🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நாடு...

வணக்கம் நண்பர்களே... பகுதி ③ ஊழ் அதிகார ஆய்வு... முந்தைய பதிவுகளின் இணைப்புகள் :




ஒரு நாட்டின் அமைச்சரவை பற்றிய இரண்டாவது பதிவின் தொடர்ச்சியாக, ஒரு நாட்டின் மக்கள் விதியை தீர்மானிப்பது யாராக இருக்கலாம்...? இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் (1062) ஒரு நாட்டில் பிச்சை எடுத்துத் தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால், உலகைப்படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெட்டழியட்டும் ← இவ்வாறு இறைவனைச் சாபம் விட்டதாகச் சிலர் சொல்வதுண்டு... ஐயன் கண்ட இறைவனுக்கு உலகின் எல்லா உயிர்களும் எவ்வித பாகுபாடில்லாத அன்பும் அறமும் ஒன்றே தான்... சுருக்கமாகத் திருக்குறள் இதிகாசக் கதை அல்ல... இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்றும், எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதை.......யும் வரையறுப்பது உலகப்பொதுமுறை... ஒரு ஐந்நூற்று ஏழு குறள்களுக்கு முன் செல்கிறேன்...

ஒரு நாட்டில் பிச்சைக்காரர்கள் உருவாவதற்கும் பெருகுவதற்கும், முழுமுதல் காரணம் உறுதியாக அந்நாட்டின் அரசனே... அந்த அரசன், தன் நாட்டு மக்களின் மீது ஏராளமான வரிகளை விதிப்பதாலும், கொடுங்கோலாட்சி புரிவதாலும் தான், பிச்சை எடுத்து உண்டுவாழும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்... அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (555) மக்களின் கண்ணீர் ஆட்சியாளரின் செல்வத்தையும் அழிக்கும் என்கிறார் ஐயன்... இங்கும் ஐயனின் சாபமுமில்லை, கோபமுமில்லை... கொடுங்கோன்மை அதிகாரத்தில் வரும் இந்தக்குறளுக்கு, திருமிகு கோமதி அரசு அம்மா அவர்கள் ஒரு பாடல் சொன்னார்கள்... அதற்கும் மேல் இந்தக் குறளுக்கு விளக்கம் தேவையில்லை... இணைப்பு

இப்போது 1062 குறளுக்கு வருகிறேன்... 'உலகியற்றியான்' என்பதற்கு 'உலகைப் படைத்தவன்' என்று பொருள் கொண்டதே காரணம்... உலகு என்பது நாடு, இயற்றியான் என்பது விதிகளை விதிப்பவன் அல்லது மக்களின் நலனுக்கான விதிகளை விதித்து நாட்டைத் திறம்பட நடத்துபவன்... இயற்றலும் (குறள் 385) இயற்றியார் (குறள் 370) போன்றவை மேலும் சிந்திக்க வேண்டிய சில குறள்கள்... ஒரு நாட்டின் இறைவனாக இருப்பவனின் தொழில், தனது மக்களின் உயிர்களைக் காப்பது மட்டுமே... அதை முற்றிலுமாக மறந்து, மக்களிடமே பிச்சைவாங்கி ஏமாற்றிப் பிழைக்கும் கொடுங்கோலனுக்கு என்ன தண்டனையென்றால்...

இனி 1062 விளக்கம் → "ஒரு நாட்டில் பிச்சை எடுத்துத் தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால், அந்நாட்டின் இயற்கைக்கேற்ப விதிகளை வகுத்து வழிநடத்திச் செல்லாதவன், பொருளை இழந்து உணவுக்காக அங்கும் இங்கும் அலைந்து கெட்டழியட்டும்..." அப்படியென்றால் (உல்லாச மக்களின் நிலையைத் தவிர்த்து விட்டு) அன்றாடம் அந்த நாட்டின் மக்களுக்காக உழைப்பவர்களின் நிலை என்னவாகும் என்பதை, வாசிப்பவர்களின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்... ஒரு நாட்டின் அரசாங்கம் மற்றும் அரசனை எந்தளவு ஐயன் முக்கியப்படுத்தி உள்ளார் என்பதை, ஊழ் அதிகாரத்திற்கு அடுத்துள்ள அதிகாரத்தின் தலைப்பே சொல்லும்... அதன் முதல் பகுதியின் இணைப்பு இரண்டாவது பகுதியாக, 'அரசனுக்கு' ஐயன் சொன்னவற்றை எழுத வேண்டும்...

