🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



பிரித்தல் - தொகுத்தல் - கணக்கிடல்

அனைவருக்கும் வணக்கம்... அதிகாரங்களை நாம் நினைத்த கணக்கின்படி முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும்... பிரித்தவற்றைத் தொகுத்துக் கொள்ள வேண்டும்... மூன்றாவதாகக் கணக்கிட வேண்டும்...
எடுத்துக்காட்டாக 127-வது அதிகாரத்தின் பெயரானது அவர்வயின்விரும்பல் அல்ல; அவர்வயின்விதும்பல் என்பது தான் சரி என்பதை, இந்தப் பதிவில் கண்டோம்... அதில் 133 அதிகாரங்களை உயிரெழுத்தில் தொடங்கும் அதிகாரங்களாகவும், உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் அதிகாரங்களாகவும், இரு தொகுப்பாகப் பிரித்துக் கொண்டோம்... ஒவ்வொரு தொகுப்பிலும் அதிகார எண்களும், அதன் அதிகார பெயர்களும் இருக்கும்... அதிகார பெயர்களின் முதலெழுத்துக்களையும் கடையெழுத்துக்களையும் பிரித்துக் கொள்ளவேண்டும்... சரி, இவற்றில் எவற்றையெல்லாம் கணக்கிட வேண்டும்...? மொத்தம் மூன்று பகுதிகள், பத்து (10) கணக்குகள்... இதில் முதல் பகுதி மட்டும் தான் எண்கள்; அதாவது அதிகார எண்கள்; அதன் கூட்டல் கணக்கைச் செய்யப்போவதில்லை; அதன் எண்ணிக்கை (1) மட்டுமே கணக்கு... இரண்டாவது பகுதியானது (2) (3) (4), (5) (6) (7), முதலெழுத்து மற்றும் கடையெழுத்துக்களின் கணக்கு... மூன்றாவது பகுதியானது (8) (9) (10), அதிகார எழுத்துக்களின் கணக்கு... அனைத்து எழுத்துக்களையும் சுளகு மூலம் எளிதாகக் கணக்கிட முடியும்...

மேற்காணும் படத்தின் எண்களும் அதன் விளக்கமும் + அத்துடன் கீழ்க்காணும் தொகுப்பு உயிரெழுத்தில் தொடங்கும் அதிகாரங்களின் கணக்கை அடைப்புக்குறிக்குள் கொடுத்துள்ளேன்...

(1) தொகுப்பில் வரும் அதிகாரங்களின் எண்ணிக்கை (33)
(2) பயன்படுத்திய முதலெழுத்துக்களின் எண்ணிக்கை (7)
(3) பயன்படுத்திய கடையெழுத்துக்களின் எண்ணிக்கை (9)
(4) பயன்படுத்திய முதலெழுத்து + கடையெழுத்துக்களின் எண்ணிக்கை (16)
(5) ஒருமுறை பயன்படுத்திய முதலெழுத்துக்களின் எண்ணிக்கை (2)
(6) ஒருமுறை பயன்படுத்திய கடையெழுத்துக்களின் எண்ணிக்கை (5)
(7) ஒருமுறை பயன்படுத்திய முதலெழுத்து + கடையெழுத்துக்களின் எண்ணிக்கை (7)
(8) அதிகார எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை (194)
(9) அதிகாரங்களில் பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை (70)
(10) அதிகாரங்களில் ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை (30)
133 அதிகாரங்களைப் பிரித்து, தொகுத்து, கணக்கிட்ட அட்டவணை மீண்டும் ஒருமுறை இங்கே :-

தொகுப்பு
உயிரெழுத்தில்
தொடங்கும்
அதிகாரங்கள்
தொகுப்பு
உயிர்மெய்யெழுத்தில்
தொடங்கும்
அதிகாரங்கள்
3379194 1003515659
 16  70   45  108 
 2  5 30  12  6 18
7 15


மேற்படி அட்டவணையில் இரு தொகுப்புகளில், அதிகாரங்களில் பயன்படுத்திய முதல் + கடை எழுத்துக்களின் எண்ணிக்கைகளைக் கூட்டினால்  16 + 45 =61=6+1= திருக்குறள் எண் ஏழு (7) வருகிறது... இதே போன்று  2 + 5 + 12 + 6 =25=2+5=7 மற்றும் ஒவ்வொரு தொகுப்பின் அதிகாரங்களில் பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கையைக் கூட்டினாலும்,  70 + 108 =178=1+7+8=16=1+6= திருக்குறள் எண் ஏழு (7) வருகிறது...

மேற்காணும் இரு தொகுப்பையும், தொடங்கும் எழுத்து குறில் / நெடில் எனவும் பிரித்துக் கணக்கிடலாம்... அவ்வாறு கணக்கிட்டால், குறில் / நெடிலுக்கான கட்டமைப்பானது, ஒருமுறை பயன்படுத்திய முதல் + கடையெழுத்துக்களின் கூட்டுத்தொகையில் மட்டுமே, திருக்குறள் எண் ஏழு (7) வந்தாலும், excel கோப்பில் உள்ளதைப் போலவே இங்கும் பதிவு செய்கிறேன்...

