🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மறக்க வேண்டியதும்... மறக்கக் கூடாததும்...

அனைவருக்கும் வணக்கம்... திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதிய மணக்குடவர் முதல் பரிமேலழகர் வரை... அவ்வளவு ஏன், இன்றைக்கு வரைக்கும் உரை எழுதியவர்கள் அனைவரும், ஒரு சொல்லுக்கு மறதி என்றே எழுதி உள்ளார்கள்... ஆனால் ஒருவர் :-


முந்தைய பதிவுகள்:
என்னது மறதியா...?
மிதப்பின்மை (பகுதி 1)
மிதப்பின்மை (பகுதி 2)

ஓர் இலக்கை நினைத்துக்கொண்டு அயராது அந்த வேலையைச் செய்துகொண்டு இருப்போம்... இடையில் நாம் நினைத்தது போல் நடக்கவில்லை என்றாலும் கிட்டத்தட்ட முடித்த வேலை, மனதிற்கு மகிழ்வைத் தந்தவுடன், அந்த வேலையை நிறுத்திவிடுவோம்... சிலநேரம் ஆர்வத்தின் காரணமாக அந்த இலக்கையும் அடைவதுண்டு... அடியேன், "தாத்தா எழுத்துக்களில் செய்யாத கணக்கியல் நுட்பமா...?" என்று நினைப்பேன்...! வெற்றிக்கு எல்லையில்லை... ஆனால் தோல்வி கிடைத்ததில்லை...! அப்படித்தான் "பாடும் நிலாவே" கேட்பொலியில், வானிலிருந்து வரும் நுட்பத்தைச் செய்வதற்கு முன், வழியில் நடந்து செல்லும் போது சில நுட்பங்களைக் கடந்து செல்ல நேரிட்ட போது, கிடைத்த ஒரு நுட்பத்தை இந்தப் பதிவில் பயன்படுத்தியுள்ளேன்...! நாட்களானால் நுட்பம் மறந்து விடும் என்பதற்கல்ல; நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் மறந்து விடலாம்...!

கீழே குறள்களின் எண் வரிசைப்படி உள்ள சுருக்கமான குறளின் குரலை வாசித்துவிட்டு, தங்க நிற வண்ணப்பெட்டியில் தேர்வு (Tick) செய்யலாம் அல்லது அந்த வரியில் எங்குச் சொடுக்கினாலும் தேர்வு ஆகி விடும்...! -திற்குப் பின் காமத்துப்பாலில் & - இவை இரண்டும் 'ஆண்களுக்கு அல்லவா?' என்று எண்ணுவது பொருளற்றது...! அன்பைப் பகிர்வதில் உணர்வும் உணர்ச்சியும் ஒன்றென்பதால், ஆண் பெண் என்கிற பேதம் கிடையாது...! "உள்ளம் இரண்டும் ஒன்று - நம் உருவம் தானே இரண்டு...?" மேலும், "நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை..." அல்லவா...?! அதனால் சில சொற்களை மாற்றி வாசிப்பதோடு, ஒரு தகவல் :- தோழி என வெளிப்படையாகத் தோழியை நோக்கி, காதல் தலைவி கூறுவதாக உள்ள குறள்கள் : 1262, 1284 மட்டுமே...! தொடருவோமா...? முடிவை முடிவில் காண்க... நன்றி...

மறக்க வேண்டியதும்... மறக்கக் கூடாததும்...



இவற்றில் முழு மதிப்பெண் என்று நினைக்கிறேன்......! மீதம் பத்தில், ஏழில் தேறுவேன் போல...!

சரி, வாங்க இன்றைய பதிவிற்கு செல்வோம்...! பொச்சாவாமை அதிகார குறள்கள் அனைத்தும் மறதியைக் குறிப்பதில்லை... முப்பால் முழுவதிலும், "எவற்றையெல்லாம் மறக்க வேண்டியது...? எவற்றையெல்லாம் மறக்கக்கூடாதது...?" என்று ஐயன் சொல்லியுள்ளதைத் தொகுத்தேன்... கூடுதலாக நம் கணக்கியலான முதல் + கடை கணக்கையும் செய்து, திருக்குறள் எண்ணான 7 வருவதையும் கண்டேன்...! நீங்களும் செய்து பார்க்கும்போது, அடையும் பெருமிதத்திற்கு எல்லையிருக்காது... வாழ்நாள் இருக்கும்வரை மறக்கவும் செய்யாது... இதேபோல் "பொச்சாப்பு" என்பதையும், முப்பால் முழுக்க தேடி கணக்கியல் செய்யலாம்...! அப்புறம் வாசிப்பவர்களும் மறக்காமல், தான் பெற்ற மதிப்பெண்களைக் கருத்துரையில் விருப்பமிருந்தால் சொல்லலாம்... நன்றி...


எழுத்துக்களின் கணக்கியலைச் செய்ய வைத்த காரணங்கள் பல உண்டு... அவற்றில் இந்த பொச்சாவாமை அதிகாரம் மற்றும் இதன் குறள்கள் பற்றிய பலரின் புரிதல்கள் ஒரு காரணமாகும்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. பொச்சாப்பு விளக்கம் நன்று.  சிலசமயம் நம் மனதில் படித்துக் கொண்டு வரும்போதே புதிய வார்த்தை ஆயினும் அதற்கான சரியான பொருள் இதுவாய்த்தானிருக்கும் என்று தோன்றும்.  அதுபோல கண்டிருப்பார் போலும்.

    பதிலளிநீக்கு
  2. என் மதிப்பெண்ணை சொல்ல முடியாது. இருங்கள் பேப்பரை மடித்து எடுத்துக் கொண்டு ரகசியமாய் வெளியேறுகிறேன்!

    பதிலளிநீக்கு
  3. பதிவின் உழைப்பு அருமை
    எஸ்.பி.பி. பழைய பதிவுக்கு சென்று வந்தேன் ஜி
    நான் அடிக்கடி திறக்கும் பதிவு

    பதிலளிநீக்கு
  4. பொச்சாப்பு - பொருள் மிகச் சிறப்பு. எஸ்பிபி பதிவும் பார்த்தேன் டிடி.

    புதிய நுட்பம் அருமை. அந்த வரியைத் தொட்டாலே தங்கநிறம் டிக் ஆகிறதே...

    மதிப்பெண்கள் - சுயமுன்னேற்றம் இன்னும் வேண்டும் என்று மனம் சொல்லிக் கொண்டிருக்கிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பொச்சாப்பு விளக்கம் அருமை ஐயா. அருமையான ஆராய்ச்சி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  6. பொச்சாப்பு பொருள் விளக்கம் , மறக்க வேண்டியதும், மறக்கக் கூடாததும் மிக அருமை.
    முப்பால் முழுக்க தேட வேண்டும்.
    உங்கள் பாடு நிலாவே போய் பார்த்தேன், பாடல்களை கேட்டேன். சிறப்பான இசை அஞ்சலி.

    பதிலளிநீக்கு
  7. திருக்குறள் தாண்டி, ஏதாவது ஒரு போஸ்ட் உங்களிடமிருந்து எதிர்பார்க்க ஆசையாக இருக்குது.. கோச்சிக்கப்பிடாது ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.