திற...
17.09.2020 அன்று மாறிய வலைப்பூ நுட்பம் மிகவும் சோதித்து கற்றுக் கொள்ள வைக்கிறது...! வலைப்பூவின் தோற்றத்தை மாற்றினால் Theme ⋙ CUSTOMISE ⋙ Edit HTML-ல் உள்ளவை மாறும்... அங்கு வலைப்பூவை மேலும் மேம்படுத்த, தவறான(க) ஒரு script-யை சேர்த்தால் சேமித்துக் கொள்ளாது... அதைப் போலவே செய்துள்ளது பதிவு எழுதும் பக்கத்தை...! ஆனால் இதில் script-யை சேர்க்கும் HTML view-வில், script-யை சரியாக முடிக்கத் தவறினாலும் சேமித்துக் கொள்வதை... விரைவில் சரியாகலாம்...!
திருக்குறள் வலை நுட்பம் :- தமிழ்ச் சிறப்பெழுத்து ழகரம் என்றால், திருக்குறளுக்குச் சிறப்பெழுத்து றகரம்... அழகாய் ஒலிப்பது ழகரம்... தெறிக்க ஒலிப்பது றகரம்.....! உலக மொழிகளில் றகரத்தைத் தேட வேண்டும்...! றகரங்கள் இடம்பெறும் சொற்கள் அனைத்தும் தமிழுக்கே உரியவை...! றகரச் சொற்களைப் பயன்படுத்தி சிலர் எழுதும் கருத்தும், பேசுகின்ற பேச்சும் அறத்துடன் தெறிக்கும்...! வரிப்பணம் போன்ற பொதுப் பொருள், மற்றும் பொது நிதி ஆகியவற்றின் மீது பற்றுள்ளம் கொண்ட ஒரு நாட்டின் தலைவனின் மனநிலையைக் குற்றமாகும் என்பதை அறிவதற்கும் உருவான ஒரு பதிவின் இணைப்பு
படிப்பது வேறு; கற்பது வேறு... வாழ்நாள் முழுவதும் படிக்கலாம்; ஆனால் படித்ததிலிருந்து என்னென்ன கற்றுக் கொண்டு, அவற்றை வாழ்வில் செயல்படுத்துகிறோம் என்பதே படித்ததின் மதிப்பு... வாங்க ஐயனே... வணக்கம்...
① ஒரு எழுத்தில் ஆரம்பித்து அதே எழுத்தில் முடிக்கிறேன்...!
சரி, கற்க வேண்டியவற்றை மட்டுமே வாழ்வு முடியும் வரை கற்றுக் கடைப்பிடிப்பேன்...
② துணை எழுத்தைப் பயன்படுத்துவதாக இல்லை...!
சரி, எனக்கும் கற்பதற்கு யாரும் துணையாக இருக்க வேண்டிய அவசியமில்லை...
③ கால் இல்லாமல் எழுதிவிட்டு, உன்னை நின்று கவனித்துக் கொண்டிருப்பேன்...!
சரி, கற்றதிற்கேற்ப அற நெறியில் நிற்பேன்... நன்றி தாத்தா...!
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
எழுதுபவர்கள் சிலர் மட்டும் அறிந்த கிண்டில் ⚊ மின்னூல்...! அதில் ஆரம்ப அட்டவணையில் தலைப்பைச் சொடுக்கினால் அங்குச் சென்று வாசிக்கலாம்... இங்கே கீழுள்ள நீல வான வண்ணக் கட்டத்தில் தான் சொடுக்க வேண்டியதில்லை... அங்கும், எழுத்தில் எங்கு வேண்டுமானாலும் சொடுக்கலாம்...! தோன்றும் அவற்றை வாசித்து விட்டு எங்குச் சொடுக்கினாலும் மறையும்...! இந்த நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக என்ன செய்யலாம்...? ம்... 'உலகில் அறத்துடன் வாழும் மனிதர்கள் அனைவரும் கீழே உள்ளவற்றை அறிந்தவர்கள்' என்று நினைத்தாலும், மாற்றமடைந்த வலைப்பூ சோதித்ததாலும், இது ஒரு சோதனை பதிவு...! நன்றி...
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
பதிலளிநீக்குபுகைப்படம் அருமை ஜி
புதிய வடிவமைப்பில் மாறிப்போன தளத்தில்... "ற" என்ற எழுத்தை இப்படி அலங்காரம் செய்ய எத்தனை சிரமப்பட்டு இருப்பீர்கள் என்பதை நினைத்து பிரமிக்கிறேன்.
