சுளகு

அனைவருக்கும் வணக்கம்...நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று (குறள் 222)

மோட்சம் எல்லாம் கிடையாது என்றாலும் கொடு | தானம் வாங்கினால் மோட்சம் கிட்டுமென்று யாரேனும் கதை விட்டாலும் வாங்காதே | ① ஏற்பது இகழ்ச்சி, ஐயமிட்டு உண் | ② குன்றக்குடி அடிகளார் : எந்தச் சூழ்நிலையிலும் கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்று... கொடுத்தலைத் தாழ்த்தியும் கொள்ளுதலை உயர்த்தியும் அறநூல் கூறுமானால் அஃது அறநூலன்று... அது பொய்ம்மையான சாத்திரம் என்று அறிக | ③ புறநானூறு 204-லில் | விளக்கங்கள் இவ்வாறு சென்று கொண்டிருக்கும் நண்பர்களே... ஆனால் இங்கே இந்தப்பதிவில் - முதல் எடுத்துக்காட்டு...!

திருக்குறள் முழுவதிலும் உள்ள 'கொளல்' எனும் சொல்லைத் தேடி, எழுத ஆரம்பித்த சிறிய பகுதி தான் மேலுள்ள பத்தி...! சரி, குறள்களில் எத்தனை இடங்களில் 'கொளல்' வருகிறது என்பதை எப்படித் தேடினேன்...? கணினி, கைப்பேசி போன்றவை இல்லாத, மாசற்ற தென்றல் காற்று வீசின வசந்த காலத்தில், திருக்குறளை எடுத்து 'கொளல்' உள்ள குறள்களைத் தேடினேன்... இது போன்ற தேடல்களால் அனைத்து குறள்களையும் வாசிக்கவும் ஒரு வாய்ப்பாக அமைவதோடு, தேடப்படுவதும் சற்றே திசை மாறி, வேறு பல குறள்களில் மூழ்கடிக்கப்படுவதும், திருக்குறளின் பல சிறப்புகளில் ஒன்று...! ஒரு இனிய அனுபவம் தான் நண்பர்களே... அதனால் இதுவும் இரண்டாவது எடுத்துக்காட்டு...!

சரி, கணினியில் உள்ள திருக்குறள் (Ms-Word file) கோப்பை திறந்து தேடுவதெல்லாம் ஆரம்பக் காலத்தில்...! இந்தக் காலத்தில் திருக்குறள் முழுவதும் உள்ள (Draft post) வரைவு பதிவைத் திறந்து தேடுவது...! எப்படி...? Ctrl-f தட்டி, வலது ஓரத்தில் சின்னதாக இருக்கும் தேடும் பெட்டியில், 'கொளல்' என்பதை இடுவேன்... அடுத்த நொடி எத்தனை இடத்தில் உள்ளன என்பதைக் காட்டி விடும்... தேடும் பெட்டியில் உள்ள மேலே (∧) கீழே (∨) பொத்தான்களைச் சொடுக்கி, எந்தெந்த குறளில் 'கொளல்' உள்ளது என்பதையும் அறிவேன்... ஆய்விற்கு எவ்வளவு எளிது பாருங்கள்...! இதுவரை சொன்னதெல்லாம் பலருக்கும் தெரிந்திருந்தாலும், புதியவர்களுக்காக... அதனால் இதுவும் மூன்றாவது எடுத்துக்காட்டு...! இனி பதிவிற்குச் செல்வோம் நண்பர்களே...
03.05.2020 அன்று தமிழ் மேல் பேரன்பு கொண்ட நம் நண்பர் நீச்சல்காரன் ராஜா அவர்கள், ஒரு தொழினுட்ப தகவலை முகநூலில் பகிர்ந்து கொண்டு இருந்தார்... அதில் 1330 குறள்களையும் இட்டு, 'கொளல்' சொல்லைத் தேடிப்பார்த்தேன்... ஆகா... சரியாக இருந்தது மட்டுமில்லாமல், அதன் வேகமும் மற்ற தகவல்களும் அசர வைத்தது... தமிழுக்கு உதவும் அவரின் தொழினுட்பங்கள் சிலவற்றின் இணைப்புகளை, கீழே ஒரு பட்டியலாகக் கொடுத்துள்ளேன்... 'சுளகு'-வைப் பற்றிய அவரின் விளக்கத்தை, அவசியமாக இந்த இணைப்பில் சென்று வாசிக்க வேண்டுகிறேன்... நமது பல தேடலுக்கு எவ்வாறெல்லாம் பயன் தரும் என்பதை அறிந்து கொண்டால், ஆர்வமும், ஆய்வுகள் செய்ய வேண்டும் எனும் எண்ணமும், தானே பிறக்கும் என்பது உறுதி...!


