🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திருக்குறள் கணக்கியல் பயிற்சி எட்டு (8) - முதலும் கடையும்...

அனைவருக்கும் வணக்கம்...
இதுவரை முடிந்த பயிற்சிகளும் இன்றைய பயிற்சிகளும் ஒரு படமாக :-


இதுவரை எழுதிய திருக்குறள் கணக்கியல் பயிற்சிகளின் விளக்கங்கள்

புதிதாக வருபவர்கள் கீழ்காண்பதை ஒவ்வொன்றாக சொடுக்கி சுருக்கமான விளக்கம் அறியலாம்...



குறள் எண்களோடு 1330 குறள்கள், அதிகார எண்களோடு 133 அதிகாரங்கள் கொண்ட ஒரு திருக்குறள் முதன்மை கோப்பையை (Master Excel file) நம் கணினியில் உருவாக்குகிறோம்... இணைப்பு



எழுத்துக்களை எளிதாகக் கணக்கிட, சுளகு எனும் சொல்லாய்வுக் கருவியை அறிகிறோம்... அதன் மூலம் திருக்குறளில் அதிக முறை பயன்படுத்திய ஓரெழுத்து 'னி' என்பது தவறு, 'ன்' தான் என்பதைக் கண்டுபிடித்து அதை உறுதிப்படுத்தினோம்... இணைப்பு



முதன்மை கோப்பில், குறள் மூலத்தையும் தட்டச்சு செய்து சேமித்துக் கொள்கிறோம்... அவற்றை 'சுளகு'வில் துணைகொண்டு, திருக்குறளில் ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரண்டு எழுத்துக்கள் ங, ளீ என்பதையும், குறள் மூலத்தில் தான் இந்த ஆய்வு செய்யவேண்டும் என்பதையும் புரிந்து கொண்டோம்... இணைப்பு



ஐயன் அந்த இரண்டு எழுத்துக்களையும் மேலும் சில இடங்களில் பயன்படுத்தாததற்குக் காரணம், தமிழ் எழுத்துக்கள் 247-ல், பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கையே என்பதையும் புரிந்து கொண்டோம்... அதனால் அந்த எண்ணிக்கை 247-ல், 37 எழுத்துக்கள் என்பது தவறு என்பதையும், மேலும் கூடுதலாக முப்பாலில் இல்லாத ஆறு (6) எழுத்துக்களும் உள்ளது என்பதையும் அறிந்தோம்...இணைப்பு



"சொற்களாக இருந்தாலும், ஓரெழுத்தாக இருந்தாலும், அவற்றைப் பிரிந்து மேய்ந்து அவற்றின் கணக்கைச் சொல்வதே எனது வேலை...!" என்று சுளகு சொல்வதை அறிந்தோம்... திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37+6=43 எழுத்துக்கள் இடம் பெறவில்லை என்று உறுதிப்படுத்த முடியவில்லை... அதன் காரணம் ஔகார வரிசை எழுத்துக்கள்... இணைப்பு



திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-ல் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் 205 மற்றும் பயன்படுத்தாத எழுத்துக்கள் 42 என்று முடிவு செய்தோம்... ஆனால் அதை உறுதி செய்யவில்லை... இணைப்பு



திருக்குறளில் கொம்பு எழுத்தில்லாத குறள்களை எவ்வாறு எளிதாகக் கண்டுபிடிப்பது...? இணைப்பு


இன்று பயிற்சி 8:

இருவரின் உரையாடலில் போட்டிப் போட்டுக்கொண்டு நமக்கு உதவப்போகிறார்கள்...! ஒருவர் நம் தமிழ்த்தம்பி சுளகு; இன்னொருவர் ஆங்கில நண்பன் Excel...!

எண்களாக இருந்தாலும், தமிழ் எழுத்துக்களாக இருந்தாலும், அகரவரிசைப்படி பிரித்துவிடுவேன்... ஆனால் உயிர்மெய் எழுத்துக்களிடமிருந்து மெய் எழுத்துக்களை தனித்தனியாகப் பிரித்துக் கொடுக்க முடியாது... சுளகு தம்பி எப்படி...?

