திருக்குறள் கணக்கியல் பயிற்சி மூன்று (3) - ங, ளீ✔
முந்தைய திருக்குறள் கணக்கியல் பயிற்சி →இரண்டு (2)← பதிவில் திருக்குறளில் அதிக முறை பயன்படுத்திய ஓரெழுத்து 'னி' என்பது தவறு; அது யாரோ என்றோ செய்த தட்டச்சு தவறு என்பதையும், சரியான விடை 'ன்' தான் என்பதைக் கண்டுபிடித்து அதை உறுதிப்படுத்தினோம்...
ஆனால், திருக்குறளில் ஒருமுறை பயன்படுத்திய இரண்டு எழுத்துக்கள் ங, ளீ என்று சொல்லப்படுவதை உறுதிப்படுத்தவில்லை... காரணம் சுளகு கருவியில் சரிபார்க்கும் போது கூடவே றீ, டெ, யூ, ளெ, லெ, ளூ, றெ ஆகிய எழுத்துக்களும் ஒருமுறை பயன்படுத்தியதாக வருகிறது...! அனைத்தும் சரியாகச் செய்தும் தவறுகள் வருகின்றன... ஆனால் அவை தவறு என்று கூட நமக்குத் தெரியாது என்றாலும், அவற்றை ஆராய்ந்தால் என்ன...? பல புதிய கண்டுபிடிப்புகள் அவ்வாறு தானே உருவானது...? நம் மீதோ, நாம் விரும்பும் ஒருவர் மீதோ, அவர் தவறு செய்ததால் குற்றம் அல்லது பழி வருகிறது... அவற்றை ஆராய்ந்து, நம் மீது சொல்லப்படுவது உண்மை என்றால் திருந்த வேண்டும்... விரும்பும் ஒருவர் மீது சொல்லப்படுவது உண்மை என்றாலும் நாம் திருந்த வேண்டும்...! சரி விடுங்கள், அரசியல் வேண்டாம்...! இங்குச் சுளகு பெட்டி எனும் சட்டியில் இட்ட 1330 குறள்களும் தவறாக இருக்குமோ...? அகப்பையில் வந்ததைப் பதம் பார்ப்போம்...
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பதால் நாமும், கூடுதலாக வரும் எழுத்துக்களில் ஒன்றை "பதம்" பார்ப்போமா...? எடுத்துக்காட்டாக ளூ எனும் எழுத்தை எடுத்துக்கொள்வோம்... அதற்குமுன் சென்ற பதிவில் சொன்னபடி, சுளகில் "ஓரெழுத்து" சொடுக்கிய நிலையில் இருக்க வேண்டும்... இனி தேடுதல் (Ctrl-F) மூலம் ளூ-யை தேடினால், தேடுதல் பெட்டியில் 1/2 என்று காண்பிக்கும்... அங்குள்ள ⋀ V ஆகிய குறியீடுகளைச் சொடுக்கினால், சட்டிக்கும் அகப்பைக்கும் சென்று காண்பிக்கும்...! சுளகு கணக்கிட்ட அகப்பையை விட்டுவிடுவோம்...! சட்டியில் அதாவது சுளகு பெட்டியில் எந்த குறள் காண்பிக்கிறது என்றால் : 216. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்துஅற்றுஆல் செல்வம் நயன்உடை யான்கண் படின் என்பதில் ளூ வருகிறது... பிறர்க்கு உதவும் ஒப்புரவாளனிடம் செல்வம் உண்டாகுமானால், பயன் தரும் மரம் ஊர் நடுவில் பழுத்துள்ளது போன்றது ஆகும்...
உள்ளூர் எனும் சொல் வேறு எங்காவது "உள்ஊர்" என்று இருக்குமோ...? மீண்டும் சுளகு பெட்டியில் தேடுதல் - (Ctrl-F) மூலம் உள்ஊர் - அங்கே சென்றால், ஒருவனைப் பார்த்து உள்ளூர்காரர்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்...! ஏன்...? : 927. உள்ளொற்றி உள்ஊர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ஒற்றிக் கண்சாய் பவர் : நாளும் கள்ளை நாடிக் குடித்து கண் சுழல்பவர் "உள்ள"நடத்தையை அறிபவர்கள் அப்படித்தான் சிரிப்பார்கள்...
இப்போது ஓர் ஐயம்...! அதெப்படி நம்மால் - இல்லை - என்னால் மட்டும் இதமான பதமான சோற்றை வடிக்க முடிவதில்லை...? பதம் பார்த்தாலும் முடிவில் சோற்றைக் குழைக்க முடியவில்லை அல்லது பொங்கல் ஆகிறது...! வீட்டில் எனது முதுகில் பதம் பார்த்த பிறகு அறிந்து கொண்டது என்னவென்றால், அனைத்து அரிசியும் ஒன்றே போல் அல்ல, நேரமும் முக்கியமாம்...! ம்... வாழ்க தாய்க்குலம்...! இங்கும் பதம் பிரித்ததைச் சட்டியில் - மன்னிக்கவும் சுளகு பெட்டியில் போட்டதே தவறு... அதனால் 1330 குறள்களையும் இட்டு ஆய்வு செய்ய வேண்டும்... அதனால் நாம் உருவாக்கிய திருக்குறள் முதன்மை கோப்பில் (Master Excel file), ஒரு நெடுவரிசையில் (column), குறள் மூலத்தைத் தட்டச்சு செய்து சேமித்துக் கொள்கிறோம்... அவற்றை சுளகுவில் ஆராய்ந்தால், திருக்குறளில் ஒருமுறை பயன்படுத்திய இரண்டு எழுத்துக்கள் ங, ளீ என்று சரியாக வருவதை உறுதியாகச் சொல்லலாம்... ஐயனே சரி தானே...?
