🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉திருக்குறள் உயிர்மெய்யெழுத்து அதிகாரங்கள் : 16 : நாடு (பகுதி 1)

அனைவருக்கும் வணக்கம்... முந்தைய மூன்று பதிவுகளில் உயிரெழுத்து மற்றும் உயிர்மெய்யெழுத்து அதிகாரங்களின் கணக்குகளையும், உயிரெழுத்து வகைகளின் கணக்குகளையும், கணக்கிட்டுப் பார்த்து விட்டோம்... இந்த 117 உயிர்மெய்யெழுத்து அதிகாரங்களைப் பார்க்கும்போது ஓர் எண்ணம் தோன்றியது...! அது என்னவென்றால்...


சில அதிகார எழுத்துக்கள் முழுவதும் உயிர்மெய்யெழுத்துக்களாக இருக்கிறது... எண்ணிப் பார்த்தால் 16 அதிகாரங்கள்; அப்படியென்றால் அதையும், மீதமுள்ள 117 அதிகாரங்களையும் கணக்கில் உட்படுத்த வேண்டியது தான்...! முதலில் இவற்றின் இரண்டிற்கும் முதல் + கடை கணக்குகளைச் செய்து பார்த்தால்........ திருக்குறள் எண்ணான ஏழு (7) வரவில்லை...! சரி, இரண்டிற்கும் பயன்படுத்திய எழுத்துக்களைக் கணக்கிடுப் பார்த்தால் :-

அதிகாரங்கள் 133
22உயிர்மெய்யெழுத்து
மட்டும்
மற்றவை
அதிகாரங்கள்16117
பயன்படுத்திய
எழுத்துக்கள்
34117
ஒருமுறை
பயன்படுத்திய
எழுத்துக்கள்
2424

இரண்டிலும் பயன்படுத்திய எழுத்துக்களைக் கூட்டினால், (34+117=151=) ஏழு (7) வருகிறது...! ஆமாம், 117 அதிகாரங்களுக்குச் சரியாக 117 எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளாரா தாத்தா...? எதற்கும் ஒருமுறை 'சுளகு'வில் சரி பார்த்து விடுவோம்... சரி தான், சும்மா ஓர் ஐயம்...! பதிவை இவ்வளவு சிறியதாக முடிக்கக்கூடாதே... யாருக்கும் எதையும் முழுவதும் கற்றுக்கொடுக்க முடியாதே; ஆனால் சிந்திக்க வைக்க முடியுமே... கணக்கில் முடிவில் வரும் விடையில் உறுதியாகச் சிந்திக்க வைக்கமுடியும்... ம்...

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப" குறளுக்கு வருவோம்... மொழியின் அடிப்படை எழுத்து, அப்படியிருக்கும் போது எண்களை முன்னிறுத்தி ஐயன் எழுதியது ஏன்...? யாரேனும் சிந்தித்ததுண்டா...? காலத்தினால் எழுத்துக்கள் மாற்றப்படக்கூடும்... அதை அறியாதவரா ஐயன்...? அதனால் தான் எழுத்துக்களின் கட்டமைப்பில் முப்பாலைப் படைத்துள்ளார்... இன்னொரு பக்கம் நமக்கு முப்பால் கிடைத்தது எப்போது...? ஒரு நூற்றாண்டிற்கு மேல் இருக்குமா...? ஏன்...? சரி, "வாழும் உயிர்க்கு" என்று குறள் முடியும்... இதற்குமேல் இதைப்பற்றி எழுதுவதைத் தவிர்க்கிறேன், சிந்திக்கவும்... சமீபத்தில் மறைந்த புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள், "திருக்குறளுக்கு உரையைத் திருக்குறளிலேயே தேட வேண்டுமென்று கூறியவர்... ஏன்...? ஐயனின் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்ளாத எந்த ஒரு வாசகனும், அவர் எழுத்துக்களால் கட்டமைப்பு செய்து எழுப்பியிருக்கும் எழுத்துக் கோட்டையின் அடர்வு மிகுந்த சுவருக்குள், ஒருபோதும் நுழையவே முடியாது என்று புலவர் ஐயா உணர்ந்திருக்கிறார்... அவரின் வழியே சிறிது சிந்தித்து சிறிய கணக்கு மூலம் செல்கிறேன்...

அட்டவணையில், இரண்டிலும் ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்கள் 24 என்று ஒன்றுபோல் வருகிறது...! இதில் என்னவோ கணக்கு இருக்கிறது...! இந்த உயிர்மெய்யெழுத்துக்களை மட்டும் கொண்ட அதிகாரங்களில் இந்த 24 எழுத்துக்களும் எந்தெந்த அதிகார எழுத்துக்களில் இருக்கும்...? அனைத்து அதிகாரங்களிலும் தானே இருக்கும்...? ஏதேனும் ஒன்றோ இரண்டோ அதிகார எழுத்துக்களில் வராமலிருந்தால்...? சரி, சும்மா ஒரு கணக்கு பார்ப்போம்...