நானும் அப்படியே தான் நண்பா; அதிலும் உன்னளவிற்கு என்னால் எண்களைப் பிரிக்க முடியாது... ஆனால் எண்களைத் தமிழ் எழுத்துக்களாக மாற்றிக் கொடுப்பேன்... மற்றபடி அவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டேன்... எண்கள் தேவை என்றால் Ctrl-G சொடுக்கிவிட்டு எண்களை இட வேண்டும்... எங்கள் தமிழ் இலக்கணத்தில் மாத்திரையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா...? என் பெட்டியில் 1330 குறள்களைப் போட்டு, "மாத்திரை"-யை சொடுக்கினால், (1) ஒரு மாத்திரை நேரத்திற்குள் அதாவது கண் இமைக்கும் நேரத்திற்குள் ஒவ்வொரு எழுத்தின் ஒலிக்கப்படும் கால அளவை அடைப்புக்குறிக்குள் காட்டுவேன்...! எழுத்திலக்கண வகைகளில் உயிரெழுத்துக்களையும், மெய்யெழுத்துக்களையும், சார்ந்து வாழும் சார்பெழுத்து கணக்கியலைச் செய்ய உதவும்...!

தமிழே மருந்து...! மாத்திரையெல்லாம் என்னிடம் இல்லை; ஆனால் ஒரேயொரு நெடுவரிசையில் 1330 குறள்களையும் தேர்வு செய்து விட்டு, (Click) ⇾ Data ⇾ Text to columns ⇾ (select) Delimited ⇾ (select) space ⇾ Finish அவ்வளவு தான்...! ஒவ்வொரு குறளின் சீர்களும் தனித்தனியாக ஏழு (7) நெடுவரிசைகளில் பிரித்துக் கொடுத்து விடுவேன்...!

ஓகோ அப்படியா...! முதலில் ஒரு யுக்தியை (trick) சொல்கிறேன்... நீங்கள் Find and Replace-ல் கில்லாடி ஆயிற்றே...! நான் தரும் ஒவ்வொரு எழுத்தின் மாத்திரையை அடைப்புக்குறியுடன் இருப்பதையெல்லாம் நீக்கி விட்டு, ஒரேயொரு 'இட' வெளியால் (space) மாற்றி விடுங்கள்... 1330 குறள்களும் தனித்தனி எழுத்துக்களாகக் கிடைத்துவிடும்...! பல ஆய்வுகளுக்கு உதவும்...!

நல்லது தம்பி; ஆனால் உன்னிடம் படியெடுத்து என்னிடம் வந்து ஒட்டும்போது, சும்மா copy & paste செய்தால், நான் நிறைய நேரம் திணறுவேன்; அதனால் Paste ⇾ Paste Special ⇾ (select) Unicode Text ⇾ OK...! நானும் ஒரு உதவி செய்யட்டுமா...? (ம்... ஒரு நிமிடம், எனது கோப்பில் 6x1330=7980 சீர்களின் இடையே சரியாக ஒரு 'இட'வெளி (space) விட்டுள்ளார்கள்.) Find and replace மூலம் ஒவ்வொரு குறளிலுள்ள ஆறு (6) 'இட'வெளிகளை நீக்கி தந்து விட்டேன்; நீ முதலெழுத்தையும் கடையெழுத்தையும் பிரித்துத் தந்தால், அதைக் கணக்கிட்டுத் தருவேன்... இதை என்னால் left() மற்றும் right() function மூலம் செய்யமுடியும்; ஆனால் உன்னைப்போல் செய்யமுடியாது...

