🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉பாடும் நிலாவே 🎤

பாடும் நிலாவே... தேன் கவிதை... பூ மலரே...
உன் பாடலை நான் கேட்கிறேன்... பாமாலையை நான் கோர்க்கிறேன்...

அனைவருக்கும் வணக்கம்... இளைய நிலா பொழிந்து, இதயம் வரை நனைந்ததில், அணு அளவாக 36 பாடல்களைத் தேர்ந்தெடுத்து, கேட்பொலியாக கோர்த்து, அவற்றின் முதல் வரியையும் எண்களுடன் குறிப்பிட்டு கீழே எழுதியுள்ளேன்... அதன்படி பாடலின் எண்ணை, இது ஒரு பொன் மாலைப் பொழுதாக இருக்கும் SPB-ல், வண்ணம் கொண்ட வெண்ணிலாவாய் மாறுவதைச் சொடுக்கினால், வானம் கீழே வந்தது போல் கேட்பொலி வரும்... அதில் Play-யை சொடுக்கி மெய் மறந்து ரசிக்கையில், சில இடையூறுகளால் நிறுத்த நேரிட்டால், மறைக்க சொடுக்குவதற்கு முன், கேட்பொலியில் Pause-யை முதலில் சொடுக்கவும்... நன்றி... குழந்தை மனத்துடன் மகிழ்வுடன் வாழ்ந்து, மகிழ்வித்த சிகரத்திற்கு : அஞ்சலி 🎤 அஞ்சலி 🎤🎤 புஷ்பாஞ்சலி 🎤🎤🎤
மறைக்க
01 இதழோரம் சுவை தேட, புது பாடல் விழி பாடப் பாட - ஆயிரம் நிலவே வா; ஓராயிரம் நிலவே வா...!

மறைக்க
02 மலையைத் தழுவிக் கொள்ளும் நீரோட்டமே; கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே...

மறைக்க
03 அப்பாவி ஆண் கிளி ___? அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளை தான், இப்போது தெரிந்ததம்மா...!

    
மறைக்க
04 ஊரிலா ? நாட்டிலா ? ஆனந்தம் வீட்டிலா ? : அவள் நெஞ்சின் ஏட்டிலா...?

மறைக்க
05 வெட்கம், துக்கம் தேவையில்லை - கடவுள் படைத்த உலகமிது - மனிதன் சுகத்தை மறுப்பதில்லை...!

மறைக்க
06 வானம் எனக்கொரு போதி மரம்; நாளும் எனக்கது சேதி தரும்; - கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்...!

    
மறைக்க
07 மோனத் திருக்குதடீ இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே; நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் - நகரத் துழலுவதோ...?

மறைக்க
08 தனிமையிலே வெறுமையிலே - எத்தனை நாளடி இள(ம)மையிலே... - இமைகளும் சுமையடி இள(ம)மையிலே...!

மறைக்க
09 பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன...? - பதினாறு பாட சுகமானது...!

மறைக்க
10 எந்தன் வாசலில் வாராயோ; குயிலே, குயிலே; குயிலே குயிலே - உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் - ராஜ தீபமே...!

மறைக்க
11 பாடும் உள்ளம் துள்ளத் துள்ள; பாடல் ஒன்று சொல்லச் சொல்ல - நித்தம் நித்தம் உள்ளம் களிக்க; கற்ற வித்தை என்றும் செழிக்க...

            
மறைக்க
12 யாராரோ நண்பன் என்று, ஏமாந்த நெஞ்சம் உண்டு; பால் போலக் கள்ளும் உண்டு, நிறத்தாலே இரண்டும் ஒன்று...!

    
மறைக்க
13 பறவை மிருகம் அழுவது இல்லை; கவலைக் கடலில் விழுவது இல்லை; கண்ணீர் பூக்கள் என் வாழ்வில் இல்லை...

        
மறைக்க
14 வேதம் அணுவிலும் ஒரு நாதம்; நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்; சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ...?

    
மறைக்க
15 வாசமான முல்லையோ ? வானவில்லின் பிள்ளையோ ? பூவில் நெய்த சேலையோ ? நடந்து வந்த சோலையோ ?

