வழி பார்த்துச் சிவந்ததே கண்கள்...

வணக்கம் நண்பர்களே... →பிரிவாற்றாமை← அடுத்து வருவது படர்மெலிந்திரங்கல் அதிகாரம்... பணி காரணமாகத் தலைவன் பிரிந்து சென்றதைத் தாங்க முடியாத தலைவி, துன்பத்தில் உழல்வதால் உடல் இளைத்து, கண்கள் கண்ணீர் வெள்ளமாய் தலைவனைக் காணத் துடிக்கின்றன... அதன் பின் உள்ள அதிகாரத்திற்குச் செல்லும் முன்...
ஒரு பாடலை முதலில் கேட்போமா...?


நெல்லிலே மணியிருக்கும், நெய்யிலே மணமிருக்கும்... பெண்ணாகப் பிறந்து விட்டால் - சொல்லாத நினைவிருக்கும்... சொந்தமோ புரியவில்லை, சொல்லவோ மொழியுமில்லை... எல்லாமும் நீயறிந்தால் - இந்நேரம் கேள்வியில்லை... கண்ணிலே அன்பிருந்தால் - கல்லிலே தெய்வம் வரும்... நெஞ்சிலே ஆசை வந்தால் - நீரிலும் தேனூறும்...© ஆனந்தி கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் P.சுசீலா @ 1965⟫

ஏன் இப்படி அடம் பிடிக்கிறாய்...? | பொறுமையே கிடையாதா...? | அழுது சிரிப்பதா....? சிரித்து அழுவதா...? | துன்பத்தைக் கொடுத்து துன்பம் அடைவது சரியா...? | செய்வதைச் செய்துவிட்டு வருத்தப்படுவது நியாயமா...? | இப்படி தலைவி தன் கண்களோடு போடும் சண்டையை விவரிக்கும்
அதிகாரம் 118 கண்விதுப்பழிதல் 1171 - 1175


எனது கண்கள் காதலனைக் காட்டியதால் தான் தணிக்க முடியாத காதல் துன்பத்தை அன்று அடைந்தேன்... இன்று எப்பொழுது அவரைக் காண்பது என்ற ஏக்கத்தில், அதே கண்கள் அழுவது எதற்கு...?

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது 1171


சுவரில்லாத வீடுமில்லை, உயிரில்லாத உடலுமில்லை... அவரில்லாமல் நானுமில்லை... அன்பு சாட்சியே...! - உனக்கு நானும் எனக்கு நீயும், உரிமைத்தேனென்றே... கணக்கில்லாத கதைகள் பேசிக் கலந்ததை இன்று - நினைக்கும்போது நெஞ்சும் ணும் துடிப்பதும் ஏனோ...? நிறைத்த உறவில் கனிந்த காதல் நிலையிது தானோ...? நினைக்கும்போது நெஞ்சும் ணும் துடிப்பதும் ஏனோ...?© கலை அரசி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் K.V.மகாதேவன் P.பானுமதி @ 1963 ⟫

அவ்வாறு அழுதும் புரியவில்லையே... வரப்போகும் துன்பங்களை அன்றைக்கு ஆராய்ந்து அறியாமல் அவரைப் பார்த்து உள்வாங்கிய கண்கள், இன்றைக்கு அவரைப் புரிந்து கொண்ட பின்னர் பரிவுடன் எண்ணாமல் துன்பத்தில் உழல்வது எதனால்...?

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன் 1172


பதறிச் சிவந்ததே நெஞ்சம் - வழி பார்த்துச் சிவந்ததே... கதறிச் சிவந்ததே வதனம் - கலங்கி நடுங்கிக் குலைந்ததே மேனி... கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ...? காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ...?© மன்னாதி மன்னன் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி P.சுசீலா @ 1960 ⟫

ஏனிந்த ஆவல் தெரியவில்லையே... அன்று அவரை வேகமாகப் பார்த்து ரசித்துவிட்டு, இன்று அழுவதும் இதே கண்கள் தானே என்பதை நினைக்கும் போது சிரிப்புதான் வருகிறது...