மிச்ச சொச்சத்தை உழவனாகிய எ╱ன╱து நமது எனும் சமீபத்திய பதிவை வாசித்திருப்பீர்கள்... நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக உழவர்கள் நிலை அதுவே... அங்கு திருமிகு கோமதி அரசு அம்மா, திருமிகு தில்லை அகத்து கீதா சகோதரி, திருமிகு கமலா ஹரிஹரன் அம்மா ஆகியோரின் அருமையான கருத்துரைகளுக்கு நன்றிகள்... அந்த நண்பன் பதிவின் அதிகாரம் என்னவென்றால், இந்தப்பதிவின் தலைப்பு... அதன் பத்தாவது குறள் எண் 740 → உழவனையும் உழைக்கும் மக்களையும் மிதிக்கும் எந்த நாடும் கனவில் கூட நல்லரசு ஆகாது என்பதையும், ஒரு நாட்டில் எல்லாவிதமான வளங்கள் இருந்தாலும், "எவரால் பயனே இல்லாமல் போகும்...?" என்பதையும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளலாம்...கீழுள்ள சிறப்பான பாடலையும் கேட்கலாம்... நன்றி...

எல்லா மதமும் என் மதமே - எதுவும் எனக்குச் சம்மதமே...

© பாரத விலாஸ் வாலி M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன், M.S.விஸ்வநாதன், A.L.ராகவன், K.வீரமணி, P.சுசீலா, L.R.ஈஸ்வரி, மலேசியா வாசுதேவன் @ 1973 ⟫

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்


  1. இன்றைய ஆட்சியின் அலங்கோலத்தை அழகாக சித்தரித்து, தோலுரித்து காட்டி விட்டீர்கள்.

    பொருத்தமான பாடலும். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. 'உலகியற்றியான்' என்ற சொல், இறைவனைக் குறிப்பதாகவே கொள்ளவேண்டும். ஆனால், இறை என்ற சொல், அரசனையும் குறிப்பதால், 'உலகியற்றியான்' என்ற சொல், இறைவன் மற்றும் அரசன் ஆகிய இருவரையும் குறிப்பதாகப் பொருள் கொண்டு ஆறுதல் அடைவதை மன்னித்துவிடலாம். (2) தங்கள் கட்டுரையில் மகளிருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது, வாசக ஆண்களை வருத்தப்படவைக்காதா?

    பதிலளிநீக்கு
  3. தொழில் நுட்ப சமாச்சாரங்கள் இதுவரையிலும் கற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. ஆனால் இந்தப் பதிவில் பொறாமையை உருவாக்கியுள்ளது. பார்த்து கேட்டு சொடுக்கி முடிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. கொரானா காலத்தில் மறக்க முடியாத வேலைகள். அருமை.

    பதிலளிநீக்கு
  4. ///ஒரு நாட்டில் பிச்சைக்காரர்கள் உருவாவதற்கும் பெருகுவதற்கும், முழுமுதல் காரணம் உறுதியாக அந்நாட்டின் அரசனே... அந்த அரசன், தன் நாட்டு மக்களின் மீது ஏராளமான வரிகளை விதிப்பதாலும், கொடுங்கோலாட்சி புரிவதாலும் தான், பிச்சை எடுத்து உண்டுவாழும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (555) மக்களின் கண்ணீர் ஆட்சியாளரின் செல்வத்தையும் அழிக்கும் என்கிறார் ஐயன்.///


