🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



பாவி...

அனைவருக்கும் வணக்கம்... முந்தைய பதிவில் "திரு" எனும் சொல்லைத் திருக்குறள் முழுவதிலும் தேடித் தொகுத்து கணக்கியல் செய்து, 920-ஆவது குறளில் வரும் "திரு" திருமகள் அல்ல, செல்வம் என்பதை உறுதி செய்தோம்... அந்த தொகுப்பின் முதல் குறளில், அழுக்காறு ஒரு கொடியனாக உருவகப்படுத்திக் காட்டப்படுவதை, முந்தைய பதிவை வாசிக்காதவர்கள், அடுத்து வரும் முதல் பத்தியைப் படித்து விடவும்...


168. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் : // அங்கே ஒருவனுக்கு மட்டும் செல்வம் குவிந்து கொண்டிருக்கிறதே; இங்கே ஒருவனுக்கு, எக்கேள்விற்கும் பதில் சொல்லும் ஆற்றல் பெற்ற கல்வியறிவு இருக்கிறதே; புகழுக்கு மேல் புகழ் வருகிறதே... ஐயகோ...! // இவை போன்றவற்றைக் கண்டு மனம் புழுங்கி, அவர்களைப் போல நன்கு முயன்று பெறத் தனக்கு ஆற்றல் இல்லாமையால் தோன்றுவது என்ன...? இதனால், சினம், பேராசை, களவு, பொய், பகை, சூது, சூழ்ச்சி, நிறைவின்மை, குறுக்கு வழிகள் போன்ற அனைத்துக் கீழ்மையான எண்ணங்களைக் கிளைத்தெழச் செய்து, எல்லாக் கேடுகளையும் செய்யத் தூண்டும்... மேலும் அவர்களுடைய செயல்களுக்குக் குற்றம் குறைகளைக் கற்பித்தும், களங்கப்படுத்தவும், அவர்களது முன்னேற்றத்தைத் தடை செய்து, அவர்களை முற்றிலுமாக அழிப்பதிலுமே தன் நேரத்தையும் ஆற்றலையும் சிலர் செலவழிப்பார்கள்... ஆனால், தன்னை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதில்லை....! இவ்வாறு கொடுஞ்செயல்கள் செய்பவனை பாவி என்று இழித்துக் கூறும் வழக்கம் உள்ளது... அந்தப்பாவிக்குப் பெயர் தான் அழுக்காறு, அதாவது பொறாமை எனும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தையும் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்திவிடும்... பாவி எனும் சொல் வேறு எங்கெங்கு வருகிறது...? அதற்கு முன் ஓர் அதிகாரத்தின் குறள்களின் குரல் சுருக்கமாக :
(1) இது போலத் துன்பம் தருவது எது என்று தேடவே வேண்டாம்; ஏனென்றால், இது போலக் கொடியது இதுவே...! (2) இந்த பாவி இல்லை இல்லை, மாபாவி இருக்கிறதே, எவ்வுலக இன்பத்தையும் இல்லாமல் செய்துவிடும்... (3) மிகவும் ஆசைப்படுவதால் வரும் இது, வழி வழியாக வந்த குடிச்சிறப்பையும், அதாவது ஒருவனின் முன்னோர்களது பெருமையும், நற்பெயரையும், அதனால் வரும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்... (4) நற்குடியில் பிறந்தாரிடத்தும், இது கெட்ட கெட்ட சொற்களைப் பேசுவதற்கு ஏதுவாகத் தளர்ச்சியை உண்டாக்குவதில் திறன் வாய்ந்தது...! நற்குடிப் பிறந்தோர்க்கான கூறுகள் : நகை, ஈகை, இகழாமை, இன்சொல்... (5) சிலருக்கு அவர்களின் வாழ்வு முடியும்வரை மனத்திற்கும், உடம்பிற்கும், தீமைகள் செய்யாது ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும்; இல்லையெனில் நோய்களின் தாயான நீரிழிவு நோய் தவறு - குறைபாடு / வளர்சிதை மாற்றக் கோளாறு, இதனால் மற்ற அனைத்து நோய்களையும் தானாக வரவைக்கும்...! அதுபோல் துன்பங்களின் பெருந்துன்பமாக முதலிடத்தில் இருக்கும் இதனிடம், பலவகைத் துன்பங்களும் வந்து சேரும்...!