அது தான் ஏற்கனவே சீர்களைப் பிரித்துக் காட்டியுள்ளீர்களே, அதுவே போதும்... முதலெழுத்திற்கு முதல் சீர்கள் உள்ள நெடுவரிசைகளையும், கடையெழுத்திற்குக் கடை சீர்கள் உள்ள நெடுவரிசைகளையும் என்னிடம் அனுப்புங்கள் போதும்...! ஏழாவது பயிற்சியின் பதிவிலே விளையாடினேன்; தே எனும் முதலெழுத்தையும், டு எனும் கடையெழுத்தையும் பிடித்து வைத்துவிட்டேன்; ன்வண் & தேடு என்று சொல்லிவிட்டு, "மனதால் இனிப்பானவன்" என்று சொல்லிவிட்டுச் சரியான குறிப்பைத் தராமல் பறந்து விட்டார் DD... பதில் என்னவென்றால், தேன்வண்டு (முன்னது இரண்டும் இனிக்கும்; பின்னது மூன்றும் பறக்கும்...!) 😄 என்னிடம் முதலெழுத்து மற்றும் கடையெழுத்து கணக்கைக் கண் இமைக்கும் நேரத்திற்குள் காட்டும் நுட்பமும் உள்ளது...!

// வேறென்ன வேறென்ன வேண்டும்...? ஒரு முறை சொடுக்கினால் போதும் - குறளையும் உந்தன் ஆராய்ச்சியாய் வைப்பேனே; வைப்பேனே...! எண்ணவும் கூட வேண்டாம்; கண்ணிமைத்தாலே போதும் - கணிப்பானின்றி கணக்கையும் நான் தருவேனே...! ஓ ஓஓஓ ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனம் ஏன்...? மௌனம் ஏன்...? வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்... //

"மின்னலே" மனமே... பாடலுக்கு நன்றி... அடுத்த என்ன பயிற்சி...?

எட்டு பதிவுகளோடு பயிற்சி முடிந்தது...! திருக்குறளின் அடுத்த கணக்கிற்கான ஒரு குறிப்பு :- // அட கிஸ்சு என்றால் உதடுகள் பிரியும்; தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்... தகராறு ஏது - தமிழ் முத்தம் போடு...! பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு - என் நெஞ்சுக்குள்ளே யாரென்று சொல்வேன்...! //

நீ சொல்லவே வேண்டாம்... ஏழு என்று எல்லோருக்கும் தெரியும்... திருக்குறள் சிறப்புகளில் ஒன்று என்பது எனக்குத் தெரியும்... அதைச் சார்ந்து வேறு எளிதான குறிப்பு ஏதும்...?

நான் யார்...?

ஒவ்வொருவரும் தன்னை கேட்டுக்கொள்ள வேண்டும்...!

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. திருக்குறள் அறிவோடு எக்ஸெல் சுளகு புரிதலும் இருக்க வேண்டும், பயிற்சி வேண்டும்.  ஏற்கெனவே கணினி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கில்லாடி நீங்கள்.  நிறைய உழைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஜி
    உரையாடல் சுவையாக இருந்தது.

    இடையிடையே திரைப்படப்பாடலும் நன்று.

    பதிலளிநீக்கு
  3. என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒவ்வொரு பதிவும் வியப்பை தருகிறது. உங்கள் உழைப்பு குழந்தைகளை சென்று அடைய வேண்டும். எங்களை விட அவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்வார்கள்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் குறள் குறித்த பதிவுகள் பிரமிக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொரு பதிவிலும் உங்களது கடின உழைப்பு மின்னுகின்றது..

    உண்மையில் தாத்தாவுக்கு ஏற்ற பேரன் தான்!..

    பதிலளிநீக்கு
  6. பயிற்சியை ரொம்ப சுவாரசியமாகக் கொடுத்திருக்கீங்க. சுளகும் எக்செல்லும் பேசிக் கொள்ளும் விதத்தில். இதை நீங்கள் பள்ளிகள், கல்லூரிகளில் அறிமுகப்படுத்தலாம் அவர்களுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும், டிடி. உங்களின் உழைப்பிற்கு ஒரு மகிழ்ச்சியும் கிடைக்கும் இல்லையா.

    எக்செல்லில் எனக்குச் சிறிதுதான் பயிற்சி. இப்பகுதியை நான் முயற்சி செய்து பார்க்க வேண்டும். பார்க்கிறேன் நேரம் பார்த்துச் செய்ய வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. மாறுபட்ட நடையில் ஒரு பதிவு. பாராட்டுக்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.