    பிச்சை எடுத்து உண்டுவாழும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் அதாவது PM Care மூலம் திரட்டப்படுவதுதானே

    பதிலளிநீக்கு
  5. பாரத விலாஸ் படத்தில் உள்ள பாட்டை கேட்டு அது போல உணர்ந்து வாழ்ந்த காலம் எங்கே நாம் &நம்நாடு எங்கே? இப்போது விஷ விதைகளை தூவி வெறுப்பை வளர்க்கும் ஆட்சியாளர்களும் நமது பதிவர் நண்பர்களும் வாழும் நாடாகிவிட்டதே

    பதிலளிநீக்கு
  6. இன்று இரவு டின்னர் முடித்து படுக்க போகும் முன் எங்கள் கூட்டு பிரார்தனைகளை முடித்து விட்டு பின் எல்லா மதமும் என் மதமே - எதுவும் எனக்குச் சம்மதமேதான் எங்கள் வீட்டில் பேச்சு.. என் குழந்தை இதை புரிந்து கொண்டு வாழ்வது எங்களுக்கு மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  7. பாரத விலாஸ் படத்தில் உள்ள பாட்டை கேட்டு அது போல உணர்ந்து வாழ்ந்த காலம் எங்கே நாம் &நம்நாடு எங்கே? இப்போது விஷ விதைகளை தூவி வெறுப்பை வளர்க்கும் ஆட்சியாளர்களும் நமது பதிவர் நண்பர்களும் வாழும் நாடாகிவிட்டதே

    பதிலளிநீக்கு
  8. மக்களின் கஷ்டங்களை முன் கூட்டியே யோசித்து திட்டமிட்டு  ஆட்சி செய்பவனே சிறந்த ஆட்சியாளர்.  அதனின்றி  இருக்கும் மக்களையும் கொடுமைப்படுத்தும் ஆட்சியாளர்களை என்னென்பது...

    பதிலளிநீக்கு
  9. பின்னூட்ட மட்டறுத்தலை எடுத்து விட்டீர்கள் போலும்.  உடனே வெளியாகி விட்டது!

    பதிலளிநீக்கு
  10. பொருத்தமான பாடலுடன் இன்றைய அரசியல் நிலைக்கு ஏற்ற பதிவு.

    ஆனால், இதை நாங்க படிச்சு என்ன பலன்?! ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் படிச்சு திருந்தினால் நலம் பயக்கும்.

    பதிலளிநீக்கு
  11. இந்தப் பாடல் ஒரு கலாச்சார குறியீடு

    அவை அந்தக் காலம்

    பதிலளிநீக்கு
  12. திரு. நடராசன் அவர்கள் வரைந்த திருக்குறள் ஓவியம் மிக அருமை.

    என்னை குறிப்பிட்டதற்கு நன்றி. உங்கள் உழைப்பில் சிறு துளியாக பங்கு கொண்டேன் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பாடல் வந்த காலங்கள் மிகவும் அருமையான காலம். என் அப்பாவின் நண்பர்கள் பலமதத்தை சேர்ந்தவர்கள், எங்கள் பக்கத்துவீடுகளில் இருந்தவர்கள் பல மதத்தை சேர்ந்தவர்கள், ஆனால் அவர்களை அத்தை என்றும், மாமா என்றும், பெரியம்மா, பெரியப்பா என்று உறவு முறைச் சொல்லி வாழ்ந்த காலங்கள். இப்போதும் அவர்கள் நட்பு மூன்று தலைமுறை தாண்டி தொடர்கிறது.

    எந்த சக்தியும் உண்மையான அன்பை, நட்பை பிரிக்க முடியாது.
    பிரிவினைகள் சொல்லி அரசியல் ஆக்காமல் இருந்தால் நல்லது.
    நாம் எல்லோரும் இந்தியமக்கள் என்ற உணர்வுடன் வாழ்வோம்.

