திருக்குறள் அதிகார கடையெழுத்தும் முதலெழுத்தும் (1)
→பதிவு 1← தற்போது நடைமுறையிலுள்ள திருக்குறள் மொத்த அதிகார எழுத்துக்களின் எண்ணிக்கை 849 மற்றும் பாட வேறுபாடுகள்... ഽ →பதிவு 2← காமத்துப்பாலின் மூன்று அதிகாரத்தின் பெயர்கள் மட்டும் திருத்தம் செய்ததற்கான சான்றுகள் மற்றும் திருக்குறள் மொத்த அதிகார எழுத்துக்களின் எண்ணிக்கை 853-ஆக மாற்றம் பெற்றது... ഽ →பதிவு 3← அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பால் வாரியாக பிரித்துப் பார்த்து, திருக்குறள் மொத்த அதிகார எழுத்துக்களின் எண்ணிக்கை 853 (மூல எண் 7) சரியே என உறுதிப்படுத்தினோம்...
இன்று புதியதொரு கணக்கியல் தொடர் தொடங்குகிறது : திருக்குறள் கட்டமைப்பு - அதிகாரம் : "எங்கெல்லாம் எப்படியெல்லாம் கட்டமைப்புகள் உள்ளன; அவற்றின் கணக்கு 7 என்று முடிவடைகிறதா...?" என்பதே இந்த இரண்டாவது தொடரின் ஆய்வும் அவ்வாறே...! இனிமேலும் செய்யப்போகும் அனைத்து ஆய்வின் முடிவும் ஏழு (7) ஒன்றே...
ஒரேயொரு அதிகாரம் மட்டும் இன்றளவும் இணையம் உட்படப் பல இடங்களில், அதன் பெயர் மாற்றி மாற்றிப் பேசப்படுகிறது... அதுவே ஏழாவது அதிகாரம் : "மக்கட்பேறு" என்பதை "புதல்வரைப்பெறுதல்" என்று பரிமேலழகர் மாற்றினார்... "இது தவறு. அவருக்கு முன்பே புதல்வரைப்பெறுதல் என்று தான் இருந்தது" என்று சொல்பவர்களுக்கான ஒரு கேள்வி :- அவர் கொடுத்த அதன் அதிகார விளக்கம்...? அவரின் இலக்கியச் செழுமையும், சொற்களின் நுண்ணிய ஆய்வும் கொண்ட உரைவளம் சிறந்ததே... அதற்காக அவர் சார்ந்த சமயத்தின்படி திருக்குறளுக்கு உரை வகுத்ததை ஏற்க முடியாது... பல இடங்களில் அவரின் உரைகளை →நச்சுக் கருத்துக்கள்← என்றும் விளக்கமாகப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்... எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு... இப்போது கணக்கின் மூலம் காண்போம்...
ஏழு வெவ்வேறு எண்களின் கூட்டுத்தொகையும், அதன் மூல எண்ணும் :
① 7+64+74+75+78+92+120 = 510 = (5+1+0) =
இதில் முடிவில் வரும் மூல எண் என்பதை என்று வருமாறு, வண்ணம் கொண்ட 7 எண்களில் 2 எண்களை நீக்கவேண்டும்...!
// இரண்டு எண்களை நீக்கி, மிச்சத்தைக் கூடினால் 368 வருகிறது... 3+6+8 = 17 = 1+7 = வருகிறது...! ப்பூ இவ்வளவு தானே...! // என்று சின்னஞ்சிறு கணக்கைச் செய்தவர்களுக்கு நன்றி... அடடா...! 99% விடையைச் சொல்லிவிட்டேனே...! ஆனாலும், நீக்கிய அந்த இரண்டு எண்களை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்...! ஐயனின் அதிகார எண்ணும் எழுத்தும் நுட்பங்களை அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு உண்டு...!
திருக்குறள் அதிகாரங்களை கடையெழுத்தை மட்டும் கருத்தில் கொண்டு சொல்வதென்றால், என முடியும் அதிகாரங்கள்: 44, என முடியும் அதிகாரங்கள்: 44, 45 அதிகாரங்கள் என்று எளிதாக சொல்லிவிடலாம்... இவற்றில், மற்றவைகளில் உள்ள 45 அதிகாரங்களை பிரித்தால்,
ம் 10, கை 8, து 4, பு 4, வு 4, சி 3, வி 3, ழ் 2 ➖ ஆகிய 38 அதிகாரங்களும்,
று, சு, டு, ண், கு, ர், தி ➖ ஆகியவை கடையெழுத்தாக ஒரேயொரு முறை வரும் 7 அதிகாரங்களும்,
ஆக மொத்தம் "மற்றவை" 45 அதிகாரங்கள் ஆகும்...
