🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



இயற்கை...

வணக்கம் நண்பர்களே... ஊழ் அதிகார ஆய்வின் இரண்டாவது பகுதியைத் தொடர்கிறேன்... முதல் ஆய்வுப்பகுதியின் இணைப்பு ☛


400 ஆண்டுகளுக்கு மேலாகக் கண்ணுக்குத் தெரிந்ததை ஆராயப்பட்டு வரும் இந்த பேரண்டத்தில், அனைத்து கோள்களும் விண்மீன்களும், ஒரு முறைமையுடன் இயங்கியும் இயக்கியும் வருகிறது... அதில் சிறு அணுவான உலகத்தில், இயற்கை என்கிற ஊழும், ஒரு ஒழுங்கு முறையினூடே இயங்குகிறது... ஆனால் மனிதனின் எல்லாக் கணிப்பிற்கும் கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்டு, இந்த இயற்கை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது... அந்த 'இயற்கை' ஊழ் அதிகாரத்தில் எங்கு வருகிறது...? ஒரு குறளுக்கு இதே அதிகாரத்தில் எத்தனை தொடர்பு உள்ளன என்பதையும் கவனிக்கிறேன்... இருவேறு உலகத்து திருவேறு தெள்ளிய ராதலும் வேறு (374) அறமும்-மறமும், அருளும்-பொருளும் எதிர்நிலை கொண்ட நேர் முரண்கள்... அப்படியில்லாத செல்வமும் அறிவும் இருவேறு நிலைகள்... செல்வந்தராவதும் அறியுடையராவதும், இரு காகிதங்களான பணமும் புத்தகமும் என நினைத்தால் அறியாமை... அறிவுக்குச் சிறிய பாதை புத்தகம்... ஆனால், இயற்கை விதித்த விதியின்படி பெறுகிற அனுபவத்தால், நன்றின்பால் உய்ப்பது மட்டுமே அறிவு(373) அறிவு உட்பட எதையும் மாற்றும் சக்தி பணத்திற்கு உண்டு(375) அற்ப பணத்தை அனுபவிக்க முடியாமல் போக்கும் சக்தியும் பணத்திற்கு உண்டு(376) எல்லாம் உண்டு உண்டு என்றாலும், பொதுநலத்தைச் சிந்திக்க வைத்த சுயநலத்தால் துன்புறுவது ஏன்...?(379) இதற்கான பதிலை ஆராய...

அடுத்து ஊழ் அதிகாரத்தின் முந்தைய அவாவறுத்தல் அதிகாரத்தில், தெளிந்த அறியுடையராவதையும், சுயநலத்தால் துன்புறுவதேன் என்பதையும், சிந்திக்க வைக்கும் குறள்... → ஆரா அவாநீப்பின் அந்நிலையே தரும் (370) சுருக்கமான விளக்கம் → அமைதியாக மன நிம்மதியுடன் வாழ்வின் முடிவை எதிர்கொள்வதற்கு, எந்த வகையிலும் நிரம்பாத் தன்மையுடைய அவா இடைஞ்சலாக இருந்தால் அதை விட்டொழி... அப்பொழுதே நீங்காத இன்பம் கிடைக்கும்... இந்த அவாவறுத்தல் அதிகாரத்தில் ஆழ்ந்தால், வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் உள்ள மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது... இந்தக்குறளில் உள்ள என்பது ஒரே தன்மையான இயல்பு... அது வீடுபேறு, மோட்சம், பிறவா நிலை, கர்மா, என ஜாதகம், ஜோதிடம் உட்படப் பல கதைகளும் குறள்களில் இல்லை... புயல், பூகம்பம், சுனாமி போன்றவற்றை விட, இன்றைய தொற்று தொற்றினால் ஒரே கதை தான் போல... ம்... உயிர்கள் பரம்பொருளுடன் கொள்ளுகிற இணைப்பினால் ஏற்படுகிறது என்றும் திருக்குறள் கூறுவதில்லை...

இயற்கை அடுத்து...? அமைச்சு அதிகாரத்தில், செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து அறிந்து செயல் (637) ஐயன் யாருக்குச் சொல்லியுள்ளார் என்பதை விட, செயற்கை எனும் சொல் திருக்குறளில் இங்கு மட்டுமே...! அதை ஆராய்ந்தால், ஊழை ஒவ்வொரு நாடும் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதையும், மக்களாட்சி அல்லது மதயாட்சி அரசுகளின் செயல்பாட்டினால், உழைக்கும் மக்களுக்கும் உல்லாச மக்களுக்கும், ஏற்படும் விதி எனப் பலவற்றை அறியலாம்... இதைப்பற்றிய இணைப்பு


அறத்துடன் பொருளை ஈட்டி இன்புற, இயற்கையுடன் இயைந்து வாழ் என்பதையே, எனும் உறுதிப் பொருட்களின் தொடர் சிந்தனைகள் மட்டுமே திருக்குறள்களில் உள்ளது... அதனால் தான் உலகப்பொதுமறை... மேலும் உணர அதிகாரம் மெய்யுணர்தல்... இப்படியே போய்க்கொண்டு இருக்கும்...! அதனால் மற்றவை அடுத்த பதிவில்... மனிதத்தை உணர வைப்பதில், இது ஒரு சமய மத தொற்றில்லாத தொடர்ச் சங்கிலியாக விளங்குவதே குறள்கள்...!

