அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2

முதல் பகுதியில், மெய்யெழுத்து இல்லாத அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் உள்ளவற்றைப் பிரித்துக் கணக்கிட்டோம்... இன்றைய பதிவில் மெய்யெழுத்துடன் கூடிய அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் /+ நெடில் உள்ளவற்றைப் பிரித்துக் கணக்கிடப் போகிறோம்...
தொகுப்பு ①: அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில்
தொகுப்பு ②: அதிகார எழுத்துக்கள் அனைத்தும் நெடில்
தொகுப்பு ③: அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் + நெடில்
தொகுப்பு ④: தொகுப்பு ③ போக மீதி அதிகாரங்கள் - மற்றவை என்று தலைப்பு வைத்துக் கொள்வோம்...
முதல் பகுதியில் செய்ததது போலவே ஒவ்வொரு தொகுப்பிற்கும் அதே 10 கணக்குகளையும் செய்துவிட்டு, ஒவ்வொன்றையும் ஒப்பீடு செய்து, வழக்கம்போல் திருக்குறள் எண் ஏழு (7) எங்கெல்லாம் எப்படியெல்லாம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் காணப்போகிறோம்... மேற்சொன்ன நான்கு தொகுப்புகளில், தொகுப்பு ② அதிகார எழுத்துக்கள் அனைத்தும் நெடில் : கணக்கில் 5 அதிகாரங்கள் மட்டும் வருவதால், அதாவது சிறிய அட்டவணை என்பதால், அதன் கணக்கியலை Excel கோப்பில் உள்ளதுபோல் தருகிறேன்...
தொகுப்பு ② அனைத்து அதிகார எழுத்துக்களும் நெடில் | |||
5 | 5 | 3 | 15 |
8 | 13 | ||
5 | 2 | 12 | |
7 | |||
23 | ஈ | கை | ஈகை |
30 | வா | மை | வாய்மை |
38 | ஊ | ழ் | ஊழ் |
84 | பே | மை | பேதைமை |
23 | சா | மை | சான்றாண்மை |
அனைத்து அதிகார எழுத்துக்களும் நெடில் உள்ள மேற்காணும் அட்டவணையில், திருக்குறள் எண் ஏழு (7) வருவதையும் காணலாம்... மற்ற அட்டவணைகளின் கணக்குகளைச் செய்து, ஒப்பிட்டுப் பார்த்ததையும் ஒவ்வொன்றாக தருகிறேன்...
தொகுப்பு ① அனைத்து அதிகார எழுத்துக்களும் குறில் | தொகுப்பு ② அனைத்து அதிகார எழுத்துக்களும் நெடில் | ||||||
38 | 18 | 9 | 270 | 5 | 5 | 3 | 15 |
25 | 66 | 8 | 13 | ||||
8 | 5 | 14 | 5 | 2 | 12 | ||
10 | 7 |
மேற்படி அனைத்து அதிகார எழுத்துக்களும் குறில் மற்றும் நெடில் உள்ள தொகுப்புகளில், பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கையை கூட்டினால், 66+13=79=7+9=16=1+6= திருக்குறள் எண் ஏழு (7) வருகிறது...
தொகுப்பு ③ அனைத்து அதிகார எழுத்துக்களும் குறில்+நெடில் | தொகுப்பு ④ மற்றவை (133-43=90) | ||||||
43 | 23 | 11 | 285 | 90 | 36 | 13 | 568 |
32 | 75 | 44 | 109 | ||||
13 | 5 | 22 | 13 | 6 | 20 | ||
15 | 14 |
மேற்காணும் தொகுப்பு ③ல் முதல் + கடையில் மட்டும் 23+11=34=3+4= திருக்குறள் எண் ஏழு (7) வருவதைக் காணலாம்... ஆனால், இரண்டு தொகுப்பிற்கும் எவ்வித கட்டமைப்பும் இல்லை... அதனால் ஒப்பீட்டு பார்ப்பதையும் சற்றே மாற்றிப் பார்ப்போம் :-
தொகுப்பு ① அனைத்து அதிகார எழுத்துக்களும் குறில் | தொகுப்பு ④ மற்றவை | ||||||
38 | 18 | 9 | 270 | 90 | 36 | 13 | 568 |
25 | 66 | 44 | 109 | ||||
8 | 5 | 14 | 13 | 6 | 20 | ||
10 | 14 |
தொகுப்பு ② அனைத்து அதிகார எழுத்துக்களும் நெடில் | தொகுப்பு ④ மற்றவை | ||||||
5 | 5 | 3 | 15 | 90 | 36 | 13 | 568 |
8 | 13 | 44 | 109 | ||||
5 | 2 | 12 | 13 | 6 | 20 | ||
7 | 14 |
மேற்படி, மற்றவை தொகுப்போடு குறில் தொகுப்பு தனியாகவும், நெடில் தொகுப்பு தனியாகவும் கட்டமைப்பு உள்ளது... மேலும் முதல் பகுதியில் செய்தது போலவே அறம், பொருள், காமம் என முப்பாலாகவும் பிரித்தும் கணக்கிட்டுப் பார்த்து விடுவோம்...
