🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திருக்குறள் கணக்கியல் பயிற்சி ஆறு (6) - 247-42=205✔

அனைவருக்கும் வணக்கம்...
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-ல், 43 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை என்பது :


இதுவரை எழுதிய திருக்குறள் கணக்கியல் பயிற்சிகளின் விளக்கங்கள்

புதிதாக வருபவர்கள் கீழ்காண்பதை ஒவ்வொன்றாக சொடுக்கி சுருக்கமான விளக்கம் அறியலாம்...



குறள் எண்களோடு 1330 குறள்கள், அதிகார எண்களோடு 133 அதிகாரங்கள் கொண்ட ஒரு திருக்குறள் முதன்மை கோப்பையை (Master Excel file) நம் கணினியில் உருவாக்குகிறோம்... இணைப்பு



எழுத்துக்களை எளிதாகக் கணக்கிட, சுளகு எனும் சொல்லாய்வுக் கருவியை அறிகிறோம்... அதன் மூலம் திருக்குறளில் அதிக முறை பயன்படுத்திய ஓரெழுத்து 'னி' என்பது தவறு, 'ன்' தான் என்பதைக் கண்டுபிடித்து அதை உறுதிப்படுத்தினோம்... இணைப்பு



முதன்மை கோப்பில், குறள் மூலத்தையும் தட்டச்சு செய்து சேமித்துக் கொள்கிறோம்... அவற்றை 'சுளகு'வில் துணைகொண்டு, திருக்குறளில் ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரண்டு எழுத்துக்கள் ங, ளீ என்பதையும், குறள் மூலத்தில் தான் இந்த ஆய்வு செய்யவேண்டும் என்பதையும் புரிந்து கொண்டோம்... இணைப்பு



ஐயன் அந்த இரண்டு எழுத்துக்களையும் மேலும் சில இடங்களில் பயன்படுத்தாததற்குக் காரணம், தமிழ் எழுத்துக்கள் 247-ல், பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கையே என்பதையும் புரிந்து கொண்டோம்... அதனால் அந்த எண்ணிக்கை 247-ல், 37 எழுத்துக்கள் என்பது தவறு என்பதையும், மேலும் கூடுதலாக முப்பாலில் இல்லாத ஆறு (6) எழுத்துக்களும் உள்ளது என்பதையும் அறிந்தோம்...இணைப்பு



திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37+6=43 எழுத்துக்கள் இடம் பெறவில்லை என்று உறுதிப்படுத்த முடியவில்லை... அதன் காரணம் ஔகார வரிசை எழுத்துக்கள்... இணைப்பு



இன்று பயிற்சி 6:

சான்று 1 : ஆண்டு 1847


பக்கம் எண் 677 - திருக்குறள் மூலம்-சரவணப் பெருமாளையர் - இணைப்பு →இங்கே

சான்று 2 : ஆண்டு 1971


பக்கம் எண் 147 - திருக்குறள் ஆராய்ச்சி_யாப்பு அமைதியும்_பாட வேறுபாடும் - இணைப்பு →இங்கே

சான்று 3 : ஆண்டு 1950


பக்கம் எண் 259...263 - திருக்குறள் மூலம் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் - இணைப்பு →இங்கே

நம் கணினியிலுள்ள திருக்குறள் முதன்மை கோப்பை (Master-Excel file) திறந்து, பதம் பிரிக்காத குறள்களில், குறள் எண் 1144-ல் கௌவையாற் என்றும், குறள் எண்கள் 167 மற்றும் 167-ல் முறையே ஔவித், ஔவிய என்றும், குறள்களின் முதல் சீர்களைத் திருத்தம் செய்துவிடுவோம்... அடுத்து வழக்கம் போல் சுளகு பெட்டியில் திருத்தம் செய்த 1330 குறள்களையும் இட்டு, அங்குள்ள "ஓரெழுத்து" சொடுக்கிய பின், இப்போது ஒரு யுக்தியை (trick) செய்வோம்...! சுளகு கணக்கிட்டுக் காண்பிப்பதை அப்படியே முழுவதையும் தூக்கி (copy)-(ன் முதல் ங வரை), சுளகு பெட்டியிலுள்ள "அழி" சொடுக்கி பெட்டியைச் சுத்தமாக்கிவிட்டு, பெட்டியில் போட்டு (paste) விடுவோம்...! அடுத்த நொடி, "மொத்த எழுத்துக்கள் 205" என்று காட்டும்...! "சொற்களாக இருந்தாலும், ஓரெழுத்தாக இருந்தாலும், அவற்றைப் பிரிந்து மேய்ந்து அவற்றின் கணக்கைச் சொல்வதே எனது வேலை...!" என்று சுளகு நம்மிடம் பேசுகிறது...! திருக்குறளில் பயன்படுத்தாத எழுத்துக்கள் 42 என்பதும், திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-ல் பயன்படுத்திய எழுத்துக்கள் 205 (2+0+5 = 7 மூல எண்) என்பதும் முடிவாகிறது...

