திருக்குறள் கணக்கியல் பயிற்சி ஏழு (7) - கொம்பில்லாத குறள்கள் 19
11.09.2020
கொம்பில்லாக்குறள்கள் :
எ - தெ - கொம்பு
ஏ - தே - கொம்புசுழி
ஐ - தை - இரட்டைக்கொம்பு
ஒ - தொ - கொம்பு பின்கால்
ஓ - தோ - கொம்புசுழி பின்கால்
ஔ - தௌ - கொம்புக்கால்
தாங்கள் சுட்டிய குறட்பாக்களுள், 100. 224, 352 ஆகிய மூன்றில் மட்டுமே
எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய உயிரெழுத்துகள் முதற்சீரின் முதலெழுத்து
தவிர்த்து இடையில் இல்லாமல் உள்ளன. மற்ற ஆறு திருக்குறள்களிலும்
இடையில் புணர்ச்சி விதிப்படி புணர்த்தியெழுதினால், கொம்பு,
கொம்பு பின்கால், கொம்புசுழி பின்கால் ஆகியவை வரும்.
முகநூல் மூலம் கருத்துரை :
திருமிகு. அ.கிருஷ்ணமூர்த்தி, முனைவர் ஐயா
வலைப்பூ : →அண்ணாச்சி←
அவர்களுக்கு நன்றி...

புதிதாக வருபவர்கள் கீழ்காண்பதை ஒவ்வொன்றாக சொடுக்கி சுருக்கமான விளக்கம் அறியலாம்...
குறள் எண்களோடு 1330 குறள்கள், அதிகார எண்களோடு 133 அதிகாரங்கள் கொண்ட ஒரு திருக்குறள் முதன்மை கோப்பையை (Master Excel file) நம் கணினியில் உருவாக்குகிறோம்... →இணைப்பு←
எழுத்துக்களை எளிதாகக் கணக்கிட, சுளகு எனும் சொல்லாய்வுக் கருவியை அறிகிறோம்... அதன் மூலம் திருக்குறளில் அதிக முறை பயன்படுத்திய ஓரெழுத்து 'னி' என்பது தவறு, 'ன்' தான் என்பதைக் கண்டுபிடித்து அதை உறுதிப்படுத்தினோம்... →இணைப்பு←
முதன்மை கோப்பில், குறள் மூலத்தையும் தட்டச்சு செய்து சேமித்துக் கொள்கிறோம்... அவற்றை 'சுளகு'வில் துணைகொண்டு, திருக்குறளில் ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரண்டு எழுத்துக்கள் ங, ளீ என்பதையும், குறள் மூலத்தில் தான் இந்த ஆய்வு செய்யவேண்டும் என்பதையும் புரிந்து கொண்டோம்... →இணைப்பு←
ஐயன் அந்த இரண்டு எழுத்துக்களையும் மேலும் சில இடங்களில் பயன்படுத்தாததற்குக் காரணம், தமிழ் எழுத்துக்கள் 247-ல், பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கையே என்பதையும் புரிந்து கொண்டோம்... அதனால் அந்த எண்ணிக்கை 247-ல், 37 எழுத்துக்கள் என்பது தவறு என்பதையும், மேலும் கூடுதலாக முப்பாலில் இல்லாத ஆறு (6) எழுத்துக்களும் உள்ளது என்பதையும் அறிந்தோம்... →இணைப்பு←
"சொற்களாக இருந்தாலும், ஓரெழுத்தாக இருந்தாலும், அவற்றைப் பிரிந்து மேய்ந்து அவற்றின் கணக்கைச் சொல்வதே எனது வேலை...!" என்று சுளகு சொல்வதை அறிந்தோம்... திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37+6=43 எழுத்துக்கள் இடம் பெறவில்லை என்று உறுதிப்படுத்த முடியவில்லை... அதன் காரணம் ஔகார வரிசை எழுத்துக்கள்... →இணைப்பு←
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-ல் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் 205 மற்றும் பயன்படுத்தாத எழுத்துக்கள் 42 என்று முடிவு செய்தோம்... ஆனால் அதை உறுதி செய்யவில்லை... →இணைப்பு←
சுளகு பெட்டியில் தமிழிங்கிலீசில் தட்டச்சு செய்துவிட்டு நகர்ந்தால் (space bar) தமிழாக மாறும் என்று முன்பே சொல்லியுள்ளேன்...! ஒரு எடுத்துக்காட்டாக, சுளகு பெட்டியில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்கள் அனைத்தையும் வரிசையாக எழுதவும்... "இதர" என்பதிலுள்ள "பரம்பல்" என்பதைச் சொடுக்கவும்... முடிவில் மொத்த எண்ணிக்கை சரியாக இல்லையென்றால், குடும்பத்தின் கடைக்குட்டி பெயரைத் தட்டச்சு செய்துவிட்டு, Enter-யை தட்டி உள்ளீர்கள்...! விரிதாளிலிருந்து நாம் படியெடுத்து இங்குப் பெட்டியில் ஒட்டும் போதும் (copy & paste from excel sheet), இது போல் எதுவுமே இல்லாத (Empty rows) வரிகள் உண்டாகும்... உடனே இதை நீக்குவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்... இது கணக்கியல் மூலம் திருக்குறள் கற்றலின் போது மிகவும் உதவும்...