தொகுப்பு ③ குறில்+நெடில் 43 | |||||||||||
அறம் | பொருள் | காமம் | |||||||||
10 | 10 | 6 | 51 | 17 | 11 | 8 | 85 | 16 | 4 | 4 | 149 |
16 | 33 | 19 | 45 | 13 | 53 | ||||||
10 | 4 | 23 | 8 | 4 | 28 | 3 | 3 | 19 | |||
14 | 12 | 7 |
மேற்காணும் அட்டவணையில் முப்பாலிலும் அதிகாரங்களில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணிக்கையைக் கூட்டினால், 23+28+19=70=7+0= திருக்குறள் எண் ஏழு (7) வரும்... இதே போன்று முப்பால் வாரியாக பயன்படுத்திய முதலெழுத்து மற்றும் கடையெழுத்து எண்ணிக்கைகளையும் கூட்டினால், 10+6+11+8+4+4=43=4+3= திருக்குறள் எண் ஏழு (7) வரும்... மேலும் :
தொகுப்பு ④ மற்றவை 90 | |||||||||||
அறம் | பொருள் | காமம் | |||||||||
28 | 18 | 7 | 176 | 53 | 31 | 12 | 312 | 9 | 8 | 3 | 80 |
24 | 75 | 38 | 94 | 11 | 43 | ||||||
12 | 4 | 35 | 20 | 5 | 33 | 7 | 2 | 26 | |||
15 | 19 | 9 |
மேற்காணும் அட்டவணையில் : 18+7+31+12+8+3=79=7+9=16=1+6=7 ഽ 15+19+9=43=4+3=7 ഽ 12+4+7+2=25=2+5=7 ഽ 20+5+7+2=34=3+4=7
மெய்யெழுத்து இல்லாத அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் உள்ளவற்றைப் பிரித்துக் கணக்கிட்டாலும், மெய்யெழுத்து உள்ள அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் உள்ளவற்றைப் பிரித்துக் கணக்கிட்டாலும், திருக்குறள் கட்டமைப்பான ஏழு (7) உள்ளது என்பதை அறிகிறோம்... நன்றி...
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
அருமையான ஆராய்ச்சி. உங்கள் 'விடா முயற்சி' யை பாராட்டுகிறேன்.
பதிலளிநீக்குதிருக்குறள் கட்டமைப்பான ஏழு(7) எப்படி பிரித்தாலும் வரும் என்பதை அறிந்து எங்களுக்கு சொன்னதற்கு நன்றி தன்பாலன்.
பதிலளிநீக்குபள்ளி பிள்ளைகளுக்கு உதவும். திருக்குறளை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு, முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்து கொண்டு இருப்பவர்களுக்கும் உதவும் உங்கள் பதிவுகள்.
உங்கள் ஆய்வுகளை ஆவணபடுத்துங்கள்.
தங்களது ஆய்வு சிறப்பு ஜி தொடரட்டும்....
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தங்களின் திருக்குறள் பற்றிய ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், எல்லாமே சிறப்பாக உள்ளது. 7 எண்ணுடன் அனைத்து குறள்களையும் கணக்கியலோடு வகைப்படுத்தி, உறுதிப்படுத்துவது சிறப்பான முயற்சி.. உங்கள் அளவுக்கு படித்துணர எங்களுக்கு திறமைகள் இல்லையென்றுதான் நான் நினைக்கிறேன். உங்கள் அசாத்தியமான திறமைகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
டிடி இது கிட்டத்தட்ட கட்டம் போட்டு எண்களைச் சொல்லி எப்படிக் கூட்டினாலும் ஒரே எண் வரும் என்று கணக்கில் புதிர் உண்டு இல்லையா? அந்த எண்களைக் கண்டுபிடிக்கச் சொல்லி. அது போன்று இருக்கிறது. இதுவும் கணக்கியல் என்று நீங்கள் சொன்னதன் பொருள்! உங்கள் ஆராய்ச்சி வியக்க வைக்கிறது. ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உழைப்பிற்கும் வாழ்த்துகள் பாராட்டுகள் டிடி
பதிலளிநீக்குகீதா
தனப்பால்,
பதிலளிநீக்குதங்களை அடியேன் அறிந்துகொண்ட காலம் தொட்டு இன்றுவரை திருக்குறள்பால் தாங்கள் கொண்டிருக்கும் தீராதா காதலுக்கும் , தொய்வில்லா ஆழ்ந்த ஆராய்ச்சிக்கும், ஐயனின் அரும்பெரும் பொக்கிஷ படைப்பின்பால் தங்களுக்குள்ள பெறுமதிப்பிற்கும் தலை வணங்குகிறேன்.
மொழி ஆராய்ச்சி, மொழி வளர்ச்சி போன்ற பிரத்தியேக அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த பொறுப்பாளர்கள் கூட இதுபோன்ற ஆய்வுகளில் தங்களை முழு அர்ப்பணிப்போடு ஈடுபடுத்திக்கொள்வார்களா என்பது சந்தேகமே.
குறளில் 7 என்ற சூத்திர எண்ணின் மறைவினை வெளிக்கொணர்ந்து வெளிச்சம்போட்டு காட்டும் தங்களின் அறிவாற்றல் போற்றுதலுக்குரியது.
ஏதோ தலைப்பு , ஏதோ பதிவு என்று பதிவுகளின் எண்ணிக்கை கணக்கிற்காக எழுதிக்கொண்டிருக்கும் என்போன்ற ஒரு சில பதிவர்களின் மத்தியில் தவம் போல் தாங்கள் செய்துவரும் இந்த குறில் நெடில்களுள்ள எண் ஆராய்சி எனும் சீரிய பணி சிலிர்க்கவைக்கிறது.
தங்களின் இதுபோன்ற ஆராய்ச்சி முடிவுகள் வீணாக போய்விடக்கூடாது என்பதே எனது ஆதங்கம்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், தமிழ் வளர்ச்சிகழக முக்கியஸ்த்தர்களின் பார்வைக்கு தங்களின் ஆராய்சசி விவரங்கள் கொண்டு சேர்க்கப்படவேண்டும் என்பது எனது அவா.
வாழ்த்துக்கள் தனப்பால்.
அன்புடன்,
கோ.