முப்பாலின்படி அதிகார மொத்த எழுத்துக்கள்...
திருக்குறள் அதிகார மொத்த எழுத்துக்கள் 853 என்று சான்றுகளுடன் முந்தைய →பதிவில்← முடிவு செய்தோம்... அதில் "மாற்றம் செய்த இடத்தைத் தவிர மாறாத இரண்டு இடங்களில் எவ்வாறு உள்ளது...? அதென்ன இரண்டு இடம்...?" என்று முடித்திருந்தேன்... அதிகார பெயர்களை மாற்றம் செய்த இடம் எது...? காமத்துப்பால் ஆகும்... அவ்வளவே - சிறிய சிந்தனை...! சரி, அப்படியென்றால் மற்ற இரண்டு இடங்களில்...? இதோ :-
மொத்த எழுத்துக்கள் | |
---|---|
அறத்துப்பால் | 227 (2) |
பொருட்பால் | 397 (1) |
காமத்துப்பால் | 229 (4) |
மொத்தம் | 853 (7) |
அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அதிகார மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கைகள் பகா எண்களாகக் கட்டமைப்பு இருக்கும்போது, காமத்துப்பாலின் அதிகார மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை மட்டும் வேறாக இருக்க முடியாது என்று "எண்ணி"யதால் இந்த கணக்கியல்...! இவ்வாறு உறுதிப்படுத்தினால் மட்டும் போதுமா...? கூடாது; மேலும் சிந்திக்க வேண்டும்...! இதற்கு முந்தைய பதிவிற்கு →முந்தைய← பதிவைத் திறந்து வைத்துக் கொள்வோம்... அதில் "எந்த இரண்டு எழுத்துக்கள் மாறாது, மாறவும் கூடாது...?" என்று கேட்டிருந்தேன்... அது என்னவென்றால் :-
ஒவ்வொரு அதிகார பெயரின் முதலெழுத்தும் கடையெழுத்தும் ஆகும்... அங்குப் பழைய உரையாசிரியர்களை மட்டும் கவனிப்போம்... மணக்குடவரின் படி "பசப்புறுதல்" மற்றும் "வாய்மையுடைமை" அதிகாரங்களினாலும் கடையெழுத்து கணக்கு மாறாது... மற்ற ஐந்து அதிகார பெயர்கள் மாற்றத்தால் கடையெழுத்து கணக்கு மட்டும் மாறும்... முடிவாகப் பரிமேலழகரின் படி "மக்கட்பேறு" என்பதைப் "புதல்வரைப் பெறுதல்" என்று ஏற்றுக்கொண்டால், கடையெழுத்து கணக்கோடு முதலெழுத்து கணக்கும் மாறும்... ஆக இருவரின் மாற்றங்களின் படி எவ்வாறு கணக்கிட்டாலும், மேலே முப்பால் வாரியாக செய்த கணக்கு முழுவதும் தவறாகத்தான் வரும்... நாம் காமத்துப்பாலில் வரும் மூன்று அதிகாரங்களின் பெயர்களை மட்டும், காளிங்கர் தந்த சான்றுகளுடன் திருத்தம் செய்தோம்... அதனால் முதல் + கடையெழுத்து கணக்குகள் மாறாது...! (110. குறிப்பறிதல் → குறிப்புணர்தல், 111. புணர்ச்சிமகிழ்தல் → புணர்ச்சியின்மகிழ்தல், 118. கண்விதுப்பழிதல் → கண்விதுப்பழித்தல்)-
அதிகாரங்களின் மொத்த எழுத்துக்கள் 853 தான் என்பதை மேலும் உறுதிப்படுத்த மீண்டும் ஒரு சிந்தனை... மனக்கணக்கு : 133 அதிகாரங்களின் முதலெழுத்து மற்றும் கடையெழுத்து மொத்தம் 133 x 2 = 266 ஆகும்... அதிகாரங்களின் மொத்த எழுத்துக்கள் 853-யை கழித்தால் வருவது (853-266=)587 எனும் பகா எண்ணாகும்...! அடடே...! முப்பாலின் படி பிரித்துப்பார்த்தால் இவ்வாறு பகா எண் வருமா...? அதற்கு மனக்கணக்கை விட வேகமாகச் செயல்படும் சுளகு தம்பி உதவுவார்...!
முதலெழுத்து கடையெழுத்து தவிர | |
---|---|
அறத்துப்பால் | 151 |
பொருட்பால் | 257 |
காமத்துப்பால் | 179 |
மொத்தம் | 587 |
① : மொத்த எழுத்துக்கள்
② : முதல் & கடையெழுத்துக்கள்
③ : ② தவிர
அறத்துப்பால் | 227 (2) | 76 (4) | 151 (7) |
பொருட்பால் | 397 (1) | 140 (5) | 257 (5) |
காமத்துப்பால் | 229 (4) | 50 (5) | 179 (8) |
மொத்தம் | 853 (7) | 266 (5) | 587 (2) |
அதிகாரங்களைப் பொறுத்தமட்டில் முப்பால் வாரியாக பிரித்தாலும், அதிகாரங்களின் முதல் + கடை எழுத்துக்களைத் தவிர்த்து, முப்பால் வாரியாக பிரித்தாலும் வரும் எண்கள், பகா எண்களாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது... இதனால் திருக்குறள் அதிகாரங்களின் ஒவ்வொரு எழுத்தும் கணக்கிட்டே வைக்கப்பட்டுள்ளது... ஆனாலும் மனம் ஏனோ மேலும் இதை ஆய்வு செய்யவேண்டும் என்றே உள்ளுணர்வு கூறுகிறது... "மனத்துக்கண் மாசிலன் ஆதல்" என்று சொன்னவரின் நூலில் மாசு இருக்கக்கூடாது அல்லவா...? அதிலும் ஏழாவது அதிகாரம் மக்கட்பேறா...? அல்லது புதல்வரைப்பெறுதலா...? என்பதே மிக மிக முக்கியமாகும்... அதைத் தீர்வு செய்வது, இதுவரை ஆய்வு செய்யாத முதலெழுத்து மற்றும் கடையெழுத்து கணக்குகள்... அடுத்த பதிவில் செய்வோம்... நன்றி...
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
தொடர்கிறேன். அந்த "முந்தைய" 3D போல முன்னால் வந்து செல்வது அழகு.
பதிலளிநீக்குபுரிந்து கொள்வது சற்று சிரமமாக இருக்கிறது டிடி. மீண்டும் வாசித்தும் கூட. என் அறிவு அவ்வளவுதான் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குகீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது போல எழுத்துக்களோடு இணைந்த எண்ணும் என்றபடிக்கு, நீங்கள் குறள் கொண்டு தரும் பதிவுகள் மிக அருமையாக உள்ளது. உங்கள் ஆராய்ச்சிகள், அவற்றின் திறன்கள் வியக்க வைக்கிறது. உங்களின் அறிவுத்திறன் நிரம்பிய திறமைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்கிறேன்.நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
திருக்குறள் வாழ்நாள் ஆய்வு பதிவு ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது.தொழில் நுட்ப குறியீடுகள் அருமை.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
பதிவு சிறப்பு தொடர்ந்து வருகிறேன் ஜி
பதிலளிநீக்குஉங்கள் ஆய்வு ஒவ்வொன்றும் புதுமை. நன்றி ஐயா
பதிலளிநீக்குசிறப்பான தொகுப்பு.. புத்தகமாக இருந்தால் இத்தனை வித்தகம் புரியாது..
பதிலளிநீக்குதங்கள் உழைப்பு வாழ்க..