🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



③ பெரியாரைப்பிழையாமையா...? பெரியார்ப்பிழையாமையா...? (பகுதி 3/4)


அனைவருக்கும் வணக்கம்... மெய்யெழுத்து அதிகாரங்களில், 12 அதிகாரங்களில் "மட்டும்" கடையெழுத்தில் மட்டும் மெய்யெழுத்தாக வருவதையும், மீதமுள்ள அதிகாரங்களையும் கணக்கிட்டு, திருக்குறள் கட்டமைப்பு எண்ணான ஏழு (7) வருவதை முந்தைய பதிவில் அறிந்தோம்... ஆனால்.......

892. பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
பெரியாரைப் புறக்கணித்துச் செய்யும் செயல் எவராயினும் (அப்பெரியாராலும்), தீர்க்கமுடியாத பெருந்துன்பங்கள் உண்டாகும்...

896. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
தீயினால் சுடப்பட்டாலும் தப்பித்துப் பிழைக்கலாம், பெரியாரிடத்துத் தீமை செய்து நடப்பவர் தப்பித்தலில்லை...

90-ஆவது அதிகாரத்தின் பெயர், பெரியாரைப்பிழையாமையா...? பெரியார்ப்பிழையாமையா...? என்பதை அறிய முடியவில்லை... ஏனெனில் மெய்யெழுத்தில்லாத 111 அதிகாரங்களில் ரை மற்றும் ர் ஆகிய எழுத்துக்கள் பல அதிகாரங்களில் உள்ளன... "இது போல் செய்து பார்த்தால் ஒருவேளை கண்டுபிடிக்கலாம்" என்று நினைத்ததையும் மறந்து விட்டபடியால், அடுத்து என்ன செய்தேன் என்றால் :-

மெய்யெழுத்து ஒருமுறை மட்டும் : அதிகாரங்களில் மெய்யெழுத்து எங்கு வேண்டுமென்றாலும் வரட்டும் என்று எண்ணிக்கொண்டு, மெய்யெழுத்து ஒருமுறை மட்டும் வரும் அதிகாரங்களையும், மற்ற அதிகாரங்களையும் பிரித்தபோது 46+65=111 என அதிகாரங்கள் வந்தது... அவ்விரு அதிகார எழுத்துக்களின் கணக்கிலும், அவற்றின் முதல் + கடை கணக்கிலும், திருக்குறள் எண்ணான ஏழு (7) வரவில்லை...! பெரியார்ப்பிழையாமை என்று மாற்றினால், 45+66=111 என அதிகாரங்கள் பிரியும்... அவற்றின் கணக்கில். முதல் + கடை கணக்கு, ஏழு (7) என்று வந்தது... இதனால் பெரியார்ப்பிழையாமை என்று முடிவுக்கு வந்து விடலாமா...? அடுத்ததாக செய்ததையும் சொல்லி விடுகிறேன்; ஏனெனில் மனதில் தொண்டை வரை நின்ற "எண்ணம்", அன்றைக்கு நினைவுக்கு வரவில்லை என்பதால் :-

அதிகார இடையில் ஒருமுறை மட்டும் : அதிகார பெயர்களில் இடையில் மட்டும் ஒருமுறை வரும் மெய்யெழுத்துக்களைக் கொண்ட அதிகாரங்களையும், மற்ற அதிகாரங்களையும் கணக்கிடல்... பெரியாரைப்பிழையாமை கணக்கு : அதிகாரங்கள் 34+77=111 என்றும், முதல் + கடை கணக்கில், ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை ஏழு (7) வருகிறது...! பெரியார்ப்பிழையாமை கணக்கு : அதிகாரங்கள் 33+78=111 என்றும், முதல் + கடை கணக்கில், பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை ஏழு (7) வருகிறது...! ???

