திருக்குறள் ③ மெய்யெழுத்து அதிகாரங்கள் (பகுதி 2/4)
→எண்ணிய எண்ணியாங்கு எய்து← எனும் முன்னோட்ட பதிவின் படி நாம் இதுவரை என்னென்ன செய்திருக்கிறோம் என்பதைச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்...
திருக்குறளின் அனைத்து அதிகார பெயர்களை ஓரளவு எழுத்துக்களின் கணக்கு மூலம் செய்திருந்தாலும், அவற்றில் காளிங்கர் உரையின்படி, இரண்டு அதிகார பெயர்களை மாற்றிச் சொல்லியுள்ளார்... அவற்றில் ஒன்று, 127-ஆவது அதிகாரத்திற்கு, "அவர்வயின்விரும்பல்" அல்ல "அவர்வயின்விதும்பல்" தான் சரி என்பதை உயிரெழுத்து அதிகார கணக்கியல் பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தினோம்... அதற்காக உயிரெழுத்தில் தொடங்கும் அதிகாரங்கள், உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் அதிகாரங்கள் என்று பிரித்து, மிகவும் எளிதாகக் கண்டுபிடித்தோம்... அதன்பின் அதிகார எழுத்துக்கள் முழுவதும் உயிர்மெய்யெழுத்தாக உள்ளவற்றை மட்டும் பிரித்துக் கணக்கிட்டபோது, "நாடு" அதிகாரம் மட்டும் தனித்தே நின்றது... அதிகார எழுத்துக்கள் முழுவதும் உயிர்மெய்யெழுத்தாக இல்லாதவற்றையும் கணக்கிட்டபோது, "குறிப்பறிதல்" அதிகாரம் மட்டும் தனித்தே நின்றது...!
அடுத்ததாக முந்தைய மெய்யெழுத்து பதிவில், மெய்யெழுத்தே இல்லாத அதிகாரங்களைக் கணக்கிட்டபோது, முடிவில் இங்கும் "நாடு" அதிகாரம் மட்டும் தனித்தே நின்றது...! அப்படியென்றால், மெய்யெழுத்துள்ள மீதம் அதிகாரங்களைப் பிரித்துக் கணக்கிட்டால், இங்கு மீண்டும் "குறிப்பறிதல்" அதிகாரம் மட்டும் தனித்தே வருமா...? ஓர் எதிர்பார்ப்பு தான்...! அட...! ஆம், இங்கும் அதே தான் வருகிறது...! இதற்கு 111 அதிகார கணக்கில், ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை 22 என்று வரும்... அவ்வாறு வரும் 22 எழுத்துக்கள் எந்தெந்த அதிகாரங்களில் வருகிறதே அவற்றைத் தவிர்த்துவிட்டு, மீதமுள்ள அதிகார கணக்கைச் செய்ய வேண்டும்... அங்கும் ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை என்ன வருகிறதோ... அதே அதே... 14-ஆவது முறை கணக்கிட்ட 14-ஆவது அட்டவணை முடிவில், "குறிப்பறிதல்" அதிகாரம் மட்டும் தனித்தே வரும்...!
இன்றைய நடப்பின்படி 127-ஆவது அவர்வயின்விதும்பல் என்று இருந்தாலும், அதைச் சரி பார்க்கத் தொடங்கியது முதல் இதுவரை என்னென்ன ஆய்வெல்லாம் செய்ய வைத்திருக்கிறது...! சரி, இன்றைய பதிவைத் தொடங்குவோம்... மெய்யெழுத்துள்ள 111 அதிகாரங்களின் கணக்கில் "எங்கும்" திருக்குறள் எண்ணான ஏழு (7) வரவில்லை...! எங்கும் = அதிகார மொத்த எழுத்துகளின் எண்ணிக்கை - அவற்றில் பயன்படுத்திய எழுத்துகளின் எண்ணிக்கை - அவற்றில் ஒருமுறை பயன்படுத்திய எழுத்துகளின் எண்ணிக்கை மற்றும் அதிகார முதல் / கடை / முதல் + கடை, அதிகார ஒருமுறை முதல் / கடை / முதல் + கடை... ஆனால் நமது நோக்கம் என்னவென்றால், காளிங்கரின் இரண்டாவது பாட வேறுபாடு : 90-ஆவது அதிகாரத்தின் பெயர், பெரியாரைப்பிழையாமையா...? பெரியார்ப்பிழையாமையா...?
① மெய்யெழுத்து அதிகாரங்களை உற்றுக் கவனிக்கும்போது, 12 அதிகாரங்களில் "மட்டும்" கடையெழுத்தில் மட்டும் மெய்யெழுத்தாக முடிகிறது... மட்டும் = இடையில் (சில/பல) மெய்யெழுத்துக்களும், கடையில் மெய்யெழுத்தாகவுள்ள அதிகாரங்களும் உள்ளன...! மீதமுள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (111-12) 99 ஆகும்... என்ன கணக்கு வருகிறது...?
