🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திருக்குறள் கணக்கியல் பயிற்சி ஐந்து (5) - 43 ❌

அனைவருக்கும் வணக்கம்...
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 43 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை என்பது :



இதுவரை எழுதிய திருக்குறள் கணக்கியல் பயிற்சிகளின் விளக்கங்கள்

புதிதாக வருபவர்கள் கீழ்காண்பதை ஒவ்வொன்றாக சொடுக்கி சுருக்கமான விளக்கம் அறியலாம்...



குறள் எண்களோடு 1330 குறள்கள், அதிகார எண்களோடு 133 அதிகாரங்கள் கொண்ட ஒரு திருக்குறள் முதன்மை கோப்பையை (Master Excel file) நம் கணினியில் உருவாக்குகிறோம்... இணைப்பு



எழுத்துக்களை எளிதாகக் கணக்கிட, சுளகு எனும் சொல்லாய்வுக் கருவியை அறிகிறோம்... அதன் மூலம் திருக்குறளில் அதிக முறை பயன்படுத்திய ஓரெழுத்து 'னி' என்பது தவறு, 'ன்' தான் என்பதைக் கண்டுபிடித்து அதை உறுதிப்படுத்தினோம்... இணைப்பு



முதன்மை கோப்பில், குறள் மூலத்தையும் தட்டச்சு செய்து சேமித்துக் கொள்கிறோம்... அவற்றை 'சுளகு'வில் துணைகொண்டு, திருக்குறளில் ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரண்டு எழுத்துக்கள் ங, ளீ என்பதையும், குறள் மூலத்தில் தான் இந்த ஆய்வு செய்யவேண்டும் என்பதையும் புரிந்து கொண்டோம்... இணைப்பு



ஐயன் அந்த இரண்டு எழுத்துக்களையும் மேலும் சில இடங்களில் பயன்படுத்தாததற்குக் காரணம், தமிழ் எழுத்துக்கள் 247-ல், பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கையே என்பதையும் புரிந்து கொண்டோம்... அதனால் அந்த எண்ணிக்கை 247-ல், 37 எழுத்துக்கள் என்பது தவறு என்பதையும், மேலும் கூடுதலாக முப்பாலில் இல்லாத ஆறு (6) எழுத்துக்களும் உள்ளது என்பதையும் அறிந்தோம்...இணைப்பு



இன்று பயிற்சி 5: // ஔ, ஙி, ஙீ, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ, சௌ, ஞி, ஞீ, ஞை, ஞொ, ஞோ, ஞௌ, டௌ, ணூ, ணௌ, தௌ, நை, நௌ, பௌ, மௌ, யௌ, ரௌ, வௌ, ழூ, ழெ, ழே, ழோ, ழௌ, ளோ, ளௌ, றௌ, னௌ // ஆகியவை இடம்பெறாத 37 எழுத்துக்கள் + ஙா, ஙு, ஞு, ஞூ, ஞெ, ஞே ஆகியவையும் சேர்த்து (37+6) 43 ஆகிறது... இப்போது தமிழ் எழுத்துக்கள் 247-ல் (247-43=) 204 எழுத்துக்கள் பயன்படுத்தவில்லை என்றாகிறது... இது சரியா...?

பயன்படுத்தாத எழுத்துக்களைச் சற்றே கவனிப்போம்... ஒரே ஒரு எழுத்தைத் தவிர ஔகார வரிசை எழுத்துக்கள் வந்து விட்டன... கௌ தான் அந்த ஒரே ஒரு எழுத்து...! ஐயம் 1 : கௌவை எனும் ஈரெழுத்து சொல், நான்கு குறள்களில் சீர்களின் இடையே வரும்போது கௌவை ஆகவும், அதே வேளை முதல் சீராக வரும்போது (குறள் எண் 1144) கவ்வை என்று மூன்றெழுத்து சொல்லாக எப்படி ஆகும்...? விளக்கமாக அறிய முந்தைய பதிவு ஐயம் 2 : கௌ எனும் உயிர்மெய்யெழுத்தை பயன்படுத்தியிருக்கும் போது, தாத்தா எனும் உயிரெழுத்தைப் பயன்படுத்தவில்லையா...? அதென்ன என்பதற்குப் பதில் அவ்...! எதுகைக்கும் ஓசைக்கும் முக்கியம் தருவது முக்கியமா...? ஓர் உயிரெழுத்து வரிசையே அழிப்பது முக்கியமா...? தொல்காப்பியம் சொல்வது : "ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்...! அவற்றை அறிவதற்கும், எழுத்துப் போலி என்றால் என்னவென்று அறிவதற்கும், ஒரு வலைத்தள இணைப்பு ஔவியம்-பேசேல் அவசியம் வாசிக்க வேண்டுகிறேன்... போலி பிம்பத்தால் உருவான பொய்யனுக்கு ஆட்பட்டுச் சீரழிந்து கொண்டிருக்கும் நம் நாட்டைப் போல, எழுத்துப் போலியை வாழ்விப்பது வேதனை தருகிறது...! இந்த கேள்விகளையெல்லாம் சிறிது தூங்கச் செய்துவிட்டு, அடுத்த பதிவில் தேடுதல் வேட்டையைத் தொடங்குவோம்...!