ஈர் ஒற்று மயக்கம் : அதாவது ய், ர், ழ் என்னும் மூன்று மெய் எழுத்துகளை அடுத்து, க், ங், ச், ஞ், த், ந், ப், ம் ஆகிய மெய் எழுத்துகள் ஈர் ஒற்றுகளாகச் சேர்ந்து வரும்... அதன்படி அருகருகே மெய்யெழுத்துக்கள் (பெரியார்ப்பிழையாமை) கொண்ட அதிகாரங்களையும், மற்ற அதிகாரங்களையும் பிரித்துக் கணக்கிட்டேன்... ஏழு (7) எந்த கணக்கிலும் வரவில்லை...! சரி, பெரியாரைப்பிழையாமை கணக்கில், அதிகார எழுத்துக்களின் எண்ணிக்கை, ஏழு (7) வருகிறது...! ஆனாலும் :-

மயக்கமா...? கலக்கமா...? மனதிலே குழப்பமா...? கணக்கியலில் நடுக்கமா...? கணக்கு என்றால் ஆயிரம் இருக்கும் - எண்ணம் தோறும் குழப்பம் இருக்கும் - வந்த தவறு எதுவென்றாலும், வாடி நின்றால் ஓடுவதில்லை - வாடி நின்றால் ஓடுவதில்லை... எதையும் தீர்க்கும் எண்ணங்கள் இருந்தால், உறுதி வரைக்கும் நுட்பங்கள் கிடைக்கும்... பாடல் மனதில் ஓட, நீண்ட நாட்கள் கழித்து நினைவுக்கு வந்த "அந்த" எண்ணங்கள் :-
1) ரை எனும் எழுத்து அறத்துப்பாலில் இல்லை... அப்படியென்றால் முப்பால் வாரியாக பிரித்துப் பார்க்க வேண்டுமா...? மேலும் ஒரு பாலில் மட்டும் வரும் எழுத்துக்கள் என்னென்ன...? இரண்டு பால்களில் / மூன்று பால்களிலும் வரும் எழுத்துக்கள் என்னென்ன...? இந்த கணக்கு எல்லாம் மனதில் தோன்றவே இல்லையே ... ம்...

2) பெரியாரைப்பிழையாமை அல்லது பெரியார்ப்பிழையாமை என்றாலும், இதன் மொத்த எழுத்துக்கள் ஒன்பது (9) ஆகும்.. அதிகாரங்களின் மொத்த எழுத்துக்கள் 853 = (7) என்று கட்டமைத்த ஐயன், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் இத்தனை எழுத்துக்கள் தான் என்று கட்டமைத்திருப்பார் அல்லவா...? ஓரெழுத்தில் அதிகாரம் இல்லை... இரண்டு (2) எழுத்துக்கள் கொண்ட அதிகாரங்கள் முதல் பன்னிரண்டு (12) எழுத்துக்கள் கொண்ட அதிகாரங்கள் வரை அதிகாரங்கள் உள்ளன... அதற்கும் ஒரு கணக்கு இருக்கலாம் அல்லவா...? இவற்றையெல்லாம் செய்தால் தான் இந்தப்பதிவில் தலைப்பிற்குச் சரியான விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன்...
செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனைச் செந்தில் - கந்தனை - வானவர் காவலனைக் குகனை - சிந்தனை செய் மனமே... அதனால் சிந்தனை செய் மனமே...! முருகா... மனமே ஒரு குறள் சொல்...

அதிகாரம் : தெரிந்து வினையாடல்
514. எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. PBS பாடலை உங்களுக்கு தோதாக மாற்றிக்கொண்டதை ரசித்தேன்.  ஆராய்ச்சி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. வியந்து கொண்டே தொடர்ந்து வருகிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  3. மயக்கமா,? கலக்கமா? விடை காணமுடியாமல் மயக்கமும், கலக்கமும் ஏற்பட்டால் கணக்கில் எப்படி விடை கிடைக்கும். வாடி நிற்காமல் ஆய்வுகள் தொடரட்டும்.
    கணக்கில் 100 க்கு 100 மதிப்பெண்கள் வாங்குவீர்கள்.

    சிந்தனை செய்ய முருகன் துணை இருப்பான்.
    தொடரட்டும் ஆய்வுகள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. ஓர் ஈற்று மயக்கம் , ர்ப் ஆ இல்லை ரையா என்ற மயக்கமா கலக்கமா என்று குழப்பம் வந்தாலும் நீங்க சரியா கணக்கியல் பண்ணியிருப்பீங்க. பாடல் உங்கள் வரிகள் நல்லாருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நல்ல சிறப்பான முயற்சி. உங்கள் திருக்குறள் ஆய்வுகள் தொடரட்டும். மயக்கமா கலக்கமா பாடல் வரிகளைப் போல் தாங்கள் பதிவுக்காக சேர்த்த வரிகள் அருமை. உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    அண்ணா

    நலமா? தாங்கள்.... நீண்டநாட்களின் பின் வருகின்றேன்...தொடர்கின்றேன்.

    அன்புடன்
    த.ரூபன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.