🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 1

அனைவருக்கும் வணக்கம்... பதிவின் தலைப்புக்கேற்றவாறு 133 அதிகாரங்களையும் பிரித்துக் கொள்வோம்... குறில் / நெடில் எழுத்துக்கள் மட்டும் உள்ள அதிகாரங்களை தொகுப்பு ஒன்று எனவும், மீதமுள்ள அதிகாரங்களைத் தொகுப்பு இரண்டு எனவும் பிரித்துக் கணக்கிடுவோம்...


எவற்றையெல்லாம் கணக்கிட வேண்டும்...? என்பதை பிரித்தல் - தொகுத்தல் - கணக்கிடல் பதிவில் விளக்கங்கள் உள்ளது... குறில் மற்றும் நெடில் எழுத்துக்கள் மட்டும் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை 6 ஆக வருகிறது... அதன் கணக்கியலை Excel கோப்பில் உள்ளதுபோல் தருகிறேன்... சிறிய அட்டவணை என்பதால், எழுத்துக்களின் எண்ணிக்கை கணக்கை, சுளகு இல்லாமலேயே கண்களால் கணக்கிடலாம் :-

தொகுப்பு
அனைத்து
அதிகார
எழுத்துக்களும்
குறில் & நெடில்
66417
1015
6314
9
35துவுதுறவு
104வுஉழவு
106வுஇரவு
131புவிபுலவி
23கைஈகை
84பேமைபேதைமை

35. துறவு, 104. உழவு, 106. இரவு, 131. புலவி, ஆகிய நான்கு (4) அதிகாரங்களின் அனைத்து எழுத்துக்களும் குறில் எழுத்துக்களாகவும், 23. ஈகை, 84. பேதைமை ஆகிய இரண்டு (2) அதிகாரங்களின் அனைத்து எழுத்துக்களும் நெடில் எழுத்துக்களாகவும் உள்ளதைக் காணலாம்... ஆக மொத்தம் இங்கு 6 அதிகாரங்கள் போக மற்ற அதிகாரங்களின் எண்ணிக்கை 133-6=127 ஆகும்... இதைத் தொகுப்பு இரண்டு எனவும், இதன் கணக்கியலும் மேற்படி சொன்னதின் படியே செய்ய வேண்டும் :- மேற்காணும் தொகுப்பு அட்டவணை போன்று, அதிகார எண்கள், அதிகாரங்களின் முதலெழுத்து, கடையெழுத்து, மற்றும் அதிகாரங்களின் பெயர்கள் ஆகியவற்றை, கீழ்க்காணும் தொகுப்பு அட்டவணையில் கொடுக்காமல் அவற்றின் கணக்கை மட்டும் தந்துள்ளேன்...

தொகுப்பு
மற்ற
அதிகாரங்கள்
127
1273917836
51117
11819
15

இனி இரண்டு தொகுப்புகளையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்துக்கொண்டு, கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்பதை, குறிப்பாகத் திருக்குறள் எண் ஏழு (7) வருகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் :-

தொகுப்பு தொகுப்பு
66417 1273917836
 10 15  51 117
6314 11819
9 15

மேற்படி அட்டவணையில், தொகுப்பு ஒன்றில், அதிகாரங்களில் பயன்படுத்திய முதல் + கடை எழுத்துக்களின் எண்ணிக்கையும் ( 10 ), தொகுப்பு இரண்டில், அதிகாரங்களில் பயன்படுத்திய முதல் + கடை எழுத்துக்களின் எண்ணிக்கையும் ( 51 ), கூட்டினால்  10 + 51 =61=6+1= திருக்குறள் எண் ஏழு (7) வருகிறது...

மேற்கண்ட இரண்டு தொகுப்புகளையும், அறம், பொருள், காமம் என முப்பாலாகப் பிரித்தும் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்... எடுத்துக்காட்டாக மேலே ஆறு (6) அதிகாரங்கள் கொண்ட தொகுப்பு () ஒன்றை, அறம், பொருள், காமம் என்று மூன்று தொகுப்பாகப் பிரிக்கும் போது, அறத்துப்பால் 2 அதிகாரங்கள், பொருட்பால் 3 அதிகாரங்கள், காமத்துப்பால் 1 அதிகாரம் எனப் பிரியும்... ஒவ்வொன்றிற்கும் மேற்செய்த பத்து கணக்குகளையும் செய்ய வேண்டும் :-

தொகுப்பு 6
அறம்பொருள்காமம்
2225 3329 1113
4 5  5 8  2 3 
225 317 113
4 4 2

மேற்காணும் அட்டவணையில் முப்பாலிலும் அதிகாரங்களில் பயன்படுத்திய எண்ணிக்கையைக் கூட்டினால்,  5 + 8 + 3 =16=1+6= திருக்குறள் எண் ஏழு (7) வரும்... இதே போன்று தொகுப்பு இரண்டையும் கணக்கிட்டால் :-

தொகுப்பு 127
அறம்பொருள்காமம்
36228222 673214388 24155226
29 81  41 97  20 72 
15432 19630 7427
18 20 11

மேற்காணும் அட்டவணையில் முப்பாலிலும் அதிகாரங்களில் பயன்படுத்திய எண்ணிக்கையைக் கூட்டினால், இங்கும்  81 + 97 + 72 =250=2+5+0= திருக்குறள் எண் ஏழு (7) வருவதைக் காணலாம்...

அடுத்த பகுதிக்கான சிந்தனை : இந்தப் பதிவின் தலைப்புக்கேற்றவாறு மிகச்சரியாக இரண்டு தொகுப்பாகப் பிரித்தது என்னவோ சரி தான்... ஆனாலும் சற்றே சிந்திக்க வேண்டும்... அதற்கான குறிப்பு : 30. வாய்மை, 38. ஊழ், 99. சான்றாண்மை - ஆகிய அதிகாரங்களும் நெடில் எழுத்துக்கள் உள்ள அதிகாரங்கள் தானே...? அப்படியென்றால் இந்தப்பதிவில் என்ன செய்துள்ளோம்...? அடுத்த பதிவில் என்ன செய்யப் போகின்றோம்...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.