மறைக்க
16 நேற்று போல் இன்று இல்லை - இன்று போல் நாளை இல்லை... அன்பிலே வாழும் நெஞ்சில், ஆயிரம் பாடலே... - எண்ணம் யாவும் சொல்ல-வா...?!

மறைக்க
17 போகும் பாதை தூரமே; வாழும் காலம் கொஞ்சமே... ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா... இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... கேளாய் பூ மனமே...

மறைக்க
18 பாடல்கள் ஒரு கோடி - எதுவும் புதிதில்லை... ராகங்கள் கோடி கோடி - அதுவும் புதிதில்லை... எனது ஜீவன் நீ தான் - என்றும் புதிது...!

    
மறைக்க
19 மேடையைப் போல வாழ்க்கை அல்ல - நாடகம் ஆனதும் விலகிச் செல்ல... ஓடையைப்போலே உறவும் அல்ல - பாதைகள் மாறியே பயணம் செல்ல... விண்ணோடு தான் உலாவும் - வெள்ளி வண்ண நிலாவும் - என்னோடு நீ வந்தால் என்ன...? வா...!

மறைக்க
20 எந்த சொந்தங்கள் யாரோடு என்று - காலம்தான் சொல்லுமா...? பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம் தேதிதான் சொல்லுமா...?

மறைக்க
21 தூங்கும் போது நூறு கனவு; நான் அணைக்க வந்தால் அந்த நீல நிலவு... கண் விழித்து பார்த்தேன் நல்ல காலைப்பொழுது; காணவில்லை ...?

        
மறைக்க
22 யாராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா; சொந்தங்கள் தேடினாலும் - தந்தை தாய் ஆகாதம்மா... என்னோட தாய் தந்தை பாட்டுதான் அம்மா...

மறைக்க
23 ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்; மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்...? - தப்பு கணக்கை போட்டு தவித்தேன் - தங்கமே ஞான தங்கமே...

மறைக்க
24 சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் - சிரிக்காத நாளில்லையே - என் சோகம் என்னோடு தான்...

        
மறைக்க
25 நிலவ வான் நிலவ நான் புடிச்சி வாரேன்... குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய்...!

    
மறைக்க
26 ?____? : எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி...? - இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி...!

                
மறைக்க
27 சசசச ச நி தா ச நி பா நி தா மா த பா ம கா நிவேதா...!

    
மறைக்க
28 கண்டு வந்து சொல்வதற்குக் காற்றுக்கு ஞானமில்லை, நீலத்தைப் பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை...

மறைக்க
29 வீசுகின்ற தென்றலே - வேலையில்லை நின்று போ; பேசுகின்ற வெண்ணிலா - பெண்மையில்லை ஓய்ந்து போ...

மறைக்க
30 கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு; விறுவிறுப்பு இருக்கு - சுறுசுறுப்பு; அருவருப்பு ஒதுக்கு - வரும் சிறப்பு...

மறைக்க
31 மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்; மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்...

    
மறைக்க
32 ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்; நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்...

            
மறைக்க
33 மாமன் ஒருநாள் மல்லிகப்பூ | ஆடி மாசம் காத்தடிக்க | என் ஜோடி மஞ்சகுருவி | ராத்திரி நேரத்தில்

மறைக்க
34 காதலே உன் காலடியில், நான் விழுந்து விழுந்து தொழுதேன்; கண்களை நீ மூடிக்கொண்டாய், நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்...

மறைக்க
35 வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா...? நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா...?

மறைக்க
36 பெண்ணிடம் மனதைக் கொடுத்து விட்டாலே போதும் : பௌர்ணமி தானே வாழ்வில் எந்த நாளும்... ஹேய்...!