(6) ஒருவனுக்கு இது வந்துவிட்டால், அவன் ஒரு பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு சொன்னாலும் உலகம் மதிப்பதில்லை; அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் எல்லோருக்கும் அமைவதில்லை... ஒருவனின் அறமில்லாத வாழ்வினால் வரும் இது, அவனைப் பெற்ற தாயாலும் "யார்ரா இவன்...?!" என்று வேற்று ஆள் போலப் பார்க்கப்படும் நிலை ஏற்படும்...! (8) "// பொழுதே, நன்றாக இரு...! நீ மாலைக்காலமே அல்ல; மணமான மகளிர் உயிரைக் குடிக்கும் வேல்...! // என்று மனைவி முன்பு சொன்னது சரி தான்... ஆனால் இதுவோ நேற்றைக்கு கொன்றது போன்று இது வந்தது; எப்படியோ சமாளித்து விட்டோம்; இன்றைக்கும் அது வந்துவிடுமோ...?" (9) "நெருப்பின் நடுவில் கூட படுத்து உறங்கி விடலாம்; ஆனால் ஐயோ இந்த தீயால் தூங்குவதற்கு சிறிதளவு கூடக் கண்ணை மூடி இருக்க முடியவில்லையே..." (10) இதனைத் தீர்க்க வாய்ப்பு எதுவும் இல்லாதவன், அதனை முழுமையாக விடாது இருப்பது, பிறருடைய உப்புக்கும் புளித்த நீர்க்கும் கேடேயாகும்... ஆமாம் இது என்பது...? மாபாவி தான்...! என்ன அதிகாரம்...? கருத்துரையில் 😎...🙏
திருக்குறள் எழுத்துக்களின் கட்டமைப்பு வகைகள் பதிவில், 133 அதிகாரங்களானது 853 எழுத்துக்களைக் கொண்டது; அதில் பயன்படுத்திய 120 எழுத்துக்களில், 21 எழுத்துக்கள் ஒருமுறை தான், 20 அதிகாரங்களில் வரும்... மேற்படி 20+113 என்று பிரித்த கணக்கியலிலும், அதையே முப்பால் வாரியாக பிரித்ததிலும், திருக்குறள் எண் ஏழு (7) வருவதைக் கண்டோம்... அங்குக் கணக்கு முழுவதுமாக முடிக்கவில்லை... அடுத்து மீதமுள்ள 113 அதிகாரங்களில் ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்கள் கொண்ட அதிகாரங்களைப் பிரிக்க வேண்டும் - 20 முறை...! முடிவில் 10 +  1  என்று அதிகாரங்கள் பிரியும்; அவற்றின் முதல், கடை, முதல்+கடை எழுத்துக்களின் எண்ணிக்கை, ஏழு (7) வரும்... அதில் வரும் ஒரு ( 1 ) அதிகாரத்தைப் பார்த்தால், அது வருகிறது... எது...? அந்த மாபாவி உள்ள - மேற்சொன்ன குறளின் குரல் மூலம் அல்லது கணக்கு செய்து நீங்கள் கண்டுபிடித்த அதே அதிகாரம் தான்...! தாத்தா இதை அனுபவித்தாரோ என்று தெரியாது... ஆனால் இதன் துன்பத்தை நன்கு அறிந்திருக்கிறார்... 😥😤😪
கள்ளுண்ணாமை : 923. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி : பெற்றெடுத்த தாயின் முன்பு மகன் கள்ளுண்ட மகிழ்வில் தோன்றுதல், தாய்க்கு வெறுப்பையும் துன்பத்தையும் தரும்... அப்படியிருக்கும்போது அவன், சான்றோர் எதிரில் குடித்துத் தோன்றினால் என்ன ஆகும்...? ഽ மகாபாரத "கதையில்" மரணப் படுக்கையிலிருந்துகொண்டு பாண்டவர்களுக்குப் பீஷ்மாச்சாரியார் கூறும் ஆபத்தர்மாவோடு, ஒரு குறளின்# குரல் ஒத்துப் போவதில்லை... விளைவு வழிமுறைகளை நியாயப்படுத்தாது என்பதில் தெளிவாக இருப்பார் தாத்தா; ஆபத்தர்மத்திற்கு அதாவது 'ஆபத்துக்குப் பாவமில்லை' என்பதற்கு எதிராகச் செயல் தூய்மையை வலியுறுத்துவார் ஐயன்... பெற்ற தாயின் பசி போக்க இயலாத நிலை ஏற்பட்டாலும், சான்றோரால் பழிக்கப்படும் தீய வினைகளை ஒருவன் செய்யாமல் இருப்பானாக..." என்கிறார் : வினைத்தூய்மை : 656.# ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை

மக்கட்பேறு : 69. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் : தன் மகனைப் பண்பு நிறைந்தவன் எனப் பிறர் புகழ்ந்து கூறக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதினும் பெரிது மகிழ்ந்த அந்த தாய், மேற்சொன்ன குறளின் குரல் வரிசை ஏழில், ஒரு தாய் தன் மகனை, "யார்ரா இவன்...?!" என்று வேற்று ஆள் போலப் பார்க்கப்படும் நிலை என்றால், அந்த பாவி ஒருபக்கம் இருக்கட்டும்; அந்த தாயின் அறவுணர்வைப் போல் போற்றத்தக்கது உலகில் எதுவுமில்லை... ഽ அதனால், இல்லாதவன் என்பதற்காகத் தீமைகள் செய்யாதே; செய்தால் இன்னும் மிகையாக இல்லாதவனாக ஆவாய் : தீவினையச்சம் : 205. இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலன்ஆகும் மற்றும் பெயர்த்து :

நண்பர்களே... அதிகாரம் என்னவென்று தெரிந்திருக்கும்... குறிப்பு : நமது ஔவை பாட்டியும் ഽ அறிவு, ஈகை, உயர்ச்சி, கல்வி, காமம், குலம், தவம், மானம், வலிமை, விடாமுயற்சி ഽ ஆகிய பத்தும் பறந்து விடும் என்று சொல்லியுள்ளார்... சரி, அந்த அதிகாரத்தில் வரும் இரண்டாவது குறள் : இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்... இந்த குறள் வரும் அதிகாரம் தான், அடுத்து வரும் மூன்று அதிகாரங்களுக்கும் பெரிதும் காரணமாக அமைகிறது...
முடிவாகச் சொற்களின் கட்டமைப்பில் திருக்குறள் உள்ளது என்பதற்கு வருவோமா...? இரண்டே குறள்களில் வரும் இந்த பாவி-யின் கட்டமைப்பிலும் திருக்குறள் எண்ணான ஏழு (7) வரும்...!
நன்றி...


புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. சிறப்பு. நல்ல ஆராய்ச்சி. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. குறளமுதம் அருமை..
    தங்களது உழைப்பு பாராட்டத்தக்கது..

    பதிலளிநீக்கு
  3. திருக்குறள் ஆராய்ச்சியும் விளக்கமும் அருமை ஐயா. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நல்ல ஆராய்ச்சி. குறள்களும் அதன் அர்த்தங்களும் மிக அருமை.
    வாழ்த்துகள்.

    நல்ல செயல்களை செய்ய வேண்டும் நல்லவனாக வாழ வேண்டும். அடுத்தவன் பொருளுக்கு ஆசை படக்கூடாது, தீமைகள் செய்யாமல் நல்லவை செய்து நலமுடன் வாழலாம்.

    பதிலளிநீக்கு
  5. குறள்க்ளும் பொருளும் மிகவும் சிறப்பு. இதில் ஈன்ற தாய்...அதைத் தவிர மற்றவை இன்று தெரிந்து கொண்டேண். பாவி, மாபாவி இவை எப்படி உங்கள் கணக்கியலுடன் இணைக்கப் போகிறீர்கள் என்று யோசித்துக் கொண்டே வரப்ப கடைசில பாவி - 7 என்று சொல்லியிருக்கீங்க.

    அதிகாரம் தீவினையச்சம்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிகாரம் என்னவென்று முடிவில் கொடுத்துள்ள குறள் மூலமும் எளிதில் அறியலாம்...!

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தீய செயல்களை ஒரு மனிதர் மனதால் ஒருபோதும் எண்ணாமலும், செய்யாமலும் இருப்பதே சிறப்பு என சுட்டிக் காட்டிய குறள்களும், அதன் விளக்கங்களுமாக பதிவு அருமை. தங்கள் குறளாய்வுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடரட்டும் தங்கள் ஆய்வு பணி. நாங்களும் தொடர்ந்து வருகிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் உழைப்பின் பலன் பதிவில் நன்கு தெரிகிறது

    பதிலளிநீக்கு
  8. வழக்கம்போல் உங்கள் குறள் ஆராச்சி அருமை.

    பதிலளிநீக்கு
  9. வாழ்வியலில் வள்ளுவம்
    வகைவகையாய் வழிகாட்டுவதை
    வடிக்கும் தனபாலுக்கு
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. தனபாலன் இல்லாத வலைத்தளம் பாழடைந்த வீடு போல. உங்கள் பதிவை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. நானும் மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளேன். இதோ எனது பதிவு: https://newsigaram.blogspot.com/2024/01/02.html

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.