இன்றைக்கு வரைக்கும் எனும் ஓரெழுத்தானது, "எவ்வாறு தட்டச்சு செய்யப்படுகிறது" என்பதைச் சற்றே ஆராய்வோம்... முதலில் என்று தட்டச்சு செய்துவிட்டு, அதன் பின் கீழ் நோக்கு -வை தட்டச்சு செய்து, அதன்பின் என்று இணைக்கப்படுகிறதா...? ஏனெனில், இன்றளவும் சில வலைத்தளங்களில் ஔ உட்பட ஔகார வரிசை எழுத்துக்கள் அனைத்தும் அப்படித்தான் உள்ளன...! இங்குப் பல அழகிய தமிழ் எழுத்துருக்களை (Fonts) பார்ப்பீர்கள்... எனக்கு பிடித்தமானவற்றை சில எழுத்துருக்களைப் பயன்படுத்தும்போது என்று ஓரெழுத்தாக வருவதில்லை...! அதனால் அதை பொதுவான எழுத்துருவில் தான் எழுதுகிறேன்... பதிவின் இந்த கடை பத்தியைப் புரிந்து கொள்ளவும், நாம் எந்தளவு சுளகுவை பயன்படுத்துகிறோமோ அந்தளவு இந்த கணக்கியல் பயிற்சி எளிதாக இருக்கும் என்பதாலும், குறள் திறன் தளத்தின் இணைப்பிற்கு இங்கே சென்று, "பயன்படுத்தாத எழுத்துக்கள்" எனும் தலைப்பில் கீழ் உள்ள முப்பத்தேழு (37) எழுத்துக்களையும் படியெடுத்து (copy), சுளகு கருவிப் பெட்டியில் போட்டு (paste), "ஓரெழுத்து" என்பதைச் சொடுக்கி பாருங்கள்... தட்டச்சு செய்தவரின் தவறுகளை அறிவதோடு, நாமும் தவறு செய்யாமல் இருக்கலாம்... நன்றி...

நாம் சொல்லக் கருதிய சொல்லினும் வேறொரு சொல் சிறந்தது இல்லை என்பதை அறிந்து சொல்லுதல் வேண்டும்... இதில் முக்கியமாக அந்த சொல்லில் எழுத்துப்பிழையே இருக்கக்கூடாது என்பது தான் முக்கியம்...

65. சொல்வன்மை
645. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. நாஞ்சில் நாடன் கட்டுரை மிக நீளம்.  பாதி படித்திருக்கிறேன்.  நறுஞ்செய்திகள் சுவாரஸ்யம்  அதில் ஏற்கெனவே நீங்கள் சொல்லியுள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.  தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

  2. உங்களின் முயற்சி வியக்கவைக்கிறது.. தனபாலன் யாராவது திருக்குறளை வைத்து ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் பெற விரும்பினால் அதற்கு அவர்கள் தனியாக மெங்க்கிட வேண்டியதில்லை உங்கள் பதிவுகளை அழகாக தொகுத்து கொடுத்தாலே டாக்டர் பட்டம் வாங்கிவிடலாம்

    பதிலளிநீக்கு
  3. கணக்கியல் பயிற்சிகளின் விளக்கங்கள் மலைக்க வைக்கிறது.
    உங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. பிரம்மிக்க வைக்கும் ஆராய்ச்சி ஐயா . கலக்குங்கள்

    பதிலளிநீக்கு
  5. அருமையான திருக்குறள் ஆராய்ச்சி . மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  6. நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் எழுதியிருக்கும் கட்டுரையை வாசிக்கிறேன். தொடங்கிவிட்டேன். சுளகும் முயற்சி செய்கிறேன்.

    உங்கள் ஆய்வு அருமை. இரு முறை வாசித்தால் தான் என் மர மண்டைக்குக் கொஞ்சமேனும் புரிகிறது டிடி!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அவசர வைக்கும் விளக்கங்கள்.

    எனது கணினியில் (ஔ) நேரடியாக எழுத முடிகிறது ஜி.

    நன்று தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  8. நாஞ்சில் நாடன் அவர்கள் சொல்வன கட்டுரை பாதி படித்து இருக்கிறேன். மீதியும் படிக்க ஆவலாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நறுஞ்செய்திகள் சொல்லும் புள்ளிகள் சில வியக்க வைக்கிறது, பகிர்வுக்கு நன்றி.
    நிறைய படித்து வருவது உங்கள் ஆராய்ச்சிக்கு உதவும்.

    பதிலளிநீக்கு
  10. அறத்தின் வழிகள் பற்றிப்பேசத் தகுதியானவர்கள் யார் என்பதை ஒளவை சொன்ன பகிர்வு அருமை, நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.