🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மனுசன மனுசன் சாப்பிடுராண்டா தம்பி பயலே...!

அனைவருக்கும் வணக்கம்...


இணைப்பு ☛


கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை 736

பகைவரால் கெடாததாய், கெட்டாலும் வளமுடையதாகும் நாடே சிறந்தது...
'அறம் செய்ய விரும்பு' என்றாள் ஔவை - தருமம் செய்யுங்கள்... 'அன்பே தெய்வம்' என்றார் பெரியோர் - அன்புடன் வாழுங்கள்... யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்... யாரும் பொய்யைச் சொன்னாலும் நீங்கள் மெய்யைச் சொல்லுங்கள்... நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே... தங்கங்களே நாளைத் தலைவர்களே - நம் தாயும் மொழியும் கண்கள்... சிங்கங்களே வாழும் தெய்வங்களே - நம் தேசம் காப்பவர் நீங்கள்... நம் தாத்தா காந்தியும் மாமா நேருவும் தேடிய செல்வங்கள்... கல்விச்சாலை தந்த ஏழைத்தலைவனைத் தினமும் எண்ணுங்கள்...© என்னைப் போல் ஒருவன் கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1978 ⟫


இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு 737

மழைநீர், ஊற்றுநீர், அருவிநீர், மலைத்தொடர், பாதுகாப்பு இவை யாவும் ஒருநாட்டின் உறுப்புகளாம்..
பயிரை வளர்த்தால் பலனாகும் - அது உயிரைக் காக்கும் உணவாகும்... வெயிலே நமக்குத் துணையாகும் - இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும்... தினம் வேலையுண்டு குல மானமுண்டு வருங்காலமுண்டு - அதை நம்பிடுவோம்... செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம்... கையும் காலுந்தான் உதவி - கொண்ட கடமைதான் நமக்குப் பதவி...© ஆளுக்கொரு வீடு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி K.ஜமுனா ராணி, ரேணுகா @ 1960 ⟫


பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து 738

நோயின்மை செல்வம் விளைவு இன்பம் காவல் இவை ஐந்தும் நாட்டிற்கு அழகாம்...
மலையில் பிறந்த நதியால் மக்கள் தாகம் தீர்ந்தது... மரத்தில் பிறந்த கனியால் அவர் பசியும் தணிந்தது... கொடியில் பிறந்த மலரால் எங்கும் வாசம் தவழ்ந்தது... அன்னை மடியில் பிறந்த உன்னால் என்ன பயன் தான் விளைந்தது...? 'நான் ஏன் பிறந்தேன் ? - நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் ?' என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா - நினைத்துச் செயல்படு என் தோழா - உடனே செயல்படு என் தோழா... 'நாடென்ன செய்தது நமக்கு ?' எனக் கேள்விகள் கேட்பது எதற்கு...? 'நீயென்ன செய்தாய் அதற்கு ?' என நினைத்தால் நன்மை உனக்கு...© நான் ஏன் பிறந்தேன் வாலி சங்கர் கணேஷ் T.M.சௌந்தரராஜன் @ 1972 ⟫


நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு 739

வருத்தாமல் செல்வம் தரக்கூடியதே நாடாகும் அல்லது நாடாகாது...
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்...? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...? ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில்... உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்...! கடவுள் என்னும் முதலாளி - கண்டெடுத்த தொழிலாளி - விவசாயி... விவசாயி...© விவசாயி அ.மருதகாசி K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1967 ⟫


ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு 740

எல்லாம் சிறப்பும் நிறைந்த நாடாயினும், ஆள்வோரோடு பொருந்தாதது பயனற்றது...
வானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே... நாம வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே... ஆனால் தானியமெல்லாம் வலுத்தவருடைய கையிலே... இது தகாதுன்னு எடுத்துச் சொல்லியும் புரியலே...! அதாலே மனுசன மனுசன் சாப்பிடுராண்டா தம்பி பயலே...! இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை...!© தாய்க்கு பின் தாரம் அ.மருதகாசி K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1956 ⟫

நாடு அதிகாரத்தின் குறளின் குரல் இணைப்பு

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. குறளுக்கு பொருத்தமான பாடல்கள் சிறப்பு ஜி அலைபேசி வழியாக கேட்டேன். ஐந்து முத்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. படத்தை வரைந்தவர் நல்லூர் விஜயாபுரம் என்றால் திருப்பூர் தானே. இங்கும் இதே போல ஒரு இடம் உள்ளதே, வண்ணத்தில் படம் இருந்தால் வலையேற்றவும். இந்தப் படங்கள் உங்கள் தொழில்நுட்ப ஆச்சரியத்திற்கு ஈடு இணை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை.. ஒவ்வொரு குறளும் பாடல் பதவுரையும் பாடல்களும் வெகு பொருத்தம். ரசித்துப் படித்தேன். கல்லூரியில் பாடமாக வைத்தால் அனைவரையும் சென்று அடையும்

    பதிலளிநீக்கு
  4. வழக்கம் போல் குறட் பாக்களும் திரைப் பாடல்களும் அருமை

    பதிலளிநீக்கு
  5. குறள்களும், ஏற்ற பாடல்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  6. ஐந்து ஐந்து குறள்களாக, விளக்கத்துடனும், பொருத்தமான சினிமா பாடல் வரிகளுடன் தருவது சிறப்பு. தொடரட்டும் உங்கள் சீரிய பணி. பாராட்டுகளும் வாழ்த்துகளும் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  7. அருமையாக அற்புதமாக குறளுக்கான விளக்கமாக மிகச் சரியானப் பாடல்களைத் தேர்ந்தெடுத்துஇணைத்த விதம் பிரமிப்பூட்டுகிறது..தொடரவாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. குறள்களும், குறள்களுக்கேற்றக் குரல்களும் அருமை

    பதிலளிநீக்கு
  9. இன்றைய ஒவ்வொரு குறளும் நமக்கு இப்போதைய சூழலுக்குப் பொருத்தமானவையே... அதற்கேற்ப பாட்டும்..