01 ஆயிரம் நிலவே வா 🎤 02 தமிழில் முதல் பாடலுடன், இயற்கை எனும் இளைய கன்னி 🎤 03 கடவுள் அமைத்து வைத்த மேடை 🎤 04 வான் நிலா-நிலா அல்ல 🎤 05 எங்கேயும் எப்போதும் 🎤 06 இது ஒரு பொன்மாலைப் பொழுது 🎤 07 வாழ்வியல் பேச்சுடன், தீர்த்தக் கரையினிலே 🎤 08 அந்தி மழை பொழிகிறது 🎤 09 ராகங்கள் பதினாறு உருவான வரலாறு 🎤 10 சங்கீத ஜாதி முல்லை 🎤 11 ராக தீபம் ஏற்றும் நேரம் 🎤 12 உனக்கென்ன மேலே நின்றாய் 🎤 13 வானம் கீழே வந்தால் என்ன 🎤 14 வேதம் அணுவிலும் ஒரு நாதம் 🎤 15 கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம் 🎤 16 காதலின் தீபம் ஒன்று 🎤 17 சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் 🎤 18 இதயம் ஒரு கோவில் 🎤 19 மன்றம் வந்த தென்றலுக்கு 🎤 20 இளஞ்சோலை பூத்ததா? 🎤 21 நீல குயில்கள் இரண்டு 🎤 22 மலையோரம் வீசும் காத்து 🎤 23 உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் 🎤 24 கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே 🎤 25 பச்சை மலை பூவு நீ உச்சிமலை தேனு 🎤 26 மண்ணில் இந்தக் காதலன்றி 🎤 27 நிவேதா 🎤 28 வண்ணம் கொண்ட வெண்ணிலவே 🎤 29 காதல் ரோஜாவே 🎤 30 வனமெல்லாம் செண்பகப்பூ 🎤 31 நலம் வாழ எந்நாளும் 🎤 32 என்னவென்று சொல்வதம்மா 🎤 33 விகடமான பேச்சுடன், பாடல்களின் சில வரிகள் 🎤 34 என் காதலே என் காதலே 🎤 35 மின்னலே நீ வந்ததேனடி? 🎤 36 நாடோடி பாட்டுப் பாட...
இங்குள்ள நுட்பம் ஒருபக்கம் இருக்கட்டும்; முக்கியமும் அல்ல... பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து, அதற்கேற்றவாறு அதில் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தனது குரலில் கொண்டு வந்து, திரைப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்தைப் போல் மாற்றி விடுவதில் இவரும் ஒருவர் என்பது, முக்கிய இனிமை பக்கம்... மனதின் நண்பராக வாழ்ந்தவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது : பாடகர் உட்பட பல்வேறு திறமைகளைத் தவிர்த்து, அனைத்து மக்களும் அவரை விரும்பி போற்றுவதற்கான காரணங்களில், சில இணைப்புகள்: →விக்கிப்பீடியா← தகவல்கள் ∫ குமுதம் →நேர்காணல்← (நன்றி திரு.ரமணி ஐயா) ∫ மனிதம் →காணொளி← ∫ இறவா கலைஞனுக்கு ஓர் எழுத்தஞ்சலி : →கிண்டில்← இந்த இணைப்புகளின் இசையுடன், மனித மனதின் இசையைப் பற்றி :-

குறளின் குரல்...? ம்ஹிம்... குரலின் குறள்... குறளின் படி வாழ்ந்த, வாழ்கிற மனிதர்கள் இருக்கிறார்கள்... அவர்களுக்குத் திருக்குறள் என்பதே தெரியாமல் இருக்கலாம்... SPB அவர்கள், வாழ்ந்தவரை மனதில் தோன்றும் கொம்புகளைத் தலைக்கு ஏற்றாமல், செய்யும் செயல்களில் மேம்படுத்தி வாழ்ந்து... தீநுண்மி தொற்றால்...? இல்லை மறைந்து விட்டார்... வாழ்நாள் முழுவதும் அவரின் இரக்கம் இறக்கவில்லை... கொம்பில்லா பதிவுகளில், குறள்களின் குரல்களை வாசித்து இருப்பீர்கள்... மீதமுள்ள ஒரு குறள் போல் இல்லாமல் வாழ்ந்துள்ளார்... அதனால் மறைவுக்குப் பின்னும், கொம்புள்ள மனிதருக்கு எடுத்துக்காட்டாக ஆகி விட்டார்... ஒன்றல்ல இரட்டைக் கொம்பு :- ே? 1330 குறள்களில், முதலெழுத்தாக இரட்டைக் கொம்புள்ள 3 குறள்களில் ஒரு குறள் →இங்கே←

இப்படி அடுத்த தேடலை நோக்கிச் செல்கிறது மனம்... அதில் பேசுவோம் நண்பர்களே... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. இனிய காலை வணக்கம் அன்பு தனபாலன்.
  அருமையாக ஆரமாகப் பாடல்களைக் கொடுத்திருக்கிறீர்கள்.