அதிகாரங்களில் பயன்படுத்திய எழுத்துக்கள் கணக்கில், 12 அதிகாரங்களில் 28 என்றும், 99 அதிகாரங்களில் 114 என்றும் வருகிறது... ஆக இரண்டு அட்டவணைகளிலும் சேர்த்து 28+114=142=(7) = இங்கும் கட்டமைப்பு உள்ளது...! ஆமாம், இதனால் நமது நோக்கத்திற்கு விடை கிடைக்குமா...? கிடைக்காது...! ஏனெனில் பெரியார்ப்பிழையாமையில் மெய்யெழுத்து(2) இடையில் வருகிறது... இன்னொரு பக்கம் ரை எனும் எழுத்து பெரியாரைப்பிழையாமை தவிர, மற்ற அதிகாரங்களில் ஏழு (7) முறை வருகிறது...! மேலும் இதை எப்படிப் பிரித்துப் பார்ப்பது...? ஒருபக்கம் பெரியாரைப்பிழையாமை என்றும், இன்னொரு பக்கம் பெரியார்ப்பிழையாமை என்று வந்து, இரண்டு அட்டவணைகளையும் கணக்கிட்டு, அவற்றில் திருக்குறள் எண்ணான ஏழு (7) எதில் வருகிறதோ, அதுவே சரி என்று கூறலாம்... அதனால் ஓ...! இப்படிச் செய்து பார்ப்போமே...! ஆனால் நடந்தது என்னவென்றால் :
ஏதேனும் ஒன்றைப் பற்றிப் பேசிக்கொண்டு இருப்போம், தீடிரென்று மறந்து போகும்... மனதில் இருக்கும் - தொண்டை வரை வந்து நிற்கும் - ஆனால் அந்த சொல் வராது...! இந்த கணக்கைச் செய்தபோது, தொண்டை வரை நின்று - அதாவது "பெரியார்ப்பிழையாமை" எனும் சொல்லை உற்று நோக்கிச் சிந்தித்துக் கொண்டிருந்த போது, "அடுத்த நாள் செய்யலாம்" என்று மீண்டும் ஒருமுறை சிந்தித்தால் தெரியவில்லை...{!} வழக்கம்போல் குறிப்பை எழுதி வைப்பதையும் செய்யவில்லை...(!) உங்களுக்கும் ஏதேனும் தோன்றுகிறதா...? நன்றி... அப்புறம் அன்றைக்குத் தாத்தா மனதில் வந்து சொன்னது :
672. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூள் போல சில விஷயங்கள் நினைவில் வராமல் சங்கடம் கொடுக்கும்தான்!
பதிலளிநீக்குபெரியார்ப்பிழையாமை, பெரியாரைப்பிழையாமை இரண்டுமே சற்றே வித்தியாசப்படுத்தி வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கும் வெவ்வேறு வகையிலான சரியான சொல் என்று தோன்றுகிறது!
பதிலளிநீக்குஆம், பெரியாரைத் துணைக்கோடல் எனும் அதிகாரத்திற்கும், இந்த அதிகாரத்திற்கும் தொடர்பு உண்டு... ஆனால் கணக்கு மூலம் உறுதிப்படுத்த முடியுமா? என்று அடுத்த பதிவில் பார்ப்போம்...
நீக்குஉங்கள் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை வாங்கிவிட்டீர்களா?
பதிலளிநீக்குஉலகப்பொதுமுறை என்பதால், காப்புரிமை வேண்டாம் என்று நினைக்கின்றேன் ஐயா... நன்றி...
நீக்குதங்களது ஆய்வு மேலும் தொடரட்டும் ஜி
பதிலளிநீக்குஉங்கள் ஆராய்ச்சிகள் வியக்க வைக்கிறது.
பதிலளிநீக்குபெரியாரைப்பிழையாமை உங்கள் சிந்திப்பு அற்புதம்.
தாத்தா வந்து மனதில் சொன்ன குறள் அருமை.காலம் தாழ்த்திச் செய்யக்கூடியவற்றை காலம் தாழ்ந்தே செய்ய வேண்டும், விரைந்து செய்ய வேண்டியவற்றைக் காலம் தாழ்த்த கூடாது எண்ரு அவர் சொன்னது சரிதான்.
காலம் முக்கியம் இல்லையா!
ரை என்று வருவதற்கும், ர் என்று வருவதற்கும் பொருள் சற்று வேறுபடும் இல்லையா? அதிகாரத்தில், ஒரு குறளில் பெரியாரைப் பேணாது ஒழுகிற் (இப்போது இதுதானே பல இடங்களில் நடக்கிறது) என்று குறளே வருகிறதே டிடி அப்ப பெரியாரைப்பிழையாமை சரியாக இருக்குமோ?
பதிலளிநீக்குஅங்கு சில குறள்களின் விளக்கங்கள், சில கேள்விகளை எழுப்புகிறது, அதுதான் சரியான விளக்கமா என்று
கீதா
இதே அதிகாரத்தில் இன்னொரு குறள் :
நீக்குஎரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
என்ன செய்வது ?
அதை ஏன் கேக்கறீங்க டிடி, பேசிட்டே இருப்போம், சொல்ல வந்தது இல்லைனா மனசுல சொல்ல நினைச்சது மறந்து போய்டும் தொண்டை வரை வரும் ஆனா வெளிய வராத அவஸ்தை! பல சமயங்கள்ல.
பதிலளிநீக்குசரி பெரியார்ப்பிழையாமையா, பெரியாரைப்பிழையாமையா...கணக்குல தெரிந்திடும் அதுவும் உங்களின் கடின ஆராய்ச்சியில்.
கீதா
வியக்க வைக்கும் குறள் ஆராய்ச்சி. நன்றி ஐயா
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தங்களது திருக்குறள்கள் பற்றிய ஆராய்ச்சி மென்மேலும் வியக்க வைக்கிறது. நடுவில் தொடர இயலாமல் சில தாமதங்கள். உங்களின் இந்த ஆராய்ச்சியில் நீங்கள் மேலும் சிறந்து விளங்கிட இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.