விளக்கம்
இணைப்பு
① தமிழ் சொல்லாய்வுக் கருவிசுளகு
② தமிழ்ச் சந்திப்பிழை திருத்திநாவி
③ தமிழ் பிழைதிருத்திவாணி
④ தமிழ் அகராதிகளின் ஒருங்கிணைந்த தேடல் தளம்அகராதி
⑤ சொற்பகுப்புத் திறன் கொண்ட தொகுப்பகராதிதொகுப்பகராதி
⑥ தமிழ் ஒருங்குறி மாற்றி; எழுத்து சீராக்கிஓவன்
⑦ பல்குறியீட்டுத் தமிழ் எழுதிமென்கோலம்
⑧ பிழைதிருத்தி குழுமம்நோக்கர்
⑨ புதிர்கள் (பி.பி.ஸ்ரீனிவாஸ்)சொற்புதிர்
⑩ கட்டங்களுடன் ஒரு கொண்டாட்டம்ஆடு புலி ஆட்டம்
⑪ கோலம் வரையும் செயலிகோலசுரபி
⑫ பதிவுத்திருட்டைத் தடுக்க ஒரு பூட்டுபூட்டுப்பட்டறை
⑬ வலைத்தளங்களுக்கான திரட்டிதமிழ்ச்சரம்

திருக்குறள் கோப்பு இல்லாதவர்களுக்காக :- கீழ் பெட்டியிலுள்ள 1330 திருக்குறள்களையும் சுட்டியால் (mouse) இழுத்துத் தேர்வு செய்து... நேரமாகுமே... அவசர உலகமாச்சே... ம்... ஐயனே என்ன செய்யலாம்...? ஓ...! கீழுள்ள உலகப்பொதுமறை எனும் பொத்தானை ஒருமுறை தட்டுங்கள், தேர்வு ஆகி விடும்... இனி உங்கள் (keyboard) விசைப்பலகையில் Ctrl-C சொடுக்கி, அதாவது நகல் (copy) செய்து, உங்கள் கணினியில் (Ms-Word file) கோப்பாகவோ அல்லது உங்கள் வலைப்பூவில் ஒரு வரைவு பதிவாகவோ சேமித்துக் கொள்ளுங்கள்... பிழை இருப்பின் கண்டிப்பாகச் சொல்ல வேண்டுகிறேன்... நன்றி...


ஒரு சிறிய ஆய்வு செய்வோமா நண்பர்களே...? வாசிக்கும் இந்த நொடியில், உங்கள் விசைப்பலகையில் Ctrl-f தட்டி, வலது ஓரத்தில் தோன்றும் சிறு பெட்டியில், 'கொளல்' என்பதைத் தட்டச்சு செய்யுங்கள்... மேலுள்ள படத்தில் உள்ளது போல் வரும்... (என்னது அதிகமாக வருகிறதா...? வேறு ஒன்றுமில்லை, அன்பு நண்பர்கள் 'கொளல்' எனும் சொல்லைக் கருத்துரையில் இட்டிருப்பார்கள் அல்லது இடலாம்...! அவற்றையும் கணக்கில் கழித்துக் கொள்வோம்...!) இந்தப்பதிவில் 'கொளல்' என்று 11 முறை எழுதியவற்றை விட்டு விடுவோம்... 34-11 = மீதம் 23... கூட்டுத்தொகை 2+3=5 வருகிறதே... திருக்குறளில் அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்ட எண் மற்றும் என்ற எண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிவோம்... அப்படியென்றால் 'கொளல்' எனும் சொல் ஏதேனும் சில குறள்களில் வேறாக உள்ளது...! அதாவது அடுத்த சீரில் சேர்ந்து இருக்கும்... யோசித்துத் தேடி பதம் பிரித்தால் கிடைத்து விடும்... அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, சொற்களைக் கையாண்ட விதத்தில் பல திருக்குறள் ஆய்வுகளைச் செய்யலாம்...! சரி, இந்த ஐந்து எண்களும் "தமிழரின் வாழ்வியலில் நெறிமுறைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளதா...?" அதற்கான ஆய்வு எங்கும் காணாமே...?! தாத்தாவிற்கு மட்டும் தான் தெரியும் போல... ம்... சிறப்பான ஒரு பாடலை கேட்போம்...

