🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திருக்குறள் அதிகார மொத்த எழுத்துக்கள்: 849 ✖

அனைவருக்கும் வணக்கம்... முப்பால் எழுத்துக்களின் எண்ணிக்கை கணக்கை மூன்று (3) பகுதிகளாக பிரித்துக்கொள்வோம்... ① அதிகாரங்கள், ② குறள்கள் ③ அதிகாரங்களும் குறள்களும்... இன்று முன்னோட்டமாக அதிகாரம் :-


திருக்குறளுக்கு உரை எழுதிய மணக்குடவர், தருமர், தாமத்தர், நச்சர், மல்லர், திருமலையர், பரிதியார், பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர், ஆகிய பழைய உரையாசிரியர்கள் பத்துப் பேரும், திருக்குறளின் முதல் அதிகாரத்தின் பெயர் "கடவுள் வாழ்த்து" என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை... ஆனால் அதன்பின் :

புலவர் குழந்தையார் → இறைநலம் ഽ புலவர் கா.அப்பாத்துரை → இறைவாழ்த்து ഽ தேவநேயப் பாவாணர் → முதற்பகவன் வழுத்து ഽ வ.சுப.மாணிக்கனார் → ஆதிபகவன் வாழ்த்து ഽ பாவலரேறு பெருஞ்சித்திரனார் → அறமுதல் உணர்தல் ഽ இரா.இளங்குமரனார் → இறைவணக்கம்

23. ஈகை → ஈகையுடைமை
24. புகழ் → புகழுடைமை
27. தவம் → தவமுடைமை
30. வாய்மை → வாய்மையுடைமை
35. துறவு → துறவுடைமை
96. குடிமை → குடி
119.பசப்புறுபருவரல் → பசப்புறுதல்

90. பெரியாரைப்பிழையாமை → பெரியார்ப்பிழையாமை
110. குறிப்பறிதல் → குறிப்புணர்தல்
111. புணர்ச்சி மகிழ்தல் → புணர்ச்சியின் மகிழ்தல்
118. கண்விதுப்பழிதல் → கண்விதுப்பழித்தல்
127. அவர்வயின்விதும்பல் → அவர்வயின்விரும்பல்

7. மக்கட்பேறு → புதல்வரைப் பெறுதல்
அனைத்து அதிகாரங்களில் தலைப் பெயராய் அமைத்த சொற்களை ஐயன் குறள்களில் கொண்டு கூறியுள்ளார் என்று சொல்வதற்கு இல்லை; முதல் அதிகாரத்தில் 'கடவுள்' என்னும் சொல்லோ, அல்லது 'வாழ்த்து' என்பதோ வரவே இல்லை... இதே போல் கூடாவொழுக்கம், வினைத்தூய்மை, பொழுதுகண்டிரங்கல் அதிகாரங்களும் உள்ளன... மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரத்தில் முதல் குறளில் 'வேந்தர்ச் சேர்ந்தொழுகுகல்' என்று வரும்; அடுத்த குறளில் 'மன்னர்' என்னும் சொல் இருமுறை வந்துள்ளது... ஆனால், 'சேர்ந்தொழுகல்' என்பது 'மன்னர்' என்பதோடு சேர்ந்து வரவில்லை... இதற்குப் பின் உள்ள எட்டு குறள்களிலும் வேந்தர், மன்னர் என்னும் சொற்களே வரவில்லை...! இதனால் அதிகாரத்தின் தலைப் பெயராய் வரும் சொல்-தொடர் அந்தந்த குறள்களில் தவறாது வரும் என்று சொல்வதற்கில்லை... அதிகாரத் தலைப்பு அனைவருக்கும் எளிதில் புரிந்து விளங்கும் வகையில் ஐயன் அமைத்துள்ளார் என்று கருத வேண்டும்... புதல்வரைப் பெறுதல் என்பதற்கான விளக்கத்தைப் பரிமேலழகர் சொல்வதை அறிந்தால், மக்கட்பேறு என்பதே சரியென உரைப்பார்கள்...! அதை அறிய நம் நண்பரின் மறுமொழிக்கே இங்குச் சொடுக்கி அறியலாம்...

நாம் கணக்கிற்கு வருவோம்... அதிகார எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை என்ன...?" என்று நினைக்கும் நேரத்திற்கும் குறைவாகச் சொல்லி விடலாம்... எப்படி...? முந்தைய திருக்குறள் கணக்கியல் பயிற்சி பதிவுகள்...! அதன்படி இப்போது உள்ளபடி அதிகார எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை வருவது 849 ஆகும்... இதன் மூல எண் 3 ஆகும்... திருக்குறளின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த எண்ணான 7 (ஏழு) வரவேண்டுமென்றால் அதிகார எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை 853 ஆக இருக்க வேண்டும்...?! 853 : எண் பகா எண் மட்டுமல்ல; அதன் மூல எண்ணும் ஏழு (7) ஆயிற்றே...! ம்... எந்தெந்த அதிகார பெயர் மாற்றத்தை ஏற்பது...? அதற்கான சான்றுகளும் விளக்கங்களும் உள்ளதா...? அதிகாரங்களின் கடையெழுத்தை மட்டும் எடுத்துக்கொண்டு முந்தைய பதிவுகளின் தொகுப்பு :
மை அதிகாரங்கள்

ஆல் அதிகாரங்கள்

மறைமொழி அதிகாரங்கள்

+ + =
+ + =
25 =
2 + 5 =

அதிகார பெயர்களில் இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும், எதையும் மாற்றாமல் இருந்துவிடுவோமா...? முன்பு 110. குறிப்பறிதல் அதிகாரத்தை 110. குறிப்புணர்தல் என அறிதலா? உணர்தலா? பதிவின் மூலம் முடிவு செய்து விட்டதால், அதிகார எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை 850 எனக் கூடும்... மேலும்...? சிறிது வேறுமாதிரி சிந்திப்போம் நண்பர்களே : ஒரேயொரு எழுத்து மாறினால் இதலுறல் குறள்களின் மொத்த எண்ணிக்கையே மாறும் என்பதை முன்பு அறிந்தோம்... அதேபோல் அதிகார மொத்த எழுத்துக்களின் சரியான எண்ணிக்கைக்குத் தீர்வாக எந்த இரண்டு எழுத்துக்கள் மாறாது, மாறவும் கூடாது...?

(குறிப்பு : மேலே →மறைமொழி← இணைப்பில், மறையாமல் மறைக்காமல் ஓரிடத்தில் அதிகாரங்கள் உள்ளன...!)
நண்பர்களே தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. நீண்ட நெடிய மட்டுமல்ல, ஆழமான ஆராய்ச்சியும் கூட...  தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. தங்களது தேடுதல் இன்னும் தொடரட்டும் ஜி

    பதிவின் புதுமை அசத்தல்.

    பதிலளிநீக்கு
  3. புதுமை, தெரிந்து கொள்ள இந்த பதிவில் நிறைய இருக்கிறது.
    அதிகாரத் தலைப்பு அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தான் அமைத்து இருக்கிறார் திருவள்ளுவர்.

    தொடரட்டும் உங்கள் ஆய்வு . தொடர்கிறேன்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருக்குறளைப் பற்றிய ஆராய்ச்சிகள் நன்றாக உள்ளது. உங்கள் பதிவின் மூலம் திருக்குறளின் பெருமைகளை உணர்கிறேன். உங்கள் ஆராய்ச்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. திருக்குறள் உரை பற்றிய புதிய செய்திகள். நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.