  அத்தனையும் முத்துகள்.
  சிப்பியின் முத்தாக நேர்மை வாழ்வும், இரக்கம்,
  தயாளம் நிறைந்த மனிதராக,
  தேனிசை பொழிந்து மறைந்தார்.

  உடலால் வருந்தாமல் மறைந்திருக்கலாம்.

  இரட்டைக் கொம்பாக வந்த குறளாகத் தோன்றில் புகழோடு
  தோன்றுக'' பதிவையும்
  படித்தேன்.
  மெது மெதுவே அவரின் குரல் பாடல்களை ரசிக்கிறேன்.

  சின்ன வாத்தியார் படத்தில் ''கண்மணியே கண்மணியே''
  பேச்சும் இசையும் கலந்த
  பாடல் ஒன்று வரும் அதுவும் இவர் பாடியதுதான் என்று நினைக்கிறேன்.
  அமரத்துவம் பெற்ற குரல் என்றும் நிலைக்கும். நன்றி மா.

  பதிலளிநீக்கு
 2. பாடல்களின் எண்களாலேயே எஸ் பி பி என்னும் எழுத்துகளை அமைத்திருப்பது சிறப்பு.  எஸ் பி பி யின் முதல் பாடல் என்பதில் சிறு சர்ச்சை இருக்கிறது.  பால்குடம் பாடல்தான் முதல் பாடல் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.  அதேபோல்  படத்துக்காக ஒரு பாடல் பாடி அது வெளிவரவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள்.  இப்போது அவர் குரலை ரசிப்பதற்குமுன் இதெல்லாம் சிறிய விஷயங்கள்.  

  சாதாரண வார்த்தைகளில் அவர் மனிதனாக வாழ்ந்தார்.  ஆனால் அந்த இரண்டு வார்த்தைகளில் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் அவரிடம்.

  பதிலளிநீக்கு
 3. அந்த வெளிவராத படத்தின் பெயர் டைப் செய்தும் விடுபட்டிருக்கிறது.  ஹோட்டல் ரம்பா 

  உங்கள் தெரிவிலான பாடல்கள் அத்தனையும் எனக்கும் பிடித்த பாடல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓட்டல் ரம்பா: 'அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு' - இந்த தகவலுடன் விக்கிப்பீடியாவில் சிறிது சிறிதாக மற்ற பல தகவல்களை சேர்த்துக் கொண்டு வருகிறார்கள்... இங்கு இரண்டாவது எண் உள்ள கேட்பொலியில் SPB அவர்களே அதை பாடுவார்...

   நீக்கு
 4. முதலில் கமெண்ட் மாடரேஷன் இருந்தது.  இப்போது அது எடுக்கப் பட்டு விட்டதே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவுக்குச் சம்பந்தமேயில்லாத 'தரவிறக்கம் செய்' என்று, சம்பந்தமேயில்லாத நபர்களிடமிருந்து வருகிறது... சில சமயம் நீக்கிக் கொண்டே இருக்க வேண்டும்...! நேற்று முன் தினம் மாற்றினதை, சற்று முன்னர் தான் மீண்டும் மாற்றினேன்...!

   நீக்கு
 5. மிக சிறப்பு தனபாலன். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 6. சிறப்பானதோர் அஞ்சலி. உங்கள் தெரிவிலான பாடல்கள் - இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

  உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 7. அருமையான வடிவமைப்பு ஜி இந்தப்பதிவை அலைபேசியில் சேமித்துக் கொண்டேன்.

  இனி அடிக்கடி திறந்து இப்பாடல்களை கேட்கலாம்.

  முதல்படம் சாந்தி நிலையம்தானே... 1972 என்று வருகிறதே...

  அடிமைப்பெண் 1969 என்று வருகிறதே...

  ஒருக்கால் சாந்தி நிலையம் வெளியாக தாமதமோ...