உலகினிலே தமிழ்நாடு உயர்க உயர்க... உலகினிலே தமிழர் திறம் ஓங்க ஓங்க... பலகலையும் தமிழகத்தே பரவி வாழ்க... பாடி வைத்த திருக்குறளைப் பணிவோம் யாமே...
வள்ளுவர் தந்த குறள் - வாழ்வை உயர்த்தும் குறள் - உள்ளம் தெளிய வைக்கும் -
தமிழே - உன்பெருமை என்ன சொல்வேன்
மன்னவர் மூவர் தங்கள் மடியில் தவழ்ந்த செல்வம் - என்னவர் நாவினிலே - தமிழே - என்றும் நிறைந்தவளே... பிள்ளைப் பிராயத்திலே - பேசும் பருவத்திலே... துள்ளும் மழலையிலே - தமிழே - தூயநடம் புரிந்தவளே... சிங்களத் தீவினிலே - சீனம் யவனத்திலே... எங்கும் உன் கொடி பறக்க - தமிழே - ஈடில்லா மேன்மையுற்றாய்...


© ஔவையார் ஔவையார் கிளிக்கண்ணி M.D.பார்த்தசாரதி K.B.சுந்தராம்பாள் @ 1953 ⟫

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. பதில்கள்
  1. உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள். உங்கள் செயலியை கடந்த ஒரு மாதமாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... மிகவும் நன்றி

   நீக்கு
  2. எனக்கே இன்று தான் முழுமையாகத் தெரிந்தது. வாழ்த்துகள். தனபாலன் இந்தப் பதிவு தனிப்பட்ட முறையில் சிலிர்ப்பாக இருந்தது. மிரட்டுவிட்டீங்கள்.

   நீக்கு
  3. நாங்கள் வாணி, நாவி , அகராதி தொகுப்பகராதி பயன்படுத்துகிறோம். மிக்க நன்றி

   கீதா

   நீக்கு
 2. நண்பர் நீச்சல்காரன் ராஜா அவர்களின் பயனுள்ள தொழில் நுட்ப தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி! Ctrl+c என தட்டி கொளல் என தட்டச்சு செய்தும் நீங்கள் குறிப்பிட்ட என் ஏதும் வரவில்லை. கொளல் என்னும் சொல்லை தேடிபபார்த்து பின்னோட்டம் இடுகிறேன்.


  ஔவையார் திரைப்படத்தில் வந்த, குறளைப் போற்றும் பாடலை நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்டு இரசிக்க உதவியமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா... வணக்கம்... அது Ctrl-c அல்ல... Ctrl-F → அதாவது தேடுதலுக்கான சுருக்கு விசை(shortcut for search)

   Ctrl key-யை அழுத்திக்கொண்டு F key-யை தட்டுங்கள்... வலது ஓரத்தில் மேலே ஒரு சிறிய தேடுதல் பெட்டி வரும்... எடுத்துக்காட்டாக அதில், f-i-l-e (file) என்று அடிக்கும் போதே தேடுதல் ஆரம்பித்து விடும்...!

