🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



கண்ணில் தோன்றும் காட்சி யாவும்...

வணக்கம் நண்பர்களே... கண்விதுப்பழிதல் அதிகாரத்தின் இரண்டாவது பகுதி தொடர்கிறது... முதல் பகுதியின் இணைப்பு வழி பார்த்துச் சிவந்ததே கண்கள்...


முதல் பகுதியில் தனது கண்களிடம் கேள்விகளால் சண்டை போட்ட தலைவி,
இப்போது சிறிது சிறிதாக ஆறுதல் அடைய முயல்கிறார் :-
எனக்கென்ன மேலும் துன்பப்படு | கண்ணீரே வராமல் போகட்டும் | அவரைக் கண்டால் தான் அமைதியாவாய் | மீண்டும் அவர் பிரிந்து சென்றாலும் துன்பம் உனக்குத்தான் | எனது துயரத்தை ஊருக்கும் காட்டிக் கொடுத்து விட்டாய்... ம்...


அதிகாரம் 118 கண்விதுப்பழிதல் 1176 - 1180

ஓ கண்களே... காதல் துன்பத்தால் அழுதுகொண்டே தூங்காமல் இருப்பது பற்றி எனக்குக் கவலையில்லை... உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்...

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது 1176


காணும் கனவிலே உன் முகம் இருக்கும்... காற்றில் ஆடும் ரோஜா போல் சிவந்தே சிரிக்கும்... அன்பு உண்மையாயிருந்தால், உன்னை அழைக்கும்... இன்பமே வாழ்விலே தந்திடும்... எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா...? என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா...? எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா...?© நீங்காத நினைவு வாலி K.V.மகாதேவன் 🎤 P.சுசீலா @ 1963 ⟫

அன்று அவரைக் கண்டு ஆசையுடன் மகிழ்ந்தீர்களே, இன்று நன்றாக அழுங்கள்... துளிக் கண்ணீரும் வற்றிப்போகும் அளவிற்கு அழுங்கள்...

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண் 1177


நானே உன் சுமையாக ஏன் வந்தேன்...? சிறகெல்லாம் சிறையாக வாழ்கின்றேன்... நான் உறங்கும் நாள் வேண்டும் - சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்... என் ணில் நீர் வேண்டும், சுகமாக அழ வேண்டும்...© உன் கண்ணில் நீர் வழிந்தால் வைரமுத்து இளையராஜா 🎤 S.ஜானகி @ 1985 ⟫

அவரே விரைந்து வந்து என்னைக் காண விருப்பமில்லாமல் இருக்கும் போது, நீங்கள் மட்டும் ஏன் ஆவலுடன் எதிர்பார்த்துத் தூங்காமல் தவித்துக் கொண்டிருக்கிறீர்களோ...

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண் 1178


அகம் வாட்டும் காதல் தீ - யார்க்கும் சொல்லாதே... மறைத்தே நாம் வாழ்கின்றோம் - மார்க்கம் காணாதே... ஜகம் வாழ்கிறேன் வாழ்க்கையே - ணீர் ஆச்சே... ஆச்சே... கனவு கண்ட காதல் - கதை ணீர் ஆச்சே... நிலா வீசும் வானில் - மழை சூழலாச்சே...© அக்பர் கம்பதாசன் நவுஷாத் 🎤 P.சுசீலா @ 1961 ⟫

இன்னமும் அவர் வரவில்லையே என்றாலும் சரி, வந்துவிட்டு மீண்டும் பிரிந்து சென்றாலும் சரி, எனக்குத் துன்பமில்லை... எதிர்ப்பார்த்து தவித்தும், பயப்படும் உங்களுக்கு தான்...

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண் 1179


வருவார் ஒரு நாள், இருப்பார் இங்கே சில நாள்... வளரும் தேயும் நிலவைப்போலே - மறைவார் தன்னாலே... இரவும் பகலும் நிலைப்பதில்லை - அழகும் பொருளும் அதுபோலே... இளமைப் பருவம் காணும் கனவு இருக்கும் வரையில் அழிவதில்லை...© மாடப்புறா அ.மருதகாசி K.V.மகாதேவன் 🎤 P.சுசீலா @ 1962 ⟫

முரசு கொட்டுவதைப் போல எனது மனதிற்குள் இருப்பதை எல்லாம், இப்படி அழுது அழுதே வெளியே காட்டிவிடும் கண்களே... உங்களால் என்னைப் பற்றி அறிந்து கொள்வது ஊர் மக்களுக்கு எளிது...