  நல்லதொரு அஞ்சலி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விக்கிப்பீடியா இணைப்பில், இதன் தகவல்கள் உள்ளது ஜி...

   நீக்கு
  2. என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. என்னவொரு அற்புதம். அருமை அருமை. தினமும் ஒலிக்கும். கேட்டு கொண்டுருக்கேன்.

   நீக்கு
 8. தொழிற் நுட்பத்திலும் இலக்கிய நயத்திலும் புகுந்து விளையாடும் முதன்மைப் பதிவரை எம் முகநூல் நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்... ..(எம் முகநூல்.பக்கத்தில் பகிர்ந்துள்ளேன்..)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் 'படித்ததும் பகிரப் பிடித்தது' பதிவின் நேர்காணலும், இந்தப் பதிவை எழுதத் தூண்டியது... நன்றி ஐயா...

   நீக்கு
 9. உங்கள் அறிவியல் நுட்பத்தில் இசை மேதைக்கு அருமையான அஞ்சலி

  பதிலளிநீக்கு
 10. போற்றுதலுக்கு உரிய மாமனிதருக்கு,
  வலைச் சித்தரின் தொழில் நுட்பப் புதுமையுடன்,
  சிறப்பான அஞ்சலி

  பதிலளிநீக்கு
 11. அவருடைய தெள்ளமுது பாடல்களை முத்தாக கோர்த்து மிக அழகாக தந்துள்ளீர்கள்... நன்றி ! அவருடைய மறைவை மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நம் இதயத்தை இசையால் வருடியவர் இன்று நம்முடன் இல்லை என்பதை அறியும்போது வேதனையால் நெஞ்சம் விம்முகிறது...

  பதிலளிநீக்கு
 12. மிகச் சிறந்த அஞ்சலிப்பதிவு. வித்தியாசமான அரிய தொழில்நுட்ப அழகுடன் அமைந்துள்ளது. SPB எழுத்துகளில் பாடல்களின் இணைத்த விதம் அபாரம்.

  பதிலளிநீக்கு
 13. மிக அருமையான இசை அஞ்சலி.
  அவர் பாடிய பாடல்களால் மலர் அஞ்சலி செய்து விட்டீர்கள்.

  மிக நல்ல மனிதர் . அனைவரும் சொல்வது இப்படி ஒரு நல்ல மனிதர் இருக்க முடியுமா என்று தான்.
  நீங்கள் அவரைப்பற்றி எழுதி இருப்பதை படிக்கும் போது "தான் எனும் அகந்தை தலைக்கு ஏறாமல்" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

  ஆணவம் என்ற கொம்பில்லா மனிதர் தான். புகழ் அவரை தற்புகழ்ச்சி செய்ய வைக்கவில்லை.

  புதிதாக பாடும் குழந்தைகள். பாடகர் , பாடகி எல்லோருக்கும் ஊக்கம் கொடுத்தவர் அவர்களை மனதார பாராட்டி , வாழ்த்தி மகிழ்ந்தார்.
  தன்னைவிட பெரியவர்களிடம், பணிவு, பக்தி கொண்டு இருந்தார்.

  அவர் பாடிய பாடல்களின் தொக்குப்பு அவர் பேர் தாங்கி வந்தது அருமையான தொழில் நுட்பம். அதற்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  19 பாடல் கேட்டு விட்டேன், மீதியை கேட்பேன் .
  இடை இடையே அவரின் பேச்சும் இணைத்து இருப்பது மேலும் சிறப்பு.
  "இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" என்று அவர் சொன்னது போல் இசையாக உங்கள் தளத்தில் மலர்ந்து விட்டார்.
  இறவா புகழ் அடைந்தவர். அவர் பாடிய பாடல்களில் என்று வாழ்வார்.

  பதிலளிநீக்கு
 14. விக்கிப்பீடியா, ரமணி சாரின் குமுதம் பகிர்வு படித்தேன், காணொளி பார்த்தேன்.

  கண்களில் நீர் திரையிட்டது.