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து 1173


நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்... நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்... நான் கொண்ட நெருப்பு - அணைக்கின்ற நெருப்பு... யார் அணைப்பாரோ - இறைவனின் பொறுப்பு... என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்குத் தெரியும்...? ணிலே என்ன உண்டுதான் அறியும்... கல்லிலே ஈரம் உண்டு களா அறியும்...?© அவள் ஒரு தொடர்கதை கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் S.ஜானகி @ 1974 ⟫

நான் நொந்துபோய் பயனில்லையே... தாங்கவே முடியாத காதல் துன்பத்தைத் தப்பிக்க வழியின்றி எனக்குத் தந்துவிட்டு, தானும் தப்பிக்க முடியாமல் அழுது அழுது கண்ணீர் வற்றிப் போய்விட்டன...

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து 1174


ணாற கண்டகாட்சி, கானல் நீராய் மாறிப்போமோ...? என் உள்ளம் கொண்ட இன்பம், என்னை விட்டு நீங்கிபோமோ...? ணீரே சொந்தமாகும், காலம் வந்து சேருமோ...? கலையாத துயர் மேகம், என் வாழ்வில் என்றும் சூழுமோ...? எந்நாளும் வாழ்விலே - ணான காதலே... என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் - ஆசை நெஞ்சிலே...© விடிவெள்ளி அ.மருதகாசி A.M.ராஜா P.சுசீலா @ 1960 ⟫

அதோடு கடலைவிடப் பெரிதான காதல் துன்பத்தை அனுபவிக்க எனக்குத் தந்து விட்டுத் தானும் உறங்கமுடியாமல் தவிக்கின்றன...

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண் 1175


இளம் வாழம் தண்டாக, எலுமிச்சம் கொடியாக, இருந்தவளைக் கைப் பிடிச்சி, இரவெல்லாம் முழிச்சி, இல்லாத ஆசையிலே என் மனசை ஆடவிட்டான்... ஆடவிட்ட மச்சானே - ஓடம் விட்டுப் போனானே... ஓஓஓ..ஓ... ஓடம் விட்டுப் போனானே... ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே ஹோய்... ஓசையிடும் பூங்காற்றே, நீதான் ஓடிப் போய்ச் சொல்லி விடு...© படகோட்டி அ. மருத காசி விஸ்வநாதன்-ராமமூர்த்தி P.சுசீலா @ 1956 ⟫தன்னுடைய மனக்குமுறலை வெளிப்படுத்திய விதத்தை மேலும் உணர,
மேலிருந்து ஒவ்வொரு கண்களையும் சொடுக்கிக் கேட்கவும்...
கேட்பொலிகள் ஒவ்வொன்றும் அதிகபட்சம் 1.5 நிமிடங்களே...

கோபம் சிறிது சிறிதாக மாறி, கண்களுக்கு ஆறுதல் சொல்வது அடுத்த பகுதியில்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. கண்ணாற என்கிற இடத்தில் ஒரு நொடி ணாற மட்டும் பார்த்து யோசித்த அடுத்த நொடி கண் படத்தைப் பார்த்துப் புரிந்து கொண்டேன்.  பதிவெங்கும் மழைத்துளி விழுந்து கொண்டே இருக்கிறது.  இதை எல்லாம் ரசித்து விட்டுதான் மற்ற விஷயங்களை ரசித்தேன்.  சபாஷ் DD.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ஜி
  வழக்கம்போல் குறள்களோடு, திரைப்படக் குரல்களும் அசத்துகின்றன...

  மேலும் பதிவில் சிறப்பு எழுத்துகளோடு விழிகளின் படத்தை இணைத்தது, எழுத்துகளில் தண்ணீர் களக்குவது போன்றவை அருமை.

  புதுமைகள் தொடரட்டும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணாச்சி நான் எழுத வேண்டியதை எழுதியுள்ளார். அவருக்கு என் கண்டனம். உங்களுக்கு என் வாழ்த்துகள்.

   நீக்கு
  2. உங்களுக்கு கஷ்டமில்லாத வேலையை செய்ததற்கு கண்டனமா ?

   நீக்கு
 3. அன்பு தனபாலன்,
  கண்கள் எங்கே என்று பார்த்து,குறளைக் கேட்டு, பாடலில் மூழ்கி
  பதிவு முழுவதும் கண்ணீர் விடும் கண்கள்
  உடைந்த அணையாக,வெள்ளமாக
  மனத்தை அடித்துக் கொண்டு செல்கின்றன.
  தங்கள் பதிவின் அழகையும், அருமையையும், அமைப்பையும்
  வெறும் எழுத்துகளால்
  என்னால் வர்ணிக்க முடியவில்லை.
  சுசீலாம்மா உருகிப் பாடிய பாடல்களை மீண்டும்
  என்னை 60 களுக்கு அழைத்துச் சென்று,
  ஜானகி அம்மாவின் குரல் 70 களுக்குக் கொண்டுவந்தது.

