திருக்குறள் ② உயிர்மெய்யெழுத்து அதிகாரங்கள் (பகுதி 2/2)
15 அதிகாரங்களின் கணக்கில் ஒருமுறை வந்த 23 எழுத்துக்கள், எந்தெந்த அதிகாரங்களில் வந்தது என்று பார்த்தபோது, ஒரேயொரு அதிகாரம் தனித்து நின்றது... அந்த அதிகாரம் "நாடு" என்பதையும் அறிந்தோம்... அதேபோல் 118 அதிகாரங்களின் கணக்கில் ஒருமுறை வந்த எழுத்துக்கள் 24 வருகிறது... அவையும் எந்தெந்த அதிகாரங்களில் வருகிறது என்று பார்க்க வேண்டும்... இதில் எந்த அதிகாரம் முடிவில் தனித்து நிற்கும்...? ஆனால் முந்தைய பதிவைப் போன்று, ஒருமுறை வந்த 23 எழுத்துக்கள் 14 அதிகாரங்களில் வந்து, தனித்து நின்ற 15-ஆவது அதிகாரம் "நாடு" என்று எளிதாக வந்துவிட்டது... ஆனால் இங்கு 14 முறைகள் - அதாவது - இதற்காக 14 அட்டவணைகள் Excel கோப்பில் செய்திருக்க வேண்டும்... முடிவாக நமக்குக் கிடைப்பது "குறிப்பறிதல்" அதிகாரம்... முடிவில் நாடு + குறிப்பறிதல் இவற்றின் ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை = ஏழு (7) ஆகும்... சரி, முடிவாக வரும் நாடு அதிகாரத்திற்கும், குறிப்பறிதல் அதிகாரத்திற்கும், என்ன தொடர்பு...?
ஒருவர், மற்றவர் வாயால் சொல்லாமலேயே அவர் நினைப்பதை / சொல்ல வருவதை / செய்ய விரும்புவதை / இன்னும் பலவற்றையும், அவரது முகத்தை நோக்கிப்புரிந்து கொள்ளுதலைச் சொல்வது குறிப்பறிதல் ஆகும்... அகத்தின் அழகு முகத்தில் தெரிந்து விடும் அல்லவா...? அதிலும் முக்கியமாகக் கண்கள்... பார்வை ஒன்றே போதுமே - பல்லாயிரம் சொல் வேண்டுமா...? தேவையில்லை என்கிறார் தாத்தா... இயற்கை அறிவு, கல்வியால் பெற்ற அறிவு, அனுபவயறிவு, போன்றவையெல்லாம் மனிதர்கள் நல்வாழ்வு மேற்கொள்ளத் தேவையானவை என்றாலும், இத்துடன் தனிப்பட்ட சிறப்புடையதாக குறிப்புணரும் திறனுக்கு மிக மேலான இடம் தருகிறார் ஐயன்... "ஒருவர் முகம் பார்த்து அவர் உள்ளக் குறிப்பினை அறியமுடியாத கண்களை ஒருவன் பெற்றும் என்ன பயன்...?" என்கிறார் தாத்தா... குடும்பம், அலுவலகம், உறவினர்கள், நண்பர்கள் - எங்கும் எதிலும் குறிப்பறிதல் திறன் மிகவும் உதவும்...
மீண்டும் கணக்கில் நுணுக்கமாக ஆய்வு செய்வோம்... அதிகார எழுத்துக்கள் முழுவதும் உயிர்மெய்யெழுத்துக்களாக இருக்கும் 15 அதிகாரங்களில், தனித்து ஓர் அதிகாரமாக "நாடு" வருகிறதென்றால், மீதம் 14 அதிகாரங்கள் உள்ளது... அதேபோல் அதிகார எழுத்துக்கள் முழுவதும் உயிர்மெய்யெழுத்துக்களாக இல்லாத 118 அதிகாரங்களில், தனித்து ஓர் அதிகாரமாக "குறிப்பறிதல்" வருகிறதென்றால், மீதம் 3 அதிகாரங்கள் வரும்... இதன் கணக்கு என்னவென்றால் மீதம் வரும் 14+3=17 அதிகாரங்களின் கணக்கில், ஒருமுறை பயன்படுத்திய முதல் + கடை எழுத்துக்களின் எண்ணிக்கை 16 (7) ஏழு வரும்... மேலும் இந்த 17 அதிகாரங்களோடு, தனித்து வந்த இரண்டு (2) அதிகாரங்களையும் இணைத்துக் கணக்கிடுவோம்... இந்த 19 அதிகாரங்களில் ஒருமுறை வரும் எழுத்துக்களைக் கொண்ட அதிகாரங்களைப் பிரித்தால், தனித்து இன்னொரு அதிகாரமும் கூடும்... அது "அறிவுடைமை" ஆகும்...
ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருக்குறளில் குறிப்பறிதல் எனும் அதிகாரம் (71,110) இருமுறை வருகிறது என்று தவறாக நினைத்து எழுதிய பதிவுகள்: "அன்றைக்கு அப்படி... இன்றைக்கு இப்படி..." சுருக்கமாக →அஅ... இஇ... [1]← மற்றும் →அஅ... இஇ... [2]← ஆகும்... குறள்களின் குரல்கள் சரி தான், ஆனால் தலைப்பு தவறு...! அதன்பின் இதழ் வலைப்பூ - திருமிகு →தமிழரசி← அவர்களின் →பதிவு← மூலம், "ஒரு பெயரில் ஈர் அதிகாரம் வைத்தாரா திருவள்ளுவர்...?" எனும் எண்ணத்திற்கு ஒரு சிறிய விடை கிடைத்தது... திருக்குறள் எழுத்திற்கான கணக்கு செய்தாக வேண்டும் எனும் எண்ணமும் மேலும் உறுதியானது... இன்று காமத்துப்பாலில் வரும் "குறிப்பறிதல்" எனும் அதிகாரம், குறிப்புணர்தல் தான் சரி என்பதும், இரண்டாவது முறையாக இங்கு கணக்கியல் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது...