  பதிலளிநீக்கு
 15. நிகர் அற்றமனிதருக்கு ஒரு நினைத்துப்பார்க்கவும் இயலாத அஞ்சலி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 16. அருமையான தொகுப்பு. சிறிது.சிறிதாகக் கேட்டு மகிழ்கிறேன். வாழ்த்துகளும் நன்றியும் உங்ளுக்கு. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நலா சகோதரி... தங்களை நிறைய நாட்கள் கழித்து இங்கு கண்டதும் மனம் மகிழ்வாக உள்ளது. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோதரி

   நீக்கு
  2. நலமா என வரவேண்டியது.. தட்டச்சு பிழை மன்னிக்கவும்.

   நீக்கு
 17. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான அஞ்சலி..... தாங்கள் புதுவிதமான அஞ்சலி..!!!

  பதிலளிநீக்கு
 18. அவரின் பாடல்களால் ஆன ஒரு பாமாலையை அழகாய் தொகுத்திருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோதரரே

  அருமையான பதிவினால், உங்களது தொழில் நுட்பத்தினால், அழகான பாடும் நிலாவை தங்க மயமான நிலவாக ஜொலிக்க செய்து விட்டதை மிகவும் ரசித்தேன். அவருக்காக நீங்கள் சமர்பித்த அஞ்சலி சிறப்பானது... !

  அவரைப் போன்ற பாடகரை இனி பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.... என் பால்ய வயதிலிருந்து இன்னமும் நான் அவர் குரலுக்கு அடிமை. அவர் பெயரிலேயே பாடல்களை இணைத்து நீங்கள் செய்திருக்கும் உத்தி மிகப் பிரமாதம். உங்கள் திறமையை பாராட்ட வார்த்தைகளே இல்லை.. வணங்குகிறேன். தங்கள் திறமையின் அம்சங்களை ஒவ்வொன்றாக கேட்டு மகிழ்கிறேன்.

  நேற்று இங்கு நெட் பிரச்சனை, கரண்ட் அடிக்கடி இல்லாமல் போனாதால் உடன் வர இயலவில்லை. எனவே தாமதமான வருகைக்கு வருந்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 20. மெனக்கெட்டுத் தொகுத்திருக்கிறீர்கள். அரிய அஞ்சலி.

  பதிலளிநீக்கு
 21. அழகான அஞ்சலி நண்பரே.ஒரு சில பாடல்களை மாற்றி இருக்கலாம் என்பது என் கருத்து .
  ஒரு திருத்தம். SPB அவர்கள் தமிழிலில் பாடிய முதல் பாடல் "அத்தானுடன் இப்படி இருந்து எத்தனை நாளாச்சு ".
  படம் "ஹோட்டல் ரம்பா" . படம் வெளி வரவில்லை .
  பாடலுக்கான ஊதியத்தில் இவரும் நண்பர் முரளியும் "டிரைவ் இன்" உணவு விடுதியில் மசால் தோசை , குளோப் ஜாமூன் மற்றும் குழம்பியும் அருந்தியதாக இவரே பேசிய காணொளியை நான் கண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொன்ன அனைத்திற்கும் கருத்துரைகளில் பதில் உண்டு... அப்புறம் ஒரே ஒரு இரண்டாம் எண் உள்ள கேட்பொலியை மட்டுமாவது கேட்டு இருக்கலாம்... முருகா...! நன்றி ஐயா...

   நீக்கு
 22. பெயரின் எழுதீதுகளில் பாடல்களைத் தந்திருப்பது சிறப்பு அண்ணா..புதுமையில் கலக்கும் உங்களின் அருமையான அஞ்சலி.
  இரட்டைக் கொம்பில் தொடங்கும் மூன்று குறள்கள் தான் என்று அறிந்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
 23. சிறபான பகிர்வு அண்ணா... அதுவும் எஸ்.பி.பி, என்பதற்குள் பாடலை வைத்து... ஆஹா... அழகு... அருமை.

  பதிலளிநீக்கு
 24. நெகிழவைக்கும் பதிவு சார். மீளமுடியா துக்கம். தொடுதல் வேண்டாம் தனிமைக் கொள்வோம். தூய்மை என்பதை மதமாய் செய்வோம். கொஞ்சம் அச்சம், நிறைய அறிவு. இரண்டும் கொள்வோம். இதையும் வெல்வோம். என்று முழங்கிய குரலை தீனுண்மி உண்ணும் என்பதை கனவிலும் நினைத்ததில்லை.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.