சரி... பதறாத செயல் சிதறாது... 47
அதென்ன பகா எண் 47 ? அதிகார எண்ணா...? சரி சரி பதறாமல் தெரிந்து செயல்வகையுடன் சிந்திக்கிறோம்... நண்பர்களே... உள்ளூர் என்பதை இன்னொரு இடத்தில் உள்ஊர் என்று பிரித்து வைத்திருக்கிறேன்... அதுதான் ஒருமுறை பயன்படுத்தியதாக ளூ எனும் எழுத்தும் வருகிறது... விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா...? அதனால் சுளகு பெட்டியில் எதை விதைக்கிறோமோ அதைத் தான் அறுவடையாக நமக்குக் கிடைக்கும்...! அதனால் எந்தவொரு ஆய்வையும் இனிமேல் பதம் பிரிக்காத திருக்குறள் மூலத்தை எடுத்துக்கொண்டு செய்வோம்...
தவறு
355. எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்ன தாத்தா இப்படி சொல்லி விட்டீர்கள்...! ஓகோ...! அப்படியென்றால் பதம் பிரித்துப் பார்க்க வேண்டிய ஆய்வுகளும் இருக்கிறதா...? என்னவாக இருக்கும்...? ம்... அடியேன் நண்பர்களிடம், ங, ளீ - இவ்விரு எழுத்துக்களையும், "ஐயன் மேலும் சில குறள்களில் பயன்படுத்தாததற்கு என்ன காரணமாக இருக்க முடியும்...?" என்று ஓர் எளிய கேள்வியாகக் கேட்கலாம் என்று நினைத்தேன்... கருத்துரைகளைக் கண்டு அதன்படி அடுத்த பதிவைத் தொடர்கிறேன்... நன்றி தாத்தா...

புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
இந்த எழுத்துகளை தவிர்க்க வேண்டும் என்று நினைத்து புனைந்திருக்க மாட்டார். புனைந்ததில் இப்படி அமைந்து விட்டது என்று எனக்கு தோன்றுகிறது. என்னால் இவ்வளவுதான் யோசிக்க முடிகிறது!
பதிலளிநீக்குதங்களது தேடுதல் சிறக்கட்டும் ஜி
பதிலளிநீக்குதொடர்ந்து வருகிறேன்...
எதை விதைக்கிறமோ அதை தான் அறுவடை செய்வோம்.//
பதிலளிநீக்குஉண்மை. இந்த பிறவியில் நல்லது செய்தாலும் வினை பதிவு நம்மை தொடர்கிறது.
நீங்கள் திருக்குறள் ஆய்வை நல்லபடியாக செய்து வருகிறீர்கள். வள்ளுவம் நம்மை வாழ வைக்கும்.
சார் இருந்தால் பதம்பிரித்தல் பற்றி கேட்டு சொல்லி இருப்பேன்.
இப்போது உங்கள் பதிவை தொடர்கிறேன். உங்கள் ஆய்வுக்கு வாழ்த்து சொல்கிறேன்.
திருக்குறள் ஆராய்ச்சி சிறப்பு . நன்றி
பதிலளிநீக்குபொய்மேற்கொளீஇ - சூது பத்தி சொல்லும் குறள். பொய் மேற்கொண்டு...
பதிலளிநீக்குஎங்ஙனம் - புலால் மறுத்தலில் கேள்வியை வைக்கிறார். எப்படி பிற உயிர்கள் மீது இரக்கம் வரும் என்று. இப்படி பொருள்படும் சொற்களை அவர் வேறு குறள்களில் பயன்படுத்தத் தேவையிருந்திருக்காது அல்லது சந்தம்? இலக்கணம் இசைந்து வர வேண்டுமே...அதனால் மற்ற குறள்களில் இல்லாமல் போயிருந்திருக்கலாமோ...
கீதா
உங்களின் இந்த ஐயம் எனக்கு புதியது...! ஆனால் தாத்தாவின் எண்ணம் என்னவாக இருக்கும் என்பதை அடுத்த பதிவில் எழுதுகிறேன்...
நீக்குஅச்சொற்களை வேறு விதத்தில் போட்டிருந்தால் அங்கு பதம் பிரித்தல் செய்ய வேண்டி வந்திருக்கும் பொருள் மாறுபட்டுவிடுமே...
பதிலளிநீக்குகீதா
வித்யாசமான ஆய்வு. எனக்கும் இதனைத் தேடவேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதங்களுடைய தேடுதல் பிரமிக்க வைக்கின்றது..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
நான்மாடக்கூடலில் நிற்கிறேன், நான்மாடக் கூடலில் நிற்கிறேன், நான் மாடக்கூடலில் நிற்கிறேன் என்று எங்கள் தமிழாசிரியர் கூறியது நினைவிற்கு வருகிறது.
பதிலளிநீக்கு"நான்மாடக்கூடலில்" நிற்கிறேன்... ஆஹா... ஒரே வார்த்தை பிரித்தாளும்போது வெவ்வேறு பொருள் தருகிறதே!!!!
நீக்கு