திருக்குறள் ③ மெய்யெழுத்து அதிகாரங்கள் (பகுதி 1/4)
மேற்காண்பது மெய்யெழுத்து இல்லாத 22 அதிகாரங்களின் கணக்கியல்... திருக்குறள் எண்ணான ஏழு (7) எங்கெங்கு வருகிறது என்பதைப் பின்புற வண்ணம் கொண்ட எண்களில் காணலாம்... உயிர்மெய்யெழுத்து அதிகார →கணக்கில்← என்ன செய்தோமோ அதையே இங்கும் செய்து பார்ப்போம்; அதாவது ஒருமுறை பயன்படுத்திய 34 எழுத்துக்கள் எந்தெந்த அதிகாரங்களில் வரும்...?
மெய்யெழுத்து இல்லாத அதிகாரங்கள் | ||
1 | 1 | |
2 | 3 | |
3 | 2 | |
4 | 1 | |
5 | 1 | |
6 | 1 | |
7 | 1 | |
8 | 2 | |
9 | 2 | |
10 | 1 | |
11 | 1 | |
12 | 1 | |
13 | 1 | |
14 | 2 | |
15 | 3 | |
16 | 1 | |
17 | 1 | |
18 | 1 | |
19 | 2 | |
20 | 2 | |
21 | 4 | |
34 | ||
முதல் + கடை எழுத்துக்களில் ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்கள் 23 (5) |
எங்கேயோ இந்த அட்டவணையைப் பார்த்துப் போல் இருக்கிறதா...? ஆம் உயிர்மெய்யெழுத்து அதிகார கணக்கில் வந்தது தான்... அதனுடன் உயிரெழுத்தில் தொடங்கும் 6 அதிகாரங்கள் முடிவில் இணைத்துள்ளேன்... அட்டவணையில் வரிசை எண்ணில் 16 முதல் 21 வரை காணலாம்... அதிகாரங்களின் முதல் + கடை எழுத்துக்களில் ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்கள் 23 வருகிறதென்றால், அந்த 22-ஆவது அதிகாரம் இரண்டு எழுத்துக்களாகத் தான் இருக்கவேண்டும்...! ஏன்...? அப்போது தானே 23+2 = 25 = ஏழு (7) வரும்...! அதுவும் அந்த அதிகாரத்தில் மட்டும் தான் மெய்யெழுத்தில் குறள்கள் முடியாது... பத்து குறள்களும் உயிர்மெய்யெழுத்தில் தான் முடியும்...! இதில் தொடங்கிய சொல்லாலே முடியும் குறளும் உள்ளது... அவ்வாறு சிறப்பு வாய்ந்த அதிகாரம் என்ன...?
60 ஆண்டுகள் ஆயினும் நமது பேடியின் தலைமை கும்பலுக்கு அச்சத்தைத் தருவது யார்...? அவரை சுருக்கமாகச் சொல்வதென்றால் இரண்டே எழுத்தில் சொல்லலாம்... முதலெழுத்து நே - கடையெழுத்து ரு...! அதேபோல் இங்கு முதலெழுத்து நா - கடையெழுத்து டு...! முப்பால் அதிகாரங்களில் இந்த நாடு அதிகாரம் மட்டும் தான் வேறுபட்டு இருக்கும்...! என்ன அது...? 9 குறள்களையும் கூறியபடி நாடு அமைந்திருந்தாலும் 10-ஆவது குறளில் மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் வீணாகும் என்று முடியும்...! காரணம்...? நாட்டிற்கு வாய்த்த தலைமை...!
தொடங்கிய சொல்லாலே முடியும் குறளில், நாடு என்பதற்கு வரையறை மட்டுமன்றி, உலகப் பொருளியல் எவ்விதம் இயங்கவேண்டும் என்பதையும் விளக்குகிறார் தாத்தா... ஒன்றிற்கொன்று மாறுபட்ட எதிர்மறைக் கருத்துக்களை ஒரு குறளில் கையாள முடியுமா...? கூறும் பொருளின் வன்மை மென்மைகளுக்கேற்ப உடன்பாடு-எதிர்மறை என்று இரு நடைகளையும் சில குறள்களில் தாத்தா அடிக்கடி பயன்படுத்துவார்... மேலும் ஒரு குறளுக்குள்ளேயே 'பல பொருள் ஒரு சொல்' உள்ளது...! அந்த குறளை சொல்வதற்குப் பதிலாக ஒரு பாட்டுப் பாடலாமா...? நாடு - அதை நாடு - அதை நாடாவிட்டால் ஏது வீடு...? பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு - மானம் பெரிதென்று வாழும் பண்பாடு...! - தேவையென்றால் :
429. எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்
இந்த குறள்களுக்கான குரலையும் விளக்கமாக அடுத்த வருடம் பார்ப்போம்...
புரியாதவர்கள்: விழித்துக் கொள்ளுங்கள் தோழர்களே... நன்றி
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
// எங்கேயோ இந்த அட்டவணையை பார்த்தது போல் தெரிகிறதா? //
பதிலளிநீக்குஅப்படியெல்லாம் நினைவில் இருந்தால் நானும் உங்களோடு ஆராய்ச்சியில் போட்டி போடுவேனே....!! உங்கள் ஆராய்ச்சியை பிரமிப்புடன் படித்து வருகிறேன்.
நேரு
பதிலளிநீக்குநாடு
வியப்பு
பதிவில் அரசியலை இழுத்தது சிறப்பு ஜி
பதிலளிநீக்குகுறள்களும்
பதிலளிநீக்குபதிவும் அருமை..
சிறப்பு..
பதிவு அருமை.
பதிலளிநீக்குநேரு, நாடு என்று வருவது நன்றாக இருக்கிறது. அட்டவணை நன்றாக இருக்கிறது.
திருக்குறள் ஆராய்ச்சி வழக்கம் போல் வியக்க வைக்கிறது. நன்றி ஐயா
பதிலளிநீக்குபதிவு யோசிக்கவும் வைக்கிறது. அந்த 22வது அதிகாரம் இரண்டு எழுத்துக்களாக??? தொடங்கிய சொல்லாலே முடியும் குறள்....பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குகீதா