிந்து கொள்ள திரைப்படபாடல்களும் நல்ல தேர்வு.

  உங்கள் பொழுதுகள் நல்ல பொழுதாக போகிறது. பயனுள்ளது.

  கடவுள் மனிதனுக்கு சந்தர்ப்பங்களை கொடுத்து கொண்டு இருக்கிறார்
  திருந்த மனிதனாக வாழ . இறைவனின் விருப்பம் போல் மனிதன் மனம் மலரட்டும் மனிதநேயத்தாலும், அன்பாலும்.

  இப்போது இரக்கமும், கருணையும் உள்ள அன்பு உள்ளங்கள் நிறைய செய்து கொண்டு இருக்கிறார்கள்.

  அவர்களால் தான் இந்த பூமி வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

  உங்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.


  பதிலளிநீக்கு
 11. என் பேஸ்புக்கில் திருக்குறள் தளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளேன். அருமை அருமை.

  பதிலளிநீக்கு
 12. அன்புதான் கடவுள் என்று பட்டினத்தார் சொல்கிறார்.
  இப்போது கஷ்டகாலத்தில் பசித்தவர்களுக்கு உணவு கொடுப்போர் எல்லோரும் தெய்வம்தான்.

  பதிலளிநீக்கு
 13. அன்பு தனபாலன்,
  குறள்களும், அவைகளை நீங்கள் பாஅடல்கள் வழி தந்திருப்பதும்
  அருமை. எத்தனையோ வருடங்களாகக் கேட்ட பாடல்கள்.
  அத்தனையும். அனுபவங்களைப் படியெடுத்துச் சொல்லிச் செய்கின்றன.
  இதை உணர்ந்தாலே நாம் நல்வழியில் செல்வோம்.
  உங்கள் பதிவு ஒவ்வொன்றும் மனதில் இருந்து கொண்டிருக்கும். மனம் நிறை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. தொகுப்பு அருமை தனபாலன். முதலாவதாக உள்ள கேட்பொலி இணைப்பைப் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி. என்றாவது எனக்குத் தேவைப்படும். குறித்தி வைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. பாடல்கள் சிறப்பு விளக்கங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 16. குறளுக்கேற்ற பாடல்களை அழகாகத் தொகுத்து தந்திருக்கிறீர்கள். பாராட்டுகள். ஆனால் என்னால் சரியான பாடல்களை கண்டுபிடிக்க இயலவில்லை.

  378 ஆவது குறளுக்கான இரண்டாவது பாடலில் வரும் உரையாடல் ‘உள் கட உள் கட’ என்ற அகப்பொருள் தான் கடவுள் என்பதை தெளிவாக சொல்லிவிட்டது.

  அதோடு பட்டினத்தாரின்

  ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்
  அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
  நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
  என்றென்றிரு மனமே உனக்கே உபதேச மிதே.

  என்ற பாடலை திரு T.M.சௌந்தரராஜன் அவர்கள் பட்டினத்தார் திரைப்படத்தில் பாடியதை இணைத்து அதில வரும் கடைசி சொல்லையே இந்த பதிவுக்கான தலைப்பாக தேர்தேடுத்தமைக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 17. சாதி..சாதி வெறியைப் பற்றிய குறள் இருந்தால்.... உபதேசமாக இருக்கும்...

  பதிலளிநீக்கு
 18. முற்பிறவியில் செய்த ஆய்வு இப்பிறவியிலும் தொடர்கிறதோ? குறளாய்வு அருமை. பாடல் தேர்வு மிக அருமை.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.