   நீக்கு
 3. நீச்சல்காரன் என்பவரை நான் சமீபத்தில்தான் தமிழ்சரம் மூலம் அறிந்தேன் அவரின் வாணி தமிழ் செக்கர் மூலம்தான் இப்போது என் பதிவுகளை திருத்தி வெளியிடுகின்றேன் அதனால் எனது தளத்தில் இப்போது வரும் பதிவுகள் எல்லாம் பிழைகள் இல்லாமல் வருகின்றது. அவருக்கும் அவரது முயற்சிகளுக்கும் தமிழ் பற்று மற்றும் தொண்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்

  பதிலளிநீக்கு

 4. வணக்கம் ஜி
  வெகுநேரமாக அலைபேசியில் ஒரு நிலையில் பதிவு நிற்கவில்லை மேலும் கருத்துரையும் எழுத இயலவில்லை.

  பதிவு வழக்கம்போல் அருமையான தொழில்நுற்பமும் கூடி நேற்றுதான் சிவயோகி சிவக்குமார் அவர்களது சுட்டி கண்டு தளத்தின் வழியே நானும் ஐயாவின் பால் ஈர்க்கப்பட்டு திருக்குறள் உரையுடன் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்

  அதாவது... அ ஆ இ ஈ தொடக்கமாகி படிக்க ஆ....ரம்பம்

  நீச்சல்காரன் சுட்டிக்கு சென்றேன் பிறகு கணினி வழியாக செல்கிறேன்.

  நன்றி


  "சுளகு" படம் மிக அழகு எங்கள் தேவகோட்டை தமிழில் "சொளவு" என்று சொல்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா...! திருக்குறள் உரை படிக்க ஆரம்பித்து விட்டீர்களா...? மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் கில்லர்ஜி...

   1330 குறள்களும் உள்ளதால் கைப்பேசியில் பதிவு திறக்க தாமதம் ஆகலாம்... இதை உறுதியாக சொல்லவும் முடியாது... ஏனென்றால் நீங்கள் வைத்திருக்கும் இணைய இணைப்பு பொறுத்தது... எனது அனைத்து பதிவுகளும் கைப்பேசிக்கு ஏற்றவாறு எப்போதோ மாற்றி விட்டேன்... ஆனால் சில பதிவுகள், முக்கியமாக இந்தப் பதிவு திருக்குறளை சேமித்துக் கொள்ள கணினியே உதவும்...! அது மட்டுமில்லாமல் நண்பர் நீச்சல்காரன் அவர்களின் செயலிகள் அல்லது கருவிகள் அனைத்தையும் கணினியில் ஒவ்வொன்றாக திறந்து, bookmark செய்து கொண்டு பயன்படுத்திப் பாருங்கள்... சுவாரஸ்யங்கள் + வியப்புகள் அடைவீர்கள்... நன்றி கில்லர்ஜி...

   நீக்கு
  2. கணினியில் திறந்து பார்த்தேன் ஜி

   நீச்சல்காரரின் ஊரணிக்கு சென்று நீச்சலிட்டு மூழ்கி வந்தேன் மூச்சு திணறுகிறது.

   அலைபேசியிலும் தங்களது திருக்குறள் அமைப்பு பார்த்தேன் ஜி

   நன்றி.

   நீக்கு
 5. உங்கள் நண்பர் நீச்சல்காரன் அவர்களின் தொழில்நுட்ப செயலிகள் மற்றும் அதற்கான லிங்கை உங்கள் தளத்தில் இருந்து காப்பி பேஸ்ட் செய்து சேமித்துக் கொண்டேன் அதை வைத்து நானும் ஒரு பதிவுகள் இடுகின்றேன் ... தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி தனபாலன்

  பதிலளிநீக்கு
 6. குற ளில் முனைவர் பட்டம்பெற டிடியை தொடர்பு கொள்ளவும்

  பதிலளிநீக்கு
 7. மிகவும் அருமை. பயனுள்ள விடயங்கள். . நன்றி

  பதிலளிநீக்கு
 8. தனபாலன் வாணி லிங்கை க்ளிக் செய்தால் அது நாவி தளத்திற்கு செல்லுகிறது.... லிங்கை சரிபார்க்கவும்

  பதிலளிநீக்கு
 9. எதிர் நீச்சலில் என்னையும் நீச்சல் அடிக்கவைத்து விட்டீர்கள்.... நன்றிகள் பல !