    பதிலளிநீக்கு
  10. திருக்குறள் ஓவியம் நன்றாக இருக்கிறது.

    குறளும் , விளக்கமும், அதற்கேற்ற திரைப்பட பாடலும் மிக அருமை.

    தேனம்மை சொல்வது போல் உங்கள் ஆய்வுகள் பள்ளியில், கல்லூரியில் பாடமாக வைக்கலாம்.
    எளிதாக குழந்தைகள் திருக்குறளை கற்றுக் கொள்வார்கள்.
    கறக் ஆசையாகவும் இருக்கும் அவர்களுக்கு.

    வாழ்த்துக்கள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை.. குறளும், விளக்கமும், குறளுக்கேற்ற திரைப்பட பாடல்களுடன் பதிவு எப்போதும் போல் அத்தனை அருமையாக உள்ளது. அத்தனை பாடல்களும் இனிமை.

    சென்ற பதிவில், "நாடு அதை நாடு" பாடலை கேட்டவுடன், "நான் ஏன் பிறந்தேன்" படப் பாடலும், "விவசாயி" படப் பாடலும், எனக்கும் நினைவு வந்து அன்று முழுவதும் மனதில் அந்த பாடல்கள் ஓடிக் கொண்டேயிருந்தன . இன்றைய பதிவில் அக்குறள்களும் அதற்குப் பொருத்தமான அந்தப் பாடல்களும் வந்திருப்பதை கண்டு வியந்து போனேன். பதிவை மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. எப்படித்தான் சொன்னாரோ நம் வள்ளுவர்.
    !அதை நீங்கள் இங்கே பதிவிடுவதே மேன்மை. நம் மக்கட் செல்வங்களை இந்த
    குறள் செவங்கள் சேர்ந்தடைவது எந்தக் காலமோ.
    மிக நன்றி தனபாலன்.
    பாடல்கள் அத்தனையும் கேட்ட்டுக் கேட்டு மகிழ்ந்தவை.
    அருமை.

    பதிலளிநீக்கு


  13. பழைய பாடல்களில் கருத்துக்கள் மிக அதிமாக இருந்தன்.. ஆனால் இன்றைய பாடல்களில் பாடல் என்ற வார்த்தை அலங்கராம்தான் இருக்கிறது. அது போலவே மக்களும் இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  14. ஒரு பதிவில் முத்தமிழும் சுவைப்பதாக நிறைவு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இதற்கு முன் ஒரு கருத்துரை தந்தேனே.. அதைக் கணோமே..? என்னவோ சோதனை.. இன்று நான் கொடுக்கும் கருத்துரைகள் இப்படி காணாமல் போகின்றன. மறுபடியும் தருகிறேன்.

    பதிலளிநீக்கு
  16. ஆகா அற்புதம்

    எல்லா சிறப்பும் நிறைந்த நாடு ஆனால் ஆள்பவரோடு ............................................

    வீதியில் நிற்கிறோம்

    பதிலளிநீக்கு
  17. எத்தனை வருடங்களுக்கு முன் எழுத்தப்பட்டிருக்கிறது இன்றும் பொருந்தும்படியாக! திருக்குறள்களும் பாடல்களும் பொருத்தமாக உள்ளன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  18. சென்ற பதிவிலேயே சொல்ல விடுபட்டது ஓவியம் அழகாக இருந்தது. இன்றைய பதிவில் உள்ள திருக்குறள் ஓவியமும் மிக அழகு. வரைந்தவருக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்

    தாத்தா எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் பொருந்தும்படியாகத்தான் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். வியப்புதான். சூழலுக்கேற்ற நல்ல பொருத்தமான குறள்கள். அதற்கு ஏற்ற கருத்துள்ள பாடல்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. படமும் குறள்களும் பாடல்களையும் அருமை.

    பதிலளிநீக்கு
  20. 738ஆவது குறளின் விளக்கத்தில் 'காவல்' என்பது 'காதல்' என்று வந்திருக்கிறது. ஆனால் அதுவும் பொருத்தமாகவே தோன்றுகிறது. ஏனெனில் காதல் என்பதே ஒரு மனிதனுக்குக் காவல் தானே! கால்கட்டுத் தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... அதானே...! உங்களின் கருத்துரையால் மகிழ்வுடன் திருத்தி விட்டேன் ஐயா... நன்றி...

      நீக்கு
  21. ஒரு காலத்தில் ..” மனுசன மனுசன் சாப்புடுராண்டா தம்பி பயலே” பாட்டுத்தான் எட்டுதிக்கும் கேட்டது... .இப்போ அது உண்மையாகிவிட்டது..

    பதிலளிநீக்கு
  22. குறளுக்கேற்ற பொருத்தமான திரைப்பட பாடல்களை அதுவும் பழைய பாடல்களை தேடிப்பிடித்து பதிவிட்டமைக்கு பாராட்டுகள். இந்த பாடல்களை எழுதிய கவிஞர்கள் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள் அவைகள் இந்த குறள்களுக்கு அப்படியே பொருந்தும் என்று.

    பதிலளிநீக்கு
  23. சமகாலச் சூழலைப் படம் பிடித்த
    குறளும் பாடல்களும்
    காலத்தால் அழியாத இலக்கியங்களே!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.