இங்கு யார் யார் குறிப்பை யார் யார் அறிய வேண்டும்...? 70. மன்னரைச்சேர்ந்தொழுகல் அதிகாரத்திற்கு அடுத்ததாக இந்த குறிப்பறிதல் அதிகாரம் வருகிறது என்பதால், தலைமைக்கும், தலைமையிடத்தில் இருப்போருக்கும், குறள்கள் சொல்லப்படுகிறது என்று எளிதாகச் சொல்லிவிடலாம்... செங்கோல் ஏற்று ஆட்சி செய்யும் தலைமையின் ஆய்ந்துணர்ந்து அமைச்சர் செயல்களைச் செய்வதும், அதேபோன்று தலைமையும் குடிமக்களின் அகக் குறிப்பையும் அறிந்திருக்க வேண்டும்... ஆனால் நம் நாட்டில்...? யாரும் என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாம்... இருக்கவே இருக்கு Washing Machine...!
43. அறிவுடைமை, 71. குறிப்பறிதல், 74. நாடு ஆகிய 3 அதிகாரங்களில், ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்கள் 11 ஆகும்... 19 அதிகாரங்களில் மேற்சொன்ன 3 அதிகாரங்கள் தவிர, மற்ற 16 அதிகாரங்களில், ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்கள் 32 ஆகும்... ஆக 11+32=43 = (7) ஏழு ஆகும்...
மூலம் உணர்த்துவது :
அறிவுடைமை இருந்தால் தான் குறிப்பறிதல் செய்ய முடியும்...! அதன்பின் தான் நாட்டை ஆளவும் வேண்டும்...!
யாது கொடுத்தும் கொளல்
இந்த குறள்களுக்கான குரலையும் அடுத்த வருடம் பார்ப்போம்... நன்றி...
சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி குற்றம் கூறுகையில் -
மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்பினை காட்டுதடா..!
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து முதுகைப் பாருங்கள் -
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு - அதனைக் கழுவுங்கள்..!
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
குறிப்பறிதல் வார்தையைவிட குறிப்புணர்தல் பொருத்தமான வார்த்தை. யாருக்கும் வெட்கமில்லை கண்ணதாசன் பாடல் சிறப்பு. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு!
பதிலளிநீக்குபுறத்தே உடம்பில் தோன்றும் மெய்ப்பாடுகளால் ஒருவர்க்கொருவர் அறியுமாறு செய்தலைச் சொல்லும் "128. குறிப்பறிவுறுத்தல்" மேலும் சிறப்பானது...
நீக்குபார்க்கிறேன்.
நீக்குகுறிப்பறிதல் அறிந்தேன். நன்றி ஐயா
பதிலளிநீக்குஇறுதி பாடல் வரிகளை மிகவும் ரசித்தேன் ஜி
பதிலளிநீக்குகுறிப்பறிதல் அருமை.
பதிலளிநீக்குமுதல் படம் உணர்த்துவது மிக அருமை.
நம்பிக்கை வேண்டும் ஒவ்வொருவருக்கும் தன் மேல் .
குறிபறிதல் திறன் இருந்தால் எல்லோருடன் சிறப்பாக வாழலாம். தாத்தா சரியாக சொன்னார்.
இன்றைய தொழில்நுடபம் மிக அருமை.
உங்கள் ஆராய்ச்சிக்கு வாழ்த்துகள்.
குறிப்பறிதல் - குறிப்புணர்தல்...ஆஹா இரண்டாவது சொல்தான் வலிமையாக இருக்கு. அறிதலை விட உணர்தல்தான் முக்கியம். உணர்ந்தால்தான் செயலில் அது வரும்.
பதிலளிநீக்குநல்ல ஆய்வு, டிடி. நீங்க கணக்கு போட்டுக்கோங்க எங்களுக்கு இப்படி நல்ல விஷயங்களைச் சொல்லுங்க புரிந்துகொண்டுவிடுவோம்!!! ஹாஹாஹா....
நாடு - தாத்தா ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைத்தானே சொல்லியிருக்கிறார் இல்லையா அந்த அதிகாரத்தில்?
உன் மீது நம்பிக்கை கொள் - படி அருமை.
கீதா
நாடு - என்பதில் நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதோடு, இப்படி இருக்க "நாடு" என்ற பொருளிலும் கொள்ளலாம் இல்லையா?
பதிலளிநீக்குகீதா
நாடு - அதிகாரத்தில் ஒரு நாடு இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லியிருப்பதையே - இப்படி நாடு இருக்க வேண்டும் என்பதை "நாடு" என்றும் பொருள் கொள்ளலாம் இல்லையா? எண்ணு, தேடு, விரும்பு என்றெல்லாம்...
பதிலளிநீக்குகீதா
குறிப்பறிதல் அறிந்தோம். நன்றி
பதிலளிநீக்கு