  பதிலளிநீக்கு
 10. நண்பர் நீச்சல்காரன் அவர்களின் பணி மிகச் சிறப்பானது. பாராட்டுகளும் வாழ்த்துகளும். இந்தப் பதிவினை சேமித்துக் கொண்டேன். நன்றி.

  சிறப்பான பதிவுகளை வெளியிட்டு வரும் உங்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 11. நண்பர் நீச்சல்காரன் அவர்கள் தமிழுலகிற்குப் பல அரிய பணிகளைச் செய்து வருகிறார்.
  சிறிய வயதிலும் பெரும்பணியாற்றிவரும் நண்பர் நீச்சல்காரன் அவர்களைப் போற்றுவோம்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 12. நண்பர் நீச்சல்காரருக்கு வாழ்த்துகள். கணினி ரெடியானதும் சேமித்துக் கொள்ளவேண்டும்.

  பதிலளிநீக்கு
 13. நீங்கள் அறிமுக படுத்திய நீச்சல்காரருடைய அரிய பணிகளை தெரிந்து கொண்டேன். அவருக்கும், உங்களுக்கும் நன்றி. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  உங்கள் பதிவை சேமித்துக் கொண்டால் என் கணவருக்கு உதவும் என்று நினைக்கிறேன்.
  சுளகு படம் நன்றாக இருக்கிறது தஞ்சை பக்கம் இப்படித்தான் கிடைக்கும், மதுரை, திருநெல்வேலியில் எல்லாம் வேறு மாதிரி இருக்கும் சொளவு என்று சொல்வார்கள். பழைய பேப்பரிலிருந்து சுளகு படங்கள் எடுத்து வைத்தேன். சொளவு செய்பவர்களின் கஷ்டத்தை சொல்லும் செய்தி வந்த பக்கத்தை.

  இப்போது பிளாசிடிக் முறம் வந்து விட்டதால் (மேலே காண்பித்த படம் போலவே) பழமைக்கு மதிப்பு இல்லை இப்போது என்று முறம் செய்பவர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள்.

  ஒளவையார் பாடல் பகிர்வு அருமை. தமிழின் பெருமையை சொல்லும் பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
 14. நண்பர் நீச்சல்காரன் பற்றி அறிவேன். நாவி.வாணி பிழை திருத்தி உபயோகித்துள்ளேன். இன்று உங்கள் பதிவில் கூடுதல் விவரங்கள் அறிந்தேன். நன்றி.
  தளிர் சுரேஷ். (நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு)

  பதிலளிநீக்கு
 15. பகிர்வுக்கு நன்றி சகோ .அந்த பிழை திருத்தியை நானும் பயன்படுத்த முயல்கிறேன் .

  பதிலளிநீக்கு
 16. பிழை திருத்தி எனக்கு பயன்படுத்திபார்த்தேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 17. ஐயா! மிகச் சிறப்பான பதிவு! கணித்தமிழ்ப் பெருந்தகை நீச்சல்காரன் அவர்கள் செய்து வரும் நான்காம் தமிழ்த் தொண்டு அளப்பரியது! அது குறித்து நீங்கள் எழுதியுள்ள இந்தப் பதிவு அவருக்கு ஒரு விருதாகவே அமைந்துள்ளது. இணையத்துக்கு வந்த புதிதிலிருந்து அவருடைய இணையக்கருவிகளை அவ்வப்பொழுது பயன்படுத்தியே வருகிறேன். என்னைப் பொறுத்த வரையில் ‘நாவி’ அவர் படைப்புகளில் உச்சம்! அண்மையில் வெளிவந்துள்ள சுளகை முதலில் எனக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை. அப்புறம் அவர் ‘சிறகு’ இதழில் எழுதிய விளக்கக் கட்டுரை படித்த பிறகுதான் இஃது எவ்வளவு பெரிய தமிழணி என்பது புரிந்தது.