  இது போன்ற பதிவை நான் பார்த்ததும் இல்லை. இனிப் பார்க்க
  படிக்க வேண்டுமானால் நீங்கள் தான் பதிவிட வேண்டும்.
  நன்றி மா.

  பதிலளிநீக்கு
 4. காதல் துன்பத்தை அன்று அடைத்தேன்.. அடைந்தேன் என்றிருக்கவேண்டுமோ என நினைத்தேன். பின்னர் அதுவே சரி என நினைத்தேன், மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  ஆகா.... மிக அருமையான பதிவு. இந்த தடவை உங்களின் பதிவின் தொகுப்பு மிகவும் பிரமிக்க வைக்கிறது. கண் சிமிட்டும் கண்களும், கண்களை தொட்டு குறள்களையும், பாடல்களையும் அறிந்தவுடன் அது இதயமாக மாறுவதும், பாடல்களுக்கு இடையே கண்ணீர் துளிகள் விழுந்து தெறிப்பது போலவும் ஆங்காங்கே "கண்கள்" என்று வரும் இடத்தில், நிஜமான கண்களே வந்து நிற்பதும் பதிவின் சிறப்பை கண்டு வியப்படையச் செய்து, அதை மேம்படுத்துகின்றன.
  தங்களின் இந்த உழைப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..

  பதிவை படித்தேன். இன்னமும், குறள்களை ஆழமாக படித்துணர்ந்து, பாடல்களை நிதானமாக மீண்டும் கேட்டு ரசித்து பின் மீண்டும் கருத்துரைக்க வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. பெண்ணின் துன்பத்தை வள்ளுவர் உருவகித்து உருகி எழுதியிருக்கிறார் .எப்படி. ரிஷி மூலம் பார்க்கக் கூடாதோ

  பதிலளிநீக்கு
 7. புதுமையும் அருமையும் கலந்த கலவை நமது வலை சித்தர் .

  பதிலளிநீக்கு
 8. பதிவு மிக அருமை.
  கண்ணீர் விடும் கண்கள் , அழுத கண்ணீர் கீழே குளமாக.

  குறளும் , குறளுக்கு ஏற்ற பாடலும் கேட்டு ரசித்தேன்.

  நாளுக்கு நாள் உங்களின் தொழில் நுட்பம் வியக்க வைக்கிறது.

  உங்களின் உழைப்பு, முயற்சிக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் தனபாலன்.

  பதிலளிநீக்கு
 9. சிறப்பான பகிர்வு. வழமை போல அசத்தும் தொழில்நுட்ப வேலைகள்!

  பதிலளிநீக்கு
 10. திருக்குறள் ஓவியம் மிக அருமை.
  வருத்த அலைகள் சூழ கண்ணில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்ட அமர்ந்து இருக்கும் காட்சியை நன்றாக வரைந்து இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 11. நீங்களு ம் ஏதேதோ செய்கிறீர்க ள் சும்மா புகுந்து ஆடுகிறீர்கள் பட்டிக்காட்டான்மிட்டாய் கடையை பார்த்திருப்பதுபோல் நானும்பார்த்து ரசித்தேன் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 12. அருமை ஐயா அருமை
  அதிலும் காட்சி அமைப்பு
  கண் சிமிட்டலும்,
  மழைத்துளி விழுதலும், கண்ணீர் துளி என்றே எடுத்துக் கொண்டேன்
  வலைப் பூ தங்களால் புதிய பரிமாணத்தை நோக்கிப் பயணிக்கிறது
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 13. காதல் துன்பத்தின் முன்
  கடல் சிறியதுதான்

  ஏழு கடலையும் நீந்தி விடாலாம்
  என்னவள் பிரிவில் எதையும் கடக்க முடியாதுதான்

  வள்ளுவனையும் கண்ணதாசனையும்
  வழக்கம்போல் இணைத்து பெருமை செய்தீர்

  நன்றி

  பதிலளிநீக்கு
 14. ஆஹா.... அருமையோ அருமை அண்ணா...
  எவ்வளவு தொழில்நுட்பம்...
  தண்ணீர் சொட்டிவது ஆஹா... ரசித்தேன்...
  கலக்குறீங்க அண்ணா... பார்த்துப் பரவசம் அடைய மட்டுமே முடிகிறது.
  உங்களின் அர்ப்பணிப்பு ஒவ்வொரு பதிவுக்கும்... சான்ஸே இல்லை...
  இத்தனை பொறுமையாய் செய்வது என்பது ரசித்துச் செய்பவர்களால் மட்டுமே முடியும்...
  அருமை.. அருமை அண்ணா.