    திரைப்படம் எடுப்பவர்கள், நாடகம் தயார் செய்பவர்கள், கதை எழுதுபவர்கள் முன்பு மாதிரி படிப்பினை தரும் கதைகளை படைத்தால் நல்லது. பிரிவினைவாதத்தை தடை செய்ய வேண்டும்.

    அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி தனபாலன்.



    பதிலளிநீக்கு

  13. ஆட்சியாளர்கள், மத இன பாகுபாடு இல்லாமல், மனிதநேயத்தோடு ஆட்சி நடத்த வேண்டும். துன்பபடும் மக்களுக்கு துன்பத்தைப் போக்க வழிவகுக்க வேண்டும்.

    அருமையான திருக்குறளுடன்எடுத்து சொன்னதற்கு நன்றி.
    ஏழ்மையான மக்களை காக்கும் அரசை கடவுளைவிட மேலான கடவுளாக மக்கள் கொண்டாடுவார்கள்.நாட்டை உயர்த்த பாடுபட்ட மக்களை நினைத்து பொருள்வரும் வழிகளை நேர்மையுடன் பெருக்கி
    அவர்கள் துயர் துடைக்கபடுவதை தான் விரும்புவார்கள் மக்கள்.

    பதிலளிநீக்கு
  14. இந்திய என்பது "ஹிந்தி"ய என்றும் இந்தியன் என்பது ஹிந்தியன் யாரும் ஆகி விட்டதே ஐயா! 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  15. நாட்டில் பிச்சை எடுக்கும் மக்கள் உருவாகுவதன் காரணம் உண்மைதான், அரசுதான் காரணம் எனத்தான் நானும் நினைப்பேன்..

    பதிலளிநீக்கு
  16. டி டியின் பதிடிவுகளைப் படித்து தெரிந்துகொள்வதில்குறள் அறிவு மேம்படும் என்பது முக்கியமானஒன்று

    பதிலளிநீக்கு
  17. தற்கால சூழலுக்கு ஏற்ற அருமையான பதிவு...
    நீண்ட காலம் கழித்து தங்கள் பதிவை வாசித்திருக்கிறேன்.
    நன்றி!!

    பதிலளிநீக்கு
  18. பிச்சை எடுக்க ஊக்கிவிப்பதே ஆட்சிபீடமும் அதன் நிறுவாக குளறுபடிகளுமே அன்றி வேறில்லை!

    பதிலளிநீக்கு
  19. வள்ளுவன் காலத்தில் இறைவன் என்பது அரசன் என உங்களுக்காக ஏற்றுக் கொள்ளலாம். ஆனா இரண்டாயிரம் வருடம் கழிந்து இப்போதும் அதான் நிலை என்கிற போது.......கால்நடையா 500-1000 கி.மீ. நடந்து மனிதன் சாகிறான் என்றால் இந்த ஆட்சியோ ஆண்டவனோ கெட்டொழியட்டும்.

    மக்கள் கண்ணீரே ஆட்சியை அழிக்கும் என்பதிலெல்லாம் நம்பிக்கையில்லை நல்ல ஓட்டும் கள்ள ஓட்டா மாறும் இயந்திர உலகத்தில்,

    பதிலளிநீக்கு
  20. நண்பரே திருக்குறளை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்கி விட்டீர்களா இல்லையா

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. ஒரு நாட்டில் இயற்கை தந்த அற்புதமான வளங்களும், நலன்களும் வெகுவாகவே அமைய பெற்றாலும். அந்நாட்டின் அரசன் தன் குடிமக்களை சரிவர கவனிக்க வில்லையென்றால் அச்சிறந்த வளங்களினால், பயன் ஏதுமில்லை என்ற பொருளில். ஐயன் கூறியதை தகுந்த விளக்கங்களுடன், வழக்கமான அலசலில் எங்களுக்கு விளக்கியமைக்கு நன்றி. பொருத்தமான பாடல் பகிர்வும் நன்றாக உள்ளது. இந்தப் பாடலை கேட்கும் போது நாட்டுப் பற்று நம் இதயங்களில், வீரத்துடன் எழுச்சிப் பெற்று எழும்.