  அவருடைய தமிழ்க் கருவிகள் அனைத்தையும் நீங்கள் இந்த இடுகையில் தொகுத்துக் கொடுத்திருப்பது கண்டு மிகவும் மகிழ்கிறேன். நானும் இதைச் செய்யும் நோக்கில்தான் என் வலைப்பூவில் ‘இலவசம்’ எனும் தனிப் பக்கம் தொடங்கினேன். ஆனால் அவ்வப்பொழுது முறையாகப் புதுப்பிக்காததால் இவற்றில் பல அதில் சேர்க்கப்படவில்லை. இப்பொழுது நீங்கள் இங்கே அனைத்தையும் தொகுத்துக் கொடுத்திருப்பது அப்படியே அங்கே என் பக்கத்தைப் புதுப்பித்துக் கொள்ள உதவும். மிக்க நன்றி!

  திருக்குறள் தொகுப்பும் மிகச் சிறப்பு! திருக்குறள் ஆர்வலனான என் தம்பி இப்படி ஓர் ஆவணம் கேட்டிருந்தான். கணினியில் ஏற்கெனவே எங்கிருந்தோ தரவிறக்கி வைத்துத்தான் இருந்தேன். ஆனால் மறதி! இன்னும் அவனுக்குக் கொடுக்கவில்லை. இஃது அவனுக்கு உதவும். மிகவும் நன்றி!

  ஔவையார் பாடல் இணைப்பும் அருமை! பாடலின் கீழே ஔவையார் பெயருக்குக் காப்புரிமைக் குறிப்பு வைத்திருந்த உங்கள் குறும்பையும் ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 18. தலைப்புப் பார்த்ததும், சமையல் சுளகோ என உள்ளே வந்தேன் ஹா ஹா ஹா.. இப்படியும் ஒரு அர்த்தம் இருப்பது இப்போதான் தெரியும்.

  எழுத்துப்பிழை திருத்தியில் சென்று பிழையாக எழுதிப்பார்த்தேன்.. அது திருத்திவிடவில்லை .. எனக்கு இன்னும் சரியாகக் கையாளத் தெரியவில்லை என நினைக்கிறேன்.. மீண்டும் மீண்டும் போய்ப் பார்த்துப் பழக வேண்டும்போல... வித்தியாசமான போஸ்ட்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா அது நாம் தவறாக எழுதினால் திருத்தாது. நாவியில் நாம் எழுதுவதில் உள்ள சந்திப்பிழைகளைத் திருத்துவதும், இலக்கண விளக்கங்களும் தரும் நீங்கள் அதைப் பார்த்தும் செக் செய்து கொள்ளலாம்.

   வாணியில் சில சொற்களை அந்தச் செயலி அடையாளம் காட்டும் தவறாக எழுதியுள்ளோமா என்று. சரி பார்த்து திருத்திக் கொள்ளலாம்.

   கீதா

   நீக்கு
 19. நாம் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் நம் மரியாதைக்குரிய நீச்சல்காரன் அவர்களை ஒரு நாள் பாராட்டும்.

  நன்றி நண்பர் தனபாலன்.

  பதிலளிநீக்கு
 20. மிகவும் பயன் உள்ள தகவல்! பிழைதிருத்தியை இனி பயன் படுத்துகின்றேன் டிடி!

  பதிலளிநீக்கு
 21. மிக மிக அருமையான டெக்னிக்கல் பதிவு டிடி. நண்பர் நீச்சல்காரன் அவர்களுக்குப் பாராட்டுகள் எங்களின் நன்றியும். நாங்கள் ஏற்கனவே வாணி, நாவி அகராதி, தொகுப்பகராதி பயன்படுத்துகிறோம். பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். மற்றதையும் பார்த்துக் கொண்டோம். தமிழ்ச்கரத்தில் இனிதான் பதிவுகளை இணைக்க வேண்டும்.