தொகுப்பு
உயிரெழுத்தில்
தொடங்கும்
அதிகாரங்கள் 33
குறில்நெடில்
2848172 53322
1264 617
2428 2113
 4   3 


தொகுப்பு
உயிர்மெய்யெழுத்தில்
தொடங்கும்
அதிகாரங்கள் 100
குறில்நெடில்
812314559 19127100
3299 1957
5620 7233
 7   9 

உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் 100 அதிகாரங்களின் எழுத்துக்களை, வல்லினம், மெல்லினம், இடையினம், என்று பிரித்துப் பார்க்க நினைக்கிறோம்... அதன்படி பிரித்துத் தொகுத்துக் கணக்கிட்ட போது :-

தொகுப்பு
உயிர்மெய்யெழுத்தில்
தொடங்கும்
அதிகாரங்கள் 100
வல்லினம்மெல்லினம்இடையினம்
67 23  12 442 21 8  8 140 12 4  6 77
3198 1661 1044
 9  4 28  3  5 30  1  3 26
10 8 3

மேற்காணும் அட்டவணையில் பின்புறம் வண்ணமிடப்பட்டுள்ள எண்களைக் கூட்டினால், திருக்குறள் எண் ஏழு (7) வரும்... மேலும் இதனையும் குறில் / நெடில் என்று பிரித்துத் தொகுத்துக் கணக்கிட்ட போது :-

தொகுப்பு
உயிர்மெய்யெழுத்தில்
தொடங்கும்
அதிகாரங்கள் 81
வல்லினம்
குறில்
மெல்லினம்
குறில்
இடையினம்
குறில்
561511387 1657114 93558
 23 89  12 53  8 33
4528 1526 1318
5 6 3


தொகுப்பு
உயிர்மெய்யெழுத்தில்
தொடங்கும்
அதிகாரங்கள் 19
வல்லினம்
நெடில்
மெல்லினம்
நெடில்
இடையினம்
நெடில்
11 8  6 55 5 3  4 26 3 1  3 19
 14 40  7 20  4 17
5127 2316 1316
6 5 3


மேற்காணும் இரு அட்டவணைகளிலும் பின்புறம் வண்ணமிடப்பட்டுள்ள எண்களைக் கூட்டினால், திருக்குறள் எண் ஏழு (7) வரும்... மேலும் வல்லினம் குறில் / நெடில், மெல்லினம் குறில் / நெடில், இடையினம் குறில் / நெடில், ஆகிய ஆறு தொகுப்பையும், அறம், பொருள், இன்பம் என்று பிரித்தும் கணக்கிடலாம்... அவ்வாறு வல்லினம் குறில் 56 அதிகாரங்களைப் பிரிக்கும் போது, அதிகாரம் 90. பெரியாரைப்பிழையாமை / பெரியார்ப்பிழையாமை என்று கணக்கிடும் போது, அதிகாரங்களில் பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கையும், அதிகாரங்களில் ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கையும், வேறுபாடு வரும்... பிரித்த அறம் / பொருள் / இன்பம் ஆகியவற்றைக் கூட்டிப் பார்க்கும் போது, அதிகாரம் 90. பெரியாரைப்பிழையாமை என்று கணக்கிடும் போது, அதிகாரங்களில் பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை 368=3+6+8=17=1+7=8 ஆகவும், அதிகாரம் 90. பெரியார்ப்பிழையாமை என்று கணக்கிடும் போது, அதிகாரங்களில் பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை 367= 3+6+7=16=1+6=ஏழு (7) ஆகவும் வரும்... இதன்மூலம் அதிகாரம் 90. பெரியார்ப்பிழையாமை என்று எடுத்துக் கொள்ளலாம்... மேலும் செய்யப்போகும் ஒவ்வொரு கணக்கிலும், ரை? அல்லது ர்? என்பதையும் காண்போம்... நன்றி... தொடரும்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மீண்டும் பதிவுகள் கண்டு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  2. தனபாலன் வாழ்க வளமுடன்
    நலமா? மீண்டும் உங்களை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி.
    தொடர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. பிரித்தல், தொகுத்தல், கணக்கிடல் இவை எல்லாம் உங்களை போன்ற திற்மையனவர்களுக்கு தான் புரியும். உங்கள் உழைப்பு அளவிட முடியாத ஒன்று.

    பதிலளிநீக்கு
  4. மீண்டும் களம் புகுந்துள்ள டிடி க்கு வாழ்த்துகள். திருக்குறளை எழுத்து எழுத்துஆ ஆய்ந்தவர் எவருமில்லை. தொடரட்டும் குறள் சிறப்புகள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.