மேற்கண்ட சான்றுகளில் 1857 ஆண்டில் 1144-வது குறள் ஆண்டு கௌவை என்றே தொடங்குகிறது; 1971 ஆண்டில் எழுத்துப்போலியை அறியலாம்... 1950 ஆண்டில் முதலெழுத்துக்களைக் கணக்கிட்டு உள்ளதில் கௌ 1 என்றும் உள்ளது... "ஆகா...! மகிழ்ச்சி...!" என்பது முடியாது...! அந்தக் கோப்பின் சற்றே முன்னே சென்று குறள் எண் 1144-யை பார்க்கவும் வேண்டும்... அங்கே கவ்வை என்றே தொடங்குகிறது...! இதே போன்று குறள் எண் 167 மற்றும் 169 : வழக்கம் போல் அவ்...! முருகா...! பக்கத்தில் உள்ள படத்தில், குறள்களின் முதலெழுத்துக்களைத் தொகுத்து, கூட்டல் கணக்கு உள்ளது; 1330 வருகிறதா...? அன்றைக்கு கல்வி கற்க முடிந்தவர்களின் சாதனை...!

உண்மை என்று நமக்கு உறுதியாகத் தெரிந்தாலும் சான்றுகளை மட்டும் நம்பி, உறுதியாக உறுதியென்று சொல்ல முடியாது...! கணக்கைக் கணக்கால் தான் உறுதி செய்ய முடியும் - உறுதி செய்யவும் வேண்டும்... தாத்தாவின் நுட்பம் அப்படி...! எழுத்துக்களின் கணக்கியல் செய்யும் போது நன்றாக எண்ணி நிதானமாகவே செய்ய வேண்டும்... அதையும் நாம் ஒரு கருவியின் துணையோடு செய்யும்போது சிலவற்றைக் காலம் தாழ்த்தியே செய்யலாம்... ஏனென்றால் கருவி என்னென்ன செய்யும், நாம் அதில் என்னென்ன செய்யலாம் என்பதைப் புரிந்து கொள்ளப் பல பயிற்சிகள் செய்யவேண்டும்... ஆனால் உடனே செய்ய வேண்டிய செயல்களும் உண்டு; அதனை மறக்காமல் அப்போதே முடிந்துவிடவேண்டும்... இங்கு இதில் முக்கியமானது, "என்னென்ன பயிற்சி? அவற்றைச் செய்தது எப்படி?" போன்ற குறிப்புகளுடன், கோப்பையைத் தகுந்த பெயரில் சேமிப்பது...!

68. வினைசெயல்வகை
672. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை

பயிற்சி மூன்றில் பதம் பிரித்துப் பார்க்க வேண்டிய ஆய்வு இருப்பதாகத் தாத்தா சொல்லியிருந்தாரே...! அதன் பொருள், பதம் பிரிக்காமலிருந்தால் அதன் ஆய்வு முடிவு மாறி விடுமா...? இல்லை பதம் பிரித்தாலும் பிரிக்காவிட்டாலும் அவற்றின் கணக்கு ஒன்றாக இருக்குமா...? என்னவாக இருக்கும்...? குறிப்புகள் :

1. அதைப்பற்றி முன்னரே நான்கு பதிவுகள் எழுதி உள்ளேன்...! 2. அதன் முதல் பதிவைத் தவறாக எழுதிப் பதிவு செய்தேன்; யாரேனும் அதைப் பற்றிச் சொல்வார்களா என்று எதிர்பார்த்தேன்... [அதுவும் நடந்தது; சரியாக எழுதி வைத்திருந்த பதிவை உடனே மாற்றினேன்.] 3. அந்தப் பதிவை விரிதாள் (Excel) நுட்பங்களைக் கொண்டு தான் செய்தேன்... 'சுளகு' தம்பியின் பழக்கத்தால், எழுத்துக்களின் கணக்கு செய்வது மிகவும் எளிது என்பதைப் புரிந்து கொண்டேன்... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. ஆச்சர்யமாக தொடர்ந்து வருகிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  2. கொஞ்சம் ஆழ்ந்து ஒன்றி வாசித்தலில் கொஞ்சம் புரிந்தது, எழுத்துக்களின் கணக்கியலை நன்றாக எண்ணி நிதானமாகவே செய்ய வேண்டும் என்பது போல் புரிந்து கொள்வதும் கூட ஆழ்ந்து வாசிக்கும் போதுதான் முடிகிறது!!!

    நல்ல ஆராய்ச்சி. படிக்கவே இப்படி என்றால் இதை உருவாக்க உங்களின் உழைப்பு தெரிகிறது. சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொல்வதை படிக்க படிக்க வியப்புதான் வருகிறது.
    எவ்வளவு ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள்!
    தொடர்கிறேன்.

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  4. காலத்தை வென்றிருக்கும் பதிவு..

    மண் பயனுற வேண்டும்...

    வாழ்க நலம்!.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. உங்கள் திருக்குறள் ஆராய்ச்சி திகைக்க வைக்கிறது. நீங்கள் மிகவும் நுணுக்கமாக யோசித்து எழுதிய பதிவு. நானும் இனி தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.