  பதிலளிநீக்கு
 15. அசத்தல் நுட்பங்களுடன் சிறப்பான பதிவு.டிடியின் கைவண்ணம் கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமை

  பதிலளிநீக்கு
 16. திருக்குறளுக்கு ஏற்ற பாடலா..... அல்லது பாடலுக்கேற்ற திருக்குறளாா???

  பதிலளிநீக்கு
 17. வலைப்பதிவில் எழுதுவதே பெரிய சாதனையாய் நினைச்சுக்கிட்டிருக்கேன். ரொம்ப பெருமையா என் பிள்ளைகள்கிட்ட சொல்வேன். ஆனா, உங்க தொழில்நுட்பத்தை பார்த்தால் என் அகங்காரம் காணாமல் போயிடுது.. நான் எப்பதான் இதையெல்லாம் கத்துக்குறது?!

  பதிலளிநீக்கு
 18. ஏதோ மாயாபஜாருக்குள் வந்த மாதிரி இருக்கின்றது...பாடல்கள் அனைத்தும் மனம் கவர்ந்தவை.. ஆனாலும் அந்த ஆனந்தி படத்திற்கு இசையமைத்தவர் திரை இசைத் திலகம் K.V. மகாதேவன் என்பதாக நினைவு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில பாடல்களின் தகவல்கள், காணொளி (YouTube) விவரங்களில், பாடல் வரிகள் உள்ள வலைத்தளங்களில் வெவ்வேறாக இருப்பதுண்டு... முடிவாக விக்கிப்பீடியாவில் உள்ள விவரத்தை எடுத்துக் கொள்வேன்... நேரமிருப்பின் அந்த திரைப்படம் முழுவதும் YouTube-ல் இருந்தால் அதிலிருந்து எடுக்க வேண்டும் ஐயா... நன்றி...

   நீக்கு
 19. ஆகா!! வலைத்தளம் வந்தேனோ! மாயாஜால வனம் வந்தேனோ! கலக்கல் அண்ணா! பதிவைப் படிக்காமல் கண்களையும் நீர்க்குமிழ்களையும் இமைகள் மூடித் திறப்பதையும் பார்த்து வியந்து ரசித்துப் பின்னர் பாடலகளைக் கேட்டு, அதன்பின்பே வாசித்தேன். பாடல் தொடங்கும் முன்னர் குறள் பாடுவதும் வசனம் பாடுவதும் யார் அண்ணா? தனித்துவமான தளம் உங்களது! வாவ்!

  பதிலளிநீக்கு
 20. வலைப்பக்கம் முழுவதும் தொழில்நுட்பம் துள்ளி விளையாடுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறளும், இரண்டு தலைமுறைகளுக்கு முந்திய திரைப்பாடல்களும், இன்றைய தொழில்நுட்பமும் கலந்து ஒரே பதிவில் விருந்தாக கொடுக்க வலைச்சித்தரால் மட்டுமே முடியும்.
  அருமை வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. சினிமாவையும் திருக்குறளையும் ஒன்றிணைக்கும் சிறப்பான பணிக்கு திண்டுக்கல்லாரை விட்டால் யார் உண்டு? என்னமாய் அசத்துகிறார் அய்யா!

  பதிலளிநீக்கு
 22. பிரிவாற்றாமை குறளும் அதற்கான விளக்கமும் சூழ்நிஐக்கேற்ற ' கண்ணிலே அன்பிருந்தால் பாடலும்ய அருமை தனபாலன் அவர்களே.

  பதிலளிநீக்கு
 23. திருமிகு →நடனசபாபதி வேலாயுதம்← அவர்கள் : வழக்கம்போல் குறளுக்கு ஏற்ற திரைப்படப் பாடலைத் தந்து வியக்க வைத்துவிட்டீர்கள். பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 24. திருமிகு →உமா மஹேஸ்வரி← அவர்கள் : பாடல்கள் திருக்குறளுக்கு செம பொருத்தம்...

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.