சுட்டிகளுக்கு செல்கிறேன்.
றகரத்தின் சிறப்பு அறிந்தோம். நன்றி. அட . இதிலேயே நான்கு றகரங்கள் வந்து விட்டதே .
பதிலளிநீக்குசிறப்பான பதிவு.. தமிழ் விருந்து..
பதிலளிநீக்குபுகைப்படம் மனம் கவர்ந்தது
பதிலளிநீக்குறகரங்களில் இடம் பெறும் சொற்கள் தமிழுக்கே உரியவை என்பதில் மகிழ்ச்சி
நன்றி ஐயா
மிக அருமையான பதிவு.
பதிலளிநீக்குபுகைப்படம் மிக அழகு
உங்கள் திறமைகள், முயற்சிகள் வியக்க வைக்கிறது.
உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
சோதனை பதிவு மிக அருமை.அடைப்பில் சொடுக்கினால் விரிவதும் எந்த எழுத்தை சொடுக்கினாலும் மறைவதும் தொழில் நுட்பம் வியக்க வைக்கிறது.
மிக்க நன்றி அம்மா... வழக்கம் போல் செய்வது போல் இல்லாமல், இது ஒரு புதிய முயற்சி... இது போல், இனி வரும் பதிவுகளில் அறியாத குறளின் விளக்கத்தை படிப்பதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதே ஒரு நோக்கம்... வலைப்பூ தவிர மற்றவற்றில், நமக்கு விருப்பம் இருந்தால் தேர்வு செய்து விட்டு தொடருவோம்; விருப்பம் இல்லையென்றால், அதை (check box-ல் tick செய்யாமல்) தவிர்த்து விட்டு தொடருவோம்... அதையே தான் இங்கு முயன்றேன்...
நீக்குமாறிய வலைப்பூ பதிவு எழுதும் போதெல்லாம் கற்க வைப்பது உண்மை.
பதிலளிநீக்குமிகச் சிறப்பான பதிவு.
பதிலளிநீக்குறகரம் எங்கள் காலத்தில் தொறட்டி "ற" என்று
கற்றுக் கொடுக்கப்பட்டது.
பதிவின் அமைப்பு இன்னும் வியக்க வைக்கிறது.
கற்கக் கசடற என்ற அளவில் நிற்கிறேன்.
கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
பல கணினி அமைப்புகள் புரிவதில்லை.
முயற்சி திருவினையாக்கும் என்றாவது.
அருமையான பதிவு.
ஒவ்வொன்றையும் சொடுக்கிப் படிக்கிறேன்.
நன்றி தனபாலன்.
திருக்குறளில் புதுப்புது ஆராய்ச்சி செய்து தொழில்நுட்ப அழகுடன் வெளிப்படுத்துவதில் டிடிக்கு இணை இல்லை.
பதிலளிநீக்குமேலும் சில ஒருஎழுத்தில் ஆரம்பித்து அதே எழுத்தில் முடியும் குறள்கள்
குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு-432
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு-604
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு 1025
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தார் ஆவர் விரைந்து 1218
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
நீக்குஅள்ளிக்கொள் வற்றே பசப்பு
எல்லாம் சுளகு செய்யும் உதவியே... எண்ணற்ற இது போல் வியப்புகள் பல உள்ளன... மேலும் தேடும் ஆர்வத்தையும் வளர்க்கின்றன... ஒவ்வொன்றாகப் பதிவு செய்ய வேண்டும்... உங்களுக்குப் பிடித்த EXCEL மேலும் எளிதாக்குகிறது... EXCEL எனும்போது உங்கள் ஞாபகம் கண்டிப்பாக வரும்... ஆசிரியரிடம் இருந்து பாராட்டு பெறுவது மிகவும் கடினம்... பலதடவை அதை எனக்குத் தந்துள்ளீர்கள்... மிக்க நன்றி...
நீக்குமேலே முதலில் உள்ள குடிதழீ என்று தொடங்கும் 544 குறள் ஆகும். 432 என தவறாக குறிப்பிடுவிட்டேன். மன்னிக்கவும்
நீக்குறகரத்தின் சிறப்பு! ழகரச் சிறப்பில் இதுநாள் வரை மறைந்திருந்ததோ...