  நல்ல பயனுள்ள தகவல்கள்

  துளசிதரன்
  கீதா

  பதிலளிநீக்கு
 22. திருக்குறள் தேடல் வியக்க வைக்கிறது.

  எனது வாழ்க்கையை தேடித் தரக் கூடிய குறள் இருக்கிறதா என்று தெரியவில்லை.

  இப்போதுதான் வந்திருக்கிறேன். சந்திப்போம்....

  என்னைத் தேடி...
  https://vazhkai-oru-porkkalam.blogspot.com/2020/05/ennaith-thedi.html

  பதிலளிநீக்கு
 23. பயனுள்ள தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 24. அன்பு தனபாலன், திரு நீச்சல்காரன் பதிவுக்குச் சென்று பார்த்தேன்.

  சில செய்திகள் புரிந்தன. அவருடைய தமிழ் சேவைக்கும் உங்கள் திருக்குறள் சேவைக்கும் மிக நன்றி. பிழைதிருத்தி செயலியைத் தான் பயன் படுத்த வேண்டும்.

  அவ்வையார் பாடல் மிக இனிமை. நேற்றுதான் பேரன்களுக்கு அவ்வை கதையைச் சொல்லி முடித்தேன். தமிழ் எத்தனை அருமையாக இருக்கிறது என்று சொல்லி மகிழ்ந்தார்கள்.
  திருக்குறள் புத்தகத்தையும் எடுத்திருக்கிறேன்.
  உங்கள் பதிவுகளைப் படித்து சொல்ல வேண்டும்.
  மிக நன்றி மா. என்றும் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 25. நீச்சல்காரன் வலைப்பதிவர் உலகில் பலருக்கும் ஐந்தாண்டுகளுக்கும் மேலாகவே அறிமுகமானவர். கணினித் தமிழ்ச் சங்கத்தில் முனைந்து பணியாற்றுபவர். அவரது முயற்சிகளைப் பயன்படுத்திக்கொள்வது அவசியம். அதேபோல், அக்கருவிகளைப் பயன்படுத்தும்போது குற்றம் குறைகள் இருக்குமானால், அல்லது மேலும் விளக்கமான கருவியின் தேவை புலப்படுமென்றால், அதை உடனே அவரிடம் தெரிவிக்கவேண்டுவதும் அவசியம். மென்பொருட்கள் அடிக்கடி மேம்படுத்தலுக்கு உள்ளாக வேண்டுவன என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

  பதிலளிநீக்கு
 26. தங்கள் தேடல் சிறப்பு. திருக்குறளை பிரதி செய்து தனிப் பதிவாக இடலாமா?

  தமிழுக்கு உதவும் தொகுப்புகளதொகுப்புகளை பயன்படுத்தி பார்க்கிறேன்.

  வலைத்திரட்டி பகுதியில் விரைவில் வலை ஓலை இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

  நமது வலைத்திரட்டி: வலை ஓலை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருக்குறளை தனிப்பிரதியாகவும் இடுங்கள்... இதற்கு அனுமதியே தேவையில்லை... ஏனெனில் உலகப்பொதுமறை... நன்றி நண்பா...

   நீக்கு
 27. தஞ்சைப்பகுதியில் சுளவு என்றும் சொளவு என்றும் கூறுவதுண்டு. ஓர் அரிய மனிதரின் பெருமையை மற்றொரு அரிய மனிதர் எடுத்துக்கூறும்போது இருவருமே உயர்ந்துவிடுவதுண்டு. பல நுட்பங்களை அரங்கேற்றிவரும் நீங்கள் திரு நீச்சல்காரனைப் பற்றிப் பகிர்ந்தவை அனைத்துமே சிறப்பானவை. உங்களால் சிலவற்றையேனும் நாங்கள் கற்கிறோமே என்ற நிறைவு எனக்கு.

  பதிலளிநீக்கு
 28. சேமிப்பதா....அந்த பழக்கமே இல்லை.... புதிய பழக்கம் மேற்கொள்ள சேமிக்க கற்று கொள்கிறேன்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.