சரி, இதேபோல் 133 அதிகாரங்களின் முதலெழுத்து கணக்கையும் பார்க்கவேண்டும் அல்லவா...?! சுளகு இருக்கச் சோம்பல் ஏன்...?! 42 வெவ்வேறு எழுத்துக்களில் அதிகாரங்களின் முதலெழுத்து தொடங்குகிறது, அவை இருக்கட்டும்; எனது எதிர்பார்ப்பு என்னவென்றால், ஒரேயொரு முறை முதலெழுத்தாகவும் 7 அதிகாரங்கள் வரவேண்டும் என்றொரு புல்லறிவு நினைப்பு...! அவ்வாறு வந்துவிட்டால், // 133 அதிகாரங்களில், ஒரேயொரு முறை கடையெழுத்தாக 7 அதிகாரங்களும், ஒரேயொரு முறை முதலெழுத்தாக 7 அதிகாரங்களும் வருகிறது... இதுவே திருக்குறள் அதிகாரங்களின் கட்டமைப்பு // என்று சொல்லி, இந்த புதிய தொடரை ஒரே பதிவிலேயே முடித்து விடலாம்... ஆனால் முதலெழுத்தாக 14 அதிகாரங்கள் அல்லவா ஒரேயொரு முறை வருகிறது...! முருகா...
வருவதையே நினைத்திருந்தால் தீர்வு எங்கும் இல்லை...!
ஒரேயொருமுறை வரும் (7) கடையெழுத்து அதிகாரங்கள் :
① 7.மக்கட்பேறு ഽ 64.அமைச்சு ഽ 74.நாடு ഽ 75.அரண் ഽ 78.படைச்செருக்கு ഽ 92.வரைவின்மகளிர் ഽ 120.தனிப்படர்மிகுதி
ஒரேயொருமுறை வரும் (14) முதலெழுத்து அதிகாரங்கள் :
② 3.நீத்தார்பெருமை ഽ 23.ஈகை ഽ 35.துறவு ഽ 36.மெய்யுணர்தல் ഽ 42.கேள்வி ഽ 46.சிற்றினஞ்சேராமை ഽ 53.சுற்றந்தழால் ഽ 62.ஆள்வினையுடைமை ഽ 65.சொல்வன்மை ഽ 69.தூது ഽ 84.பேதைமை ഽ 94.சூது ഽ 97.மானம் ഽ 99.சான்றாண்மை
எண்களின் கணக்கைச் செய்துபார்த்தால் என்ன...? "எண்ணென்ப" என்று எண்ணிற்கு தானே ஐயன் முதலிடம் கொடுத்துள்ளார்... எண்கள் இல்லாமல் உலக இயக்கம் எது...? ஆமாம் எண்களின் கணக்கிற்கு எழுத்துக்கள் எதற்கு...? அதனால் மேற்காணும் அதிகார எழுத்துக்களை எல்லாம் நீக்கிவிட்டு எண்களை மட்டும் எழுதிக்கொண்டு கணக்கிடுவோம் :-
① 7+64+74+75+78+92+120 = 510 = (5+1+0) =
(சற்று முன் எங்கேயோ பார்த்து, கணக்கிட்ட மாதிரி இருக்கிறதா ? பதிவின் ஆரம்பத்திலுள்ள கணக்கே தான்...!)
② 3+23+35+36+42+46+53+62+65+69+84+94+97+99 = 808 = 8+0+8 = 16 = (1+6) =
இதில் முடிவில் வரும் மூல எண் என்று வருவதை என்று வருமாறு, வண்ணம் கொண்ட 14 எண்களில் 3 எண்களை நீக்கவேண்டும்...! (இதையும் செய்தவர்களுக்கு நன்றி...) முடியாதவர்களுக்கு விளக்கம் தொடர்கிறது :-
"எண்ணென்ப" முடிந்து விட்டது; அடுத்ததாக "ஏனை எழுத்தென்ப" காண்போம்...! அதாவது எண்களின் கணக்கிற்கு அடுத்ததாக எழுத்துக்களின் கணக்கியல்...! பதிவின் ஆரம்பத்தில் ① கணக்கில் இரண்டு எண்களை நீக்கினோம் அல்லவா...? அந்த இரண்டு எண்களின் அதிகார பெயரில், வண்ணம் அடித்து பெரிய எழுத்தில் எழுதி வைத்திருக்கும் அதிகாரத்தின் கடையெழுத்தைச் சற்றே கூர்ந்து கவனித்துப் பார்ப்போம்... 133 அதிகாரங்களின் பெயர்களை எல்லாம் மனக்கண்ணில் கொண்டு வருவோம்... அவ்வாறு கொண்டுவந்து விட்டால், அந்தந்த கடையெழுத்தைப் பார்க்கும் போதே தாத்தாவின் அதிகார எழுத்துக்கள் கணக்கும் தெரியும், நுட்பமும் புரியும்... ②-வது முதலெழுத்து கணக்கும் அவ்வாறே...! இரண்டையும் முடித்து விட்டால், அடுத்த பதிவில் செய்யப்போகும் கணக்கு என்னவென்றும் சொல்வீர்கள் நண்பர்களே... நன்றி...
இது தான் கணக்கு, இது தான் நுட்பம் - என்பது வாசித்தால் தெரியாது...!