பசிப்பிணி நீக்குவதே அனைத்து நாடுகளின் முதல் செயலாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்... நன்றி...

ஐயன் இயற்கையை இறைவனாகக் கண்டார், அந்த இறைவனில் தன்னையும் கண்டதாக அடியேன் காண முயல்கிறேன்... ஞானம் வர வைக்கும் பாடல்களில் இன்னொரு பாடல் : நன்றி...



© எங்க வீட்டுப் பெண் ஆலங்குடி சோமு K.V.மகாதேவன் 🎤 சீர்காழி கோவிந்தராஜன் @ 1965 ⟫

இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா… எனது உனது என்பதெல்லாம் இடையில் மாறும் பந்தமடா... வான் மழை நீரும் மண்ணின் குணத்தால், மாற்றம் அடைவதுண்டு... வஞ்சகர் உறவால் நல்ல மனிதரும் தீயவர் ஆவதுண்டு... உனக்கு முன்னே பிறந்த நிலம், ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம் - உனக்குப் பின்னும் இருக்குமடா, உரிமை என்றால் சிரிக்குமடா... இரவும் பகலும் இன்பமும் துன்பமும் இயற்கை வகுத்ததடா - இந்த இரண்டுக்கும் இடையில் அமைதி காண்பவன் இதயம் சிறந்ததடா...
நான் என்ற அகந்தையினாலே - நன்மை கண்ட மனிதர் இல்லை...
நாம் என்ற ஒற்றுமை வந்தால் - நாட்டினிலே துயரம் இல்லை...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. பசிப் பிணி நீக்குவதுதான் முதன்மையாக இருக்க வேண்டும் இதற்கு அரசு மட்டுமல்ல மக்களும் தன் அருகில் பசிப் பிணிகளோடு இருப்பவர்களை தங்களால் முடிந்த வரை அரவணத்து கொள்ள் வேண்டும் அதுவும் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் எந்த வித ஆர்பட்டம் இல்லாமல் சத்தமில்லாது நடை பெற வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. திருக்குறளுக்குள் மூழ்கி ஆராய்ந்து முத்துகளை வெளியில் கொட்டும் உங்கள் உழைப்பு போற்றத்தக்கது DD. இயற்கையைப் பற்றிச் சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை. உனக்காக ஒன்றும் எனக்காக ஒன்றும் இறைவன் படைத்ததில்லை வரிகளும் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு

  3. பசிப்பிணி போக்குவதே அனைத்து நாடுகளின் முதல்வேலையாக இருக்கவேண்டும் அருமை ஜி இதுதானே உயிர்நாடி.

    வழக்கம்போல சிறப்பான விளக்கம்.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா! அருமை.
    இதனை எழுதுவதற்காக எத்தனை நேரம் செலவளித்திருப்பீர்கள் என்பதை எண்ணி வியக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. வழமை போல உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் தனபாலன். திருக்குறளில் இத்தனை ஆராய்ச்சி செய்வதை வைத்து நீங்கள் முனைவர் பட்டமே வாங்கலாம் எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  6. வழக்கம் போல் சிறப்பு. இயற்கை- முதலிய இணைப்புகள் வேலை செய்யவில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கை எனும் சொல் தனியாக காட்டவே, ஒரு கட்டத்தில் காட்டி உள்ளேன்... இணைப்பு அல்ல...

      நீக்கு
  7. பசிப்பிணி மருத்துவமே இன்றைய முதல் தேவை
    அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  8. பசியை போக்குவது அரசின் பணியா
    வள்ளுவன் குறள் வாய்சவடாலுக்கு மட்டுமே
    எனவே, நீவிர் Anti Indian

    பதிலளிநீக்கு
  9. வழமைபோல் அருமையாக இருக்குது, வேறு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை, ஆனாலும் ஒரு வேண்டுகோள்.. எல்லாப் போஸ்ட்டுக்களும் திருக்குறளும் பாட்டும் விளக்கமும் என மட்டுமே இருக்குதே, கொஞ்சம் வித்தியாசமாகவும் இடையில் போஸ்ட் போட்டால் என்ன?..

    பதிலளிநீக்கு
  10. பதிவும், திருக்குறள் படமும் , பாடலும் மிக அருமை.
    இயற்கை அன்னை தந்தது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.

    நல்ல உள்ளங்கள் நிறைய பேருக்கு உதவி கொண்டு இருக்கிறார்கள்.
    இன்று மீனாட்சி கல்யாணம் எல்லோருக்கும் சாப்பாடு போடுவார்கள்.
    உரே திரண்டு கல்யாணச்சாப்பாடு செய்ய உதவுவார்கள்.

