🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திருக்குறள் எழுத்துக்களின் கட்டமைப்பு வகைகள்...

அனைவருக்கும் வணக்கம்... திருக்குறளின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த எண்ணான ஏழு (7), எவ்வாறெல்லாம் கட்டமைக்கப்பட்டு, எந்தெந்த வகையிலெல்லாம் வரும் என்பதையும் அறிந்து கொள்வோம்...
"திருக்குறள் எழுத்துக்களின் கணக்கிற்கு ஏதேனும் ஒரு அடிப்படை இருக்க வேண்டும்; அது என்னவாக இருக்கும்...?" என்று பல ஆண்டுகள் சிந்தித்து இருந்திருக்கிறேன்... மனதில் தோன்றிய ஒரு சின்ன பொறி தான், முதல், (➕) கடை, எழுத்துக்களின் எண்ணிக்கை கணக்கு...! அவற்றில் முப்பால் கட்டமைப்பான ஏழு (7) வரும் வகைகளைக் காண்போம் :-

கணக்கிட
வேண்டியது
வகைகள்எழுத்துக்கள்
முதல்கடைமுதல்

கடை
பயன்படுத்திய 
எழுத்துக்கள் 
மற்றும் 
ஒருமுறை 
பயன்படுத்திய 
எழுத்துக்கள் 
வகை 1 257
வகை 2 25
வகை 3 7

கணக்கின் விளக்கம் : எடுத்துக்காட்டாக 133 அதிகாரங்களின் முதலெழுத்துக்களை மட்டும் கணக்கிற்கு எடுத்துக் கொள்வோம்... அவற்றில் முதலில் கணக்கிட வேண்டியது பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கையும், அடுத்து ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கையும் ஆகும்... இதேபோன்று கடையெழுத்துக்களையும், முதல் ➕ கடை எழுத்துக்களைக் கணக்கிட வேண்டும்... ஆக நாம் கணக்கிடுவது மொத்தம் ஆறு (6) முறை என்பதால், ஆறு (6) வெவ்வேறு எண்கள் கிடைக்கும்... மேலும் நாம் கணக்கிடப் போகும் அதிகாரங்களின் மொத்த எண்ணிக்கை, அவற்றின் மொத்த எழுத்துக்கள், பயன்படுத்திய எழுத்துக்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்கள் ஆகியவை ஆகும்... மேல் அட்டவணையில் கொடுத்திருக்கும் எண்கள் ஒரு எடுத்துக்காட்டிற்கு மட்டுமே...! வகைகளின் விளக்கம் : வகை 1: முதலும் கடையும் நாம் கூட்டினால் ஏழு (7) வரும்... அத்துடன் முதலும் கடையும் சேர்த்துக் கணக்கிடும் போதும் ஏழு (7) வரும்... வகை 2: முதலும் கடையும் நாம் கூட்டினால் மட்டும் ஏழு (7) வரும்... வகை 3: முதலும் கடையும் சேர்த்துக் கணக்கிடும் போது மட்டும் ஏழு (7) வரும்... இதேபோன்று இரண்டு தொகுப்பை ஒப்பிட்டுச் செய்த கணக்கை முந்தைய பதிவில் செய்துள்ளோம்...

குறள்களில் எண்ணற்ற பாட வேறுபாடுகள் இருப்பதால், "குறள்களின் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை இது தான்" என்று உறுதியாகச் சொல்ல முடியாது... ஆனால் அதிகாரங்களின் எழுத்துக்களை நாம் கணக்கிட்டு உள்ளதால், அதன் கணக்கிடும் முறைகள் கூடும்... இதோ ஓர் அட்டவணை :-


( அடைப்புக்குறிக்குள் மூல எண் மற்றும் வண்ணம் கொண்ட அனைத்து எண்களும் பகா எண்கள் )