    நான் இந்த பதிவுக்கு சற்று தாமதமாக வந்திருக்கிறேன். மன்னிக்கவும். இந்தப் பதிவில் முந்தைய பதிவில் கருத்துரை கூறியவர்களுடன் என் கருத்துரைதனையும் குறிப்பிட்டிருப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களுடைய திறமையான எண்ணங்கள், சிந்தனைகள், திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தையும் நன்று கற்றுணர்ந்து, பக்குவம் மிகுந்த சிறப்பான குறள்களை தேர்ந்தெடுத்து உங்கள் பதிவோடு ஒப்பிட்டு அலசும் பாங்குகளும், தொழிற்நுட்ப வேலைப்பாடுகளை அநாயசமாக கையாண்டு எங்களை பிரமிக்க வைக்கும் திறன்களுக்கும் முன் என்னுடைய கருத்தின் ஒரிரு வரிகள் மண்ணின் ஒரு சிறு துகள் அளவினை கூட பெறாது. எனினும் என் கருத்துரையையும் ஏற்று என்னைப் பாராட்டிய உங்கள் உன்னதமான மனசுக்கு என் பணிவான நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  22. அருமையான பாடல் டிடி. திருக்குறளும் பதிவும் அப்படியே. ஒரு நாடு வளம் பெற வேண்டும் என்றால் அதன் தலைவன்/அரசன் மக்களின் நலன் கருதி ஆள வேண்டும். வாழ்த்துகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  23. டிடி கீதாவின் பெயரும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.

    ஒரு நாட்டை ஆள்பவர் அம்மக்களின் நலன் கருதியே அதாவது பணக்கார மக்களை அல்ல. அடிப்படை சாதாரண மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கும் முடிவுகளே நாட்டைச் சிறப்பாக்கும். அப்படி யோசித்தாலே பணக்கார வேலைவாய்ப்புக் கொடுக்கும் மக்களுக்கும் ஆன நல்ல முடிவுகள் எடுக்கப்படும். மேலிருந்து தொடங்கும் போதுதான் பிரச்சனைகளே. அடிப்படை வேர் நன்றாக இருந்தால்தானே மரம் செழிக்கும்.

    கூடவே ஒரு பாடலும் நினைவுக்கு வந்தது எனக்கு அதன் முதல் இரு வரிகளுக்கு ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம். மேல் எனக்குத் தெரியாது. இடையில் வந்த வரிகளைச் சொன்னது துளசி - நல்லமனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
    அங்கு ஒரு போதும் மறையாது அவன் காட்சியாம்.

    நல்ல பதிவு டிடி

    கீதா

    பதிலளிநீக்கு
  24. கோ என்பதும் இறை என்பதும் ,இறைவனையும் குறிக்கும் .அரசனையும் குறிக்கும். எனவே வள்ளுவர் இறைவனைக் குறிப்பிட்டுள்ளார் என்று இதுவரை எண்ணியிருந்ததை, குறள்களை மேற்கோள் காட்டி அவர் குறிப்பிட்டது அரசனைத்தான் என விளங்கவைத்தமைக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  25. வள்ளுவர் தெளிவாகவே உலகத்தை உருவாக்கிய இறைவன் என்று குறிப்பிடுகிறார்... உண்மை இப்படியிருக்க நீங்கள் ஏன் ஆட்சியாளர் என்று புதுவிளக்கம் கொடுத்து எங்கள் தன்மானசிங்கம் , தரணிபோற்றும் தலைமகன், பாரதத்தின் பகலவன், குன்றாத ஒளிவிளக்கான மோடி ஜி ஐயாவை வம்புக்கு இழுக்கிறீர்கள் ... ஜெய் மோடி சர்க்கார் !!!.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.