    எல்லோர் வீடுகளிலும் வடை பாயாசத்தோடு தெரிந்தவர் தெரியதவர்களுக்கு உபசரித்து உணவு கொடுப்பார்கள்.


    எங்கள் வளாகத்தில் வேலை செய்யும் பனியாளர்களுக்கு இன்று உணவு கொடுத்தார்கள். 20 பேருக்கு மேல் இருக்கிறார்கள். 150 வீடுகள் இருக்கிறது.

    அவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் வாங்கி கொடுக்கிறார்கள்.

    அவர் அவர்களுக்கு முடிந்த உதவி பணமாக அல்லது பொருட்களாக வாங்கி கொடுத்து பசிப்பிணி போக்க உதவி கொண்டு இருக்கிறார்கள்.

    திருக்குறளில் உங்களின் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்.

    நீங்கள் சொல்வது போல் பசிப்பிணி நீக்குவதே நல் அறம்.
    தொற்றால் இறப்பதை விட பசி பிணியால் இறந்தார்கள் என்று சொல்லாமல் எல்லா நாடுகளும் தங்கள் மக்களை காக்க வேண்டும்.


    பதிலளிநீக்கு
  11. பசிப்பிணி போக்க பணம் வெண்டும் அதற் கு மதுக்கடைகளை திறப்பதும் ஒரு வழி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடிகாரன் கூட திருந்த வாய்ப்புண்டு... அரசினால் முடியவில்லை...

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. இந்த தொற்று வந்ததிலிருந்து ஏற்கனவே வறுமை சூழ்ந்துள்ள ஏழை எளிய மக்களின் வறுமைப்பிணி அதிகமாகி விட்டது. அன்றாடம் உழைத்து சாப்பிடும் கட்டாயத்தில் உள்ள இவர்களது பசிப்பிணி முற்றிலும் விஸ்வரூபம் எடுக்கும் முன் இறைவன் மனித ரூபங்களில் வந்து இவர்களின் பிணியை கருணைக் கண் கொண்டு போக்க வேண்டும்.

    பதிவில் தேர்ந்தெடுத்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் அருமை.. அறம், பொருள், இன்பம் ஆகியவற்றிக்கு நீங்கள் தந்த விளக்கம் அருமை. திருக்குறளில் ஒவ்வொரு குறள்களையும் நீங்கள் அலசும் விதம் பிரமிப்பை தருகிறது. உங்களால் நாங்களும் பொருளுணர்ந்து குறள் கற்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. வழக்கம் போல அருமை நண்பரே.
    ஒரு சில நாடுகளில் கடையில் உண்ணும் உணவிற்கு வரி என்பது இல்லை. பல நாடுகளில் ...?

    பதிலளிநீக்கு
  14. பசிபிணி போக்குவதில் எவ்வளவு கமிஷன் அடிக்கலாம் என நினைக்கும் அரசியல்வியாபாரிகளின் கையில் சிக்குப்பட்டு உலகம் சீரழியுது டிடி!

    பதிலளிநீக்கு
  15. எப்பாடுபட்டாவது வாசகர்களைத் திருக்குறளின் பக்கம் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள். அற்புதமான முயற்சி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

  16. திருக்குறளை விரிவாக ஆய்ந்து ஐயன் இயற்கையை இறைவனாகக் கண்டதை விளக்கியமைக்கு நன்றி! திருக்குறளை எத்தனையோ பேர் ஆய்வு செய்திருந்தாலும் தங்களது ஆய்வு வேறு கோணத்தில் உள்ளது பாராட்டுகள்! தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. உலகில் ஆண்ட எந்த அரசுதான் மக்களின் பசிப்பினியை போக்கியது... இப்போது நிலவும் அரசு உள்பட.....

    பதிலளிநீக்கு
  18. திருக்குறளுக்கு மகுடம் சூட்டி, மிக அருமையாய் திருக்குறள் உதாரணங்கள் கொடுத்து அழகாய் எழுதி வருகிறீர்கள்! இந்தப்பதிவும் மிகவும் சிறப்பாகவே இருக்கிறது. ஓவியமும் அழகு!

    பதிலளிநீக்கு
  19. பாடல்களுடன் அருமையான விளக்கம் ப‌கிர்வுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  20. அருமை. வழமை போல தொழிநுட்பங்கள் இந்த பதிவிலும்.

    இயற்கைக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதனை மதியாது போனால் பின்விளைவு நமக்கே.

    அருமையான பதிவு.

    பாடல் தெரிவு அருமை. ரசித்தேன்.

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    பதிலளிநீக்கு
  21. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு நல்லப்பதிவில் துவங்குகிறேன் .

    பதிலளிநீக்கு
  22. பசியே அனைத்து துன்பத்திற்கும் காரணமாகிறது பசி மட்டும் இல்லனா பொருள் வேண்டாம் எதுவுமே தேடல் இல்லாம போகும்

    பதிலளிநீக்கு
  23. செயற்கை என்னும் சொல் திருக்குறளில் ஒரே ஒரு இடத்தில் வருகிறது என்பதனை சுட்டிகாட்டியதற்கு நன்றி !!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.