சரி, பரம்பல் சொடுக்கியவுடன் ஒவ்வொருவரின் பெயரிலுள்ள உயிர், மெய், உயிர்மெய் என்று வரி வரிகளாகப் பிரித்துக் காட்டும்...! அவற்றில் நமக்குக் கொம்பு எழுத்துக்களுக்குக் காரணமான எ/ஏ, ஐ, ஒ/ஓ, ஔ, உயிர்மெய் நெடுவரிசைகள் மட்டும் தேவை... அவற்றை மட்டும் படியெடுத்து ஒட்ட முடியாது... அதனால் தலை முதல் ("உயிர்" எனும் தலைப்பு உட்பட) அடி வரை ("மொத்தம்" எனும் முடிவு வரை) முழுவதையும் படியெடுத்து புதிய கோப்பில் ஒட்டி விடுவோம்... "உயிர்" முதல் "உ/ஊ உயிர்மெய்" வரை உள்ள நெடுவரிசைகளை நீக்கி (delete) விடுவோம்... அதன் அருகில் நாம் சுளகுவில் எழுதிய பெயர்களையும் எடுத்து, "வரி 1" என்பதற்கு நேர் எதிராக ஒட்டி விடுவோம்... மொத்தம் எனும் தலைப்பின் கீழ், புதிய சூத்திரத்தை (=sum(.. : ..) formula) எழுதி முடித்து, அதை அனைத்து வரிகளிலும் போட்டு விடுவோம்... அதன் எண்ணிக்கை ஒவ்வொரு வரியிலும் கவனித்து, சுழியம் (zero) தவிர மற்ற வரிகளை முழுவதும் நீக்குவதற்கு, Data sort செய்துவிட்டு, நீக்கி (delete) விட்டால், நமக்குக் கொம்பு எழுத்தில்லாத பெயர்கள் கிடைத்துவிடும்...! இதே போன்று பெயர்களுக்குப் பதில் பதம் பிரித்த குறள்களையோ அல்லது பதம் பிரிக்காத குறள்களையோ வைத்துச் செய்தாலும், கிடைத்தது என்னவென்றால் :-
⎛→கொம்பில்லா மனிதம்←⎞
⎛→கொம்பில்லா அரசியல்←⎞
⎛→கொம்பில்லா காதல்←⎞
↓→பகா வழி←↓
⎝ ⎠
கொம்பு எழுத்தில்லாத குறள்கள் இணையத்தின் படி 17 குறள்கள்; நமக்குக் கிடைத்ததோ 19 குறள்கள்... எது சரி...? 19 குறள்கள் தான் சரி என்று உறுதியாகச் சொல்ல முடியும்...! எப்படி...? அது தான் தாத்தாவின் கணக்கியல் நுட்பம்... அவற்றில் எங்கு? எப்படி? எவ்வாறு? ஏழு (7) உள்ளது என்பதை நோக்கித் தான் பொறுமையோடும் பெருமையோடும் சென்று கொண்டு இருக்கின்றோம்... நன்றி... அடுத்த என்ன பயிற்சி...?
ன்வண்
என்னது இது...?
முதலெழுத்தையும் கடையெழுத்தையும் தேடு... அது தான் அடுத்த பயிற்சி...!
எதை...? எங்கே...? எப்படி..?
எப்போதும் குழந்தை மனம் இருக்கவேண்டும் என்று சொல்வாய்; குழந்தை போல் சிந்தித்துத் தேடவும் செய்யணும்...!
புரியுது; அடியேன் உடலால் மட்டுமல்ல, மனத்தாலும் இனிப்பானவன்...! அடுத்த பதிவுக்குப் பறக்கிறேன்...!

புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதகவல்கள் சிறப்பு ஜி
பதிலளிநீக்குநன்றி சொல்லும் கை படம் அருமை தங்களது தொழில்நுட்ப வேலை பிரமிக்க வைக்கிறது.
தொடர்ந்து வருகிறேன்...
வியக்க வைக்கும் உங்கள் ஆராய்ச்சிக்கு நன்றி .
பதிலளிநீக்குநல்ல பயிற்சி டிடி......கொஞ்சம் நிதானமாக நேரம் இருக்கும் போது இதைச் செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குகீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு சிறப்பாக இருக்கிறது மேலும் தங்களின் தொழில் நுட்பத்துடன் அமர்க்களமாக உள்ளது. நன்றி கூறியபடி கூப்பிய கைகள் பதிவோடு வருவதையும், எழுத்துகள் முன்னோக்கி வருவதை மிகவும் ரசித்தேன். தங்களின் தொழிற்நுட்பம் வியக்க வைக்கிறது. தங்களின் பதிவின் விபரங்களுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிவு மிகவும் பொறுமையாக படித்து நீங்கள் சொல்வது போல செய்து பார்க்க ஆசை.வணக்கம் நன்றி சொல்லும் பகிர்வு அருமை.
பதிலளிநீக்குஎப்போதும் குழந்தை மனம் இருப்பது மகிழ்ச்சி. அது தான் அடுத்து என்ன அடுத்து என்ன என்று தேடுதல் செய்யும். குழந்தை மனம் உங்களுக்கு இருப்பதால் தான் இத்தனை தேடல் . பெரியவர்கள் ஆகி விட்டால் அலுப்பும் சலிப்பும் வந்து விடும்.
உங்கள் தேடல் தொடர வாழ்த்துகள்.
தொடர்கிறேன்.
சிறப்பான பதிவு... பள்ளியில் கூட பயிற்றுவிக்காத பாடங்கள்..
பதிலளிநீக்குசிறந்த தொழில் நுட்பத்துடன் கூடிய பதிவு..
வாழ்க. நலம்..
தங்களின் உழைப்பு வியக்க வைக்கிறது
பதிலளிநீக்கு