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து 1180


உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில், சிறிதும் இன்பம் இல்லையே - கயவர் கூட்டம் உலவும் நாட்டில், காணும் யாவும் தொல்லையே... ணில் தோன்றும் காட்சி யாவும் - கண்ணா உனது காட்சியே... மண்ணில் வீழும் ணீர் வெள்ளம் - காதல் நெஞ்சின் சாட்சியே...© சுகம் எங்கே அ.மருதகாசி விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 ஜிக்கி @ 1954 ⟫



புதிய வாசகர்களுக்காக மீண்டும் ஒருமுறை விளக்கம் :- தன்னுடைய மனக்குமுறலை வெளிப்படுத்திய விதத்தை மேலும் உணர, மேலிருந்து ஒவ்வொரு கண்களையும் சொடுக்கி வாசிக்கவும்...

இந்த வருட ஆரம்பத்தில் நான்கு அதிகாரத்தைத் தேர்ந்தெடுத்து ஆரம்பித்தது இந்தப் பதிவோடு முடிவடைந்தது... தனது மனதோடு பேசின நெஞ்சொடுகிளத்தல் அதிகாரத்தை முன்பே பகிர்ந்துள்ளேன்... சரி, 18 அதிகாரங்களைக் கொண்ட கற்பியலுக்கு, கீழுள்ள பாடலே போதும் என்றே நினைக்கிறேன்... வாசித்து கருத்துரைகளால் ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி...

© சித்தி கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 P.சுசீலா @ 1966 ⟫

பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை... பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் மறு தூக்கம்... இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கமில்லை... என் அரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு... ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீஆரீராரோ... ஆரீராரீரீ ஆரீரீஆரோ ஆரீஆரீராரோ... காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே... காலம் இதை தவறவிட்டால் தூக்கம் இல்லை மகளே... நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்... நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளு தமிழ்ப் பாடல்... எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி... ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுமடி, தீராத தொல்லையடி... மாறும் கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும்... ஏக்கம் வரும் போது தூக்கம் என்பதேது...? தான் நினைத்த காதலனை சேர வரும் போது... தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது, கண்ணுறக்கம் ஏது...? மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும் போது... மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது, கண்ணுறக்கம் ஏது...? ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும் போதும்... அன்னையென்று வந்த பின்னும் கண்ணுறக்கம் போகும், கண்ணுறக்கம் போகும்... கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும்... காணாத தூக்கமெல்லாம் தானாகச் சேரும், தானாகச் சேரும்... ஆரீராரீரீ ராரீராராரோ ஆரீராரீராரோ ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீராரீராரோ ஆரீராரீராரோ...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. பெண்ணாக பிறந்தவர்கள் கண்ணுறங்குகிறாற்களோ இல்லையோ நம்மை கண்ணுறங்கவிடமாட்டேங்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  2. அருமை ஜி புதிய தொழில் நுற்பம் எழுத்துகளின் பின்புறத்தில் கை வணங்குவது சிறப்பு.

    கலக்குங்கள் நான் பிறக்கும் முன்பே வந்த பாடல்கள் நிறைய....

    எஸ். ஜானகி பாடிய பாடலின் படத்தின் பெயர் "உன்" கண்ணில் நீர் வழிந்தால் என்று வரணுமோ... ?

    பதிலளிநீக்கு
  3. கண்கள் எண்ணத்தின் வாசல் என்பதை எவ்வளவு நுட்பமாகக் கூறுகிறார் வள்ளுவர்!. உங்களுக்கே உரிய பாணியில் விளக்கம் மற்றும் பாடல் இணைப்பு சிறப்பு

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு சார். எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  5. கண்ணுக்குப் கருத்துக்கும் காலைவேளை நல்ல விருந்துகள் படைத்தீர்கள்

    பதிலளிநீக்கு
  6. சில கருத்துகளைப் பார்க்கும்போது மாணிக்கவாசகரின் திருவாசகம் நினைவிற்கு வருகிறது. ரசித்தேன். அனைவருக்கும் ரசிக்கின்ற அருமையான பாடல்.

    பதிலளிநீக்கு
  7. இனிமையான பாடல்களுடன் பதிவு இசைக்கிறது.  குவியும் கரங்களும், பின்னூட்டத்தில் எழுத்துரு புதுமையும்...     கலக்குங்க DD...

    பதிலளிநீக்கு
  8. மாடரேஷன் முடிந்து என் கமெண்ட் வெளியாகும் வரை காத்திருந்து மறுபடி வந்து என் கமெண்ட்டை இந்த எழுத்துருவில் கண்டு செல்கிறேன்!!

    பதிலளிநீக்கு
  9. பதிவுக்கு பதிவு நிறைய புதிய தொழில் நுட்பம் வளர்கிறது.