உயிர்மெய்யெழுத்து
அதிகாரங்கள்
 12. டுவுநிலைமை
  1 
 16. பொறையுடைமை
  3 
 18. வெஃகாமை
  2 
 31. வெகுளாமை
  1 
 34. நிலையாமை
  1 
 35. துவு
  1 
 69. தூது
  1 
 81. பழைமை
  2 
 84. பேதைமை
  2 
10 
 94. சூது
  1 
11 
 96. குடிமை
  1 
12 
 98. பெருமை
  2 
13 
 102. நாணுடைமை
  1 
14 
 108. கயமை
  2 
15 
 131. புலவி
  3 
மொத்தம் 
24 
மொத்த எழுத்துக்கள்
52 (7)
பயன்படுத்திய எழுத்துக்கள்
34 (7)
முதல் + கடை எழுத்துக்களில்
ஒருமுறை
பயன்படுத்திய எழுத்துக்கள்
14 (5)

ஒரு அதிகாரம் மட்டும் இல்லை... மற்றபடி அட்டவணையில் கட்டமைப்பு ஏழு (7) எவ்வாறு வருகிறது என்பதை அறிகிறோம்... 15 அதிகாரங்களின் முதல் + கடை எழுத்துக்களில் ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்கள் 14 வருகிறதென்றால், அந்த 16-ஆவது அதிகாரம் இரண்டு எழுத்துக்களாகத் தான் இருக்கவேண்டும்...! ஏன்...? அப்போது தானே 14+2 = 16 = ஏழு (7) வரும்...! தாத்தா நுட்பத்தை அறிய ஒரு வாய்ப்பு...! இரண்டெழுத்து அதிகாரங்கள் மொத்தம் ஐந்து (5) ஆகும்... ஈகை, ஊழ் - இரண்டும் உயிரெழுத்து அதிகாரங்கள் என்பதால் இங்கு வராது... மீதம் இங்கே அட்டவணையில் தூது, சூது அதிகாரங்கள் வந்து விட்டது... அதிகார எழுத்துக்கள் முழுவதும் உயிர்மெய்யெழுத்துக்கள் கொண்ட 16 அதிகாரங்களில், தனித்து நிற்கும் அந்த அதிகாரம் நாடு... அதைச் சற்றே நாடுவோம்...

மேற்காணும் அட்டவணை அதிகார வரிசை எண்கள் படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது... அதனால் முதல் அதிகாரம் நடுவுநிலைமை... "நம் நாட்டில் இருக்கிறதா ?" என்றால், "மனிதர்களுக்கு ஒரு அநீதி, கீழ்களுக்கு ஒரு நீதி" என்பதால் இல்லை... அதேபோல் தர்மம் - அதர்மம்... ஆனால் அறம்...? அப்படியென்றால்...? அடுத்து செய்ந்நன்றியறிதல் அதிகாரத்திற்கு அடுத்ததாக உயிரெழுத்தில் தொடங்காத 10 குறள்களைக் கொண்ட நடுவுநிலைமை அதிகாரம் வைத்ததிற்கும் காரணம் உண்டு... என்ன...? விளக்கமாக அறிய குறிப்பு பதிவு உண்டு... ஆமாம், உயிரெழுத்தில் தொடங்காத இரண்டு குறள்களில் பேடி என்று வருவதை யார்யார் படித்து "யார்" என்று கண்டுபிடித்தீர்கள்...? இரண்டு குறள்களில் கட்டமைப்பு ஏழு என்பதைக் கூட சற்றே மறந்து விடுவோம்... இதை எதற்குக் கேட்கிறேன் என்றால், இங்கு அட்டவணையை அதிகார பெயரின்படி அகர வரிசைப்படுத்தினால், முதலில் வருவது கயமை - சிந்திக்கவும்...

இந்த கணக்கைச் செய்த முடித்தபின், நீண்ட ஆண்டுகள் கழித்து எனது நண்பனைச் சந்தித்துப் பேசினேன்... அச்சமயம் நண்பன் திடீரென்று அழுதான்... குறளின் குரலாக "நாடு" அதிகாரத்தை எழுத ஆரம்பித்தேன்... எனது நண்பன், அனைவரும் வணங்க வேண்டிய உழவன் இங்கு நம் நாட்டில் ர்யமனா(?) கயமை அதிகாரத்தில் வரும் கீழ்கள், நான்காம் இடத்தில் வைத்துள்ளது... சிந்திக்கவும்...

அதிகாரம் : தெரிந்து தெளிதல்

510. தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா விடும்பை தரும்

இந்த குறள்களுக்கான குரலை அடுத்த வருடம் பார்ப்போம்... நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. பிரமிக்க வைக்கும் உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. வழக்கம் போல சிறப்பான ஆய்வு தொடர்ந்து வருகிறேன் ஜி

  பதிலளிநீக்கு
 3. உயிரெழுத்தில் தொடங்காத இரண்டு குறள்களில் பேடி
  வியப்பாக இருக்கிறது ஐயா

  பதிலளிநீக்கு
 4. இப்போது அனைவருக்கும் வேண்டியது தெரிந்து தெளிதல்தான்.
  ஓருவனை ஆராயாமல் நம்புவதும், ஆரய்ந்து நம்பிக்கை வைத்தவனிடம் சந்தேகப்படுவதலும் நீங்காத துன்பத்தை தரும் என்பது உண்மை.

  அருமையான ஆராய்ச்சி.

  இந்த குரள்களுக்கான குரலை அடுத்த வருடம் பார்ப்போம். தொடரட்டும் பணிகள்
  நல்லதே நடக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 5. தங்களின் கடுமையான உழைப்பு எழுத்தில் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 6. திருக்குறள் கணித ஆராய்ச்சி அருமை ஐயா . நன்றி

  பதிலளிநீக்கு
 7. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப - இதன் பொருளில் உங்கள் சிந்தனை புதிய கோணம், டிடி. அதாவது முப்பால் கட்டமைப்பு எப்படி என்பதன் விளக்கம் படிகளாக....எண்ணிற்குள் செல்லும் அளவு அறிவு இல்லை ஆனால் உங்கள் எழுத்திற்குள் சென்று கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி!

  கீதா

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.