133 அதிகாரங்கள்எண்ணிக்கை
மொத்த எழுத்துக்கள் 
853  (7) 
பயன்படுத்திய எழுத்துக்கள் 
120  (3) 
முதல் ➕ கடையில்
பயன்படுத்திய எழுத்துக்கள் 
53  (8) 
முதல் ➕ கடை தவிர எழுத்துக்கள் 
67  (4) 
ஒருமுறை 
பயன்படுத்திய எழுத்துக்கள் 

21  (3) 

விளக்கம் : தமிழ் எழுத்துக்கள் 247-ல், 120 எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றை 853 எழுத்துக்கள் வருமாறு 133 அதிகாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது... சரி, ஒருமுறை பயன்படுத்தியதாக 21 எழுத்துக்கள் வருகிறது என்றால்...? 21 அதிகாரங்கள்... தவறு...! ஒரு அதிகாரத்தில், இரண்டு எழுத்துக்கள் ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்கள் கணக்கில் வருகிறது : நீத்தார்பெருமை...! இந்த 20 அதிகாரங்களை முப்பால் வாரியாக பிரித்து, ஒருமுறை வரும் எழுத்துக்களைக் கணக்கிட்டால் 27+34+27=88=(7) வருகிறது...!

முப்பாலின் கணக்கு : Excel கோப்பில் உள்ளது போல் :-

முப்பால்
1334217853
53120
14721
16
1துகடவுள்வாழ்த்து
2வாபுவான்சிறப்பு
........
........
133கைஊடலுவகை

நண்பர்களே... முந்தைய பதிவுகளிலும், இனிவரும் பதிவுகளிலும், அட்டவணைகளில் சிறிய எழுத்துக்களை வாசிக்கும் போது காணலாம்... அதற்குக் காரணம் பதிவுகள் அதிகம் கைப்பேசியில் வாசிக்கப்படுவதால், அதற்கேற்ப தான் இந்த சிறிய எழுத்துக்களாக மாற்றம்... அப்புறம் இன்னொரு தகவல்: எழுத எழுத எண்ணங்கள் மேம்படும் என்பார்கள்... ஆனால் கணக்கை எல்லாம் எழுத முடியாது என்று என்றிருந்தேன்... இப்போது ஓரளவு எழுதி வருகிறேன்... இவற்றையெல்லாம் யாரேனும் செயல்படுத்தினால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும் என்பதையும் உறுதியாக நம்புகிறேன்...! கணக்கை எழுதும்போது, புதிய கணக்கைச் செய்வது, இது இரண்டாவது முறை... நன்றி...

133 அதிகாரங்களில் ஒருமுறை வந்த
21 எழுத்துக்கள் (1)
இங்கு ஒருமுறை வந்தவை (2)
முப்பால் வாரியாக கணக்கு (3)


வ.
எண்
(1)அதிகாரங்கள்(2)(3)
1நீ, தா
 3.நீத்தார்பெருமை
315
2தோ
 9.விருந்தோம்பல்
1
3
 18.வெஃகாமை
3
4
 23.கை
1
5வொ
 28.கூடாவொழுக்கம்
3
6னா
 32.ன்னாசெய்யாமை
4
7கே
 42.கேள்வி
128
8ழா
 53.சுற்றந்தழால்
4
9ணோ
 58.கண்ணோட்டம்
1
10
 62.ள்வினையுடைமை
4
11தொ
 70.ன்னரைச்சேர்ந்தொழுகல் 
6
12பா
 80.ட்பாராய்தல்
3
13தை
 84.பேதைமை
2
14ணா
 93.கள்ளுண்ணாமை
2
15சூ
 94.சூது
2
16
 104.உழவு
3
17மி
 120.தனிப்படர்மிகுதி
518
18
 125.நெஞ்சொடுகிளத்தல்
6
19நு
 132.புலவிநுணுக்கம்
4
20லு
 133.லுவகை
3
மொத்தம்61 (7)