    திருக்குறளும் , அதற்கேற்ற சினிமா பாடல்களும் மிக அருமை.

    கைவணங்குவது அருமை.

    கடைசி பாடலுடன் பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  10. அன்பு தனபாலன்,
    குறளையும், இனிய திரைப்பாடலையும் இணைக்கும் மாயம் கற்ற உங்களை
    எத்தனை முறைகள் பாராட்டினாலும் மனம் ஓய்வதில்லை.
    அத்தனை கண்ணீர் முத்துக்களும் விலை மதிப்பற்றவை.

    தொழில் நுட்பம்,பாடல் தேர்வு,எழுத்துரு, கண்கள்
    வடிவமைப்பு
    அனைத்தும் உயர்ந்திருக்கும் பதிவு.
    படித்தால் கேட்டால் மனம் தாலாட்டப் படுகிறது.

    அதுவும் கடைசிப் பாடல் உலகப் பெண்மைக்கும்,
    கவி வரிகளுக்கும்,
    இசைக்கும் ,நடிப்புக்கும் சிறப்பு முத்திரை
    கொடுக்க வேண்டியது.
    அருமையான வணக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

    என்றும் வாழ்க வளமுடன் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே
    பதிவு வழக்கம் போல் மிக அருமை.

    குறளுக்கேற்ற பாடல்கள் அனைத்தும் மனதை கவர்கின்றன. படித்து கேட்டு ரசித்தேன். குறள் சொல்லும் பெண் குரலிலிருந்து கடைசி பி. சுசிலா அவர்களின் பாடல் வரை இனிமை. இனிமை. கடைசி பாடல் நடுவில் குவிந்த கரங்கள் பணிவின் அடக்கம். தங்களின் அருமையான தொழில் நுட்பத்திற்கு என்னுடைய பணிவான வணக்கமும், நன்றிகளும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. பாடலைத் தெரிந்தெடுத்தது சூப்பர். இந்தப் பாட்டின் தனித்த தன்மையே அடுத்து என்ன வரி வரு கிறது என்று கவனிக்க வைக்கும் பாடல் .சில பாடல்கள் நாம் முதல் இரண்டு வரி மட்டும் கேட்டுவிட்டு மனதை அங்கெ இங்கே அலைய விடுவோம் ஆனால் இதில் அப்படியில்லை பல முறை கேட்டிருந்தாலும் அடுத்த வரி என்னவோவாச்சே என்று நம்மைக் கவனிக்குமாறு கட்டிப் போடும் பாடல்

    பதிலளிநீக்கு
  13. அருமை அண்ணா...
    புதிய புதிய தொழில்நுட்பங்களைக் காண இங்குதான் வரவேண்டும்...
    கண்கள் ஆடுகின்றன...
    கண்ணுறங்கு மகளே ஈர்த்துக் கொள்கிறது.
    அருமை... அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  14. குறளில் முனைவர் பட்டம் வாங்கலாம் டிடி

    பதிலளிநீக்கு
  15. ஒவ்வொரு ஜோடி கண்களுக்குள்ளும் பொத்திவைத்திருக்கும் பாடல் தேர்வுகள் அருமை. குறள்களோடு குழைந்திசைக்கும் குரல்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  16. சிறப்பான பதிவு. தேர்ந்தெடுத்துச் சேர்த்த பாடல்களும் மிகவும் பொருத்தம்.

    நல்ல பகிர்வுகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  17. இனிய பாடல்களை மறுபடியும் கேட்பதில் மனதில் பழைய நினைவுகள் மலர்கின்றன..

    பதிலளிநீக்கு
  18. கேட்க முடியாவிட்டாலும் பாடல் வரிகளை படித்து தெரிந்து கொள்கிறேன்....சித்தரே!!!

    பதிலளிநீக்கு
  19. புதுமையான தொழில்நுட்பத்துடன் இனிமையான பாடல்களுடன் பதிவு அருமை டிடி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  20. டிடி பதிவு அருமை அதிலும் பேக்க்ரவுண்டில் கை கூப்பி வருவது..

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அது கண்களின் வழிதானே! கண்கள் வழி குறள்கள்!! பாடல்கள் என்று அசத்தல் டிடி!

    நானும் இந்த எழுத்துரு முயன்றேன். கில்லர்ஜி கூட ஹெச்டிஎம்எல் லில் போடுவது பத்தி சொன்னார். ஆசைதான் என்றாலும் இருக்கும் நேரத்தில் மெனக்கெட வேண்டியிருக்கு என்று விட்டுவிட்டேன்.

    நீங்கள் கருத்துப் பெட்டியிலும் கூடவைத்திருக்கீங்க சூப்பர் டிடி!!

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.