🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திருக்குறளில் ஒரு சொல்லால் கணக்கு மாறுமா...?

அனைவருக்கும் வணக்கம்... முப்பால் எழுத்துக்களைக் கணக்கிடுவதற்கான எட்டு (8) பயிற்சிகளும் முடிவடைந்து விட்டன... அவற்றை மிகவும் எளிதாகச் செய்வதற்குச் சுளகு எனும் சொல்லாய்வுக் கருவி உதவியதை அறிந்தோம்... மேலும் அதில் செய்தவற்றைச் சேமிக்கவும், அதில் செய்ய முடியாததை விரிதாள் (Excel) எவ்வாறு உதவும் என்பதைத் தொடர்வோம்...

திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-ல் பயன்படுத்திய எழுத்துக்கள் 205 என்று உறுதியாகச் சொல்லலாம்; ஆனால் அவை எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது; காரணம், கிடைத்த பலரின் மூல உரைகளின்படி சீர்களில் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன...! அதற்கான பட்டியலும் ஒவ்வொருவரின் மூல உரைகளின் கோப்புகளின் முடிவில் தொகுத்துக் கொடுத்தும் உள்ளார்கள்... "எது சரி...?" என்பதைக் கூறவில்லை... இரா.சாரங்கபாணி அவர்கள் தொகுத்தளித்த நூலிலிருந்து சிலவற்றை இங்கேஅறியலாம்... இப்போது பதம் பிரிக்காத குறள்களிலுள்ள கடையெழுத்துக்களின் பாட வேறுபாடுகள் :
மணக்குடவர் (1) | காலிங்கர் (2) | பரிப்பெருமாள் (3)
4. வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க் கியாண்டு மிடும்பை யில / யிலர் (1) (3)

விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் அடியைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும் துன்பம் இல்லை. / இல்லாதவர்கள்.
269. கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி னாற்ற றலைப்பட் டவர்க்கு / டவர்க்குல் ?

மனிதன் செய்த தட்டச்சு தவறு என்பதால் விட்டுவிடுவோம்...
450. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் / விடின்(1)

பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல், / கைவிட்டால், பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்...
639. பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட் டெவ்வோ ரெழுபது கோடி யுறும் / தலை(1) (2) (3)

பக்கத்திலே இருந்து கேடு நினைக்கும் அமைச்சனைவிட எழுபது கோடி பகைவர் நல்லவர்... / எழுபது கோடி மடங்கு நல்லவர் தலையானது...
மேற்கண்ட நான்கு (4) குறள்களிலுள்ள பாட வேற்றுமைகளால், குறளின் குரல் சற்றே வேறுபடுகிறது... ஆனால் எழுத்துக்களின் கணக்கு எனும் வகையில் பார்த்தோமானால், எழுத்துக்களைக் கணக்கிடாமலே தவறுகள் தெரியும்... எப்படி...? உயிர்மெய்யெழுத்தில் முடியும் குறள் மெய்யெழுத்தில் முடிவதாகவும், மெய்யெழுத்தில் முடியும் குறள் உயிர்மெய்யெழுத்தில் முடிவதாகவும் உள்ளது... அப்படியென்றால் கடையெழுத்துக்களின் கணக்கு மாறும் அல்லவா...? தீர்வு...? கணக்கே தீர்வு...! சரி, இதே போல் இன்னுமொரு குறளில் பாட வேற்றுமை உள்ளது; அதனால் திருக்குறள் சிறப்புகளில் ஒன்றின் கணக்கு மாறுமா...? அதென்ன சிறப்பு...? முந்தைய பதிவில் பாடின திரைப்பட பாட்டில் 👄 உள்ளது...! இல்லையென்றால் இதோ இந்தக் குறளை வாய்விட்டு சத்தமாகச் சொல்லிப்பாருங்கள் :-

979. பெருமை பெருமித மின்மை சிறுமை பெருமித மூர்ந்து விடல் ? / விடும் ?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. தங்கள் திருக்குறள் ஆய்வு சிறப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. வார்த்தைகளை முன்பின்னாக எதனுடன் எதை இணைப்பது என்பதில் உரி எழுதியவர்களுக்குள் அபிப்ராயபேதம் இருந்திருக்கும் போல.  நீங்கள் சொல்வது குறள் முடியும் சொற்களில் சில எழுத்துகளே விடுபட்டிருக்கும் என்றா?

    பதிலளிநீக்கு
  3. திருக்குறளில் பாட வேற்றுமையா? இரா. சாரங்கபாணி அவர்கள் தொகுதளித்த நூலை படித்தேன். படி எடுப்பதில் உண்டாகும் பிழையா?
    நிறைய ஆராய்ச்சி செய்து கொடுத்து வருகிறீர்கள் பதிவை.
    திருத்தப்பட்ட குறள் விளக்கம் நன்று.

    பதிலளிநீக்கு
  4. தங்களது தேடுதல் இன்னும் பெருகி வளரட்டும் ஜி

    பதிலளிநீக்கு
  5. இந்தப் பதிவு தங்களது கடும் உழைப்பை பறை சாற்றுகின்றது..

    குறள் ஆய்வு அருமை..
    வாழ்க குறள்..

    பதிலளிநீக்கு
  6. திருக்குறள் ஆய்வு சிறப்பு. நன்றி

    பதிலளிநீக்கு
  7. நீல வண்ணத்தில் இருப்பவைதான் சரியா? திருக்குறளில் கூட பாட வேற்றுமை இருப்பது ஆச்சரியமாக இருக்கு...அப்ப மூலம்? எது என்ற சந்தேகம் வருமோ? அல்லது சொற்களின் கணக்கை வைத்து தான் எது சரி என்ற உங்கள் ஆராய்ச்சியோ, டிடி?

    கீதா





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்குறள் சீர்களில் கணக்கற்ற வகைகளில் வேறுபாடுகள் உள்ளன... ஆம் சொற்களின் எண்ணிக்கை வைத்துத் தான் முடிவு செய்யப்படும்... அதுவும் எவ்வாறு என்பது தான் முக்கியம்... அதன் அடிப்படை என்ன...? அதற்கு சில கட்டமைப்பின் கணக்கு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை அறிய வேண்டும்...

      // சொற்களின் கணக்கை வைத்துத் தான் எது சரி என்ற உங்கள் ஆராய்ச்சியோ...? //

      ஆகா...! மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... சொல்லச் சொற்களைத் தேடுகிறேன்... கணக்கின் மூலம் திருக்குறள் கற்றல் இதுவே...! நன்றி...

      நீக்கு
  8. வணக்கம் சார் நலமா. குறள் தொடர்பாக உங்களின் தொண்டு மிகவும் போற்றுதலுக்குரியது. 1985 களில் நான் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய சூழலில் அங்கே கணிப்பொறி மையத்தில் ஒரு நூல் திருக்குறள் தொடர்பாக வெளியிடப்பட்டது. அதன் பெயர் computer analysis of Thirukkural என்பதாகும். அதில் ஒவ்வொரு சொல்லும் எத்தனை முறை எச் சொல் அதிகப் பயன்பாடு போன்ற பல விவரங்கள். வாய்ப்பமைவில் அதை பாருங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.