எழுத்தெல்லாம் மாறி வரும், அதுவே தீர்வு தரும்...!
மாறுவதைத் தெரிந்து கொண்டால் - நுட்பம் புரிந்து விடும்...✔
குறிப்பு : பதிவின் எந்த பத்தி "புரியவில்லை" என்றாலும், அதைக் குறித்து கருத்துரையில் கேட்டால், விளக்கமாக விவரித்துச் சொல்கிறேன்... நன்றி...
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
மாறுவதை தெரிந்து கொண்டால் - நுடபம் புரிந்து விடும். உண்மை.
பதிலளிநீக்குஅது புரிந்து கொள்ள கணக்கு புரியவேண்டும். கணக்கு என்றதும் பயம் வந்து விடுகிறது.
அடுத்த பதிவில் செய்யப்போகும் கணக்கை யார் சொல்கிறார்கள் என்று அறிய ஆவல்.
உங்கள் ஆய்வு பல புதுமைகளை படைத்து கொண்டே இருக்கிறது.
கவிதையும் நன்றாக எழுத வருகிறது.
அருமை. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குபாடல் மொட்டுக்களை இரசித்தேன் ஜி
பதிலளிநீக்குதொடர்ந்து வருகிறேன்...
தாத்தா எழுதியதை அப்படி காமத்துப்பால் அதிகாரப் பெயர்களை மாற்றலாமா? அப்படி என்றால் தாத்தா எழுதிய அதிகாரங்கள் ஒரிஜினல் நம்மிடம் இல்லையா? இருந்திருந்தால் ஏன் மாற்ற வேண்டும் அது சரியில்லையே. சரி தாத்தா எழுதியவை ஓலைச்சுவடிகளில்....ஓலைச்சுவடிகளாகக் கிடைத்தவற்றை அப்ப அதைக் கண்டெடுத்தவர்களின் அனுமானத்தில் வந்தவைதானா அப்படி என்றால் எத்தனை மாற்றங்களி இடையில் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு போன்ற கேள்விகள் எழுகின்றனவே டிடி. இதை வாசித்த போது அப்படி என்றால் தாத்தா என்ன கணக்கு வைத்திருந்தார் வைத்திருந்திருக்கலாம் என்ற ஐயம். நீங்கள் ஆராய்ச்சி செய்து கணக்கிட்டாலும் அதுதான் தாத்தா வைத்ததா என்றும் எழுமே. என் சந்தேகம் தவறு என்றால் மன்னிச்சுக்கோங்க டிடி.
பதிலளிநீக்குகீதா
அதிகார மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 849-யிலிருந்து எண்ணிக்கை 853 என்று மாற்றப்பட்டது ஏன்...? அதிலும் காமத்துப்பாலில் மாற்றம் ஏன்...? இதற்கு முந்தைய தொடர் - திருக்குறள் அதிகார மொத்த எழுத்துக்கள் - மூன்று பதிவுகள் - இவற்றில் உங்களின் கேள்விக்கான பதில்கள் உள்ளன...
நீக்கு// தாத்தா என்ன கணக்கு வைத்திருந்தார் வைத்திருந்திருக்கலாம் என்ற ஐயம். நீங்கள் ஆராய்ச்சி செய்து கணக்கிட்டாலும் அதுதான் தாத்தா வைத்ததா என்றும் எழுமே... //
இந்தப்பதிவில் ஆரம்பத்தில் சொன்னது போல், இன்று தான் கட்டமைப்பு ஆரம்பமாகிறது... அடுத்த பதிவில் முடிந்தும் விடலாம்... மேலும் பல ஐயங்கள் ஏழும்; எழ வேண்டும்...! அப்போதுதான் அதற்கேற்ப பல கணக்குகளும் செய்யப்படும்...!
முந்தைய பதிவுகளைப் பார்க்கிறேன் டிடி...புரியுதான்னு...
நீக்குமுழுவதும் ஒருமித்து வாசித்தால்தான் கொஞ்சமேனும் ஏறுமோ....அதுவும் கணக்கு வேறு....பார்க்கிறேன்..
கீதா
சுருக்கம் அருமை. நன்றி
பதிலளிநீக்குஅடடா.. ஹ்ர்ட்டு சுத்துதே:)).. எங்கே டிடி யின் போஸ்ட் தொடங்கும், அது எங்கே எதுவரை தொடரும்:).. இதுதான் போஸ்ட்டில் இருக்கு, இதுதான் அர்த்தம் என்பது எப்பவும் அதிராவுக்குப் புரிவதில்லை .. ஹா ஹா ஹா
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. ஒவ்வொரு தடவையும் தங்களின் திறமை வியக்க வைக்கிறது. கணக்கியலோடு குறள்களையும் இணைத்து அழகாக சொல்லுகிறீர்கள். நன்கு ஆழமாக படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
திருக்குறள் பற்றி அழகாய் எழுதி கலக்கி வரும் நண்பருக்கு பாராட்டுகள்
பதிலளிநீக்கு