மொத்தமாக இங்குக் கணக்கிடும் போது 15+28+18=61 (7) வருகிறது...! சற்றுமுன் அதிகாரங்களை முப்பால் வாரியாக பிரித்து, ஒருமுறை வரும் எழுத்துக்களைக் கணக்கிடும்போது 27+34+27=88=(7) வந்தது...! தாத்தாவின் நுட்பத்தை நினைத்துப் பார்த்து வியக்கிறேன்...! ஒவ்வொரு எழுத்தையும் கணக்கிட்டே கட்டமைத்துள்ளார் என்று உறுதியாகச் சொல்லலாம்... தமிழ் எழுத்துக்களைக் கணக்காக மாற்றி முப்பாலைப் படைத்த தாத்தாவின் உத்திகள் என்னென்னவோ....?! எத்தனையோ...?! கணக்கிடச் சுளகு இருக்கக் கவலையில்லை... ஆனால், நம் மகிழ்ச்சி பெருக்கில் சலிப்போ, சோர்வோ, சோம்பலோ, வந்துவிடக்கூடாது... முருகா... நன்றி...

533. பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வியக்க வைக்கும் சிறப்பான பணி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. முதல் விளக்கங்கள் இப்போது புரியத் தொடங்கியிருக்கின்றன. கடைசியில் சொன்னது அந்த அட்டவணை புரியவில்லை. நீங்கள் சொல்லியிருப்பது போல் செயல்முறைப்படுத்திப் பார்த்தால் தான் இன்னும் புரியும் என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு பயிற்சி பதிவுகளில், 1330 குறள்களையும் சுளகுவில்இட்டு, ஓரெழுத்து பொத்தானை சொடுக்கினால், முடிவில் ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்கள் ங, ளீ என்று இரண்டு எழுத்துக்கள் வந்தது... அதேபோன்று :-

      133 அதிகாரங்களையும் சுளகுவில்இட்டு, ஓரெழுத்து பொத்தானைச் சொடுக்கினால், முடிவில் ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை 21 என்று காட்டும்... அதன் கணக்கியலைச் செய்துள்ளேன்...

      நீக்கு
  3. வழக்கம் போல் வியக்க வைக்கும் ஆராய்ச்சி

    பதிலளிநீக்கு
  4. மனதில் தோன்றிய சின்ன பொறி விருட்சமாக வளர்ந்து இருக்கிரது. அருமையான் கணக்கியல்.
    எல்லாமே கணக்குத்தான் என்பது போல தாத்தா எல்லாம் கணக்காய் செய்து இருக்கிறார்.
    அதை நீங்கள் அழகாய் சொல்லி தருகிறீர்கள்.

    உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. தங்களது ஆய்வு மேலும் சிறக்க வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சிறப்பான முறையில் திருக்குறள் பற்றி கணக்கியல் ஆராய்ச்சிகள் செய்து வருகிறீர்கள். தங்கள் முயற்சியில் வெற்றிகள் காண்பது குறித்து மகிழ்ச்சி. பாராட்டுக்கள். மேலும் திருக்குறள் வடிவமைப்பு கணக்கியலில் பல வெற்றிகளை தாங்கள் காண மனமார்ந்த வாழ்த்துகள். திறம்பட கூறிய பதிவுகள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுங்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக தங்கள் முயற்சி சிறந்து விளங்கட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வழக்கம் போல சிறப்பான பதிவு..

    இப்போது இதெல்லாம் தெரிந்து என்ன செய்வது,?..

    எனது பள்ளி நாட்களில் கிடைக்கவில்லையே..

    பதிலளிநீக்கு
  8. புரிந்து கொள்வதற்கு சற்று சிரமமாக இருக்கிறது.. முயற்சிக்கிறேன் தலைவரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைவரே... தொடர்ந்து வர வேண்டும்... ஒவ்வொரு தொகுப்பு பதிவிற்கும் அதன் தலைப்பில் வரிசை எண் உண்டு...

      நீக்கு
  9. எனக்கும் தான் ஐயா . இரண்டு மூன்று முறை படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிப்போக்கன் அவர்களுக்கு கூறிய மறுமொழியே தங்களுக்கும்... நன்றி ஐயா...

      நீக்கு
  10. வியக்க வைக்கும் ஆராய்ச்சி . நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.