🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திருக்குறள் அதிகார மொத்த எழுத்துக்கள்: 853 ✔

அனைவருக்கும் வணக்கம்...


1972 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த்துறை திருக்குறள் ஆராய்ச்சிப் பகுதி வெளியீடு-4-ல் திருக்குறள் அமைப்பும் முறையும் எனும் கோப்பில் (pdf) கிடைத்த பக்கங்கள் : 159, 160, 169 :-
அதிகாரம் 110. குறிப்புணர்தல்

அதிகாரம் 111. புணர்ச்சியின்மகிழ்தல்

அதிகாரம் 118. கண்விதுப்பழித்தல்

( அடைப்புக்குறிக்குள் மூல எண் மற்றும் வண்ணம் கொண்ட அனைத்து எண்களும் பகா எண்கள் )

மேற்கண்டவாறு ஏற்றுக்கொண்ட காமத்துப்பாலின் மூன்று அதிகாரங்களின் பெயர் மாற்றத்தோடு கணக்கிடுவோம்... இதனால் நான்கு எழுத்துக்கள் கூடுதலாக வரும்... ஆனால் மொத்த அதிகாரங்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கையில் மாற்றம் வராது...! அதாவது தமிழ் எழுத்துக்கள் 247-ல், 120 (3) எழுத்துக்கள் மட்டுமே திருக்குறள் அதிகாரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன; மீதம் 127 (1) எழுத்துக்கள் பயன்படுத்தப்படவில்லை... மேலும் கீழ்க்கண்டவாறு அவற்றைப் பிரித்தும் பார்க்கலாம்... (7 உயிரெழுத்துக்கள் 33 முறை பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது போல் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும்...)

133 அதிகாரங்களின் மொத்த எழுத்துக்கள்
எழுத்துக்கள்
எண்ணிக்கை
முறைகள்
உயிர் 7 (7) 33 (6) 
மெய் 17 (8) 223 (7) 
உயிர்மெய் 95 (5) 596 (2) 
ஆய்தம் 1 (1) 1 (1) 
மொத்தம் 120 (3)  853 (7) 

இந்த மாற்றம் செய்ததை உறுதிப்படுத்தப் பல முறைகளில் முயன்றேன்... அவற்றில் "இவ்வாறு கணக்கிட்டால் எவ்வாறு இருக்கும்...?" என்று ஒரு எளிதான முறையைச் சிந்திக்கவேயில்லை...! அது என்னவென்றால், மாற்றம் செய்த இடத்தைத் தவிர, மாறாத இரண்டு இடங்களில் எவ்வாறு உள்ளது...? அதென்ன இரண்டு இடம்...? மனதில் தோன்றும் "எண்"ணங்களைக் கருத்துரையில் சொல்லலாம் நண்பர்களே... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. 'எண்'ணங்களை யாராவது சொன்னால் நானும் அறிய காத்திருக்கிறேன்!  தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பு தொடர்ந்து வருகிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    சிறந்த ஆராய்ச்சி. உங்கள் திறமையும், சரியான கவனிப்பும் திருக்குறள்ஆராய்ச்சியும் பதிவுகள்தோறும் வியக்க வைக்கிறது. உங்கள் எண்ணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. திருக்குறளை எண்ணினால் மட்டுமே நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து..

    திருக்குறளை எண்ணி ஆவது என்ன?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தைய பல பதிவுகளில் சொல்லி உள்ளேன் ஐயா... திருக்குறள் உலகின் ஒரேயொரு அறநூல் மட்டுமல்ல; எழுத்துக்களால் கட்டமைக்கப்பட்ட ஒரேயொரு கணக்கியல் நூலுமாகும்... திருக்குறள் கற்றலுடன் கணக்கையும் மேற்கொண்டால், எவ்வித ஐயமுமின்றி குறள்களைப் புரிந்து கொள்ள முடியும்...

      நீக்கு
  5. என் அறிவிற்கு எட்டவில்லை நண்பரே. ஒரு வேலை உங்களிடம் பேசினால் தான் தெரியும் போல் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு முந்தைய பதிவிற்குச் செல்லுங்கள் ஐயா... அதிகார எழுத்துக்களின் கணக்கு ஆரம்பமாகியுள்ளது... தொடர்ந்து வாருங்கள்... நன்றி...

      நீக்கு
  6. எண்ணினேன். அவ்வையார் பிற்காலத்தில் "எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும்" என்று கூறியதை அய்யன் அன்றே உணர்ந்திரூப்பாரோ?

    Jayakumar

    பதிலளிநீக்கு
  7. உங்களின் திருக்குறள் கணித ஆராய்ச்சி வியக்க வைக்கிறது. நன்றி

    பதிலளிநீக்கு
  8. எண்கள் பற்றிய விட்ட பதிவு இரண்டையும் வாசிக்க வேண்டும் வாசித்துவிடுகிறேன் டிடி. அப்பதான் புரியும் என்று நினைக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அருமையான ஆய்வு . படிக்கும் போது வியப்பை தருகிறது.இப்படி உங்களை போல ஆய்வு செய்ய இயலுமா மற்றவர்களால் என்று நினைக்க தோன்றுகிறது. ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.