பதிலளிநீக்குபுகைப்படம் ரசிக்க வைத்தது.
கணினிக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகப்போகிறது. புதியநடைமுறை என்னை என்ன பாடுபடுத்தப் போகிறதோ...
வாங்க ஸ்ரீராம் சார்... (Compose view) வழக்கம் போல... முக்கியமான 'Insert jump break'-ஐகானை தெரியும்படி முன்புறம் வைத்திருக்கலாம்.... ஐகான்களை கவனத்துடன் கையாள வேண்டும்... அவ்வளவே...
நீக்குPreview பார்க்கும் போது, இதற்கு முன் Keyboard keys வேலை செய்யும்: இப்போது Preview பதிவை Mouse-யால் உருட்ட வேண்டி உள்ளது...! இது எனக்கு மட்டும் தானா...? கணினி விரைவில் சரியாகட்டும்... இதையும் சொல்லுங்கள்... இன்றும் அவ்வாறே...
படிக்க வேண்டிய காலத்தில்... படிக்க முடியவில்லை... காலம் கடந்து இப்போதுதான் சிறிது சிறிதாக தொழிலுடன்...... பயின்று வருகிறேன் .மிக்க நன்றி! ஐயனே!....
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமிகச் சிறப்பான பதிவு. உங்களின் திறமைகளை கண்டு வியக்கிறேன். தொட்டவுடன் வரும் எல்லா அதிகாரங்களின் குறள் விளக்கமும், பின் எங்கு தொட்டாலும், மறையும் அதிசயமும் வியக்க வைக்கிறது. உங்கள் புதுப்புது முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஒவ்வொரு தடவையும் புதிதாக தொழிற்நுட்பங்களை பரீட்சித்துப் பார்க்கும் உங்களை எத்தனைப் பாராட்டினாலும் தகும். .பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
திருக்குறளின் சிறப்பெழுத்து றகரம். அருமையான தேடலுக்குக் கிடைத்த அரிய செய்தி. ஓர் ஆய்வுக் கட்டுரையை வாசித்த உணர்வு ஏற்படுகிறது. கல்லூரி/பல்கலைக்கழகங்களில்/பொது நிறுவனங்கள்/இலக்கிய அமைப்புகள் சார்பாக நடத்தப்படுகின்ற திருக்குறள் தொடர்பான கருத்தரங்களுக்கு இதுபோன்ற உங்கள் கட்டுரைகளை ஆய்வுக்கட்டுரையாக அனுப்பிவைக்கலாம். மாணவர்களும், ஆய்வாளர்களும் பயன் பெறுவர்.
பதிலளிநீக்குறகரம், ழகரம் என குறளின் சிறப்புகளை, தேடித்தேடி தரும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி. புதிது புதிதாக தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அசத்திக் கொண்டிருக்கிறீர்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும் தனபாலன்.
பதிலளிநீக்குவலைப்பக்கம் மிகவும் அழகாக இருக்கிறது அண்ணா...
பதிலளிநீக்குதங்களின் 'ற' பார்க்கும் போதே படிக்கும் ஆர்வத்தையும் பரவசத்தையும் ஒருங்கே தருகிறது.
செம...
உங்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
கலக்குங்க அண்ணா... வாழ்த்துகள்.
படத்தை பார்த்தவுடன் மூலிகையை பற்றி எழுத ஆரம்பித்து விட்டீர்களோ என்று திற திற என்று திறந்து பார்த்தால் ... ஆகா !! தப்பாமல் நம் அய்யனின் முப்பால் ... வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎனக்கும் ஆய்வு கட்டுரையை படித்த உணர்வே ஏற்படுகிறது நண்பரே. நன்றிகள் பல.
பதிலளிநீக்குநான் என் கருத்தை முகநூல் மூலம் பகிர்ந்திருந்தேன். அதைக் காணவில்லை. இந்தப் பதிவில் பாராட்ட பல விஷங்கள் இருக்கின்றன.முதலாவது தொழில் நுட்பத் திறமை இரண்டாவது எளிமையான நடை.மூன்றாவது அமைப்பு. வாழ்க!வளர்க!
பதிலளிநீக்குமிகவும் அருமை பயனுள்ள தகவல் மிக்க மகிழ்ச்சி நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/
பதிலளிநீக்கு